Loading

வித்யா முழுவதாக தன் கடந்த காலத்தை சொல்லி முடித்தாள்.

என் கண்ணு முன்னாடியே என் பெற்றவர்கள்,கூட பிறந்தவனின் இறப்பு .அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் தேவின் மூலமாக குகனின் பேரில் எழுதப்பட்டு, அதற்கு கார்ட்டினாக மட்டும் நானும் அவரும் இருப்பது போல ,குகனை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்ற போது, அங்கு ஒரு சிறுவன் பொம்மை வித்துக் கொண்டிருந்தான் .தன் தகப்பனின் இறப்பால் படிப்பை நிறுத்திருக்க ,அதை பார்த்தவன். அந்த பையனின் படிப்பு செலவு மட்டும் இல்லாமல் ,இன்னும் இரண்டு பேரின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள.

அதன் பிறகு ,இப்பொழுது வேலு , வித்யாவின் உதவியால் இன்னும் இரண்டு மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டது என்று  அனைத்தும் கூறி முடித்தாள்.

” அப்போ இப்படித்தான் உங்களுக்கும் ,தேவுக்கும் பாசப்பிணைப்பு  உண்டாச்சு இல்லையா அக்கா?” என்றாள் தலை சாய்த்து ரியா .

“ஆமாம்” என்று அவள் நெற்றியில் முட்டினாள் .

இப்போது மித்ராவை பார்த்தாள் வித்யா ”  என்ன ஏன் கா அப்படி பாக்குறீங்க?”.

“இல்ல இதை எப்படியும் உன்கிட்ட அவன்  கல்யாணத்துக்கு அப்புறமோ, இல்லை அதற்கு ஏற்ப சூழ்நிலையில்  சொல்லலாம் என்றோ நினைத்து இருக்கலாம்.. ஆனா இப்போ நானா உன் கிட்ட சொல்ல வேண்டியதா ஆகிடுச்சா அதான்”.

” இதுல என்ன  இருக்கு கா? .நீங்க ஃப்ரீ யா இருங்க ” 

“இ..இல்ல மி..மித்ரா அ..அது எந்த இடத்திலும்” என்றவள் ஒரு சில நொடி தயங்கி விட்டு,” தேவ் கல்யாணம் தள்ளிப் போட்டதுக்கு  ஏதோ ஒரு வகையில் நானும் காரணம் மித்ரா ” என்றவுடன் இப்பொழுது புரியாமல் பார்த்தாள்.

சத்யா அவள் கையில் தட்டிக் கொடுத்து, ” நீ ஏன் உன்னால என்று  நினைச்சுக்கிற ?” என்றார் .

“என்னம்மா சொல்றாங்க அக்கா புரியல” என்றாள் மித்ரா.

  “முதல்முறையாக நம்ப வீட்டுக்கு பேச வந்த அன்னைக்கே  அண்ணனும் ,அண்ணியும் எங்க கிட்ட எல்லாத்தையும் முழுசா சொல்லிட்டாங்க”

” நீ ஏன் மா என்கிட்ட சொல்லல”.

” உன்கிட்ட இப்போதைக்கு சொல்ல வேணாம்னு வேலு தம்பி சொன்னதா சொன்னாங்க. வீட்டில் இருந்து கிளம்பும் போதே வேலு தம்பி தான் ,நான் எல்லாரையும் கூட்டிட்டு போய்டுறேன். நீங்க அவங்க அப்பா, அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுங்க பின்னாடி இதை வச்சு எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது. எங்களுக்காக எங்க வாழ்க்கைக்காக என்று பார்த்தவனின்  வாழ்க்கை எந்த ஒரு இடத்திலும் கேள்விக்குறியாக நின்ற கூடாது . அவனை முழுசா புரிஞ்சுகிட்ட பொண்ணு மட்டும் இல்ல, குடும்பமும் வேணும் “என்று  சொன்னதால அன்னைக்கே  எல்லா கதையும் எங்ககிட்ட சொல்லிட்டாங்க. மேலோட்டமா..”

“இதுக்கும் ,அவர் கல்யாணம் தள்ளி போடுறதுக்கும் என்ன காரணம் ?”

