குகனை அழைத்துக் கொண்டு ரியா வீட்டிற்குள் நுழைய .
சத்யா முறைத்தார்.
” எதுக்குடி அவனுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த. அவனுக்கு தான் மூச்சு திணறல் பிரச்சனை இருக்கிறது தெரியும் தானே!”
“மா போதும் !நிறுத்துறியா ?”என்றாள்.
அனைவருமே லேசான பதட்டத்துடன் பார்க்க.
” ஃபர்ஸ்ட் எல்லாரும் இப்படி பதறுவதை நிறுத்துங்க! அவன் சின்ன பையன் ,அவனுக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருக்கு அவ்வளவுதான்.அதுக்காக, அவனுக்கு புடிச்ச எந்த பொருளும் வாங்கி தர கூடாதுன்னு கிடையாது.அது சின்ன சாக்லேட் ஸ்வீட்னு எனக்கும் தெரியும்.அளவுக்கு மீறினால் தான் அமிர்தமும் நஞ்சு.ஒரு சாக்லேட்ல ஒன்னும் ஆகாது”
“அது டைரிமில்க் டி ”
“அது எனக்கும் தெரியும்.தெரிஞ்சு தானே வாங்கி கொடுத்து கூட்டிட்டு வந்து இருக்கேன்.ஒரு நாள்ல ஒன்னும் ஆகாது.நீங்க வீட்டுக்குள்ளேயே பொத்தி பொத்தி வச்சாலும் வர சளி வர தான் செய்யும் ,வர வீசிங் ப்ராப்ளம் வர தான் செய்யும். வராமல் போய்டாது. அதுக்காக, சின்ன பையனுக்கு எதுவுமே கொடுக்காமலே வளக்குறது நியாமமா? இதே ஒரு பொழப்பா வச்சிட்டு இருக்கீங்க, அப்பப்ப அவன் கேக்குறத வாங்கி கொடுத்து பழகினால்,அவன் ஏன் திருட்டுத்தனமா சாப்பிட ஆசைப்பட போறான் “
அவன் ரியா கன்னத்தில் முத்தமிட்டு “லவ் யூ ரியா சித்தி” என்று சிரித்தான்..
“என்னது ரியா சித்தியா?” என்று மித்ரா கேட்க..
” ஆமா மிது சித்தி”என்றான்.
” என்னடா ரெண்டு பேரையும் சித்தினு சொல்ற? யார் என்ன சொன்னாங்க?”
“யாரும் எதும் சொல்லல சித்தி.மரியாதை கொடுத்து பேசணும் இல்ல. எல்லாருக்கும் மரியாதை கொடுக்க சொல்லி தேவ் சொல்லி இருக்கு”
இருவரும் தேவை முறைக்க.
” அவன் பழகணும் ரியா” என்றான் புன் சிரிப்புடன்..
” அது சரி!” என்று அமைதியாகி விட,
“சரி எனக்கு ஒரு டவுட்டு டா..இந்த சித்தி கூட ஓகே. ஆனா, அம்மா இவளை சித்தினு கூப்பிட சொல்லும்போது நீ மிதுனு கூப்பிடுறேன்னு சொன்னியே அது எப்படி டா?பட்டுன்னு மிதுனு சொன்ன? வீட்ல நாங்க மித்துனு சொல்லுவோம். அவளோட ஃப்ரெண்ட்ஸ் ஒரு சிலர் கூட தாரானு சொல்லுவாங்க,ஆன நீ புதுசா அப்படி சொன்ன? அதும் அவ்ளோ நாள் மிஸ்னு சொல்லிட்டு உடனே மிதுவா மாறுச்சு?”
“ஓ! அதுவா? என்றவன் பேச போக..
“இப்ப அது எதுக்கு ரியா ?”என்றான் பதற்றமாக தேவ்.
” நீ சொல்லுடா குகனு ?”
“அது தேவ் கூப்பிட்டதால நான் கூப்பிட்டேன்”
“புரியல உன்னோட தேவ் அவள மிதுனு கூப்பிடுவாரா?”
“ஹம்”என்று முத்துப்பற்கள் தெரிய சிரித்தான்.
“என்ன டா சொல்ற? புரியிற மாதிரி சொல்லு?
” பல நாள் போன்ல மிஸ் போட்டோவை வச்சு தேவ்” என்று சொல்லும் போதே,
ரியா முறைக்க.
