Loading

அத்தியாயம் – 25

 

அந்த காலை வேளையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மது நந்தினியின் நாசியில் வழமையாக நுகரும் அவன் ஸ்ப்ரேயின் வாசனை பரவியது, அந்த மணம் தட்டியவுடனே மெல்ல உறக்கம் சிதறியது அவளுக்கு, இருப்பினும் விழிகளை திறக்காமல் ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும்’ என்று எண்ணியவள் கண்களை திறக்க மனமின்றி மூடிக் கொண்டே படுத்திருந்தாள்,…

காதுகளில் கேட்ட சிறுசிறு சத்தங்களின் மூலம் தீரஜ் அலுவலகத்திற்கு தயாராகி கொண்டிருப்பதை அவதானித்தவள்,.. “டைம் என்னாச்சு அரவிந்த்” என்று கேட்டாள் கண்களை திறக்காமலேயே…

திரும்பி மூடி இருந்த அவள் விழிகளை பார்த்து புன்னகைத்து விட்டு,… “எய்ட் ஓ கிலாக் ஆக போகுது” அவன் சொல்ல,.. “ஓ இன்னைக்கும் நல்லா தூங்கிட்டேனா” என்றாள் சோர்வோடு,…

“ம்ம்.. வர வர நீ ரொம்ப சோம்பேறியாகிட்ட மது” அவன் சொல்ல.,.. “எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான், நைட்லாம் என்னை தூங்க விடுறதே இல்ல” என்றாள் சிணுங்கலாய்,…

“நான் என்ன பண்ணேன்” அவன் தெரியாதது போல் கேட்க,…”என்ன பண்ணல நீங்க” என்று கேட்டு விழிகளை சில நொடிகள் சற்றே திறந்து அவனை பார்த்து  விட்டு மூடிக் கொண்டவள்… “கிஸ் கொடுத்தே என் தூக்கத்தை பறிக்கிறீங்க” சிறு வெட்கத்தோடு கூறியவளுக்கு அந்த கணம் எதுவோ ஒன்று திடீரென்று பொறி தட்ட, கண்களை விரித்து விரைவாக எழுந்து அமர்ந்தவள் தீரஜை தான் அதிர்ச்சியோடு பார்த்தாள்,..

“என்ன?” என்று கேட்டவனோ வீல்சேரில் தான் அமர்ந்திருந்தான், அவளுக்கோ குழப்பம், அந்த சிறு நொடி இடைவெளியில் அவள் கண்களை திறந்த போது அவன் நின்று கொண்டிருந்தான், அந்த அதிர்ச்சியில் தான் அவள் விரைவாக எழுந்தாள், ஆனால் இப்போதோ அவன் வீல்சேரில் அமர்ந்திருக்கவும், ஒன்றும் புரியாமல் தலையை சொறிந்தவள்,.. ‘அவர் நின்னுக்கிட்டு இருந்த மாதிரி இருந்ததே, அப்படினா என்னோட மன பிரம்மையா அது?’ என்று யோசிக்க,.. அவனோ,.. “உன்னோட ஓவர் திங்கிங்கை மூட்டை கட்டி வச்சிட்டு, சீக்கிரம் ஆஃபிஸ்க்கு வர பாரு, ஒன்னார் தான் எஸ்கியூஸ்” என்று சொல்லிவிட்டு திரும்பி அவளுக்கு.. “பை” என்று கையசைத்து விட்டு, வீல்சேரை நகர்த்திக் கொண்டு சென்று விட, இவள் தான் குழப்பம் நீங்காமல் இன்னமும் தலையை சொறிந்து கொண்டே அமர்ந்திருந்தாள்,..

‘அவர் நின்னுகிட்டு இருந்த மாதிரி தானே இருந்தது, ஆனா நல்லா பார்க்கும் போது வீல்சேர்ல தான் இருந்தாரு, கண்டிப்பா என்னோட மனபிரம்மை தான், அவர் நிற்கணும், நடக்கணும்னு ரொம்ப ஆசையோட எதிர்பார்ப்போட இருக்கிறதுனால இப்படி தோணுது போல’ என்று ஒரு முடிவுக்கு வந்தவளுக்கு, குழப்பமும் நீங்கி விட, எழுந்து அலுவலகத்திற்கு தயாராக ஆரம்பித்திருந்தாள்,..

