Loading

நேரம் – 3

 

 

 

 

அதிகாலை நேரத்தில் பரத் சீக்கிரமாகவே இருந்து கொண்டான். ஏன் என்றால்  தன்னவள்   படுத்து அல்லவா உறங்கிக் கொண்டிருக்கிறாள் !!!!

 

அவளை எழுப்பி விட வேண்டும் இல்லையென்றால் நம் வீட்டில் உள்ள அனைவரிடமும் நமக்கு நம் அம்மா கையால் நல்ல அடி விழும் அப்பா நன்றாக கழுவி ஊத்துவார்…. அவருடன் சேர்ந்து அக்காவும் நன்றாக கழுவி ஊத்துவாள் தேவையா இது நமக்கு !!!!

 

என்று நினைத்தவன் விருட்டென சோபாவில் இருந்து பெட்டை பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அங்கு பாரதி இல்லை….

 

 

“எங்க போனா இவ அய்யய்யோ என் ஆள யாராவது கடத்திட்டாங்களா அவள  கிட்னாப் பண்ணினா கிட்னாப்  பண்றவனே சூசைட் பண்ணிக்கிற நிலைமைக்கு போயிடுவானே !!!!!”

 

 

“அப்போ நம்ம ஆளு நம்மள நம்ம மாட்டிக்க கூடாதுன்னு கூடிய சீக்கிரம் வெளிய ஓடிட்டா !!!

கொஞ்ச நேரம் நம்ம கூட இருந்திருக்கலாம் !!!!”

 

 

என்று தனது மனதில் நினைத்தவன் தனது காலை கடன்களை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு தமது அறையில் இருந்து மாடிப்படிகளில் கீழே  ஹாலிற்கு இறங்கி வந்தான்…

 

 

 

அப்பொழுது அவனின் தகப்பன் மட்டுமே ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தார்…

அதை கண்ட பரத்திற்கு ஆச்சரியம் எப்பொழுதும் தந்தை ஹாலிடில் அமரவே மாட்டார் ஏதாவது வயலில் ஒரு வேலை இருக்கிறது சொல்லி காலையிலேயே புறப்பட்டு சென்று விடுவார், அப்படி இருக்கையில் இப்படி காலையில் அமர்ந்து கொண்டிருக்கிறாரே என்று யோசித்தவாறு தந்தையின் அருகில் சென்றவன் 

 

 

“என்ன ஆச்சுப்பா ????

இங்க உக்காந்துட்டு இருக்கீங்க அம்மா எங்க ????”

 

 

 

“அம்மா பக்கத்து தெருவுல இருக்க நந்தினி ஓட அம்மாவோட வீட்டுக்கு போயிருக்காங்கப்பா !!!!”

 

 

“ஏம்பா அங்க போயிருக்காங்க ?????”

 

 

அதற்கு பரத்தின் அப்பா சரவணன் அளித்த பதில் கேட்டு பரத் அதிர்ந்து போனான்…

 

 

 

“நந்தினியோட அம்மா இறந்து போயிட்டாங்கப்பா !!!!!”

 

 

“என்னப்பா சொல்றீங்க நந்தினி ஓட அம்மா இறந்துட்டாங்களா???? அவங்களுக்கு என்ன வயசு ஆயிடுச்சு!!! அம்மாவோட வயதை விட அவங்க ஏஜ் கம்மியா தான் இருக்கும் !!!!”

 

“என்னப்பா அவங்களுக்கு ஏதாவது ஃபீவரா இல்ல ஹார்ட் அட்டாக்கா !!!!!”

 

 

“ரெண்டும் இல்லப்பா !!!!!”

 

 

 

“அப்போ  என்னப்பா ஆச்சு அவங்க  அம்மாவுக்கு ?????”

 

“நந்தினியோட அம்மாவை யாரோ கொன்னுட்டாங்க !!!!”

 

 

 

“என்னது நந்தினியோட அம்மாவை யாரோ கொன்னுட்டாங்களா !!!!!”

 

“யாருப்பா அது !!!!!”

 

 

“தெரியலப்பா நம்ம ஊரு எல்ல  இருக்குல்ல!!!

