அத்தியாயம் – 15
வனிதாவையும் மனிஷாவையும் கண்ட தியாகராஜன்,… “வாங்க’ம்மா சாப்பிடலாம்” என்று கனிவோடு அழைக்க,… வனிதாவோ ,.. “என்ன அண்ணா சிரிப்பு சத்தம் என் ரூம் வரைக்கும் கேட்குது, புது மருமக வந்ததுமே அவளோட வேலையை ஆரம்பிச்சிட்டா போலிருக்கு” குத்தலுடன் வினவிட்டு அமர,… மூவரின் முகமும் சுருங்கி போனது, நந்தினிக்கோ ஒரு மாதிரி இருந்தது,…
அந்த நேரம் நந்தினியின் அருகில் வந்த மனிஷா,.. “இது என்னோட இடம், எழுந்து போ” என்று திமிர் தோரணையில் சொல்ல,… “ஓ.. ஸாரி” என்றவள், சாப்பிட்ட கையுடனே தனது தட்டையும் தூக்கிக் கொண்டு எழ இருந்த நேரம், அவள் கரத்தை பற்றி நிறுத்திய தீரஜ்,.. “சாப்டுட்டு இருக்கும் போது எழ கூடாது” என்று சொல்லிவிட்டு, மனிஷாவை நோக்கியவன்.. “நீ அங்கே உட்காரலாம் மனிஷா ஒன்னும் தப்பில்லை” என்றான், பல மாதங்களுக்கு பிறகு அவளிடம் பேசி இருக்கிறான், அதுவும் குத்தலாக பேசி இருக்கிறான் …
மனிஷாவிக்கோ நந்தினியின் முன்பு அவமான பட்ட உணர்வு, ஆனாலும் அவள் தன் இடத்தை விட்டு கொடுக்க விரும்பவில்லை,.. “நான் இங்கே தான் உட்காருவேன், ஏய் எழுந்துடு” என்று நந்தினியிடம் எள்ளலுடன் சொல்ல,.. தவிப்புடன் அமர்ந்திருந்த அவளும்,.. பிரட்சனை வேண்டாம் என்று நினைத்து,.. “ஒன்னும் பிரட்சனை இல்ல, நான் அங்கே உட்கார்ந்துகிறேன்” என்று தள்ளி இருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, மனிஷாவின் முகத்தில் வெற்றி களிப்பு என்றால் தீராஜ்ஜின் முகத்தில் கடுகடுப்பு,…
தன் மனைவி அவன் யாருக்கு கீழும் அடிபணிய விரும்பவில்லை, இப்போது தன் பேச்சை மீறி எழுந்து வேறு இடத்தில் அமர்ந்து கொண்ட நந்தினியின் மீது தான் அவனுக்கு கோபம் வந்தது, தியாகராஜானாலும் எதுவும் பேச முடியாத நிலை,…
அதற்கு மேலும் தீரஜிற்கு சாப்பிடும் மனநிலை இல்லை, பாதியில் கை கழுவிவிட்டு நகர்ந்து விட, அவனை கவனித்துக் கொண்டிருந்த நந்தினியோ… ‘என்னாச்சு பாதியிலேயே போயிட்டாரு’ என்று நினைத்தவளுக்கும் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை, எழுந்து கொண்டாள்,.
அவர்கள் இருவரும் சென்ற பின் தியாகராஜனால் மட்டும் சாப்பிட முடியுமா என்ன? அவரும் ஒரு நீண்ட நெடிய பெருமூச்சோடு பாதியில் எழுந்து சென்று விட, அவர்களை கவனித்துக் கொண்டிருந்த வனிதா,.. “என்னடி,.. ஒவ்வொருவரா எழுந்து போயிட்டாங்க” என்று வினவ,… “விடுங்கம்மா போகட்டும்” என்றாள் அவர்களின் வீட்டில் அவர்களின் பணத்தில் தான் சோறு உண்கிறோம் என்பதை மறந்து,..
