அத்தியாயம் – 34
“சிட்…”தீரஜின் அழுத்தமான குரலில், நந்தினியும் சிறு தயக்கத்துடன் அவனுக்கு எதிரே அமர்ந்தாள்…
அவளை ஆழ்ந்து பார்த்தவனின் விழிகள் தீப்பிழம்பாய் எரிய…
“எதுக்கு வீட்டை விட்டு வந்த?” என்று கேட்டான்…
அவளோ தலை குனிந்து கையை பிசைந்தபடி பதில் சொல்லாமல் இருக்க, அதில் எரிச்சலடைந்தவன்,.. “லுக் அட் மீ” என்று அதட்டலோடு சொல்ல,.. விலுக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தவள்,… “சொல்லுடி எதுக்கு விட்டு வந்த” அவனது கோப குரலில்,.. அடைத்த தொண்டையை செருமிக் கொண்டு,.. “அ.. அது,.. மனிஷா” என்று ஏதோ சொல்ல வர, அதற்குள் டேபிளை சத்தமாக தட்டி அவள் சொல்ல வந்ததை நிறுத்தியவன்,… “எப்படி உன்னால இப்படி நினைக்க முடிந்தது மது, நான் அந்த மனிஷாவை காதலிக்கிறேன்னு எப்படி நீ நினைச்ச” என்றான் ஆதங்கத்தோடு,…
நந்தினியின் கண்கள் கலங்கின…
“நீங்க ஏற்கனவே மனிஷாவை காதலிச்சதா அவ என்கிட்ட சொன்னா, மாமா கிட்டயும் கேட்டேன், அப்புறம்” என்று தடுமாற,…
“ஆமா காதலிச்சேன், அதெல்லாம் பழைய விஷயம், தகுதியே இல்லாதவ மேல காதல் வச்சேன், அவளோட சுயரூபம் தெரிந்ததுமே அடியோட அவளை என் மனசுல இருந்து தூக்கி எறிஞ்சிட்டேன், அவளை காதலிச்சேங்கிற எண்ணத்தையே மறக்க நினைச்சேன், அதனால தான் உன்கிட்ட கூட எதுவும் சொல்லல, மறைக்க நினைக்கிற விஷயத்தை நான் வெறுக்கிற விஷயத்தை உன்கிட்ட கொண்டு வர நான் விரும்பல, ஆனா நீ இன்னும் நான் அவளை காதலிக்கிறேன்னு சொல்ற, எப்படி? எந்த இடத்துல உனக்கு இப்படி தோணுச்சு மது” என்று கேட்டான் உருக்கமாக…
நந்தினி பாவமாக விழித்தாள், தான் தான், தவறாக புரிந்து கொண்டேனா என்று நினைத்தவள் மனதில் உறுத்தியதை கேட்காமல் இருக்க முடியாமல்,… “நான் கேட்கும் போதெல்லாம் காதல் இல்லைனு தானே சொன்னீங்க, அதான்” என்று அவள் இழுக்க,..
“ஏன் வார்த்தையால சொன்னா தான் உன்னால புரிஞ்சிக்க முடியுமா? ஐ லவ் யூங்கிற வார்தைல தான் மனசுல இருக்க காதல் வெளிப்படும்னு நினைச்சேன்னா அது உன்னோட முட்டாள் தனம், அவ கிட்ட அடிக்கடி அந்த வார்த்தையை தான் யூஸ் பண்ணுவேன், அதனால அந்த வார்த்தையே எனக்கு வெறுத்து போச்சு, காதல்ங்கிற வார்த்தையை கேட்டாலே ஒரு மாதிரி எரியும், அந்த வார்த்தையை உன்கிட்ட யூஸ்பண்ண நான் விரும்பல, என்னோட அன்பாலயும், அக்கறையாலயும் உன்னை விரும்புறேன் உன்னை மட்டும் தான் விரும்புறேனு காட்டினேன், ஆனா உனக்கு அது புரியவே இல்லங்கிறது தான் ரொம்ப வருத்தமா இருக்கு, என்கூட இருந்த நாட்கள்ல என் மனசுல இருக்க ஆத்மார்த்தமான அன்பை நீ புரிஞ்சிக்கவே இல்லயா மது” அவன் குரல் உடைந்து வந்தது,…
அவளுக்கோ மனம் பிசைந்தது,…
உதட்டை கடித்துக் கொண்டு, கண்ணீரைத் தடுத்துக் கொண்டாள், அவனின் கண்களில் தெரிந்த நெருப்பும், துயரமும் அவளது உள்ளத்தையே சிதைத்தது….