“மிது போட்டோ பார்த்து தேவ் பேசிட்டு இருக்கும்போது கேட்டு இருக்கேன்”
“என்னன்னு?”
“மிதுனு”
“டேய் நீ அடி வாங்க போற! உன்னோட தேவ் அவளை ராங்கினு தான கூப்பிடுவாரு “என்றவள். சுற்றியுள்ளவர்களை உணர்ந்து நாக்கை கடித்துக் கொள்ள.
மித்ரா அவளை முறைக்க..
அசடு வழிந்த படி, கீழே குனிந்து, குகன் காதில் மெதுவாக, “ராங்கின்னு கூட நீ கூப்பிடலையே டா. அப்புறம் என்னடா ? ராட்சசி தான ஃபோன்ல கூட சேவ் பண்ணி வச்சு இருக்காரு ,அது தான் உனக்கும் ,எனக்கும் தெரியுமே” என்றாள் கிசு கிசுத்த படி..
” அங்க என்ன டி கிசு கிசுக்கிறீங்க?” என்று சத்யா கேட்க.
“நீ சும்மா இரும்மா” என்று விட்டு குகனைப் பார்க்க..
” இல்லை” என்று தலையாட்டியவன். “தேவ் தூங்கும் போது, போட்டோ பார்த்துட்டு மிதுன்னு சொல்லி பேசும்போது கேட்டேன் அதனால தான் நானும்”..
“போட்டு கொடுத்துட்டானே! குள்ள வாண்டு” என்று தலையை சொரிந்த படி புலம்பினான்.
“ஓ !அப்படி வேற கூப்பிடுவாரா? உங்க தேவ் ” என்றாள் சிரிப்புடன்..
அவனும் முத்து பற்கள் தெரிய புன்னகைக்க..
” போட்டோ ஏது டா.அது என்ன போட்டோ அப்படி?”
“அப்பாகிட்ட ஆட்டைய போட்ட எங்கேஜ்மென்ட் போட்டோ தான் இருக்கு. அதுக்கு முன்னாடி தேவ் கிட்ட மிது சித்தி ஃபோட்டோ இல்ல”
“டேய் புளுகுறியா?”
“இல்ல சித்தி. வாட்ஸ்அப் டிபில இருக்க போட்டோ பார்த்து தான் தேவ் பேசும்”
“சரிடா. ஆனா, இவ்வளவு நாளா நீ மிதுனு கூப்பிடாம அன்னைக்கு மட்டும் ஏன் மிதுனு கூப்பிட்ட ?”
இப்பொழுது வேலு,வித்யாவை குகன் பார்க்க..
வித்யா,வேலு இருவரும் சங்கடமாக உணர்ந்தனர்..
” நீ சொல்லுடா குகனு. யாரையும் பார்க்காத”
” அ..அது” என்றவன்… ஒரு சில நொடிகளுக்கு பிறகு,தேவை பார்த்தான்.
அவனும் அவனை பார்த்து விட்டு ,அமைதியாக தான் இருந்தான். ஏனென்றால் அவனுக்கும் இதற்கான விடை தேவை. அன்று இருந்த சூழ்நிலையில் அவனிடம் முழுவதாக கேட்க முடியவில்லை.
“நீ சொல்லுடா ” என்றாள் ரியா.
அவனும் ,”அது மிஸ்ஸுக்கும் ,தேவுக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு நாள் நம்ப ஐஸ்கிரீம் பார்லர்ல மீட் பண்ணிட்டு வந்தோம்ல”
” ஆமா “என்றவளுக்கு அன்று தேவ் ,மித்ரா தங்கள் காதலை பரிமாறிக் கொண்ட நாளாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
அப்படித்தான் தேவும் மித்ராவும் கூட எண்ணினார்கள்.
” சரி அன்னைக்கு என்ன சொன்னாங்க?”
“அன்னைக்கு அப்பாவும், அம்மாவும் இனி தேவ் கூட நீ தூங்க வேணாம் அப்படின்னு சொல்லி சொன்னாங்க”
தேவின் பார்வை வேலுவிடம் தான் இருந்தது .
அமைதியாக வேலுவை ஒரு பார்வை பார்த்து விட்டு, குகன் கூறுவதில் கண் வைத்தான்.
மித்ரவும் அமைதியாக தான் இருந்தாள்.
