Loading

கோமேதம்: நவரத்தினங்களில் இது ராகுவுக்கு உரிய கல். 

சரியான தோஷமற்ற கல்லை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டால் உடல் ஆரோக்கியமும் நல்ல செல்வ செழிப்பும் உண்டாகும். வெல்ல முடியாத எதிரியையும் வெல்லலாம். 

அதிர்ச்சியில் இருந்து மீளாத ஈஸ்வரை பார்த்த சித்தன் “என்னப்பா இந்த பைத்தியக்காரன் சொன்னது புரிஞ்சிதா” என்க..

உடனே அவர் கால்களில் விழுந்த ஈஸ்வர் “ஐயா.. நான் உங்களை ரொம்ப சாதாரணமா நெனச்சு கேவலப்படுத்திட்டேன்..நீங்க ரொம்ப சக்தி வாய்ந்தவர்..என் தப்பை பெரிய மனசு பண்ணி மன்னிச்சு…உங்க வாயால என்னை நல்லா இருனு வாழ்த்துங்க..என்னை  மன்னிச்சிடுங்க..” என்று வேண்ட

சித்தனும்… “எழுந்திரு…. ஸ்வாமிநாதா…எழுந்திரு…ஒரு சிவம்.. இன்னொரு சிவத்தை வணங்கலாமா…அதுவும் அவன் குடி கொண்ட இடத்தில்…”

“இது எல்லாம் அவன் செயல்.. என்னுடையது எதுவும் இல்லை.. அவன் ஆட்டி வைக்கிறான்..நாம் ஆடுகிறோம்..”என்றார்…

ஈஸ்வர் “எனக்கு ஒரு சந்தேகம்” என கேட்க…

சித்தனும் சிரித்தபடி “உனக்கு வர்ற சந்தேகம் இருக்கே.. அது யார்க்கும் வராது” என அவனை கேலி செய்து விட்டு.. “கேளு.. உன் சந்தேகத்தை” என்றார்.

ஈஸ்வர் “உங்களுக்கு எதுவும் தெளிவா தெரியாதுனு சார் சொன்னாரே..ஆனா அது எனக்கு ஒரு தனி குழப்பம்.. இப்ப எப்படி சரியா நீங்க இந்த வீட்டுக்கு வந்தீங்க..” என கேட்க

சித்தன் அம்பலவாணனை பார்த்து கண் ஜாடை செய்ய.. அவர் சட்டென்று பூஜையறை கதவை உட்புறமாக தாளிட்டார்.

சித்தன் ஈஸ்வரை பார்த்து “உனக்கு ஏகப்பட்ட சந்தேகம்  இருக்குல்ல…இரு…உன் சந்தேகம் எல்லாத்தையும் நான் இப்ப தெளிய வெக்கறேன்.. என சொல்லி..

“நமச்சிவாய.. நமச்சிவாய” என்ற மந்திரத்தை  உச்சரித்து “ஏற்கனவே சொன்ன மாதிரி நான் ஒரு பரதேசி..எனக்கு சொந்த பந்தம் கிடையாது..கால நேரம் கிடையாது…என் அப்பன் ஈசனோட கட்டளைப்படி நான் வாழ்ந்துட்டு இருக்கேன்”

“உங்க கொள்ளு தாத்தாவுக்கு ஜமீன்தாரால பிரச்சினை வந்த போது, என் அப்பன் ஈசன் என்னை இங்க வந்து அவர் சொல்ற காலம் வரை அவர் கூட இருக்க சொன்னான்..”

“நான் வந்த நேரத்துல தான் சரியா அவனை ஒளித்து வைக்க போகும் நேரம்…அந்த இருட்டுலயும் ஜெகத் ஜோதியா… சின்ன விளக்கோட ஒளியோட, அவனை கண் குளிர, ஆசை தீர தரிசனம் செய்தேன்..”