” இல்ல மித்ரா. ஒருவேளை அவனை கட்டிக்க போற பொண்ணு, ஏதோ ஒரு இடத்தில் எங்க உறவு  முறையை தப்பா நினைச்சிட கூடாது இல்ல..அதான்”

அவளது வார்த்தையில் மித்ரா எழுந்து நின்று விட்டாள்..

“மித்ரா மித்ரா நீ தப்பா நினைப்பேன்னு அவன் சொல்லல.சாதாரணமா வீட்ல அத்தையோ, மாமாவோ பொண்ணு பார்த்து இருந்தா .இப்போ, அவன் முழுசா உன் மேல நம்பிக்கை வைக்க பொய் தானே இந்த நிமிஷம் வரைக்கும் உன்கிட்ட விஷயம் என்னன்னு சொல்லல. அதே சமயம் நம்பிக்கை வைக்க பொய் தானே, கல்யாணம் வரைக்கும் வந்து  இருக்கான்”.

“அப்போ அந்த ஆறு மாசம் டைம் கேட்டது இதுக்கா?”

“நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீ என்ன பேசுற ?ஆறு மாசம் டைம் கேட்டது உனக்காக ..நான் பேசுறது..”

” போதும்! நீங்களும் அப்படித்தான் நினைச்சுட்டு இருக்கீங்களா?”

” மித்ரா “

“அக்கா ஒரு விஷயம் ஃபர்ஸ்ட் டைம் நான் பேச ஆரம்பிச்சதுல இருந்து  உங்கள பத்தி நிறைய விஷயம் சொல்லி இருக்காரு. எந்த இடத்திலும் நான் உங்களையும் அவரையும் தப்பா நினைச்சது கூட இல்லை”

“அதை தான் நானும் சொல்ல வரேன். ஆரம்பத்தில் இருந்தே நீ அவன் கிட்ட எப்படி பழகுற என்றதையும் தாண்டி அவன் மனச உன் கிட்ட பறி கொடுக்க போய்தான், என்ன பத்தி உன்  கிட்ட பேசிட்டான். அதை எல்லோரும் ஏத்துப்பாங்களான்னு ஒரு கொஸ்டின் இருக்கு மித்ரா?  தப்பான்னு சொல்லல ..எல்லாராலும் ஏத்துக்க முடியாது. தனக்கானவன் தனக்கான முழு உரிமையையும் தனக்கு மட்டும் தான் தரணும் என்ற ஒரு எண்ணம் இருக்கும் இல்ல ” என்று சொல்லும் போதே..

சிரித்துக் கொண்டே வேலு அங்கு வந்தவன்.”எனக்கும் இருந்துச்சு” என்றான். அவள் அதிர்வாக திரும்பிப் பார்க்க..

வித்யா முறைத்தாள். தன் மனைவியின் தோளில் கை போட்டவன்.. “என்  தம்பி என் பொண்டாட்டி  மடியில் படுக்கிறானே என்று எனக்கும் ஒரு சில நாள் ஆதங்கம் இருந்து இருக்கு. ஆனா, இது எல்லாராலும் ஏத்துக்க முடியாது. ஒரு ஆண் ,பெண் நட்பையே,  எல்லாராலும் ஏத்துக்க முடியாது. புருஷன் பொண்டாட்டினா பொசசிவ் இருக்கத்தான் செய்யும். அது இல்லாம வாழ்க்கை இல்லை. இப்பயும் எனக்கு ஒரு சில நாள் கோபம் வரும். அதுக்கு பேரு இவங்க மேல நம்பிக்கை இல்லாம அப்படின்னு கிடையாது” என்றவன் சிரிக்க ..

