Loading

 

திலீப் சைந்தவி திருமண பேச்சு ஆரம்பித்து ஒரு வாரம் சென்று இருக்க அன்று ஒரு நாள் இளவரசி கோகிலாவிடம்அண்ணி பாப்பா குழந்தைக்காக ரொம்ப ஏங்குறாஆனா வாசு கொஞ்ச நாள் போகட்டும் அப்டினு தள்ளி போடுறான்குழந்தைங்களை பாத்தா ஏக்கமா பாக்குறாநேத்து என் பிரெண்டோட பேரன் முதல் பர்த்டேக்கு போய் இருந்தோம்…. அந்த குழந்தையை ஏக்கமா பாக்க ஆரம்பிச்சிட்டாஓரமா போய் உட்காந்தவ கண் கலங்கிட்டே இருந்ததுவாசு என்ன பண்றான்னு தெரியல அண்ணிஎனக்கும் அவருக்கும் கூட வீட்டுல குழந்தை இருந்தா நல்லா இருக்குமே அப்டினு தோண ஆரம்பிக்குதுஆனா இதை வாசு கிட்ட கேட்க கஷ்டமா இருக்கு…” என்று கவலையாக கூறினார்

அந்த பக்கம் கோகிலாவோஇளா வாசு எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும் விடுவாசுவுக்கு எப்போ குழந்தை பெத்துக்கனும்னு தெரியும்நீ பாப்பாவை பாத்துக்கோ அது மட்டும் போதும்அவளோட ஞாபகம் குழந்தைங்க பக்கம் போகாம பாத்துக்கோஅதுக்கு அப்பறம் வாசு பாத்துப்பான்நீயும் கவலை படமா இருஉனக்கே வாசு மூணு வருஷம் கழிச்சு தானு பிறந்தான்அது மாதிரி பாப்பாவுக்கும் ஆகலாம்அதனால கவலை வேண்டாம் பாத்துக்கலாம்நீ கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிநான் அப்பறம் பேசுறேன்என்று கூறி வைத்து விட்டார்….

இதை அங்கு வந்த சைந்தவியும் கேட்டு விட அவளுக்கு அழுகை தான் வந்ததுஅவர்களின் ஆசையை கூட நிறைவேற்றி வைக்க முடியவில்லையே என அவளுக்கு கஷ்டமாக இருந்தது…. சைந்தவி ஓடி சென்று இளவரசியின் மடியில் தலை புதைத்து அழுக ஆரம்பித்து விட்டாள்அவளின் அழுகையை பார்த்து இளவரசி பயந்தே விட்டார்

பாப்பா என்ன ஆச்சுஉனக்கும் வாசுவுக்கு எதோ சண்டையா உன்னை திட்டிட்டானா…. எதுக்கு டா இந்த அழுகை…” என்று பரிதவிப்போடு கேட்டார்

அவள் எதுவும் கூறாமல் அமைதியாக அழுது கொண்டே இருந்தாள்அப்போது சக்ரவர்த்தி வாசு இருவரும் வீட்டிற்கு வர சைந்தவியின் அழுகையை பார்த்து வேகமாக அவளிடம் ஓடி வந்தனர்வாசு வேகமாக அவளிடம்அம்மு என்ன ஆச்சுஎதோ பிரச்சனையாவயிறு வலிக்குதாதலை வலிக்குதா…” என்ன வேணும் என்று பதட்டமாக கேட்டான்

அழுது கொண்டு இருந்தவள் அவனை பார்த்து “நான் என்ன கேட்டாலும் தருவியா மாமா… சொல்லு நான் என்ன கேட்டாலும் தருவியா…..” என்று அழுகையுடனே கேட்டாள்….

அவனோ அவள் கேட்க வருவதை புரிந்து கொண்டு அமைதியாகி விட அவளோ எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட வாசு முக இறுக்கத்துடன் வெளியேறி விட்டான்….

இளவரசி கண்ணீருடன் சக்ரவர்த்தியின் தோள் சாய்ந்தவர் “பாப்பாவுக்கு  வேணுங்கிறத எல்லாத்தையும் அவ கேட்குறதுக்கு முன்னாடி செய்யுறவன் இந்த விசயத்துல ஏன் இப்படி பண்றான்…. எந்த விசயத்துலயும் அவளை அழுக வைக்காதவன் இந்த விசயத்துல அழுக வைக்குறான்பாவம் பாப்பா…” என்று அவரும் அழுது கொண்டே கூறினார்

சக்ரவர்த்தி இளவரசியிடம்விடு அரசிம்மா தம்பி எது பண்ணாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்நீ கவலை படாதவாசுவுக்கு என்ன ஆசையா பாப்பாவை அழுக வைக்கபாப்பா அழுதா அவளை விட அவனுக்கு தான் வலிக்கும்…. வாசுவே இதை பாத்துப்பான்நீ வீட்டுலயும் குழந்தை பத்தி பேச்சை எடுக்காதஎல்லாம் நல்லதே நடக்கும்…” என்று கூறினார்….