“இந்த ஸ்வாமி எனக்கு பின்னால எத்தனாவது.. தலைமுறைக்கு கண்ல படுவாரோ தெரியாது..
அதனால அவர் வெளிப்படற வரைக்கும் மறைவா இருந்து அவரோட வம்சத்தை காப்பாத்தணும்னு உங்க கொள்ளு தாத்தாவும், தன் குடும்பத்தோட பாவ சுமை அதிகமா இருந்ததால கூடவே நிழலா இருந்து  காப்பாத்தணும்னு மகேந்திர பூபதியும் என்னை அந்த ஸ்வாமி முன்னால சத்தியம் பண்ண சொன்னாங்க…”

“நானும் அதை ஈசனோட கட்டளையா ஏத்துகிட்டு சத்தியம் செஞ்சேன்.. இப்ப வரைக்கும் குறைவில்லாம அதை நிறைவேத்திக்கிட்டு வரேன்..”

“அதுக்கு பிறகு அவரை தரிசனம் செய்ய இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆகுமோனு அழுது கிட்டே உங்க கொள்ளு தாத்தாவும், மகேந்திர பூபதியும், நிறைய வில்வம், துளசியும் சூழ அவனை அங்க ஒளிச்சு வெச்சாங்க..”

“அந்த கோயில் சீக்கிரமே சிதிலமாகிடும்.. யார் அந்த ஸ்வாமி கண்டு பிடிக்கறானோ.. அவனாலேயே கோயில் திரும்ப கட்டப்படணும்னு அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஸ்வாமிக்கு சத்தியம் செஞ்சாங்க..”

“அதான் நான் உன்னை பார்த்ததுமே.. உன்னால் அந்த கோயில் கட்டப்படணும்னு விதி இருக்குனு சொன்னேன்….
ஈஸ்வரா” என்றார்.

ஈஸ்வர் “அதுக்கு பிறகு என்னாச்சு ஐயா.. வாரிசுங்க வந்தாங்களா.. ஸ்வாமியை எடுத்தாங்களா” என ஆவலாக கேட்க

சித்தன் “ஒவ்வொன்னா சொல்றேன்.. இரு…மகேந்திர பூபதியோட காலம் முடிஞ்சது… அவரோட பையன்.. மகாதேவன்… அவரோட பையன்.. அம்பலவாணன்.. அம்பலவாணனோட பையன் மகேந்திரன்னு அவனோட வம்சம் வளர…

“அந்த பக்கம்..ஹரிஹரனோட பையன் சபேசன்..சபேசனோட பையன் நீ…இப்படி உங்க வம்சம் வளர்ந்தது…”

“அம்பலம் மகேந்திரனோட வம்சம்னு யார்க்கும் தெரியாம இருந்தது.. சரியா.. அந்த மேத்தாவுக்கு யாரோ ஒரு மாந்திரீகன் அதை கண்டுபிடிச்சு சொல்லவே.. அவன் இங்க வந்தான்.. இவனோட பழகினான்…ஸ்வாமியை கண்டுபிடிச்சு எடுக்க அரைகுறையா ஒரு பூஜையை பண்ணான்” என்றார்..

புதிர் விடுபட்டதும்..தெளிந்தாலும் இன்னும் குழப்பத்தோடு ஈஸ்வர்.. “ஐயா..நீங்க எங்களை காப்பாத்திட்டு வரேன்னு சொல்றீங்களே…இவரோட பையன் இப்படி இருக்கானே… அதை ஏன் சரி செய்யல..” என கேட்க

சித்தன் மெல்ல சிரித்து “எப்டி இருக்கானாம்” என சொல்லி “மகேந்திரா” என அழைக்க அவனும் தெளிவாக “சொல்லுங்க ஐயா” என்றான்.

மறுபடியும் குழம்பி போன ஈஸ்வர் “இவரோட பேச்சு ஒரு நேரத்துல ஒரு மாதிரி இருக்கே…
கடவுளே…எனக்கு மறுபடியும் குழப்பமா இருக்கே..தயவு செய்து இந்த குழப்பத்தை தீர்த்து வையேன்” என வேண்ட

அதை கேட்டதும் நன்றாக சிரித்த மகேந்திரன்.. உங்களுக்கு எல்லாம் தெளிவாக்கணுமா.. சொல்றேன்.. கேட்டுக்கங்க” என சொல்லி

“அன்னிக்கு பூஜை சரியா முடிக்காததால என்னோட சித்தம் கலங்கினது உண்மை.. உடனேவே என்னை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு வந்த ஐயா… சில மந்திரங்கள் சொல்லி.. எனக்கு திருநீறு பூசினதும்.. சரியாகிடுச்சு”

“ஆனா மேத்தாவால இருந்த ஆபத்து நீங்காததால.. நான் சித்தம் கலங்கின மாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்…”

“அதுக்கு எங்கப்பா, அம்மா, என் பொண்டாட்டி எல்லாருமே இப்ப வரைக்கும் ஒத்துழைச்சுக்கிட்டு வர்றாங்க…”

“எங்கப்பாவோட ப்ரெண்ட் ஒருத்தர் சைக்கியாரிட்ஸ்ட்…அந்த மேத்தாவை நம்ப வைக்க அப்பப்ப அவர் கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு போவேன்..”