“நம்பிக்கையை தாண்டி நமக்கானவங்க நம்மள தாண்டி இன்னொருத்தவங்க கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிறாங்க அப்படின்னு ஒரு சின்ன வலி இருக்கும் இல்ல. அது மட்டும் தான் சொல்றேன் .அது இல்லாம லைப் நகராது.. அதை தேவ் உணரப்ப அவனாவே எனக்கு ஸ்பேஸ் கொடுத்துட்டு போயிடுவான். உங்க அக்காவுக்கும் எனக்கு கொடுக்க வேண்டிய ஸ்பேஸ் தெரியும். அந்த இடத்துல தேவை அவாய்ட் பண்ணிடுவா. ஆனா, எனக்கு அந்த சூழ்நிலையை நான் உணர்ந்தேன். அது என்னோட வாழ்க்கை. ஆனா, வரப்போற பொண்ணுக்கு இது எதுவுமே தெரியாது. அவ ஒரு கனவோட வருவா, அந்த கனவுல எந்த இடத்திலும் ஒரு புருஷனா அவன் தவறிடக்கூடாது. அதுக்கு காரணமா நாங்க இருந்திட கூடாது. சப்போஸ் வித்யாவையும் அவனையும் புரிஞ்சுக்க  முடியாத ஒரு பொண்ணு வந்துட்டா. அவனை புடிச்சி இருக்கலாம். அவனுக்கும் புடிச்சி இருக்கலாம். ஆனா, ஏதோ ஒரு இடத்தில வித்யாவை புரிஞ்சுக்க முடியாம போயிட்டா.. தப்பா போயிடும். எப்படி சொல்றது.. குழந்தை கையில ஒரு பொம்மையை கொடுத்துட்டு திரும்ப  புடுங்கினா எப்படி இருக்கும். அந்த நிலைமைதான் வித்யாவுக்கு.. சப்போஸ், இப்ப தேவையும் ,குகனையும் நீ வித்யா கிட்ட இருந்து நீனா நீனு சொல்லல.. அவனுக்கு வர போற மனைவி பிரிச்சிட்டா.. அப்படின்ற ஒரு சூழ்நிலை வந்துச்சுன்னா வித்யா திரும்ப பல்லு புடுங்குன பாம்பு மாதிரி தான். பழைய நிலைமைக்கு முழுசா போயிட மாட்டா தான். இருந்தாலும்”

இப்பொழுது வேகமாக வித்யாவின் கையை  மித்ரா பிடித்தாள்.

” என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா கா ?”என்றாள் கண்கள் கலங்க ..

அவளை வேகமாக கட்டி அணைத்த வித்யா..” உன் மேல முழு நம்பிக்கை இருக்க  போய் தான் நான் இவ்வளவு தூரம் சொல்லிட்டு இருக்கேன்.அவன் இவ்ளோ நாள் கல்யாணம் வேணாம்னு யோசிச்சதுக்கு  காரணம் நான் மட்டும்தான் எனக்கு தெரியும். என்னால் தான் கல்யாணத்தையே தள்ளிப் போடுறான். அப்படி இருக்கப்ப அவனை முழுசா புரிஞ்சுக்கிற பொண்ணு வேணும்னு நினைச்சேன் சப்போஸ் அவன் விருப்பப்பட்டு ,எங்களோட உறவை புரிஞ்சுக்க முடியல, என்றால் கூட அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைச்சேன்”.

” இப்ப நீங்க இப்படி சொல்றீங்க இல்ல இதுக்கு அர்த்தம் என்ன அக்கா?

உண்மையா புரியல.. இல்ல எங்களை கல்யாணத்துக்கு பிறகு, தனியா அனுப்புற மாதிரியா? இல்லை நீங்க  தனியா போற மாறியா ?”

“அந்த அளவுக்கு எல்லாம் யோசிக்கல மா. அந்த அளவுக்கு எல்லாம் போக முடியாது. அந்த அளவுக்கு எல்லாம் அவன் முதல்ல விட  மாட்டான்”.

மித்ரா முகத்தில் ஒரு மலர்ச்சி.. 

அதைப் பார்த்த வேலு..” பாருடா..   பர்ஸ்ட் குகனை விட்டு இருக்க முடியாது. வித்யாவை பத்தி யோசிக்கிறது அடுத்த விஷயம். தேவும் குகனை விட்டுட்டு இருக்க மாட்டான். குகனும் தேவை விட்டு இருக்க மாட்டான். ரெண்டும் அஞ்சு நிமிஷம் அடிச்சுக்கிட்டாலும் அடுத்த நிமிஷம் கூடிக்குங்க.. அவனுங்களால் பேசாம கூட இருக்க முடியாது.. ” என்று சிரித்தான். 

“நீ அன்னைக்கு போன் பண்ணி குகன் கிட்ட காமிச்ச உரிமையே என்ன சிலிர்க்க வச்சிருச்சு மித்துமா . நான் சிரித்தேன் என்று நீ போன் வச்சிட்ட இல்ல.. அதுக்கு முன்ன வரை.. நீ ஏதோ ஒரு இடத்தில் தேவையும் ,வித்யாவையும் சந்தேகப்படுற போல வந்தா என்ன பண்றது என்ற பயம் இருந்துச்சு… “

மித்ரா  கண்களை சுருக்கி அவனை பார்க்க..”