அன்று மதிய நேரம் இருக்கும், ஒரு கோப்புடன் தீரஜின் அறைக்குள் நுழைந்தவள்,… “நான் வீட்டுக்கு போகட்டுமா” என்றாள்,..

அவள் அந்தக் கோப்பில் கையெழுத்திட்டுக் கொண்டபடியே, தலைக்கூட உயர்த்தாமல்,
“ஆஃபிஸ் டைம் இன்னும் முடியல, மிசஸ் மதுநந்தினி, ஒழுங்கா வேலையை முடிச்சிட்டு கிளம்பு” என்று கட்டன் ரைட்டாகச் சொன்னான்…

அவளோ சற்றே தலை குனிந்து, மெலிதாய்,.. “நான் நாளைக்கு வந்து முடிச்சிக்கிறேன்… இப்போ கிளம்புறேன்… எனக்கு பர்மிஷன் கொடுங்க…” என்றாள்.

அவள் குரலில் தளர்ச்சி, முகத்தில் ஒரு வாட்டம்  தெரிந்தது… அதைப் பார்த்தவனோ, ஃபைலை மூடிவிட்டு நாற்காலியில் சற்றே சாய்ந்து,.. “பக்கத்துல வா” என்று அழைக்க, அவளும் மெல்ல நடந்துவந்து அவன் அருகில் நின்றாள்…

அவள் கரத்தைப் பிடித்து, மெதுவாக இழுத்து, தன் மடியில் அமர்த்திக் கொண்டவனோ, அவள் நெற்றியில் வழிந்திருந்த முடிக்கற்றைகளை காதின் பின்னே சொருகி விட்டபடி,.. “என்னாச்சு என் ஹனிபீக்கு?” என்றான் மென்மையாய்…

அவளோ சிறு பிள்ளை போல் முகத்தைச் சுருக்கி,.. “விக்னேஷ் இருக்கான்ல… அவன் இன்னைக்கு ஒன்னு சொன்னான்… ரொம்பக் கடுப்பாகிடுச்சி…” என்று சொல்ல,..

“என்ன சொன்னான்?” என்று கேட்டவனின் முகமோ உடனே சீரியஸாக மாறியது…

“ம்ம்.. நான் தனியா உட்கார்ந்து சிரிச்சிட்டே இருக்கேனாம், சில சமயம் ஏதாவது புலம்புறேனாம், உனக்கு ஏதோ மென்டல் ஸ்ட்ரஸ் ஆகிருச்சி, உடனே போய் டாக்டர்கிட்ட காட்டு, இல்லைனா எங்களை கடிச்சி வச்சிடுவன்னு சொல்லி சிரிக்கிறான், சுபாவும் சேர்ந்து சிரிக்கிறா, ஹரிணி இன்னைக்கு ஆபிஸ் வரல இல்லனா எனக்கு சப்போர்ட்டா இருப்பா, என்னை பார்த்தா பைத்தியம் மாதிரியாயிருக்கு” என்றாள்,.. ஏதோ சீரியஸ் விஷயம் என்று நினைத்தவனுக்கு அவள் சொன்னதை கேட்டு பெருமூச்சு ஒன்று வெளிவந்து,..

“நீ ஏன் தனியா சிரிக்கிற, தனியா என்ன புலம்புற” என்று கேட்டான்..

“எல்லாம் உங்களை பத்தி தான், வேலையில கான்சன்ட்ரேட்டா இருந்தாலும் ஏதாவது ஒரு நினைப்பு வந்துடுது, அதோட சிரிப்பும் வருது, தனியாலாம் நான் புலம்பல, காதுல ப்ளுடூத் ஹெட்செட் மாட்டிக்கிட்டு உங்ககூட நான் பேசுறது யாருக்கும் தெரிய கூடாதுன்னு ஒரு காதுல மட்டும் ஹெட்செட்டை மாட்டிக்கிட்டு கையால மறைச்சுக்கிட்டு, உங்ககிட்ட பேசுவேன், அதை அவன் தனியா புலம்புறேன்னு சொல்றான்” என்றாள் உதட்டை சுளித்து..