“நான் ஏன்னு கேட்டேன்..அது தேவுக்கும் , மிஸ்ஸுக்கும் கல்யாணம் ஆகப்போகுது இல்லையா? அதனால என்ன இனிமே அங்க தூங்க வேணாம்னு சொன்னாங்க. என்னைக்காவது ஒரு நாள் தூங்கலாம். டெய்லி நான் அங்க போய் தூங்க வேணாம்னு சொன்னாங்க. இல்லன்னா, மிஸ்ஸுக்கும் தேவுக்கும் என்னால சண்டை வரும் சொன்னாங்க”என்றான் பாவமாக..
“ஏன் மாமா? அவன் சின்ன புள்ள அவன்கிட்ட என்ன பேசுறதுன்னு இல்லையா?” என்றாள் சங்கடமாக ரியா.
வேலு அமைதியாக இருக்க.
” சரி டா. அவங்க சொல்லிட்டாங்கனா நீ அதுக்காக தேவ் கூட தூங்காம விட்ருவியா ?” என்றாள் மித்ரா.. அவன் அருகில் உட்கார்ந்து அவன் தலையை ஆதுரமாக வருடியபடி,
“இரு மித்து ” என்ற ரியா” நீ மேல சொல்லு டா..இன்னும் என்ன சொன்னாங்க அம்மாவும் அப்பாவும்” என்றாள் அனைத்திற்கும் இன்றே விடை கிடைக்க வேண்டும் .இன்றே சரி செய்து ஆக வேண்டும் என்ற நோக்கத்தில்,
“ஸ்கூலுக்கும் இனி நான் அதிகமா தேவ் கூட போக வேணாம்னு சொன்னாங்க. நான் அங்க தூங்கினா அவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரும். கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க தேவ் கூட ஸ்கூலுக்கு போவீங்க.. நானும் உங்க கூட வந்தா அப்பவும் உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரும்னு சொன்னாங்க. தேவுக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் இல்லையா? அப்போ நான் இதெல்லாம் பண்ணினா உங்களுக்கு தேவை பிடிக்காமல் போயிடுச்சுன்னா அதான். அது மட்டும் இல்லாம”என்று நிறுத்த,
மேலும் வேலு ,வித்யா இருவருக்கும் சங்கடமாக இருந்தது. இருந்தாலும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்கள்.
தேவ் இருவரையும் அமைதியாக பார்த்தான்.
” நீ மேல சொல்லுடா குகன் குட்டி” என்று அவனை கொஞ்சிய படி அவனை மடியில் தூக்கி வைத்துக் கொள்ள.
“தேவ் அப்பா, அம்மாவுக்காக நிறைய இழந்துட்டதா பேசிக்கிட்டாங்க. என்கிட்ட சொல்லல..அவங்க பேசினாங்க நான் கேட்டேன். தேவ் என்னால தான் புடிச்ச வேலைக்கு போகல ,ஃப்ரெண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலனு சொன்னாங்க.உண்மையாவே தேவ் என்னால தான பிரண்ட்ஸ் கூட பார்க்க போகல.
நானெல்லாம் ஜாலியா பிரண்ட்ஸ் கூட விளையாட தானே செய்றேன். டெய்லி சாயங்காலம் விளையாடுவேன் ” என்றான் கண்ணீர் மல்க ..
அவனது கண்ணீரை பொறுக்க மாட்டாமல்,வேகமாக அவனை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட தேவ்.” டேய் உங்க அப்பாவும் , அம்மாவும் என்ன வேணாலும் சொல்லட்டும். அதுக்காக நீ என்ன விட்டு போயிடுவியா ?”
“இல்லை. போக மாட்டேன் தேவ்”என்று அவன் கழுத்தோடு கை போட்டு இன்னும் இறுக்கி அணைத்துக் கொள்ள.
” அப்புறம் ஏன்டா என்கிட்ட இதை இவ்வளவு நாளா சொல்லவே இல்ல . உங்க அப்பா, அம்மா சொல்ல வேணாம்னு சொன்னாங்களா?”
” இல்ல தேவ்”
” அப்புறம் என்ன டா?”
” அ..அது அ…அது “என்றவன் அமைதியாக ..
மித்ரா ஓடிச்சென்று அவனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
“குகன் குட்டி இப்ப எதுக்கு தேம்புற? ஒன்னும் இல்ல பாரு!” என்று அவன் நெஞ்சை நீவி விட்டு அவனுக்கு தண்ணீர் புகட்டி விட்டாள்.