அங்க தான் அவங்க அம்மாவ யாரோ கொன்னுட்டாங்க !!!”

 

 

எப்படி கொன்னாங்க 

 

 

 

“அது தெரியலப்பா போலீஸ் இப்போ அங்க தான் இருக்கு நம்ம ஊர் ஜனங்களும் அங்க தான் இருக்காங்க!!!!

அது மட்டும் இல்லாம உங்க அம்மாவும் அங்க  போய் இருக்கான்னு நினைக்கிறேன் !!!!”

 

 

 

என்று அவர் சொன்னதும் நீங்க மட்டும் இங்க உக்காந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க 

 

“நம்ப வயல் ஊர் எல்லை கிட்ட தானே இருக்கு!!!!”

 

“அங்க தான்  நந்தினி ஓட அம்மா சுஜாதாவோட உடல் கிடைச்சிருக்கு!!!! போலீஸ் ரவுண்டு அப் பண்ணி இருக்கு பா !!!!”

 

 

“எனக்கு அதெல்லாம் பாத்தா கொஞ்சம் மனசு கஷ்டமாயிடும் பாரமா ஆயிடும் நான் தூக்கம் வராம போயிடும் அதனால்தான் பா !!!!!”

 

 

 

 

 

என்று அவர் சொன்னதும் பரத் சற்று யோசிக்காமல் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து ஊர் எல்லையை நோக்கி நடந்து செல்ல தொடங்கினான்….

 

 

 

பரத் நடந்து செல்வதை பரத்தின் பக்கத்து வீடான சோப்னாவின் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பாரதி பார்த்துக் கொண்டிருந்தாள்…. அவளும் அந்த மாடியில் இருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு தாவி அங்கிருந்த மாடிப்படிகளின் மூலம் இறங்கி பரத் நடந்து சென்று கொண்டிருந்த தெருவின் சாலையில் பரத்தை பாலோ செய்ய தொடங்கினாள்….

 

 

 

அவளும் காலையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள்…

 

 

ஊர் மக்கள் திரளாக எங்கோ சென்று கொண்டிருப்பதை ஆனால் எங்கு செல்கிறார்கள் என்பது பாரதிக்கு தெரியவில்லை எனவே தன்னவனை பின்தொடர்ந்து தன்னவன் எங்கு செல்கிறான் என்பதை பார்த்து அதன் மூலம் ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக தான் அவனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள் ….

 

 

 

 

எனவே பரத்தை பின்தொடர்ந்து பாரதி சென்றாள் பரத் விநாயகபுரத்தின் ஊர் எல்லைக்கு வந்து நின்றான் அங்கு மக்கள் கூட்டம் திரளாக இருந்தது அதை வெளியில் போலீஸ் வாகனமும் ஆம்புலன்ஸும் அங்கு நிற்பதை பார்த்த பாரதிக்கு இங்கு ஏதோ சரி இல்லை என்று அவளுக்கு தோன்றியது!!!!

 

எனவே அந்த கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க கூட்டத்தோடு கூட்டமாக தன்னவனே விட்டு விட்டு அங்கிருந்து அந்த கூட்டத்தோடு கலந்து என்ன நடந்தது என்பதை பார்த்தாள்….

 

 

 

அங்கு ஒரு பெண்மணி அவருடைய தலை நசுங்கிப் போன நிலையில் இறந்து கிடந்தார் அந்த பெண்மணிக்கு தூரத்தில் ஒரு  16 வயது உள்ள ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள்…

 

இந்த சிறுமியை பார்த்தால் கல்நெஞ்சகர்களுக்கு கூட அழுகை வரும் அந்த அளவுக்கு அந்த சிறுமி தனது தாயைப் பார்த்து அழுது கத்தி ஒப்பாரி வைத்தாள்….

 

 

 

“அம்மா என்ன விட்டுட்டு போய்ட்டீங்களே இனிமே யாருமா என்னை எழுப்பி நந்தினி சாப்பிடு!!!! நந்தினி ஸ்கூலுக்கு போடி!!!! அப்படின்னு யார் சொல்லுவா!!!! அம்மா என்ன விட்டுட்டு போயிட்டீங்களே !!!!! உங்களை யாருமா இப்படி பண்ணா அம்மா!!!!”