“எனக்கு அவளை பிடிக்கலம்மா, ஏம்மா தீரஜ் கல்யாணம் பண்ணான், அவன் கல்யாணம் பண்ணிப்பான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல, வாழ்க்கை பூரா அவன் இப்படியே தான் இருப்பான், அவனுக்கு குடும்பம் வராது, ஏதாவது காரணத்தை சொல்லி கொஞ்சம் கொஞ்சமா சொத்தை என் பேர்ல மாத்திக்கலாம்னு நினைச்சேன், ஆனா இப்படி ஆகிடுச்சே” என்று புலம்பினாள்,..
வனிதாவோ,…”தீரஜ் கல்யானம் பண்ணிகிட்டது எனக்கு பிரட்சனை இல்ல, ஆனா ஒன்னும் இல்லாத பிச்சைக்காரிய பண்ணிக்கிட்டானேன்னு தான் கோபமா வருது, இவளை எங்கே போய் பிடிச்சாங்கன்னு தெரியல” என்றார்
“விடும்மா,… என்னோட டார்ச்சர்ல ஓட விட்டுடுறேன், எனக்கு தெரிஞ்சு பணத்துக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நினைக்கிறேன், இல்லைனா கால் நடக்க முடியாதவனை எவ கல்யாணம் பண்ணக்கிருவா” என்று ஏளனமாய் சொல்லி சிரிக்க.. “எனக்கும் அப்படி தான் தோணுது” என்றார் வனிதா…
“சரி ஷ்யாம் கிட்ட பேசுனியா, எப்போ மேரேஜ் டேட் வச்சுக்கலாம்னு சொன்னாரு” என்று வினவ,… “பிடி கொடுக்க மாட்டேங்கிறாருமா அது வேற கடுப்பா இருக்கு” என்றாள்…
“என்னடி இப்படி சொல்ற, அன்னைக்கு வீட்டுக்கு வந்திருந்த போது நல்லா தானே பேசுனாரு, கல்யாணத்தை ரொம்ப க்ரேன்டா வைக்கணும்னு நிறைய சொன்னாரே” வனிதா கவலையுடன் வினவ,.. “ஆமாமா,.. இப்போ இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்றாரு, புது பிசினஸ் ஆரம்பிக்க போறாராம், அதுல கொஞ்சம் பிஸியாகிட்டேன்னு சொல்றாரு” மனிஷா சொல்ல,… “அப்படியா சரி சரி, நல்லா சம்பாதிகட்டும், மெதுவா கல்யாணம் வச்சிக்கலாம், நாளைக்கு உனக்கு தானே அதெல்லாம் வரும்” என்று சொல்ல, அவளும் புன்னகையோடு தலையசைத்தாள்,…
“நான் ஆஃபீஸ் கிளம்புறேன்…” கைப்பையை தோளில் போட்டுக் கொண்டு தீரஜின் முன் வந்து நின்றாள் நந்தினி…
ஏற்கனவே அவளின் மீது சிறு கோபத்தில் இருந்தவன், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு… “எப்படி போவ?” என்று கேட்டான்,..
அவள் சற்றே தடுமாறியபடி,
“பஸ்ல தான்…” என்று சொல்ல, அவனது கோபம் மேலும் கூடியது…
“ஏன்… இந்த வீட்ல இருக்க வண்டில போனா குறைஞ்சுடுவியா?” என்று சாடியவனின் வார்த்தைகள், அவளது மனதை குத்தின, அந்த கோபத்திற்கான காரணம் தான் அவளுக்குப் புரியவில்லை….
சற்றே துடித்தபடி,.. “ஸாரி… அது… எப்போவும் பஸ்ல தான் போவேன், அந்த நியாபகத்துல சொல்லிட்டேன்” என்று தடுமாறிக் கொண்டே விளக்க,.. அவனோ,..
“நானும் அதே ஆஃபீஸ்தான் போறேன், என்கூடவே வா” என்று சொல்லிவிட்டு முன்னே நகர,
தொங்கிய முகத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள் நந்தினி….
இருவரும் காரில் ஏறினார்கள், கார் மெதுவாக சாலையில் நகர்ந்தது,
ஆனால், அந்த காருக்குள் கனமான மௌனம் மட்டுமே நிலவியது,..