ரியா அவனை தூக்கி கிச்சு கிச்சு மூட்டி விளையாட்டு காட்டினாள்.
வீட்டில் உள்ள அனைவரிடமும் பெருத்த அமைதி.
அனைவரும் வேலு ,வித்யாவை குற்றம் சாற்றும் பார்வை பார்க்க.
இருவரும் அமைதியாக இருந்தார்கள். ஒரு வார்த்தை கூட பேசவில்லை .
அவனே தன்னை சமன் செய்து கொண்டு, “இல்லை தேவ் நீ என் கூட தானே இருக்க. என்னால தான நீ மிது சித்தி கூட அதிகமா பேசல..”
“உனக்கு யாரு டா அப்படிலாம் சொன்னது?”என்றான் கோபமாக..
“நீ தான்”
“எது நானா? என்னடா விளையாடுறியா? நான் எப்போ உன்கிட்ட அப்படி சொன்னேன்”
“என்கிட்ட சொல்லல தேவ். ஒரு நாள் மிது சித்தி போன் பண்ணப்ப குகனை படிக்க வைக்கணும். வேலை இருக்கு, அவனை படிக்க வச்சுட்டு, தூங்க வச்சுட்டு போன் பண்றேன்னு சொல்லிட்டு வச்ச இல்ல.. அதே மாதிரி ரெண்டு மூணு நாள் சொல்லி இருக்கியே அப்போதான் அப்பா ,அம்மா சொன்னது எனக்கு ஞாபகம் வந்துச்சு”
“அய்யோ”என்று இருந்தது மித்ரா, தேவ் இருவருக்கும் ..
சிறிய பையனை பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசியது எவ்வளவு பெரிய தப்பு என்று புரிந்தது .அவர்கள் சாதாரணமாக தான் சொன்னார்கள். ரியாவை வைத்துக்கொண்டு எப்படி பேசுவது கஷ்டமோ ,அதே போல் தான் உணர்ந்தார்கள். ஆனால், இன்று அவர்களுக்கு இதற்கு அடுத்து இதை எப்படி சரி செய்வது என்று புரியவில்லை. தங்கள் மீதும் தவறு இருப்பதை உணர்ந்து இருவரும் “சாரிடா “என்று அவனிடம் மன்னிப்பு வேண்ட.
“நீங்க என்ன தேவ் தப்பு பண்ணீங்க? “
“இல்ல டா சின்ன பையன் உன்ன வச்சுக்கிட்டு பேசினது எங்க தப்பு தானே”
“இல்ல தேவ் “என்று புன்னகைத்தவன்..”உனக்கும் சித்திக்கும் ஸ்பேஸ் தரணும் இல்ல அதான்”என்றான்..
“பெரிய மனுஷா இதெல்லாம் உனக்கு யாரு சொல்லி கொடுத்தது ?”என்றாள் ரியா புன்னகையுடன்..
“தேவ் தான்! அப்பா, அம்மாவுக்கு ஸ்பேஸ் தரணும். யாராவது பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது குறுக்க பேச கூடாதுன்னு ,இதுபோல நிறைய சொல்லிக் கொடுத்திருக்கு “என்று சிரித்தான் முத்துப் பற்கள் தெரிய.
அனைவரும் மெச்சுதலாக தேவை பார்த்தார்கள்.
ஆனால்,அவனுக்கு தனது அண்ணன் ,அண்ணி செயலில், எரிச்சல் மண்டியது .
“சரிடா..ஆன அன்னைக்கு எப்படி இவளை பேர் சொல்லி கூப்பிட்ட? அதுக்கு காரணம் என்ன?”.
“ஓ! அதுவா” என்று கன்னத்தில் கை வைத்தவன்..”எனக்காக அன்னைக்கு அப்பா கிட்ட சண்டை போட்டாங்க. நான் குகனை தேவ் கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன்னு சொன்னாங்க இல்ல .அதான்”
“அப்போ உனக்கு அதுக்கு முன்னாடி என் மேல நம்பிக்கை இல்லையா ? உனக்கு என்னை பிடிக்காதா டா” என்றாள் கண்கள் கலங்க வருத்தமாக மித்ரா.
” பிடிக்கும் மிஸ்ஸா”
ரியா சிரித்துக்கொண்டே, “மிஸ்ஸா பிடிக்கும். உன் தேவோட ராங்கியா பிடிக்காதா ?”
