Loading

‌அத்தியாயம் – 26

 

இப்போதெல்லாம் நந்தினியின் நாட்கள் குழப்பத்துடனே நகர்ந்தது,
அந்த சம்பவம் அவளின் மனதில் அடிக்கடி மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது…

‘அன்னைக்கும் அவர் நின்ன மாதிரி தான் இருந்தது, நேத்தைக்கும் அப்படித்தான்… ஆனா, தெளிவா பார்க்கும் போது எப்போதும் போல வீல் சேர் தான் தான் இருந்தாரு… என் கண்ணுலதான் ஏதாவது கோளாறா? இல்ல நிஜமாவே இது என் மனப்பிரமை தானா?’ என்று எண்ணி குழம்பியவள்,..

சில சமயம் சந்தேகத்துடன்,..
‘ஒரு வேளை அவரால நடக்க முடியுதோ? ஆனா அப்படி இருந்தா நிச்சயம் எங்களுக்கு சொல்லுவாரே, நாங்க அதுக்காகத்தானே காத்திருக்கிறோம், அது அவருக்கும் தெரியும், அதனால… மறைக்க சான்ஸே கிடையாது, ஹும்… எனக்கு தான் தப்பா அப்படி தோணுது போல’ அந்த எண்ணங்களை அப்படியே தூக்கி எறிய முடியாமல், அடிக்கடி புலம்பிக் கொண்டே இருந்தவள் தன்னை தானே சமாதானமும் செய்து கொண்டாள், ஆனால் உள்ளுக்குள் அந்தக் குழப்பம் அவளை உறுத்திக் கொண்டும் தான் இருந்தது,…

அன்று அலுவலகத்தில் தன் சிஸ்டம் முன் அமர்ந்து வேலையில் மூழ்கியிருந்தாள் நந்தினி, அந்த நேரம் அவள் போன் திடீரென ஒலிக்க, எடுத்துப் பார்த்தவள் திரையில் தெரிந்த அசோக்கின் பெயரைக் கண்டு,. ‘இவர் இப்போ எதுக்காக கால் பண்ணுறாரு?’ எனும் குழப்பத்துடனே அழைப்பை ஏற்றாள்…

“ஹெலோ,” என்றவள் சற்று தயக்கத்துடன் பேச, அவனோ,..
“ஹெலோ நந்தினி… நான் உன்னோட பேசணும்” அசோக்கின் குரல் எப்போதுமில்லாத அளவுக்கு சீரியஸாக இருந்தது…

“இப்போவா?” அவள் சற்று யோசனையுடன் கேட்க,.. “ஆமா, இப்போ தான் பேசணும், நான் டெரர்ஸ்ல இருக்கேன், வந்துடு” என்று சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்துவிட்டான்…

மொபைல் திரையை பார்த்துக்கொண்டே குழப்பத்தில் ஆழ்ந்தவளுக்கு ‘போகலாமா? வேண்டாமா?’ என்ற குழப்பம் தான்..

அந்த நேரத்தில் அவளுக்குள் ஒரு குரல் ‘இன்னைக்கு எல்லாத்தையும் முடிச்சிடு நந்தினி, நீ எவ்வளவு நாள் இந்த குழப்பத்துல இருப்ப? அவனோட மனசு எதுவாக இருந்தாலும் உனக்கு கல்யாணமாகி விட்ட உண்மையை சொல்லிடு, இந்த உண்மையை சொல்லிட்டா தொந்திரவு பண்ண மாட்டான், இன்னையோடு இந்த விஷயத்துக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வை’ என்ற அந்த குரலில்,.. நிமிர்ந்து மூச்சை சீர்செய்துக் கொண்டு சிஸ்டத்தை லாக் செய்துவிட்டு எழுந்தாள்….

லிஃப்ட் கதவுகள் திறந்ததும் உள்ளே நுழைந்தவள், ‘அரவிந்த், ஒரு முக்கியமான விஷயம்னு அசோக் கூப்பிட்டிருக்கார், நான் டெரர்ஸ்க்கு போறேன்’ என்று தீரஜிற்கு ஒரு மெசேஜை தட்டி விட்டாள்,..