“என் மேல சந்தேகம் இருக்குனா குறைந்த பட்சம் என்கிட்டயாவது கேட்டு இருக்கலாமே, நான் க்ளியர் பண்ணி இருப்பேனே, ஆனா நீ எவ பேச்சையோ கேட்டு என்னை நம்பாம வந்திடல்ல” அவன் வலியுடன் வினவ,.. “இ.. இல்ல அரவிந்த்,.. நான்” அவள் ஏதோ சொல்ல வர,… “நீ எதுவும் சொல்ல வேணாம்” என்று தடுத்தவன்,.. “என் மனசையே சுக்குநூறாக்கிட்ட, உனக்கு என் மேல நம்பிக்கையே இல்ல, நம்பிக்கை இல்லா வாழ்க்கை நிலைக்காது, வி கேன் எண்ட் திஸ்” என்றான்..
அந்த வார்த்தை நந்தினியின் காதுகளில் மின்னல் அடித்தது போல இருந்தது, அவள் அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள், உண்மையை தெரிந்து கொண்ட பிறகு அவள் எப்படி பிரிய நினைப்பப்பாள்,… “ஸாரி அரவிந்த் நான் தெரியாம பண்ணிட்டேன்” என்று கெஞ்சினாள், ஆனால் அவன் அவளது வார்த்தைகளை செவிசாய்க்கவே இல்லை.
அதிர்ந்த நடையுடன், கோபமும் வேதனையும் கலந்த முகத்துடன், வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்…
நந்தினி அதே இடத்தில் நின்று கொண்டே கண்ணீருடன் மல்கினாள், அவனது முதுகு பார்வையில் மறைந்ததும் அவள் இதயம் தாங்காமல் நொறுங்கியது.
அந்த நேரம் வரை, தொலைவில் இருந்து எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தான் காபி ஷாப்பின் சூபர்வைசர்,
தீரஜின் உடை, நடையெல்லாம் பார்த்தவுடனே அவன் ஒரு பெரிய ஆள் என்பதை புரிந்து கொண்டிருந்தான், அதனால்தான் அவனிடம் அந்த அளவு பணிவாய் நடந்திருந்தான்…
இப்போது இருவரின் உரையாடலைக் கேட்ட பிறகு,
‘இவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் போல…’ என்று நினைத்தவனுக்கு ஆச்சரியமே அதிகம்…
மெல்ல நந்தினியிடம் அருகில் வந்து, “யாரது?”என்று கேட்டான்.
அவள் கண்ணீருடன் தலையைத் தாழ்த்தி, மெதுவாக, “மை ஹஸ்பண்ட்…” என்று சொன்னாள்.
“ஓஹோ… அவர் பார்க்கவே பெரிய ஆள் மாதிரி தெரியுது. அவர் மனைவின்னு சொல்ற நீ… இங்கே ஏன் வேலைக்கு வந்த?” என்று வினவினான்…
நந்தினி கண்களை துடைத்துக்கொண்டு “அது எல்லாம் என்னோட மிஸ்அண்டர்ஸ்டான்டிங் தான் சார், அதோட இதுக்கு மேல என்னால இங்கே வேலை பார்க்க முடியாது” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு,
உடையை மாற்றிக் கொண்டுவிட்டு, அந்த இடத்திலிருந்து தன் வீடு நோக்கிப் புறப்பட்டாள்…
தன் மீது தான் தவறு, தான் தான் அவனை சமாதான படுத்த வேண்டும் என்னும் உறுதியோடு, வீட்டுக்குள் நுழைந்தவள் தன் உடைகளை பேக் செய்து விட்டு,… “அம்மா நான் என் வீட்டுக்கு போறேன்” என்றாள் தாயிடம்,…
“என்னடி திடீர்னு இப்படிச் சொல்லுற?” பார்வதி வினவ,.. “அவர் தான் வர சொல்லியிருக்கார், என்னை பார்க்காம இருக்க முடியலையாம்…” என்று பொய் தான் கூறினாள்..
