வரம்-3
(பிளாஷ்பேக் கண்டினியூ)
“அம்மா… அம்மா..” என்றாள் பூர்ணா.
“என்னடா???” என்று பக்கத்தில் வந்தார் மேகலா.
“அம்மா எனக்கு குலோப் ஜாமுன் வேணும்”.
“நாளைக்கு பண்ணி தரேன் டா, இன்னைக்கு ரசகுல்லா பண்ண போறேன்” என்றார் பொறுமையாக.
“நோ.. எனக்கு குளோப் ஜாமுன் இப்பவே வேணும்” என்றாள் பிடிவாதமாக.
“சரி ரெண்டுமே பண்ணி தரேன்”.
“ஏய்! உன் அப்பா வீட்ல இருந்து எடுத்துட்டு வந்து செய்வியா டி, ஒழுங்கா குலோப் ஜாமுன் மட்டும் பண்ணு” என்றார் பாட்டி கண்டிப்புடன்.
“சரி” என்று உள்ளே சென்றார். குலோப்ஜாமுன் செய்துவிட்டு, மூன்று உருண்டை மட்டும் அபுக்காக ரசகுல்லா செய்தார். குலோப்ஜாமுனை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து பூர்ணா மற்றும் பாட்டிக்கு எடுத்துத் தந்தார். அபு கீழே வந்தாள்.
“அம்மா… அம்மா.. ரசகுல்லா பண்ணிட்டீங்களா??” என்றாள் எதிர்பார்ப்புடன்.
மற்ற இருவரின் இதழும் நக்கலாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். “அபு உள்ள வா டா அம்மா தரேன், இவ்ளோ! நேரம் கீழ வராம என்ன பண்ணுன??” என்று சமையல் அறைக்கு அழைத்து சென்று மேடையின் மேல் அவளை உட்கார வைத்தார்.
“ஹோம் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன், அம்மா குடுங்க.. குடுங்க..” என்றான் அவசரமாக.
“அபு பால் கம்மியா இருந்தது அதனால மூணு உருண்ட மட்டும் தான் பண்ணுனேன் டா, இன்னொரு நாள் நிறைய பண்ணி தரேன் டா” என்று கொஞ்சலாக சொல்லிக் கொண்டே அவளிடம் தந்தார்.
“இது போதுமா” என்று சாப்பிடப் போனாள். அப்பொழுது,
“அம்மா..” என்று கத்திக்கொண்டு பூர்ணா வேகமாக வந்து அபுவின் கையில் இருந்த ரசகுல்லாவை கால் தடுக்கி விழுவது போல் தட்டி விட்டாள். ரசகுலா முழுவதும் கீழே விழுந்தது. அதை அபு ஏக்கமாக பார்த்தாள்.
“ஏய்!! இப்ப எதுக்கு இப்படி வந்து தட்டி விட்ட??” என்றார் கோபமாக.
“நா கால் தடுக்கி விழப் போனது உங்களுக்கு பெருசா தெரியல, ரசகுல்லா கீழே விழுந்ததுதான் பெரிசா தெரியுது அப்படித்தானே!!” என்றாள் கோபமாக.
“அதானே அவ தடுக்கி விழ போனாலே ஏதாச்சும் புள்ளைக்கு ஆட்சான்னு பாத்தியாடி, உன் புள்ளையா இருந்தா இப்படிப் பண்ணுவியா??” என்றார் பாட்டி கோவமாக.
“போதும் அத்த இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க, பூர்ணா இப்ப எதுக்கு என்னைய கூப்பிட்டுக்கிட்டு வந்த??” என்றார் கூர்மையான பார்வையுடன்.
“அது வந்து.. என் ஸ்கூல்ல ஒரு புரோகிராம் நடக்குது அத சொல்ல வந்தேன்” என்று சமாளித்தாள்.