ஏனோ மனம் உறுத்தியது, அதனால் தான் தீரஜிடம் சொல்லிவிட்டே சென்றிருந்தாள்,..

லிஃப்ட் மெதுவாக மேல்தளத்தை நோக்கி நகர்ந்தது, அவள் லிஃப்ட்டை விட்டு வெளியேறி டெரர்ஸினுள் நுழைந்தாள், அங்கே நின்றிருந்த அசோக் நந்தினியை கண்டதும் பெரிதாக புன்னகைத்தான்,..

அவளுக்கு தான் வலுக்கட்டாயமாக கூட புன்னகைக்க முடியவில்லை,.. “எதுக்காக வர சொன்னீங்க சார்” என்றாள்,…

“என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியல நந்தினி, நாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூறவும் அவள் முகத்தில் அதிர்ச்சி,…

“இப்படி பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா சார்,” அவள் கோபத்துடன் கேட்க,… “ஏன் இதுல என்ன தப்பு இருக்கு, நான் உன்னை நேசிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன், உன்னை நல்லபடியா பார்த்துப்பேன் நந்தினி, ப்லீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என்றான்,..

“ஸாரி சார்,.. என்னால முடியாது” அவள் உடனடியான மறுக்க,.. “ஏன்? ஏன் முடியாது?” என்றான் அவன்,..

“ஏன்னா என் மனசுல இன்னொருத்தர் இருக்கார்” அவள் சொல்ல, அவன் முகத்திலோ அதிர்ச்சி, அதுவும் சில கணம் தான்,.. “எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்லுவன்னு, உன் மனசுல யார் இருக்கானு நான் சொல்லட்டுமா தீரஜ் சார் தானே” என்றான், அவள் முகத்திலோ அதிர்ச்சியும் குழப்பமும்,.. ‘இவருக்கு எப்படி தெரியும்’ என்று யோசித்தாள்,..

அவனோ… “எப்படி தெரியும்னு யோசிக்கிறியா? அதான் பார்த்தேனே அவர் உன்னை பார்க்கிற பார்வையையும், நீ அவரை பார்க்கிற பார்வையையும்” கடுகடுப்போடு சொன்னவன்,. “ஆரம்பத்துல என்கிட்ட என்ன சொன்ன? என்னால யாரையும் மனசால நினைக்க முடியாது, என் குடும்ப சூழ்நிலை அப்படி இப்படினு தானே அடிச்சு விட்ட, இப்போ என்னடி பெரிய பணக்காரன் வந்ததும் அவர் கூட ஒட்டிக்கிட்டு, ராணி வாழ்க்கை வாழலாம்னு பிளான் பண்ணிட்டியா? அதுக்கு நான் கண்டிப்பா விட மாட்டேன்” அவனது வார்த்தைகளின்
டோன் மாறியதும், முகத்தில் வேறு ஒரு முகமூடி தெரிந்ததும், அவளது உள்ளம் பதட்டம் கொண்டது,..

இருப்பினும் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு,.. “அசோக்… தயவுசெய்து இப்படி பேசாதீங்க. நான் உங்களை ஒரு நல்ல மனிதர், நல்ல நண்பர்னு தான் நினைச்சேன், ஆனா இப்போ இப்படி பேசுறது என்னை ஹர்ட் பண்ணுது” என்றாள்,..

“ஓஹோ ஹர்ட் ஆகுதா? உண்மையை சொன்னா வலிக்கும்னு சொல்றது நிஜம் தான் போல, உன்னோட பிளான் எனக்கு புரிஞ்சிடுச்சு, தீரஜ் சாரை வளைச்சு போட்டு அவரோட ஒட்டிக்கலாம்னு பார்க்கிற, அவர் கால் முடியாதவர்னு தெரிஞ்சும் பணத்துக்காக தானே இதெல்லாம் பண்ணுற” என்கவும்,… “போதும் நிறுத்துங்க அசோக், தெரியாம எதுவும் பேசாதீங்க” என்றாள்,..

“எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன், அதோட என்னால இதை ஏத்துக்கவும் முடியாது, நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும், உனக்கு வேற சாய்ஸே இல்ல” அவன் கூற,…

அவள் கண்களில் தீப்பொறி பறந்தது, அதற்கு மேலும் பொறுமை இல்லாதவளாய்,.. “முட்டாள் மாதிரி பேசாதீங்க, எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிடுச்சு, தீரஜ் தான் என்னோட ஹஸ்பண்ட்” என்று கூறி தனது தாலியை எடுத்து காட்டி, அவள் சத்தமாகச் சொன்னவுடன், அசோக்கின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன…

“நீங்க நினைக்கிற மாதிரி பணத்துக்காக நான் எதுவும் பிளான் பண்ணல, தீரஜ் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டாரு, அவருக்கு நான் ஏற்கனவே கடன் பட்டிருந்தேன், அவரோட சூழ்நிலையையும் சொன்னார், எனக்கு மறுக்க தோணல, எங்களோட திருமணம் மனப்பூர்வ சம்மதத்தோட, எங்க குடும்பத்தினரின் முன்னிலையில் நடந்தது” என்று அவள் சொன்னது
அவன் காதுகளில் விழவே இல்லை…

தான் காதலித்த பெண் தனக்குக் கிடைக்க மாட்டாள் என்ற எண்ணம் அசோக்கின் மூளையை மழுங்கடித்தது… “இல்ல!” என்று கத்தியவன், “எனக்கு நீ வேணும்! நீ என்னோட வாழ்க்கை, நீ என்னை விட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணுவியா? நான் விட்டுடுவேனா?” என்று பிதற்றியவன் கோபத்தோடு அவளை நெருங்க, நந்தினி பயத்தில் பின்னால் நகர்ந்தாள்..

“இங்கே பாருங்க அசோக்… நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க” அவள் பின்னால் நகர்ந்தபடியே விளக்க முயன்றாள், ஆனால் அவன் மூளையில் எதையும் ஏற்றிக் கொள்ளவில்லை, அவள் பின்னால் நகர்ந்தபடியே டெரர்ஸின் தடுப்பு சுவர்களை எட்டினாள், அந்த கணம் அசோக்கின் கண்கள் அவளையும், கீழே தெரியும் உயரத்தையும் மாறி மாறிப் பார்த்தன…

‘எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது…’ என்ற சிந்தனை அவன் மனதை ஆட்கொள்ள, அடுத்த நொடி கொஞ்சமும் யோசிக்காமல் அவள் கையைப் பிடித்து தள்ளிவிட,
பெரிய அலறல் சத்தம் ஒன்றோடு அவள் கீழே விழுந்தாள்…

அந்தக் கணத்தில், லிஃப்டின் “டிங்” என்ற ஒலி அவன் காதில் விழ, அவசரமாக படிகளை நோக்கி ஓடிவிட்டான் அசோக்….

லிஃப்டின் கதவு திறக்க, தீரஜ் வெளியே வந்தான், டெரர்ஸில் யாரும் இருக்கவில்லை, வெறிச்சோடி இருந்த அந்த இடம் ஏதோ ஒரு நிம்மதியற்ற சுவாசத்தை கொடுத்தது,..

நந்தினி அனுப்பிய குறுஞ்செய்தியை வேலைப் பளுவில் மாட்டிக் கொண்டதால், சில நிமிடங்கள் தாமதமாகவே அவன் கவனித்திருந்தான்,
மனதுக்குள் ஏதோ சரியில்லை என்ற கலக்கம் அவனை டெரர்ஸுக்கு இழுத்து வந்தது..