“அன்னைக்கு நீ சொன்ன மாதிரி தான் மித்து மா. உங்க அப்பா கிட்ட உங்க விடியத்தை சொல்ல உனக்கு ஒரு வாய் வார்த்தை தேவைப்பட்டுச்சு இல்ல. அப்போ அதை  நான் உணர ,எனக்கும் ஒரு சின்ன துருப்பு சீட்டு வேணும் இல்லையா ?துடுப்பு வேணும் இல்லையா ? ஆனா என் தம்பி நல்லா இருந்தா போதும். அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணா இருந்தா போதும்னு யோசிச்சேன். ஆனா ,அதே சமயம் கொஞ்சம் சுயநலமா என் பொண்டாட்டிக்காகவும் யோசிக்க செஞ்சேன்.

அந்த இடத்துல நீ குகனுக்காக பேசினப்ப தான்  நான் சிரிக்க செஞ்சேன். அது என்னோட ஆனந்த சிரிப்பு..”  என்றான் கண்கலங்க..” ஒரு நிமிஷம் ஆனாலும் உன்கிட்ட தோன்றிய பதட்டம் உண்மையானது. அவனை ஏன் அங்க படுக்க வச்சீங்க ? அவனுக்கும் ஜுரம் வந்துரும் இல்லையானு கேட்ட இல்லையா, எந்த விஷயமும் தெரியாமலே அண்ணன் பையனா மட்டும் இருக்கும்போதே குகனுக்காக அவ்ளோ பதறின இல்லையா? இதே, குகனுக்கும் சரி ,தேவுக்கும் சரி மொத்த உலகமும் அவங்க தான் என்று இருக்கும்போது நீ அந்த உலகத்துல ஒருத்தியா தான் இருப்பியே தவிர ,அவங்க கூட்ட பிரிச்சிட மாட்டேன்ற நம்பிக்கை எனக்கு வந்துச்சு.”என்றான் புன்னகை மாறாமல்..

இப்பொழுது, வேலுவின் கையையும், வித்யாவின் கையோடு சேர்த்து இறுக்கி பிடித்தவள்.. தன் கையையும் அவர்கள் கையின் மீது வைத்து, “இன்னைக்கு  சொல்றேன் மாமா. இப்ப எப்படி இருக்கோ நம்ம குடும்பம் .அதே மாதிரி என்னைக்கும் நிலைச்சு நிக்கும்.ஒற்றுமையா இருக்கும். இன்னைக்கு இல்ல,என்னைக்கும் யாரையும் பிரிக்கணும்னு நினைக்க மாட்டேன். அதே சமயம் நான் அங்க இருந்து பிரிஞ்சு போகணும்னு நினைக்க மாட்டேன். இந்த மாதிரி ஒரு குடும்பம் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும், அக்கா மாதிரி ஒருத்தவங்க கிடைக்க நான் கொடுத்து வச்சி இருக்கணும் “

“தேவ் மாதிரி ஒருத்தன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் சொல்லு மித்ரா!”என்றாள்  வித்யா.

“எங்க மாமா மாதிரியும் தான் ஒரு புருஷன் கிடைக்க நீங்க கொடுத்து வச்சி இருக்கணும்” என்றாள் இப்போது ரியா தோரானையாக.

“ஆமா..ஆமா..உங்க  மாமா மாறி ஒரு பு..புருஷன்.. கிடைக்க கொடுத்து தான் வச்சு இருக்கணும் ” என்றாள் வித்யாவும் அவளுக்கு சரிக்கு சமமாக பேசி  இழுவையாக சொல்ல..

  மாமா என்று உரிமையோடு அழைத்து ,தன் மனைவியிடமே தனக்காக பேசி வம்பு இழுப்பவளை பார்த்து புன்னகையுடன் வேலு அவளை பார்க்க ..

கண் சிமிட்டி சிரித்தாள் ரியா.

“அடியே என்ன டி என் புருஷனை சைடு கேப்பில் சைட் அடிக்கிறியா?”என்று எகிறி கொண்டு வித்யா வர…

” நீங்க என் மாமாக்கு பொண்டாட்டியா இருந்துட்டு போங்க க்கா” என்றாள்.. நீ பிழைத்து  போ என்பது போல் 

.