அதனை கேட்டவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட, அவளோ,.. “எனக்கு பைத்தியக்காரி பட்டம் வாங்கி தந்துட்டு உங்களுக்கு சிரிப்பு கேட்குதா” என்று சிணுங்கலுடன் சொன்னவளோ, அவன் மார்பில் தன் தளிர் கரங்களால் மாறி மாறி அடிக்க,.. அவள் அடிகளை இன்பமாய் பெற்றுக் கொண்டவனோ,.. அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே… “கிஸ் மீ மது” என்றான்…

அவனது குரலில் அடிப்பதை நிறுத்தியவள்,.. “இங்கேயா” என்று அதிர்ந்து வாயை பிளக்க..  “ம்ம்” அவளது பிளந்திருந்த இதழ்களை தாபத்துடன் பார்த்துக் கொண்டே அவன் மெல்ல தலையசைக்க.. அவளோ.. “ஐயோ நான் மாட்டேன்ப்பா, யாராச்சும் வந்துடுவாங்க” என்றவளிடம்,… “என்னோட பர்மிஷன் இல்லாம யாரும் வர மாட்டாங்க, அது உனக்கும் தெரியும்” என்கவும், அவளும் சிறு வெட்கத்துடன் அவனது கன்னங்களை தாங்கி அவன் இதழ்களோடு தன் இதழ்களை பிணைத்து கொள்ள, அவன் உஷ்ண பெருமூச்சுடன்,
விழிகளை மூடி அவள் தீண்டலை இன்பமாய் அனுபவித்தவன், அதன் பின் அதனை தனதாக்கி கொண்டான்,…

அந்த நிமிடம், இருவருக்கும் உலகம் மறந்து போனது, சுற்றியிருந்த சூழலும் மறந்து, காலம் நிறுத்தப்பட்டது போல் இருந்தது, இரண்டு இதயங்களும் மெதுவாக ஒன்றாகத் துடித்து, வார்த்தைகளுக்கு பதில் உணர்வுகளின் மொழியே அங்கு பேசிக் கொண்டது,..

**************

“கொஞ்ச நாளா ப்ராக்டீஸ் எடுக்கவே இல்லையே, என்னாச்சு அரவிந்த்? நானே வந்தாலும், ‘நாளைக்கு பார்க்கலாம்’ ன்னு சொல்லி அவாய்ட் பண்ணிடுறீங்க, என்ன விஷயம்?” என்று கேட்டாள் நந்தினி

“எனக்கு பிடிக்கல,” அவன் சுருக்கமாக முடித்துக் கொள்ள,..
“பிடிக்கலையா? பிடிக்கிறதுக்காகவா பண்ண சொல்றாங்க, கால் குணமாகனும்ல,” அவள் கவலையோடு சொன்னாள்…

“நாளைக்கு பார்த்துக்கலாம்,” அவன் மீண்டும் தவிர்க்க,.. “வர வர நீங்க சரியில்லை, பிஸியோதெரபிஸ்ட் வந்தா தான் சரிப்பட்டு வருவீங்க,” அவள் கண்டிப்புடன் சொல்லவும்,..
“எதுக்கு? பயிற்சி கொடுக்கிறேங்கிற பெயர்ல என் காலை முறிச்ச எடுக்கிறதுக்கா, அது ரொம்ப பெயின்ஃபுல் மது… கொஞ்சம் விடேன்” என்றான் அவன் சலிப்போடு…

அவன் முகத்தில் தெரிந்த அந்த வலியைக் கண்டு அவளுக்குள் வருத்தம் எழுந்தாலும், அவனுக்கு பயிற்சி முக்கியம் என்பதை அறிந்து, மனதை கடினமாக்கிக் கொண்டு, “இப்படி பேசினா எப்படி? எழுந்து நடக்கணும்னு ஆசை இல்லையா?” என்று கேட்டாள்…

“ஆசை இருக்கு, நடப்பேன், ஒருநாள் கண்டிப்பா நடப்பேன் இனிமேல் பிஸியோ வேண்டாம்,” என்று பிடிவாதமாகச் சொன்னவனிடம்,.. “என்னமோ போங்க… வர வர ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறீங்க, நான் சொன்னாலாம் கேட்க மாட்டீங்க, மாமா கிட்ட பேசிக்கிறேன், அவர் நாலு வார்த்தை சொல்லி திட்டினா தான் உங்களுக்கு பொறுப்பு வரும்” என்று புலம்பியவளின் கரம் பிடித்து இழுத்து தன்னருகில் கொண்டு வந்தவன்,… “இந்த வாய் ரொம்ப பேசுது… அதுக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கலாமா” என்று மெதுவாக அவள் இதழ்களை பார்த்துக் கொண்டே சொன்னான்…

அவள் புரியாமல் “பனிஷ்மெண்டா?” என்று வியப்புடன் வாய் பிளந்த அந்த கணத்தில், அவன் முனைந்து அவளது இதழ்களை சிறைபிடித்துக் கொண்டான்…

அவளுக்குள் சற்று அதிர்ச்சி கிளம்பியதோடு, நொடியில் அது உருகி மென்மையான வெட்கத்தோடு கலந்து, அவனில் தன்னையே ஒப்படைத்துவிட்டாள்….