சிறிது நேரம் கழித்து, பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த நந்தினிக்கு, அவனது இறுகிய முகத்தில் இன்னும் பொங்கிக் கொண்டிருந்த கோபம் தெளிவாகப் புரிபட்டது,…
‘என்னாச்சு இவருக்கு? காலைல வரை நல்லாதானே இருந்தாரு…’ மனதில் எண்ணிக்கொணடே
தயக்கத்துடன் மெதுவாக,
“என் மேல ஏதாவது கோபமா?” என்று கேட்டாள்…
ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து கடுமையாகச் சுவாசத்தை வெளியே விட்டவன், சற்று இடைவெளிக்குப் பிறகு “கோபம் தான்…” என்று குறுகிய வார்த்தையில் சொல்ல,..
அந்த சொல்லை கேட்டு நந்தினியின் மனம் சுருங்கிப் போனது….
“ஏன் கோபம்?” அவள் மெதுவாகக் கேட்டாள், அவளது கண்களில் குழப்பம் மிதந்தது….
அவனோ கண்ணோட்டத்தை அவள் மீது நிலைநிறுத்தாமல், ஜன்னலின் பக்கம் பார்த்தபடி,
“டைனிங் ரூம்ல வச்சு என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கல நீ…” என்றான்…
அவள் கண்கள் விரிந்தன, இப்போது தான் அவனது கோபத்தின் காரணம் அவளுக்கு புரிந்தது…
“ஸாரி… அது… பிரச்சனை வேணாம்னுதான் நான் அப்படி பண்ணினேன்” அவள் சற்றே இழுத்தபடி கூற,.. “பிரச்சனை வரட்டும், ஒன்னும் பிராப்லம் இல்ல, நான் ஏற்கனவே உனக்கு சொல்லி இருக்கேன் என் மனைவி இந்த வீட்ல யாருக்கும் பணிஞ்சு போகக்கூடாதுனு, அதை எப்போவும் நியாபகத்துல வச்சிக்கிட்டு நடந்துக்க” என்று சொல்லி, சற்றே ஆழமாக அவளை நோக்க, அவளும் தலையசைத்துக் கொண்டு, மெதுவாக,.. “சரி…” என்றாள்…
ஆனாலும் அவன் முகம் இன்னும் இறுக்கமாகவே இருந்தது. அதைக் கவனித்தவள்… “அது தான் சரின்னு சொல்லிட்டேன்ல… கொஞ்சம் சிரிக்கலாமே” என்று மெதுவாகச் சொல்ல, அந்த வார்த்தைகளுக்குப் பிறகுதான் அவனது உதடுகள் மெதுவாக விரிந்தன, அந்த சிரிப்பு அவளது மனதில் சுமந்திருந்த கல்லை நீக்கிவிட்டது போல இருக்க,
நிம்மதி அவளது நெஞ்சை நிரப்பியது, அவள் உதடுகளும் மெதுவாக மலர்ந்தன….
“என்னை ஆஃபிஸ்க்கு கொஞ்சம் முன்னாடியே இறக்கி விட்டுடுங்க அரவிந்த்” நந்தினி சொல்ல,.. “வொய்” என்றான் கேள்வியாய்,…
“நாம ரெண்டு பேரும் ஒன்னா கார்லருந்து இறங்கினா பார்க்கிறவங்களுக்கு சந்தேகம் வரும்ல அதான்” அவள் சொல்ல,.. அவன் புருவத்தை சுருக்கி பார்க்க, அவளோ,… “ப்ளீஸ்,…” என்று விழிகளை சுருக்கி கெஞ்ச,.. அவனுக்கோ ஆச்சரியம் தான், அவள் இடத்தில் வேறு ஒரு பெண் இருந்தால் நிச்சயம் அவனுடன் திருமணம் நடந்ததை உலகம் முழுக்க கூவி சொல்லி இருப்பாள், ஆனால் இவளோ ஆடம்பரத்தையோ பெருமையையோ விரும்பாமல் இப்படி இருக்கிறாளே! என்று ஒவ்வொரு செயலிலும் அவனை வியப்பில் ஆழ்த்தினாள்,…
அவனும் அவளது விருப்பத்தின் பெயரிலேயே நடந்து கொண்டான், அலுலகத்திற்குள் நுழைந்ததும், அவளை எதிர்கொண்ட ஹரிணி அவள் முகத்தில் வித்தியாசத்தை கண்டு,… “என்னடி உன் முகத்துல என்னைக்கும் இல்லாத ஜொலிப்பு தெரியுது, கண் மையெல்லாம் வச்சிருக்க போல இருக்கே” என்றாள்,….