“இப்போ புடிக்கும்”
” அப்போ மட்டும் ஏன் பிடிக்காது?”
” அப்போ தேவுக்கு மிஸ் பிடிக்கும். அதனால எனக்கு மிஸ் பிடிக்கும். ஆனா, அம்மாவும் ,அப்பாவும் சொன்னது போல,என்னால அவங்களுக்குள்ள சண்டை வந்துச்சுன்னா ? அதனால தான்” என்றான் மழலையாக …
மித்ரா அவனை அள்ளிக் கொஞ்சியவள். “உன்னை எப்பவும் தேவ் கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன்டா கண்ணா !”என்று இறுக்கி அணைத்தாள்.
தேவ் அப்பொழுதும் அமைதியாக இருக்க வேலு தான் அவனின் கையை பிடித்தான்.
” டேய் நாங்க உன்ன அவன் கிட்ட இருந்து பிரிக்கணும்னு செய்யலடா! அ..அது தேவ் .. ” என்க..
எதுவும் பேசாமல் அமைதியாக நகர்ந்து விட்டான் தேவ்..
வேலு ,வித்யாவிற்கு கண் கலங்கியது..
எழில் தான்,” என்னடா பண்ணி வச்சிருக்க .பச்ச புள்ள மனசுல ஏண்டா இப்படி பண்ணி வச்சிருக்க.”
“அப்பா.அவன் இழந்த வரை போதும்! அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு இனி அதைப் பார்க்கட்டும்”
“வேலு ஒவ்வொரு முறையும் இதையே சொல்லாதடா. அது முடிஞ்சு போச்சு ,இனி இதை எப்படி சரி பண்றதுன்னு பாக்கணும். ஆனா, இன்னும் மேலும் மேலும் நீ சிக்கல் ஆக்கிட்டு போற” என்றவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
” மாமா விடுங்க!” அவரிடத்தில் இருந்து பாருங்க. என்ற மித்ரா.
” சரி மாமா.இனி இத பத்தி நீங்க யோசிக்காதீங்க”என்றாள்.
” மித்ரா உனக்கு என் மேல ஏதாவது கோபமா?”
” நீங்க என்ன பத்தி தப்பா ஒன்னும் சொல்ல நினைக்கல மாமா. அவனால எங்களுக்குள்ள பிரச்சினை வந்திட கூடாதுனு சொல்லி இருக்கீங்க, மத்தபடி உங்க மேல நான் தப்பு சொல்றதுக்கு எதுவும் இல்லை.ஆன இது போல இனி நினைக்க வேணாம்”என்று அமைதியானாள்.
வித்யா கண் கலங்கிய படி ரூமுக்குள் நுழைந்து கொள்ள.
வேலு பின்னாடியே சென்றான்.”வித்யா” என்க..
அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு,” சாரி வேலு. எல்லாம் என்னால தான”என்றாள் குற்ற உணர்வாக..
அவள் நெற்றியில் இதழ் பதித்தவன்.” உன்னால எதுவும் இல்ல டி.எல்லாமே சூழ்நிலை அவ்வளவுதான்”..
“இல்ல” என்று திரும்ப ஆரம்பிக்க..
“உஷ்!”என்று அவள் கன்னத்தை கைகளில் ஏந்தி,நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டான்.
அவனைப் பார்த்து கண் சிமிட்டியவள்.”இது எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணலாம் வேலு..பண்றேன் “என்றாள் ஒரு முடிவெடுத்தவளாக.
“பண்லாம் டி விது குட்டி. நீ எப்பவும் இப்படியே சிரிச்ச முகமா இருந்தா எனக்கு அதுவே போதும்! உன்னுடைய வேலு எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணிடுவேன்”என்று மென் நகை புரிந்தான்.
” உங்கள” என்று அவன் கன்னத்தில் இதழ் பதிக்க..
விசில் அடித்தபடி அங்கே வந்தாள் ரியா.
” வாரே வா! லவ் பேர்ட்ஸ் லவ் பண்ணிட்டு இருக்காங்க பா..அது தெரியாம கரடி போல வந்துட்டேன்”..
“ஆமா டி.. வரும்போது கதவை தட்டிட்டு வரணும்னு ஒரு இங்கீதம் தெரியாது?” என்றாள் வித்யா முறுக்கிக்கொண்டு. அவளுக்கு ஏனோ ரியாவுடன் வம்பு பண்ண பிடித்திருந்தது.