“ஓ.. சரி அபு உனக்கு இன்னொரு நாள் ரசகுல்லா பண்ணி தரேன் டா” என்றார் கெஞ்சலாக.
“வேணாம்மா பரவால்ல, என்னைய கீழ இறக்கி விடுங்க, நா ரூமுக்கு போறேன்” என்றாள் அழு குரலில்.
“அபு நீ இன்னும் பால் குடிக்கல டா, இந்தா இந்த பால குடி ” என்று கெஞ்சினார்.
“வேணாமா என்னைய இறக்கி விடுங்க” என்றாள் அழுகையுடன்.
“ஏய்!! இப்ப எதுக்கு அழுது சீன் கிரியேட் பண்ற இன்னொரு நாளைக்கு ரசகுல்லா உனக்கு பண்ணி தரப் போறாங்க ” என்றாள் பூர்ணா திமிராக.
“அம்மா ப்ளீஸ்” என்றாள் மேகலாவை பார்த்து.
மேகலா கலங்கிய கண்களுடன் அவளை கீழே இறக்கிவிட்டார்.அபு மேலே அவள் அறைக்கு ஓடினாள். மேகலா அழுகையுடன் கீழே விழுந்த ரசகுல்லாவை சுத்தம் செய்தார்.
“அம்மா எனக்கு வந்து ஊட்டி விடுங்க ” என்றாள் பூர்ணா.
“நீயே போய் சாப்பிடு நா நைட்டுக்கு சமைக்கணும் ” என்றார் வெற்று குரலில்.
“ஓ.. உன் பொண்ணு அழுதுகிட்டு போறான்னு இவள அழவைக்க பாக்குறியா, இத உடனே மோகன் கிட்ட சொல்றேன் அவன் உன் அப்பா வீட்டுக்கு அனுப்பட்டும்” என்றார் கோபமாக.
‘ச்ச.. கிழவியும் பேத்தியும் சேர்ந்து அவள ஒரு வாய் ரசகுல்லா கூட சாப்பிட விடாம பண்ணிட்டாங்க, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாமல் போச்சு, இத அவர் கிட்ட சொன்னா காதுல கூட வாங்க மாட்டாரு, நா அபுவ கவனிக்கிறது தான் இவங்க பிரச்சனையே இனிமே அவ கிட்ட இருந்து விலகி இருக்கணும், அப்படியாச்சும் இவங்க அவள நிம்மதியா இருக்க விடுறாங்கலான்னு பார்க்கலாம்’ என்று மனதிலே யோசித்துக்கொண்டு இருந்தார்.
“அம்மா இதுவே அபு கேட்டு இருந்தா உடனே ஊட்டி இருப்பீங்கல்ல, நா உங்க பொண்ணு இல்லல்ல அதான் இப்படி யோசிக்கிறீங்க” என்றாள் அழுகையுடன்.
மேகலா வேகமாக அவளிடம் சென்று,” இனிமே இப்படி பேசாத, அபு உன் விஷயத்துல என்னைக்குமே தலையிடுறது இல்ல, நீ அவ்ளோட விஷயத்துல தலையிடாத, உனக்கு அப்புறம் தான் அபு புரிஞ்சதா வா” என்று அவளை இழுத்து சென்று ஊட்டி விட்டார். அவர் ஊட்டி விடுவதை மேலே இருந்து அபு ஏக்கமாக பார்த்தாள்.
அன்றிலிருந்து வீட்டில் யாரிடமும் பேச மாட்டாள். கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுவாள் அனைவரிடமிருந்தும் விலகியே இருந்தாள். ஆறாவது படிக்கும் போது ஸ்கூல் முடிந்து வரும் வழியில் ஓர் குட்டி நாய் பசியோடு சோகமாக இருந்தது. அவள் அதற்கு தன்னிடம் இருந்த பிஸ்கட் மற்றும் கீழே இருந்த டப்பாவில் தண்ணீர் ஊற்றி குடிக்க வைத்தாள். குட்டி நாய் சாப்பிட்டு முடித்தது.” உன்னைய என் கூட வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும் தான் ஆச ஆனா நானே என் வீட்ல மூணாவது மனுஷி மாதிரி தான் இருக்கேன், உன்னைய எப்படி நா அழச்சிட்டு போகமுடியும், பார்த்து பத்திரமா இரு பாய்” என்று நடக்க ஆரம்பித்தாள்.