“அவனும் இதை நம்பாம அவர் கிட்ட போய் கேப்பான்.. அவர் தானே என்னை கவனிச்சுக்கறதாவும்..சரியாக நாளாகும்னு ஒவ்வொரு தடவை சொல்லி அவனை அனுப்பிடுவார்”.

“மேத்தா எங்களை தொடர்ந்து கண்காணிச்சுக்கிட்டே தான் இருக்கான்…அவன் எங்க வீட்டுல ஏதோ ஒரு பொடி தூவிட்டு போனதால.. வீட்டுக்குள்ள நாங்க என்ன பேசினாலும் அவனுக்கு தெரிஞ்சிடும்… பூஜையறை ஒரு இடம் தான் அவனால எதையும் தெரிஞ்சுக்க முடியாது”

“எங்களுக்கு ஏதாவது முக்கியமா பேசணும்னா.. நான் நிறுத்தாம பேச ஆரம்பிப்பேன்..அம்மா அழற மாதிரி மெல்ல என்னை இங்க கூப்பிட்டு கிட்டு வந்துடுவாங்க.. அப்பா வந்துடுவார்.. உடனே ஐயாவும் வந்துடுவார்..நாங்க பேசுவோம்” என்றான்.

ஈஸ்வர் “எல்லாம் சரிங்க.. அது எப்டி நான் வந்தது உங்களுக்கு தெரிஞ்சது..”என்க

மகேந்திரன் “நீங்க வந்ததுமே ஐயா எங்களுக்கு தகவல் தெரிவிச்சதால.. அப்பாவால உடனே வந்து உங்களை மேத்தாவோட ஆட்கள் கண்ல படாம இங்க அழைச்சிட்டு வர முடிஞ்சது….”

அம்பலவாணன் “இல்லப்பா..இந்த தம்பிய நான் அழைச்சிட்டு வர்றதை முனியன் பாத்துட்டான்..”
என சொல்லி கொண்டு இருக்கும் போதே…

வாசலில் “அம்பலவாணன் அம்பலவாணன்” என்ற குரல் கேட்க.. அதே கேட்டதுமே பதறி போன அனைவரும்.. அந்த மேத்தா வந்துட்டான் போல இருக்கு..நீங்க எல்லாம் அமைதியா இங்கயே இருங்க” என சொல்லி எச்சரித்து விட்டு அம்பலவாணன் மட்டும் வெளியே போய்..

“அடடே.. வாங்க மேத்தா… வாங்க.. ரொம்ப நாளாச்சே பார்த்து…எப்டி இருக்கீங்க..” என அவனை வரவேற்றார்.

மேத்தாவும் “நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்டி இருக்கீங்க..உங்க பையன் எப்டி இருக்கான்.. ஏதாவது ட்ரீட்மெண்ட் குடுதீங்களா.. சரியாகிடுச்சா” என அவர் மேல் அக்கறை இருப்பதை போல பேச..

அவரும் சலித்து கொண்டே..”எங்க.. ரெண்டு வருஷம் முடிய போகுது..இன்னும் அவனுக்கு சரியாகல….
ட்ரீட்மெண்ட்க்கு போயிட்டு தான் இருக்கான்” என்றார்.

மேத்தா..”அந்த டாக்டர் என்ன தான் சொல்றாருங்க” என கேட்க

அம்பலவாணன் வேதனையோடு “அவர் என்ன சொல்வாரு..
எப்பவும் சொல்ற மாதிரி கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு சொல்றாரு.. ஆனா.. இவனுக்கு .. எப்ப தான் சரியாகுமோ…சம்பந்தி வீட்டுல கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியலங்க” என்றார்..