” என்ன மாம்ஸ் ஒரே லவ் அண்ட் ரொமன்ஸ் தான் போல!” என்று அவனை சீண்ட..
” எப்ப பார்த்தாலும் என் புருஷன் கூட இருக்கும்போது மூக்கு வேர்த்து வந்துடுவியா?”
” அதை நீங்க சொல்றீங்க பாருங்களேன்..நானும் எங்க மாம்சும் பேசிட்டு இருக்கும்போது நீங்கதான் எங்களுக்கு நடுவுல அப்பப்போ குறுக்கா மறுக்கா கௌசிக் போல வரீங்க!”
“அடியே! அவர் என் புருஷன்”
” நான் இல்லன்னு சொல்லலையே! ஆனாலும் அவர் என்னோட மாம்ஸ் தான்”என்றாள் விடாத படி,
அவள் காதை திருகியவள். கன்னத்தில் இதழ் பதித்து ,கட்டி அணைத்தாள்.
“அக்கா எதுக்கு இப்போ இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க ?”
“இல்லடி.எல்லாமே உன்னால தான். நான் நிறைய விஷயம் உணர்ந்தேன்”
” அப்படி எல்லாம் எதுவும் இல்ல கா” என்று அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு,
“சரி சரி நீங்க உங்க ரொமான்ஸ் கண்டினியூ பண்ணுங்க! டிஸ்டர்ப் பண்ணிட்டேன் பாய்!”என்று நகர.
வித்யா அவளைப் பார்த்து சிரிக்க. வேலு ,வித்யாவை இழுத்து தன்மீது போட்டுக் கொண்டான்.
அதன் பிறகு ,அது அவர்களுக்கான நேரம் ஆகியது.
வெளியில் வந்த ரியா,மித்து தேவை தேடி சென்றாள்.
இருவரும் அவர்கள் ரூமில் இருந்தார்கள்.
அப்போது, தேவ் மித்ரா மடியில் படுத்திருந்தான்.
“ஏண்டி வேலு,அண்ணி ரெண்டு பேரும் சின்ன பையன் கிட்ட அப்படி சொல்லி வச்சி இருக்காங்க! இவனும் இவ்வளவு நாளா என்கிட்ட இதை பத்தி மூச்சே விடல தெரியுமா?”என்றவனுக்கு கண் கலங்கியது தானாக..
“தேவ் அவங்க நல்லதுக்கு நினைச்சு தான் பண்ணி இருக்காங்க. ஆனா ,சின்னப் பையன் என்றதை மறந்துட்டு, நீங்க எல்லாரும் அவன் முன்னாடி பேசிடுறீங்க!அவன் மேல நிறைய விஷயத்தை திணிக்கிறீங்க! இதை சீக்கிரம் சரி பண்ணனும்”
“எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?”என்றவனுக்கு தொண்டை கரகரத்தது..கராகரத்த குரலில் வலியில் வார்த்தை வெளி வந்தது .
“தேவ் கண்டதையும் யோசிக்காதீங்க.நான் உங்க கூட இருக்கேன்.சீக்கிரம் நம்ப இதை சேர்ந்தே சரி பண்ணிடலாம்” என்று அவன் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட ..
கண்கள் பளிச்சிட, கண்கள் விரிய ,ஆனந்த அதிர்ச்சியாக அவளை பார்த்தான்..
அவளாக தரும் முதல் முத்தம்.. முத்து பற்கள் தெரிய புன்னகைத்தான்..
“ஃபர்ஸ்ட் டைம் நீயா தர கிஸ் டி என் பொண்டாட்டி “என்று அவள் நெற்றியோடு முட்டினான்.
சிரித்தவள்.” அதுக்கு என்ன இப்போ?”என்று பார்வையை தாழ்த்திக் கொண்டாள் நாணத்தில்..
“அச்சோ என் பொண்டாட்டி வெட்க பட்டா இன்னும் அழகா இருக்காளே!”என்று அவள் கன்னம் பிடித்து கொஞ்சினான்..
அப்போது தான் அங்கு ரியா வர.. இருவரின் சிரித்த முகத்தையும் அப்படியே தனது போனில் போட்டோ எடுத்துக் கொண்டாள்.
அப்படியே ,சத்தம் இல்லாமல், வெளியே சென்று வேலு,வித்யா இருவரையும் அழைத்துக் கொண்டு வர..