அவள் கூற்றில் வேலு சிரிக்க..

“அவரு என் புருஷன் தானடி! நீ என்னவோ விட்டுத்தர மாதிரியே பேசுறியே?”என்றாள் புருவம் உயர்த்தி, ஏற்ற இறக்கமாக..

“நான் மச்சினிச்சி இல்லையா? என் மாமாவுக்கு “…என்று சீண்டினாள்.

“என் அண்ணனுக்கு அண்ணி இருக்காங்க, அவங்களே  போதும் ரியா!”என்று சொல்லிக் கொண்டே வேலு குகனை தூக்கிக்கொண்டு அங்கு வந்தான். 

“ஹலோ பாஸ்! உங்க அண்ணிக்கு கொழுந்தனா  நீங்க இருக்கிறதை  நாங்க எதுவும் சொல்லல இல்லையா?.. அது மாதிரி எங்க மாமாவுக்கு நான் இருக்கிறதையும் யாரும் கேள்வி கேட்கக்கூடாது சரியா ?”என்றவள் ” அப்படித்தான மாமா!”  என்று வேலுவை பார்த்து ரியா கண் அடிக்க..

அவனும் ,முதலில் பதறியவன்.. பின்பு சிரித்துக்கொண்டே, ரியாவுடன் ஹை ஃபை அடித்துக் கொள்ள.. இப்படியே அன்றைய பொழுது கழிந்தது..

  மதிய உணவு உண்டு விட்டு, மாலை போல் தங்களது இருப்பிடத்திற்கு சென்றார்கள் தேவ் குடும்பத்தினர். 

தேவ் அன்று இரவு ஃபோன் செய்ய மித்ரா போன் எடுக்கவில்லை.

இரண்டு ,மூன்று முறை அழைத்துப் பார்த்தான் .ஆனால் எடுக்கவில்லை.

மறுநாள் ஸ்கூலில் அவளை பார்க்க முடியவில்லை. போன் செய்தும் பார்த்தான் எடுக்கவில்லை. வாய்ஸ் நோட் அனுப்பி இருந்தான்.” இப்போ நீ வெளியே வரவில்லை என்றால், நான் அங்க எல்லா ஸ்டாப் இருக்க ஸ்டாப் ரூமுக்கு  வர மாதிரி இருக்கும். எப்படி வசதி?” என்று அனுப்பி இருக்க..

அவனை எண்ணி,”தொல்லை தாங்கவில்லை” என்று முனகி கொண்டே அவள் வெளியில் வர..

“என்னடி உன் பிரச்சனை. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கற? மெசேஜ் பண்ணாலும் ரிப்ளை இல்ல ?” என்றான் ஆதங்கமும் கோபமும் போட்டி போட.

அவளோ,அவன் பேசியதை காதில் வாங்காமல், கைகளை கட்டிக்கொண்டு அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

அவளின் முதல் பார்வை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நேர்கொண்ட பார்வை தன்னை பார்க்க..

ஒரு சில நாள் தன்னை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், தவித்து, தவிர்த்து ,கூச்சப்பட்டு தலையை திருப்பி இருக்கிறாள்.. தாழ்த்தி இருக்கிறாள் .ஆனால், இன்று நேருக்கு நேர் கைகளை கட்டிக்கொண்டு நேர்கொண்ட பார்வை பார்க்கவும்..

முதலில் அவளை ரசனையாக பார்த்தவனின் பார்வை .. அவள் முறைப்பில் மாறி இருக்க ..

“நான்  என்னடி தப்பு பண்ணேன்”..

  “எதுக்கு நேத்து என்னை முறைச்சிட்டு போனீங்க?  இன்னொரு விஷயம் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றாள்  வாய் திறந்து ,புருவத்தை உயர்த்தி கைகளை கட்டியபடி …

அவனுக்கோ அதிர்வு.’ என்ன இவள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லையா?’என்று பார்க்க..

“மித்ரா மிஸ் கொஞ்சம் வரீங்களா? வேலை இருக்கு” என்று உள்ளே இருந்து ஒரு ஆசிரியர் குரல் கொடுக்க..

தேவை ஒரு பார்வை பார்த்தவள் “யோசிச்சு முடிவு சொல்லுங்க? எனக்கு வேலை இருக்கு” என்று வேறு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்