மேத்தா உடனே பேச்சை மாற்றி.. “வேற என்னங்க விசேஷம்.. ஊர்ல புதுசா ஏதாவது நடந்ததா.. இல்ல.. புதுசா யார்னா வந்தாங்களா..என இழுக்க..

அம்பலவாணன் “இந்த பொட்டல் காட்டுல என்னங்க.. புதுசா அதிசயமா இருக்க போகுது..இந்த ஊரை தேடி யார் வர போறாங்க..”என சலித்தபடி சொல்லி அவனிடம் பேசுவதை கத்தரித்து பேச்சை முடித்து கொண்டார்.

8.(பாகம் 2)

மேத்தாவும் சிறிது நேரம் அம்பலவாணனிடம் வேறு ஏதேதோ சம்பந்தமில்லாத விஷயங்களை பேசி விட்டு
“நான் கிளம்பறேன் சார்…
எனக்கு திருநெல்வேலி வரைக்கும் போகற வேலை இருக்கு….ரெண்டு மாசம் கழிச்சு தான் திரும்ப வருவேன்..”

“அதுக்குள்ள..கோயில் சம்பந்தப்பட்ட விஷயம் ஏதாவது புதுசா.. இல்ல..தகவல் இருந்தா..தெரிஞ்சா…
இல்ல யாராவது புதுசா கோயிலை தேடி வந்தா..உடனே எனக்கு போன் பண்ணி சொல்லுங்க..மறந்துடாதீங்க..
உங்க பையனுக்கு இன்னும் சரியாகலனு சொன்னீங்கல்ல..அவனும் எல்லாரையும் மாதிரி குடும்பமா வாழணும்ல..”என அவரை மிரட்டாமல் மிரட்டி விட்டு சென்றான்.

அவன் போனதும் வேகமாக தெரு கதவை அடைத்து விட்டு.. பூஜையறை நோக்கி ஓடிய அம்பலவாணன் சித்தனை நோக்கி.. “ஐயா..அவன் வந்து மறுபடியும் மிரட்டிட்டு போறான்” என பயந்து போய் சொன்னார்.

அதை கேட்டதும் சிறிது நேரம் கண் மூடி தியானத்தில் அமர்ந்த சித்தன் சட்டென்று கண்களை திறந்து…”அம்பலம்..உங்க பூஜையறை மாடத்துக்கு கீழே ஒரு இடைவெளி இருக்கா” என கேள்வி எழுப்ப

அம்பலவாணன் “ஆமாங்க ஐயா” என பதில் சொல்வதற்குள்….
“நமக்கு நேரம் இனி ரொம்ப கொஞ்சம் தான் இருக்கு… இப்பவே மணி பன்னெண்டு…
சீக்கிரம் போய் அந்த இடைவெளில இருக்கிற சின்ன கதவை திற..அங்க ஒரு பெட்டி இருக்கும்… அதை நமச்சிவாய மந்திரம் சொல்லி எடுத்துட்டு வா.. ” என உத்தரவிட்டார்….

அம்பலவாணனும் ஓடி போய் அந்த கதவை திறந்து பார்க்க.. அங்கு ஒரு சிறு பெட்டி இருந்தது.. அதை பயபக்தியோடு நமச்சிவாய மந்திரம் சொல்லி..சித்தன் கையில் கொண்டு வந்து கொடுக்க…

அவரும் எழுந்து அந்த பெட்டியை இரு கைகளில் வாங்கி கண்களில் ஒற்றி வாங்கி கொண்டார்.மெல்ல அந்த பெட்டியை திறக்க..
அதில் ஒரு ஓலைச்சுவடி இருந்தது.

சித்தன் ஈஸ்வரை அழைத்து அதை படிக்க சொன்னார்..பல
வருடங்களாக அந்த ஓலை பெட்டியில் இருந்ததால்…  அந்த ஓலையில் எழுத்துக்கள் தெளிவாக தெரியாததால்.. அவனும் மிக சிரமப்பட்டு எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்தான்..

தாத்தனின் வீட்டில் கூடு.. கூட்டை திறந்தால் தெரியும் ஏடு..
ஏட்டை திறந்தால்…தெரியும் வீடு..
வீட்டை திறந்தால் தெரியும் குழி…
குழியை திறந்தால் தெரியும் பெண்கிடி..
பெண்கிடியை திறந்தால்  தெரியும் வெளிச்சம்..” என அதில் எழுதி இருக்க..