குட்டி நாய் அவள் பின்னாலேயே வந்தது.”உனக்கு யாரும் இல்லையா, சரி என் கூட வா ஆனா நீ என் அக்கா கூட தான் இருக்கணும், அவ நினைக்கிறது தான் வீட்டுல நடக்கும் என்கிட்ட வந்தா உன்னைய அடுத்த நிமிஷமே வெளில துரட்டிடுவாங்க, நா உன்னைய பிடிக்காத மாதிரி தான் நடந்துப்பேன், நா சொல்றது உனக்கு புரியுதா” என்றாள் பாவமாக. நாய்க்குட்டி தலையை ஆட்டியது.” வா…” என்று முன்னால் சென்றாள். நாய் அவள் பின்னால் வந்தது.
“அம்மா.. அம்மா.. இந்த நாய பாரு என் பின்னாலே வருது, நாய்னா எனக்கு பிடிக்கதுல்ல, இத துரத்துங்க முதல்ல” என்றாள் சத்தமாக .அனைவரும் வெளியே வந்தனர். நாய் அவளை பாவமாக பார்த்தது.
“ஏய்! போ” என்று விரட்டினார் மேகலா.
“ஏய்! உன்னைய எனக்கு பிடிக்கல, ஸ்கூபி தூபி டூல வர ஸ்கூபி மாதிரி இருக்க, அந்த பெரே எனக்கு பிடிக்காது போ” என்று விரட்டினாள்.
“எனக்கு இந்த நாய பிடிச்சிருக்கு, உனக்கு நா ஸ்கூபின்னு பேர் வைக்கிறேன் என்கிட்ட வா” என்று பக்கத்தில் உட்கார்ந்து அதன் தலையை தடவி கொடுத்தாள். ஸ்கூபி கண்களை மூடி அதை அனுபவித்தது.” அப்பா ப்ளீஸ்ப்பா இந்த நாய நாமலே வச்சுக்கலாம்” என்றாள் பூர்ணா கெஞ்சலாக.
“அட எதுக்கு டா இதுக்கு போய் ப்ளீஸ் சொல்ற, நம்மலே வச்சுக்கலாம்” என்றார் பாசமாக. அன்றிலிருந்து அனைவரும் இருக்கும்போது ஸ்கூபியை விட்டு விலகியும். அனைவரும் தூங்கியவுடன் ஸ்கூபி அபுவின் அறைக்கு சென்று தூங்கும். அபுவிற்கு பிடித்த விஷயத்தை கூட பிடிக்காது என சொல்லியே வாங்கிக் கொள்வாள். அதுவே அவள் வழக்கமாக மாறி போனது.
(பிளாஷ்பேக் ஓவர்)
நடந்து முடிந்த சம்பவங்கள் அனைத்தையும் அபு மற்றும் மேகலா நினைத்துப் பார்த்துக் கொண்டே தூங்கினார்கள். இரு நாட்கள் இப்படியே சென்றது.
“டேய்! இன்னைக்கு எதுக்குடா ஆடிட்டோரியத்துக்கு வர சொன்னாங்க” என்றாள் பிரியா ஃபைவ் ஸ்டாரில் ஒரு ஸ்டார். (அச்சோ சொல்ல மறந்துட்டேன் இவங்க கேங் பேரு ஃபைவ் ஸ்டார் கேங்).