இரவு உணவை கூட உண்ணாமல் அழுது கொண்டே உறங்கிவிட்டாள்…. வாசுவும் வெளியில் சென்றவன் நீண்ட நேரம் வீட்டிற்கு வரவில்லைஇளவரசி சக்ரவர்த்தி இருவரும் வாசுவும் சைந்தவியும் உண்ணாமல் இருப்பதால் அவர்களும் உண்ணவில்லை…. நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்த வாசு இன்னும் உறங்காமல் இருக்கும் தன் பெற்றவர்களை பார்த்தும்மா இன்னும் தூங்கலையா நீங்கசாப்பிட்டீங்களா…” என்று கேட்டான்ஆனால் இளவரசியோ அமைதியாகவே இருக்கஅம்மா உங்களை தான் கேட்டேன்நான் பேசுறது கேட்குதா இல்லையா… ” என்று கேட்டான்

அவர் அமைதியாகவே இருக்க சாப்பிட்டார்களா என்று பார்க்க டைனிங் டேபிள் சென்று பார்த்தான்.. அங்கு செய்து வைத்தது அப்படியே இருக்க ஒரு பெரு மூச்சு விட்டவன்அம்மா அப்பா ரெண்டு பேரும் இப்ப சாப்பிட வருவீங்களா மாட்டீங்களா…” என்று சற்று கோவமாக கேட்டான்இருவருமே அமைதியாக இருக்க இருவருக்குமான உணவை தட்டில் போட்டு வந்தவன் இருவருக்கும் தானே ஊட்டி விட்டான்

இருவருக்கும் கண்களில் கண்ணீர் வலிந்ததுஇருவருக்கும் ஊட்டி முடித்தவன் கை கழுவி விட்டு வந்தவன்ம்மா ப்பா கண்டிப்பா இதை பத்தி உங்க கிட்ட ஒரு நாள் சொல்றேன்இதை பத்தி மட்டும் கேட்காதீங்க ம்மா.. கண்டிப்பா இதை சரி பண்ணிடுவேன்“…. என்னை நம்புங்க என்று கூறினான்

இளவரசி எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட சக்ரவர்த்தி தான் அவன் தோளை தட்டி குடுத்துநாங்க நம்புறோம் வாசுஆனா எதுவா இருந்தாலும் சீக்கிரம் சரி பண்ணிடுபாப்பாவும் இன்னும் சாப்பிடலஅழுதுட்டே தூங்கிட்டாபோய் சமாதானம் பண்ணுமறக்காம நீயும் சாப்பிடுஎன்று கூறி அவரும் உறங்க அறைக்கு சென்று விட்டார்….

தனக்கும் சைந்தவிக்கும் ஒரு தட்டில் உணவை போட்டு கொண்டு மேலே சென்றவன் அங்கு அழுது அழுது முகம் வீங்க தூங்கி கொண்டு இருந்தவளை பார்த்து அவனின் நெஞ்சம் எல்லாம் பதறியதுதட்டை அங்கு இருக்கும் டேபிளில் வைத்தவன் மெதுவாக அவள் அருகில் சென்றான்

அவள் நெற்றில் அழுத்தமாக முத்தமிட்டவன்அம்மு எந்திரி.. சாப்பிட்டு தூங்கு…” என்று மெல்லிய குரலில் கூறினான்…. அவள் அவன் வந்தது உணந்தும் கண்ணை திறக்காமல் கண் மூடியே படுத்து இருந்தாள்

அவள் கருவிழி அசைவிலேயே அவள் உறங்கவில்லை என அறிந்த வாசுஅம்மு.. நீ தூங்கலைனு தெரியும் எனக்குஎந்திரி அம்முஎன் கூட நீ பேச வேண்டாம் சாப்பிட்டு மட்டும் தூங்கு.. எந்திரி டா…” என்று கெஞ்சல் குரலில் கேட்டான்

அவன் பேச பேச கண்ணை இன்னும் இறுக்கி மூடியவள் அவன் பேச்சையும் கேட்காமல் காதை தன் கையால் பொத்தி கொண்டாள்.. அவளின் அந்த சைகை அவனை பலமாக தாக்கியது

“அம்மு நான் பேசுறது உனக்கு பிடிக்கலயாஎன்னை விட குழந்தை தான் முக்கியமா அம்முசொல்லு அம்முநான் உனக்கு முக்கியம் இல்லையா….” என்று கொஞ்சம் கோவம் கலந்த குரலில் கேட்டான்

அவள் அமைதியாக இருக்க அவளை தூக்கி அமர வைத்தவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் கொண்டு வந்த உணவை ஊட்டி விட்டு தானும் கொஞ்சம் உண்டு விட்டு தட்டை கொண்டு போய் கீழே வைத்து விட்டு வந்தவன் பால்கனியில் நின்று போய் நின்று கொண்டான்

சைந்தவிக்கு மேலும் மேலும் அழுகை தான் கூடியது…. அவளின் அழுகை அதிகமாகி கேவலாக வெடித்ததுமேலும் அவளின் அழுகையை பொறுக்காதவன்அம்மு ஒரு வாரம் எனக்கு டைம் குடு அம்முஅதுக்கு அப்பறம் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்என்னை நம்பு அம்முநமக்கு கண்டிப்பா குழந்தை வரும்தயவு செஞ்சு அழுகாத அம்மு.. என்னால தாங்க முடியலஎனக்கு இங்க எல்லாம் வலிக்குது அம்மு..” என்று நெஞ்சை காட்டி கூறினான்

அவள் எதுவும் கூறாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்வாசு மன பாரத்துடன் அவளை தட்டி குடுத்து உறங்க வைத்தவன் தான் உறங்காமல் அவளையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தவன் எப்போது உறங்கினான் என்று தெரியாமல் அவளை அணைத்து கொண்டு அவனும் உறங்கி இருந்தான்….

 

 

(அப்படியே படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா இந்த சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி 🙂 )

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்