அதில் மிகவும் குழப்பமான அவன் “இதுல என்ன எழுதி இருக்கு ஐயா.. ஒண்ணும் புரியலயே…”என கேட்க..அவனோடு மீதி எல்லாருமே குழப்பத்தோடு  சித்தனை பார்க்க.. அவர் சிரித்தபடி..

“என்ன குழப்பமா இருக்கா… அதுக்கு விளக்கம் சொல்றதுக்கு சரியான நேரம் இன்னும் வரல…அதுக்கு இன்னும் பத்து நிமிஷம் இருக்கு.. அதுவரைக்கும் பொறுமையா காத்திட்டு இருங்க… நான் தெளிவா புரிய வெக்கறேன்..”என சொல்ல ஆரம்பித்தார்…

சரியாக பத்து நிமிஷங்கள் முடிந்ததும் சித்தன் “நமச்சிவாய” என சொல்லி வணங்கி விட்டு .. “நான் எனக்கு தெரிஞ்ச விளக்கத்தை சொல்றேன்..
சரியானு நீ சொல்லு அம்பலம்” என சொல்லி..

மகேந்திரனை ஈஸ்வரிடமிருந்து அந்த ஓலையை வாங்கி, அதில் இருந்த பாட்டை ஒவ்வொரு வரியாக படிக்க சொன்னார்..

மகேந்திரன் படித்ததும்..சித்தன்… “தாத்தனின் வீட்டில் கூடு..” அதுக்கு விளக்கம் உங்க வீட்டுல இந்த பெட்டி இருந்த இடத்தோட அமைப்பு கூடு போல இருக்கும்…சரியா என கேட்க.. ஆம் என அம்பலவாணன் தலையசைத்து ஆமோதித்தார்.
 
அடுத்த வரி  “கூட்டை திறந்தால் தெரியும் ஏடு”..அந்த கூட்டில் இருந்த பெட்டியை திறக்கவே தானே இந்த ஏடு வந்தது.

அடுத்த வரி “ஏட்டை திறந்தால் தெரியும் வீடு” இதுக்கு விளக்கம் அந்த ஏட்டோட பின்னால இருக்கிற ஏட்டை பாரு..அதுல ஏதாவது இருக்கா.. என்க

மகேந்திரன்.. “ஆமாங்க ஐயா.. ஒருத்தர் நிறைய பேர்க்கு பாடம் சொல்ற மாதிரி வரைஞ்சிருக்கு” என ஆச்சர்யத்தோடு சொல்ல..

சித்தன் ஈஸ்வரை பார்த்து இதுக்கு விளக்கம் உங்க கொள்ளு தாத்தா தினமும் வேதம் சொல்லி தந்தவர் தானே.. அது அவரோட வீட்டை தான் குறிக்குது.. என்க

ஈஸ்வர் மிகுந்த ஆச்சர்யத்துக்கு உள்ளானான்.. உடனே.. மீதி பாட்டுக்கு விளக்கம்.. என்க..

சித்தன் சிரித்து கொண்டே.. அவனை அமைதியாக இருக்க சொல்லி கை காட்டி விட்டு அடுத்த வரி, “வீட்டை திறந்தால் தெரியும் குழி” அதுக்கு விளக்கம் நான் ஏற்கனவே ஈஸ்வர் கிட்ட அவனோட கொள்ளு தாத்தா இங்கிருந்து கிளம்பினதுமே.. மழை பெய்து கிணற்றை தவிர அவரோட மொத்த வீடும் இடிஞ்சிருச்சுனு சொன்னேன்ல.. என சொல்ல.. ஈஸ்வரும் அவசர அவசரமாக “ஆமாம் ஆமாம்” என்றான்.

அந்த கிணறு தான் இதுல சொன்ன குழி..

அடுத்த வரி “குழியை திறந்தால் தெரியும் பெண் கிடி…” அந்த கிணத்துல இருக்கிற ஸ்வாமியை யாரும் அண்டாம பாதுகாக்கறது..அம்பாளோட படை தளபதியான வராஹி…வராஹத்துக்கு தமிழ்ல கிடிங்கற பேர் ஒண்ணு உண்டு.