அவள் சொன்ன அந்த வார்த்தைகள் பார்வதியின் இதயத்தில் ஒரு பெரும் நிம்மதியை ஊட்டின… “அப்படியா? அப்போ போயிட்டு வாமா, நானும் அப்பவே நினைச்சேன்” என்று மகளை ஆசீர்வதிக்கும் மனதோடு சந்தோஷமாக அனுப்பி வைத்தார்…
தீரஜை எப்படி சமாதானம் செய்வது என்று வழி முழுக்க யோசித்துக்கொண்டே, பையை கையில் தூக்கிக் கொண்டு வீட்டின் வாசலை அடைந்தாள் நந்தினி, ஹாலில் அமர்ந்திருந்த வனிதாவுக்கும் மனிஷாவுக்கும் நந்தினியை கண்டதும் முகம் வெளிறியது….
“இவ என்னமா திரும்ப வந்திருக்கா?” என்று தன் தாயை நோக்கி சீறினாள் மனிஷா…
“எனக்கும் தெரியலடி, வா கேட்டுப் பார்ப்போம்” என்ற வனிதாவும், அவர் மகளும் நந்தினியின் முன் வந்து நின்றனர்,..
அன்று தீரஜ் அறைந்த பின்னாலும், மனிஷாவுக்கும் அவளது தாய்க்கும் எந்த மாற்றமும் வரவில்லை,
அவர்களின் மனதில் இருந்தது ஒன்றே ஒன்று தான், இந்த சொத்து எப்படியாவது நம்ம கைக்கு வரணும், அதற்காக எவ்வளவு அவமானமோ, எவ்வளவு அடியோ வந்தாலும் தாங்கிக்கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தனர்,
தீரஜை சமாளிச்சு எப்படியாவது சம்மதிக்க வச்சிடலாம் என்ற சதி திட்டத்தில் அவர்களின் மனம் சிக்கியிருந்தது….
இந்நிலையில் நந்தினி மீண்டும் வந்ததைப் பார்த்தவுடன், மனிஷாவின் பொறுமை உடைந்தது… “மறுபடியும் எதுக்குடி வந்த?” என்று சத்தமாகக் கேட்ட அடுத்த கணம் பளீரென்று நந்தினியின் கரம் அவள் கன்னத்தில் விழுந்தது…
மனிஷா கன்னத்தில் கரத்தை வைத்தபடி அதிர்ச்சியுடன் நிலை தடுமாறினாள், அவளுடைய கண்களில் கோபமும் அவமானமும் தெரிந்தது…
ஆனால் நந்தினியின் உள்ளத்திலோ எரியும் நெருப்பு இன்னும் அதிகமாக இருந்தது.
அவள் தன் மனதை குழப்பி விட்டதால் தானே அவள் தீரஜை விட்டு போகும் முடிவிற்கு வந்தாள், தன் மீதும் அவளுக்கு கோபம் இருக்க தான் செய்தது, ஆனால் அதை எப்படி காட்டுவது என்று தெரியவில்லை, கணவனை எப்படி சமாதானம் செய்ய போகிறோம் என்ற அழுத்தத்துடன் வந்தவளுக்கு, மனிஷாவின் எகிறிய குரல் அடக்க முடியாத கோபத்தை உண்டாக்கிருக்க, தன்னையும் அடக்க முடியாமல் ஓங்கி அறைந்துவிட்டாள்…
தன் மகளை அவள் அடித்ததைப் பார்த்தவுடனே.. “உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்டி என் பொண்ணையே கை நீட்டறதுக்கு!” என்று சீறினார் வனிதா,..
அவளோ கண்களில் சிவப்பும், குரலில் எரியும் கோபமும் கலந்து,
“பெரிவங்கனுலாம் பார்க்க மாட்டேன், செம டென்ஷன்ல இருக்கேன், கன்னத்தை பழுக்க வச்சிடுவேன் ஜாக்கிரதை” அவளது எச்சரிக்கையில், அவள் கண்களில் தெரிந்த அந்த கடுமையான உறுதியில் அவளை நெருங்கவே பயந்தார் வனிதா,…
நந்தினி அதற்கு மேலும் அவர்களின் முகத்தினை பார்க்க பிடிக்காமல் தனது அறை நோக்கி செல்ல முற்பட்டவள், தியாகராஜனை கண்டு அவரருகில் வந்தாள், அவரும் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார், தன் மருமகளின் விழிகளில் தெரிந்த துணிவு, மன உறுதி, சத்தியம் நிறைந்த வெளிச்சம் அவருக்குள் பெரும் நிம்மதியைக் கொடுத்தது….