இருவரும் மெல்ல விலக, அவளோ,.. “கொஞ்சம் கேப் கிடைச்சாலும் பூந்துடறீங்க” என்று சொல்லிவிட்டு விலகியவள்,.. “ஃபைல்ஸ் எல்லாம் அடுக்கி வைக்கணும்னு சொன்னீங்க, சேர்ந்தே பண்ணிடலாமா” என்று வினவ,.. “ம்ம்.. பண்ணிடலாமே, அதுக்கு முன்னாடி கொஞ்சம் குடிக்க தண்ணி எடுத்துட்டு வா, காலியாகிடுச்சி” என்று சொல்ல,.. “ஓஹோ… இன்னும் தாகம் அடங்கலையா” அவள் இரட்டை அர்த்தத்தில் வினவ, ஆணவனின் முகமும் சடுதியில் சிவந்து விட,.. “நீ ரொம்ப பேசுற மது,” என்றான்,..

அவனது கன்னசிவப்பை ரசித்துக் கொண்டே,.. “பேசுனா தான் இந்த உலகத்துல வாழ முடியும்” கண்கள் சிமிட்டி சொல்லிவிட்டு அவள் தண்ணீர் ஜக்கை எடுத்துக் கொண்டு வெளியேற,. அவனோ “ஃபண்ணி கேர்ள்” என்று முணுமுணுத்து விட்டு வீல்சேரை நகர்த்தி மேஜையின் மீதிருந்த சில காகிதங்களை ஃபைலில் வைத்துக் கொண்டிருந்தான், அந்த தருணத்தில் திடீரென்று, அருகில் சற்று தள்ளி விழுந்த ஃபைலை எடுக்க முயல, அவனுக்கோ அது எட்டவில்லை, திரும்பி அறை கதவை பார்த்தவன் பின் வீல் சேரிலிருந்து எழுந்து இரண்டு அடிகள் நடந்தான்….

அதே சமயம் நீரை பணியாள் கொண்டு வந்து தருவதாக சொல்லி இருந்ததால், அவரிடம் ஜெக்கை கொடுத்து விட்டு, அறையின் கதவின் அருகே வந்திருந்த நந்தினிக்கு அந்த காட்சி கண்களில் படவும், தன் மூச்சே அடங்காமல், கண்களை பெரிதாக்கி பார்த்தாள்.

எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் தான் நடந்திருந்தது, அவள் தெளிவாக பார்த்த நேரம் அவன் வீல் சேரின் மீது தான் அமர்ந்திருந்தான், நந்தினிக்கோ குழப்பம்…

‘நான் பார்த்தது உண்மையா? அல்லது என்னோட மனப்பிரமையா?’ என்ற எண்ணம் புயலாய் அவளை ஆட்கொள்ள, அவனோ எதுவும் நடக்கவே இல்லை என்பதுபோல், கோப்புகளை சீர்செய்யத் தொடங்கினான்….

நந்தினி தன் இதய துடிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல், “அரவிந்த், நீங்க… இப்போ… நின்னீங்களா?” என்று மெதுவாகக் கேட்க,.. திரும்பி அவளை நோக்கியவன்,… “ஆர் யூ கிட்டிங்” என்றான், அவளுக்கோ ஒரு மாதிரியாகி விட்டது, தன் கண்ணில் தான் ஏதோ கோளாரோ? இப்படி கேட்டு அவரை சங்கடப்படுத்திட்டோமோ என்ற கவலை ஒரு பக்கமும், தான் பார்த்தது நிஜமாகவே மனபிரம்மை தானா? என்ற குழப்பம் ஒருபக்கமும் சேர்ந்து அவள் மூளையையே பழுதாக்கியது…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
35
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்