“கண்மை வச்சிருக்கேன், ஆனா ஜொலிக்கவெல்லாம் சான்ஸ் இல்லையே” என்றவள், வேகமாக தன்னிடமிருந்து குட்டி கண்ணாடியை எடுத்து தனது முகத்தை பார்க்க,.. அவளோ,… “நான் மேக்கப்னால வந்த ஜொலிப்பை சொல்லல நந்து, ஒருவித பிரகாசம் தெரிந்தது அதை தான் சொன்னேன்” என்று சொல்லிவிட்டு, அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட, நந்தினியோ,.. “என்னடி” என்றாள்,..
“ஒன்னுமில்ல, சும்மா பார்த்தேன்” ஹரிணி சொல்ல,.. “ம்ம்… என்னை பார்த்தது போதும், வா வேலையை பார்க்கலாம்” என்றாள், அதன் பிறகு அலுவலக வேலையில் மூழ்கி போனாள், அன்று ஒருமுறை மட்டும் தீராஜ்ஜின் அறைக்கு செல்ல வேண்டிய நிலை வந்தது, இருவரும் பாஸ் எம்பிளாய் என்ற தூரத்தில் மட்டுமே உரையாடிக் கொண்டனர், அதை தாண்டி அதற்கு அப்பாற்பட்ட எந்த வார்த்தையும் பரிமாறிக்கொள்ளவில்லை….
அன்றைய நாள் அப்படியே கழிய, அன்றைய இரவும் நேற்றைய நாளினை போல, கணவன் மற்றும் மாமனருடன் தான் அவளது இரவு உணவு முடிந்தது, ராமு வழக்கம் போல் தீரஜிற்கான உதவிகளை செய்து விட்டு சென்று விட, அன்றைய இரவும் குட்நைட்டோடு இருவரும் உறங்கி போயினர்,…
அடுத்து வந்த ஓரிரு நாட்களும் இதே தான் நீடித்தது, இருவரும் அலுவலக வேலையை பற்றி நிறைய பேசிக் கொள்வார்கள், வேலையில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை தயக்கம் இல்லாமல் கேட்டுக் கொள்வாள் நந்தினி, அதை தாண்டி தனிப்பட்ட உரையாடல்கள் இருவருக்கும் இடையில் மலரவில்லை…
அந்த பெரிய இல்லத்தின் ஒவ்வொரு மூலையும் மெதுவாக அவளுக்கு பழகியது, வனிதா-மனிஷா இருவரின் குத்தலான பார்வைகளையும், வார்த்தைகளையும் அவள் எளிதில் தவிர்த்துவர ஆரம்பித்திருந்தாள், ‘என் மனைவியாக, இந்த வீட்டில் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.’
என்ற தீரஜின் சொற்களை உள்ளத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டாள், அந்த நம்பிக்கைதான் அவளை உறுதியானவளாக மாற்றியது,..
‘எது நடந்தாலும், நான் நினைப்பதைப்போலவே செய்வேன்’ என்ற உறுதியை செயலில் வெளிப்படுத்தத் தொடங்கினாள், வனிதாவுக்கும் மனிஷாவுக்கும் அவளின் நடத்தை எரிச்சலாக இருந்தாலும், வெளியில் ஒன்றும் செய்ய இயலாமல் ஒருவருக்கொருவர் அர்ச்சித்து கொண்டனர், தியாகராஜனையும் தீரஜையும் தாண்டி அவளை அவர்களால் நெருங்கவும் முடியவில்லை,…