“பெண் கிடியை திறந்தால் தெரியும் வெளிச்சம்” கிணத்துக்குள்ள இருக்கிற அந்த வராஹி அம்மனை திருப்பினா..அங்க இருக்கிற அறையில தான் நவரத்னேஸ்வரர் இருக்கார்.. விளக்கம்..போதுமா..” என சொல்ல..

அனைத்தையும் கேட்ட அவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் வியந்து, தங்களது முன்னோர்கள் அந்த ஸ்வாமியை எந்தளவு பாதுகாப்பாக பத்திரப்படுத்தி உள்ளார்கள்..என்பதை நினைத்து, அதற்கு துணையாக இருந்த சித்தனையும் பார்த்து
கண்ணீர் மல்க இரு கைகள் கூப்பி வணங்கினார்கள்.

அம்பலவாணன்.. “அது எப்டி ஐயா.. ஊர்ல அத்தனை இடம் இருக்க..சரியா அவரோட வீட்டுல கொண்டு ஸ்வாமியை பத்திரப்படுத்தி வெச்சாங்க..” என ஆச்சரியத்தோடு கேட்க…

சித்தன் பெருங்குரலில் சிரித்து கொண்டே..”எல்லாம் ஒரு கணக்கு தான் அம்பலம்..ஊரில ஒரு ஆள் காணோம்.. ஊரோட சாமியையும் காணோம்னா.. எல்லாரும் அவர் எடுத்துட்டு போனதா சொல்லி அவரை தேடுவாங்களா…இல்ல அவரோட வீட்டுல தேடுவாங்களா..” என புதிராக கேட்க

மகேந்திரன் “அது எப்டி அவரோட வீட்டுல தேடுவாங்க.. தேடணும்னு யோசிக்க கூட மாட்டாங்க..அவர் தன்னோட எடுத்துட்டு போனதாக தானே சொல்வாங்க” என பதில் சொன்னான்.

சித்தன் “சரியா சொன்னே.. மகேந்திரா…ஊருக்குள்ள நீ நினைச்சா மாறி தான் பலரும் நினைச்சாங்க..அதனால தான் அந்த நவரத்னேஸ்வரர் எங்க இருக்கார்னு கண்டு பிடிக்கற குறிப்பை சுவடில எழுதி அவங்க ரெண்டு பேரும் அதை கோயில்ல வெச்சாங்க..”

ஈஸ்வர் “யாரும் கோயில்ல இருந்த சாமி காணாம போனதை  பத்தி பேசவே இல்லையா ஐயா..” என வியப்பாக கேட்க..

சித்தன் “இந்த விஷயத்தை பத்தி ரொம்ப வருஷம் எல்லாம் பேசிட்டு தான் இருந்தாங்க..அப்பறம்
காலம்..மாறிச்சு..தலைமுறைகள்..மாறிச்சு..அதுல எல்லாரும் பல விஷயங்களை மறந்தது போல.. இந்த ஊர் சாமியையும் மறந்துட்டாங்க” என வேதனையோடு சொல்லி பேச்சை நிறுத்தி  விட்டு..சட்டென்று மணியை பார்த்து பரபரத்தார் சித்தன்…

“இப்ப மணி ஒண்ணு…இன்னிக்கு யமகண்டம் ஆரம்பிக்கற வரைக்கும் தான் உங்களால அந்த சாமியை வெளில தரிசனத்துக்காக எடுக்க முடியும்.. அதுக்கு பிறகு நீங்களை நினைச்சாலும் அவரை பார்க்க முடியாது..தரிசனமும் செய்ய முடியாது…”

“யார் அவரை செஞ்சு, பல வருஷமாக பௌர்ணமில வந்து பூஜிக்கறாரோ..அவர் கிட்ட அந்த ஸ்வாமி போய் சேந்துடணும் விதி..அந்த இடமும் மண்மேடா மாறிடும்ங்கறது விதி..”

“அதனால நாம எல்லாரும் இப்பவே கிளம்பி போனா தான் கிணத்துக்குள்ள இறங்கி அந்த ஸ்வாமியை எல்லாரும் தரிசனம் செய்ய வெளில எடுக்க முடியும்..” என பரபரப்பாக பேசி கிளம்ப தொடங்கிய சித்தனை ஈஸ்வர் அமைதியாக பார்த்தான்..

(எட்டாம் பாகம் முடிந்தது)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்