அவர்களின் காதல் லீலைகளை பார்த்த வேலு விசில் அடித்தான்.
விசில் சத்தத்தில் தன்னிலை உணர்ந்த தேவ் சங்கடமாக எழுந்து கொள்ள..மித்ரா எழுந்து நின்று விட்டாள்.
“என்ன பண்றீங்க வேலு?” என்று அவன் கையில் கிள்ளி வைத்தாள் வித்யா.
மொத்த குடும்பமும் அங்கு வந்திருக்க.
ரியா. இப்பொழுது வித்யாவை சீண்டினாள்.
” அக்கா தேவ் மித்ரா மடியில படுத்து இருக்கிறத பார்த்தவுடன் உங்களுக்கு கோவம் வரல”
சிரித்துக் கொண்டே, ரியா தலையில் கொட்டியவள்.
“தேவ் அவன் பொண்டாட்டி மடியில படுக்கிறதுக்கு நான் ஏண்டி கோவப்படணும்! அவன் பொண்டாட்டி கிட்ட எடுக்க வேண்டிய உரிமையை எடுத்துக்கிறான். இதுல என்ன தப்பு இருக்கு? இதுல அத்தை வருத்த படவே ஒன்னு இல்ல. நான் ஏன் டி வருத்த படணும்”என்றாள் புன்னகை மாறாமல்,
மித்ரா அருகில் சென்று அவள் கையை பிடித்து கொண்டு,”நான் இப்போ கொஞ்ச நாளா நிறைய விசியம் உணர்ந்துட்டேன் மித்து மா..”
“அக்கா”என்றாள் பதறியவளாக.
” நீ எதையுமே இப்ப வர தப்பா எடுத்துக்கல. எடுக்கல அது எனக்கும் தெரியும். ஆனா,ரியா நிறைய விஷயம் எனக்கு உணர்த்திட்டா.. அவ பண்ற ஒரு சின்ன சின்ன விஷயம் கூட எனக்கு பொசசிவ் ஆகுது.. கோபத்தை உண்டு பண்ணுது .இத்தனை வருஷமா நான் தேவ்கிட்ட காமிச்ச அன்பை,நெருக்கத்தை என்னோட வேலு தப்பா நினைக்கல தான். இருந்தாலும் ,அது எந்த அளவுக்கு அவருக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கும்.வலியை கொடுத்திருக்கும் என்று நான் அதை நல்லாவே உணர்ந்துட்டேன் . இதுக்கு முன்னாடியே உணர்ந்து அவருக்குக்கான இடத்தை நிரப்ப செஞ்சேன் தான்..ஆன முழுசா வா கேட்டா இல்ல… ஆன, இப்ப ரியா பண்ணும்போது அதை இன்னும் நல்லாவே உணர்ந்துட்டேன். இனி அப்படி ஒரு கஷ்டத்தை தர மாட்டேன். இனி எனக்கு எல்லா உறவுமா என் வேலு இருக்காரு” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள.
அவனும் அவளை மேலோட்டமாக அணைத்தான். ரியா விசில் அடிக்க..
“கொஞ்ச நேரம் அமைதியா இருடி.அப்பாவா ,அம்மாவா நான் தப்பு செஞ்சா தாங்கி பிடிக்க அத்தையும் ,மாமாவும் இருக்காங்க.அது மட்டும் இல்லாம நான் தடுமாறாமல் இருக்கறதுக்கும்,எனக்கு எல்லா நல்லது , கெட்டதும் பாக்குறதுக்கும் சத்யா அம்மாவும், இளவரசன் அப்பாவும் இருக்காங்க.
சண்டை போட்டு சமாதானம் பண்ண, ஒண்ணுக்கு ரெண்டு தங்கச்சி இருக்கீங்க ?வேற என்ன வேணும்? தம்பியா, கொழுந்தனா, மூத்த மகனா ஏதாவதுனா எனக்கு தோள் கொடுக்க தேவ் இருக்கான்.. என்ன வாய் நிறைய அம்மானு கூப்பிட்டு என்ன சிரிக்க வைக்க என் பையன் இருக்கான்..இனி என்னோட மொத்த உலகமுமா என்னோட வேலு இருக்காரு.. இனி எனக்கு என்ன வேணும்?
அவர் தான் இனி என் வாழ்க்கை என் சகலமும்..என்று புன்னகைக்க.