‘எங்க போனாள்…’ என்று யோசித்தவனுக்கு, அவளின் செல்லுக்கு போன் செய்யும் எண்ணம் வர, அவள் எண்ணிற்கு அழைத்தான், அது அங்கே தான் ஒலித்தது, அங்கே டெரர்ஸின் ஓரத்தில் தரையில் அநாதரவாக கிடந்தது அவள் அலைபேசி,..

வீல் சேரை நகர்த்தி குனிந்து, போனை கையில் எடுத்து பார்த்தவனுக்கு, உள்ளுக்குள் கலக்கம் அதிகரித்தது, சுற்றி அவ்விடத்தை பார்வையால் அலசியவன் “மது!” என்று அழைத்தான், அவள் அங்கே எங்காவது இருக்கிறாளா என்ற நம்பிக்கையோடு…

சில நொடிகள் கழித்து, “அ… அரவிந்த்…” என்று பயத்தில் நடுங்கிய குரல் ஒன்று கேட்க,
அவன் கண்கள் சுற்றிப் பார்த்தன…

“மது… எங்கே இருக்க?” என்று பதட்டமாகக் கேட்டான்…

“அ… அரவிந்த்… அரவிந்த்…”
அதற்கும் மேலே சொல்ல முடியாமல் அவள் குரல் முறிந்தது,..

அந்தக் குரல், டெரர்ஸின் தடுப்பு சுவர் பக்கத்திலிருந்து வந்ததை கவனித்தவன், சட்டென்று மின்னல் பட்டது போல, வீல் சேரை விட்டு எழுந்தான், அவன் தடுப்பு சுவரை எட்டிப் பார்த்ததும், மூச்சு நிற்கும் அளவுக்கு அதிர்ச்சி அடைந்தான்..

அங்கே நந்தினி, ஒரு மெல்லிய கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தாள்,
அவளது விரல்கள் நடுங்கின, முகம் கண்ணீரில் நனைந்திருந்தது…

“மது!” என்று அலறிய தீரஜிற்கு, அந்த நொடியில் அவளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே…

அவளோ அவனைப் பார்த்ததும் சுவாசமே தடைபட்டது போல, மேலும் அழுகையில் நடுங்கினாள்..

“கையை கொடு!” என்ற அவன் குரல் அதிர, அவள் கம்பியை இறுகப் பற்றியபடி, கண்ணீர் வடித்துக் கொண்டே,.. “இல்ல… என்னால முடியாது… எனக்கு பயமா இருக்கு…” என்று கத்தினாள்.

“இங்கே பார், உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல?”
அவன் கண்களை நேராகப் பார்த்தவளுக்கோ, அந்த திடமான பார்வை நம்பிக்கையை ஊட்டியது.
“ம்ம்..” என்று கண்ணீரோடு தலையசைத்தாள்…

“அப்போ… கையை கொடு!” அவன் தன் கரத்தை நீட்டியவுடன்,
அவள் நடுங்கும் ஒரு கரத்தினால் மெதுவாக கம்பியை விட்டு ஒரு கையை மட்டும் நீட்டினாள்…

அந்தச் சமயமே அவள் பிடித்திருந்த மற்ற கை தடுமாறியது, சில நொடிகள் தான்… அவள் கீழே விழுந்துவிடுவாளோ என்று நினைத்த அந்தக் கணத்தில்,
தீரஜ் மின்னல் வேகத்தில் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டான்…

அவளது கையைப் பிடித்து, தனது முழு வலிமையையும் பயன்படுத்தி இழுத்துக் கொண்டவனின் முகத்தில் வலி தெரிந்தாலும், அவனது கண்களில் ‘விடமாட்டேன்’ என்ற ஒரே உறுதி மட்டுமே தெரிந்தது,.

அவனது முழு பலத்தின் சக்தியால்,  மெதுவாக மேலே தூக்கப்பட்டவள், தீரஜின் மார்பில் விழுந்து சிக்கிக் கொண்டாள், அவளது மூச்சுகள் தடுமாறிக் கொண்டிருந்தது, அவன் இதயமோ வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
38
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்