 

என்று அந்த சிறுமி அழுது கொண்டிருக்க அவளது பக்கத்தில் அந்த சிறுமியின் அண்ணனும் தந்தையும் துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்தனர் அவர்களை ஊர் மக்கள் சில பேர் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்…

 

 

காவல்துறை தனது கடமையை செவ்வன ஆற்றிக் கொண்டிருந்தது அந்த உடலில் சுற்றி ஏதாவது எவிடன்ஸ் கிடைக்கிறதா என்பதை பற்றியும்  உடலை பறிமுதல் செய்து மருத்துவமனைக்கு அனுப்புவதில் முதல் அனைத்து வேலைகளையும் துரிதமாய் காவல்துறை பார்த்துக் கொண்டிருந்தது

 

 

 

பாரதிக்கு அந்த சிறுமி தன்  நெஞ்சில் அடித்துக் கொண்டு அந்த சிறுமி அழுவதை பார்த்த பாரதிக்கு ஒரு நிமிடம் இதயத் துடிப்பு நின்றது போல் இருந்தது….

 

 

 

 

 

ஏனென்றால் பாரதி செய்யார் அரசு மகளிர் மேல் நிலை வழியில் பதினொன்றாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வேளையில் நந்தினி சில உதவிகளை செய்திருக்கிறாள் !!!!!

 

 

 

அந்த உதவி வேறொன்றுமில்லை பரத்திற்கு கடிதத்தின் மூலம் தூது அனுப்ப பாரதி நந்தினியின் உதவியை நாடினாள்….

 

நந்தினியும் அவளுக்கு உதவி புரிந்தாள்… ஆனால் அவள் தூது அனுப்பிய கடிதங்கள் மழையில் நனைந்தது அதனால் நந்தினியால் எதுவும் செய்ய முடியவில்லை !!!!

பரவாயில்லை என்று பாரதி நந்தினிக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து விட்டு  நான் வேலையை பார்த்தால் அதாவது தன்னுடைய பள்ளி படிப்பை பார்த்தாள்….

 

 

 

இது நடந்து ஐந்து வருடங்களுக்கு மேலானாலும் மரத்தைப் பற்றிய நிகழ்வு அது மட்டும் இல்லாமல் தன் அவனைப் பற்றி தெரிந்து கொள்ள உதவி செய்த பெண் என்ற நன்றி உணர்வு பாரதியின் மனதில் எப்பொழுதுமே உண்டு !!!!!

ஆனால் அந்த பெண்ணின் தாயாரே இவ்வாறு இறந்து கிடப்பதை பார்த்து பாரதிக்கு நெஞ்சம் அடைந்தது…..

 

 

 

 

 

 

“அந்த பொண்ணுக்கு இப்படி நடந்து இருக்க கூடாது!!! அந்த பொண்ணோட அம்மா சாவுக்கு நான் கண்டிப்பா நீதி வாங்கி கொடுப்பேன் !!!!!”

 

 

 

என்று தனது மனதில் உறுதி எடுத்துக் கொண்ட பாரதி அங்கிருந்து நடக்க முற்படும் வேளையில் அவரது கரத்தை ஒரு கரம் வேகமாக இழுத்துக் கொண்டு எங்கேயோ சென்றது….

 

 

 

யாரது பாரதியின் கரத்தை பிடித்துக் கொண்டு இழுத்துச் சென்றது??????

 

 

 

அதைப் பற்றி நாம் அறிய அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்…

 

 

 

இந்த அத்தியாயம் பிடித்திருந்தால் தங்களுடைய கரு

த்துக்களை மறக்காமல் கமெண்டில் பதிவு செய்யுங்கள்….

 

ஹரிணியின் …..

 

“உண்மை வெளிப்படும் நேரம்”

 

எனது மற்ற தொடர்களையும் வாசித்து பாருங்கள்….

 

வாசித்ததற்கு நன்றி !!!!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்