“அக்கா!அண்ணி!”என்று கணவன் மனைவி இருவரும் அவள் கை பிடிக்க..
“உங்க வாழ்க்கையை மட்டும் மனசுல வச்சு சொல்லல டா. எல்லாமே சரி ஆகிடுச்சு..நானும் பயந்தேன் உங்களை போல .நான் விலகினா தேவைக்கு உங்களை எல்லாம் யுஸ் பண்ண போல ஆகிடும்னு..ஆன,இனி உனக்குனு ஒருத்தி இருக்கா..உன்ன வச்சு செய்ய..எனக்கு எல்லாமா என் வேலு இருக்கார்.. இனி அவங்க அவங்க வாழ்க்கையே அவங்க அவங்க சந்தோசமா நிம்மதியா எந்த வித உறுத்தலும் இல்லமா வாழலாம்.. அதுக்காக யார்கிட்ட இருந்தும் நான் விலக போறது இல்ல. ஆனா, என்னோட முழு உரிமையும், என்னோட சின்ன சின்ன விஷயமும் என் வேலு கிட்ட தான் இனி இருக்கு.. என்னோட மொத்த உலகமும் வேலு தான் மற்ற உறவு எல்லாம் எங்க எங்க இருக்கணுமோ அங்கங்க இருக்கும்” என்று சிரிக்க ..
தேவ் அவளை அமைதியாக பார்க்க.
“இதை நான் உணர்ந்து சொல்றேண்டா. அதுக்காக எல்லாம் உன்னை விட்டுக்கொடுத்துட மாட்டேன். ஆனா,எப்பவும் நீ என்னோட குழந்தை, என் தம்பி,கொழுந்தன் அவ்ளோதான்!” என்று சிரித்தாள்.
தேவும் சிரித்து கொண்டே வேலுவை பார்க்க .
அவன் சந்தோஷமாக வித்யாவை தோளோடு அணைத்து நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டான்.
” என் புள்ளைங்க இப்படி எப்பவும் சந்தோஷமா இருந்தா எனக்கு சந்தோஷம்தான்” என்று புன்னகைத்தார் தனம்.
வேகமாக ஓடிச் சென்று, “என் கண்ணே பட்டுடும் போல இருக்கு! உட்காருங்க” என்று அனைவரையும் உட்கார வைத்து உப்பு ,மிளகாய் சுற்றி போட போக …
” அண்ணி குடுங்க! நீங்களும் போய் அவங்க கூட உட்காருங்க!” என்றார் சத்யா..
“நீங்க உட்காருங்க அண்ணி!” என்றார் தனம்..
“நீங்க உட்காருங்க அண்ணி.எத்தனை வருசத்து சந்தோசம் உங்களுக்கு குடும்பமா உட்காருங்க!” என்று அனைவரையும் உட்கார வைத்து சத்யா சுத்தி போட்டார்.
அனைவரும் எழுந்து கொள்ள..தேவ் அவனின் இம்சை ராட்சசி கன்னத்தில் யாரும் அறியாமல் இதழ் பதிக்க.. “வசியகார எப்போ பாரு இம்சை பண்றீங்க” என்றாள் வேகமாக…கன்னத்தை தேய்த்த படி..அவள் கனவில் நடப்பது போல எண்ணி உளறி கொட்டி விட..
சுற்றி உள்ளவர்கள் சிரிக்க…தேவ் ஆனந்த அதிர்ச்சியில் திக்கு முக்காடி போனான்..அவனின் ராட்சசி வாயில் இருந்து உதிர்த்த வார்த்தையில்..
குகன் “ஹேய்!”என்று குதிக்க..ரியா,வேலு இருவரும் விசில் அடித்து சிரித்தார்கள்..
மித்ரா ,தேவ் இருவரும் கூச்சத்தில் நெளிந்த படி இருக்க..இரு வீட்டு பெற்றவர்களும் இருவரையும் தங்கள் தோளோடு அணைத்துக் கொண்டார்கள் தங்கள் வீட்டு வாரிசை.
மொத்த குடும்பமும் புன்னகையுடன் இருக்க.. இந்த குடும்பம் இப்பொழுது போல் எப்பொழுதும் சந்தோஷமாகவும், புன் சிரிப்புடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்தி இவர்களிடமும் விடை பெறுவோம்..
சுபம்🙏🏽
இதுவரை கதைக்கு ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி 🙏🏽