“ஸாரி மாமா” அவள் தலைகுனிந்து சொல்ல,.. அவள் தலையை மெல்ல வருடி விட்டவர்,… “நீ வந்துட்டல்ல அது போதும்மா எனக்கு, நீ ரூம்க்கு போ, தீரஜ் வர நேரம் தான் இது” என்று சொல்ல, அவளும் மெல்ல தலையசைப்புடன் தனது அறை நோக்கி நடந்தாள்…
அறைக்கு வந்தவளுக்கு தீரஜை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற படபடப்பு, ‘ஓவர் கோபத்துல இருக்கார், எப்படி அவரை சமாதானபடுத்துவது, நான் துணிச்சலா இருந்தா தான் அவர் கோபத்தை ஃபேஸ் பண்ண முடியும், அழுதுட்டு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது’ என்று ஒரு முடிவுக்கு வந்தவள், மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு, அவன் வருகைக்காக காத்திருந்தான்…
வெளியில் ஒலித்தது அவன் வருகின்ற சாட்சியாய் அவன் சூக்களின் தட்-தட் சத்தம், அவனின்
ஒவ்வொரு அடியும் அவள் இதயத் துடிப்பை கூட்டியது…
அடுத்த நொடி கதவு திறக்கப்பட
உள்ளே நுழைந்தவனின் முகம் அவளை கண்டதும் கோபத்தில் சிவந்து போனது… “எதுக்குடி இங்கே வந்த” என்று எகிறத் தொடங்கி இருந்தான்,..
அவளோ எதுவும் பேசவில்லை, அமைதியாக அவனை தான் பார்த்தாள்,..
அவனோ,… “வேண்டாம்னு தானே போன, மறுபடியம் வீட்டுக்குள்ள நுழைய உனக்கு அனுமதி இல்லை, ஒழுங்கு மரியாதையா போய்டு, கெட் ஆஃப் மை ஹவுஸ்” அவனது குரல் சுவர்களையே உலுக்கியது…
அவளோ மெல்ல எழுத்தவள்,… “ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாது அரவிந்த், கொஞ்சம் பொறுமையா இருங்க பேசி தீர்த்துக்கலாம்” என்று சொல்ல,.. “ஜஸ்ட் செட் ஆப்” என்று கத்தியவன்,… “எதுனா திட்டுறதுக்குள்ள ஓடிரு, ****” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொள்ள,… “ஐயயே என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க” என்றாள் அவன் முணுமுணுத்த கெட்ட வார்த்தையை கேட்டு,..
“இதுக்கு மேலயும் பேசுவேன், பச்சை பச்சையா வாயில இருந்து வரும், அதையெல்லாம் கேட்க கூடாதுன்னா ஒழுங்கா போயிடு, போடி” என்று கடுமையாக கத்த, அவளோ அவன் கோபத்தை பொருட்படுத்தாமல்,.. “ஓஹோ… பரவாயில்ல, பேசுங்க, நானும் கொஞ்சம் கத்துகிறேன்” என்றவள், அவனது எதிரில் வந்து நின்றிருந்தாள்…
அவனோ தன் முன்னே நின்றிருந்தவளை கோபமாக துளைத்தவன்,… “என்னை பத்தி” என்று ஏதோ சொல்ல வர, அதற்குள் அந்த வாரத்தைகள் அடக்கி போனது அவளது இதழ் முத்தத்தினால்…
அவனது கண்கள் அதிர்ச்சியில் பெரிதாகத் திறந்தன, அவனது கோபக் குரல் சட்டென நிறுத்தப்பட்டது, அவளது இதழ்களில் உருகிய அன்பின் வெப்பம் அவனது இதயத்துக்குள் நுழைய உஷ்ண மூச்சுடன் விழிகளை மூடிக் கொண்டான்,…