“அது வாடி உன் தாத்தா இந்த காலேஜ்க்கு கொஞ்சம் அமௌண்ட் டோனேட் பண்ணுனருல்ல அவருக்கு பாராட்டு விழா நடத்த தான் வர சொல்லி இருக்காங்க” என்றான் ராஜேஷ் கிண்டலாக.
“ஏய்! போடா லூசு”, என்றாள் கோவமாக.
“அப்புறம் என்னடி நாங்களும் உன் கூட தானே இருக்கோம் எங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்??” என்றான் தீபன்.
“டேய்! சண்டை போடுறத நிறுத்திட்டு வழக்கம்போல கடைசி சீட் பிடிங்கடா” என்றாள் அபு. கௌதம் மற்றும் ராஜேஷ் வேகமாக சென்று இடத்தை பிடித்தனர். தீபன், பிரியா, அபு, ராஜேஷ், கௌதம் என்று வரிசையாக உட்கார்ந்தனர்.
“ஹலோ! ஃபைனல் இயர் ஸ்டூடண்ஸ் உங்களுக்கு உதவி செய்ய எஸ்.என்.ஏ குரூப் ஆஃப் கம்பெனி எம்டிஸ் வந்திருக்காங்க ” என்று அறிமுகப்படுத்தினார். ஷ்யாம், நிதர்சன் மற்றும் அரவிந்த் வந்திருந்தனர். “இவங்க மூணு பேர்ல அரவிந்த் இந்த காலேஜ்ல தான் படிச்சாரு, நம்ம காலேஜ் மேல இருந்த பற்றுனால இதெல்லாம் பண்றாரு, இவரு பண்றதும் இல்லாம இவங்க நண்பர்களையும் அழைத்து வந்திருக்கிறார்” என்று பாராட்டினார் பிரின்ஸ்பல்.
“சார் இதுக்கு மேல நாங்க பேசுறோம் சார் உங்க ஓர்க்க பாருங்க ” என்றான் அரவிந்த் சிரிப்புடன். பிரின்ஸ்பால் வெளியே சென்றார். “ஹாய் பிரண்ட்ஸ் நா அரவிந்த். இந்த காலேஜ்ல தான் படிச்சேன், படிச்சு முடிச்சதும் என்ன பண்றது?? , எந்த வேலைக்கு போறது??? இப்படி பல கேள்வி என் மனசுல வந்தது, என் திறமை என்னன்னு எனக்கே தெரியாம இருந்தேன், எனக்கு சொல்லி தர ஆள் யாரும் இல்ல, அந்த மாதிரி ஒரு நிலம உங்க யாருக்கும் வரக்கூடாது அதுக்கு தான் நாங்க இப்ப பண்ணப் போறோம்” என்றான் சிரிப்புடன்.
“ஹாய் நா நிதர்சன், நா வேற காலேஜ்ல தான் படிச்சேன், உங்களுக்கு தெரிஞ்சுக்கணும்….
புதுசா கத்துக்கணும் இப்படி பல விஷயம் இருக்கும், அத வெளியே கொண்டு வாங்க, நீங்க எத கத்துக்கணும்னு ஆச படுறீங்களோ அத கத்துக்கலாம், எங்களுக்கு இதுக்காக எந்த பீஸ் தரத் தேவை இல்லை, இத நாங்க ஒரு பொது சேவை மாதிரி தான் பண்ணுறோம்” என்றான் சிரிப்புடன்.
“ஹாய் ஃப்ரெண்ட்ஸ் நா ஷ்யாம் யூதன், நாம கத்துக்கணும்னு நினைக்கிறது கத்துக்க முடியாமல் போகலாம், அப்படி எதுவும் கத்துக்க முடியல அத எப்படியாச்சும் கத்துக்கணும் முயற்சி பண்ணுங்க, எது எதுல இன்ரஸ்ட் இருக்கோ அத சொல்லலாம், அதுக்கு நாங்க ஏற்பாடு பண்றோம் ஆனா இத நாங்க ஒன் மந்த் மட்டும் தான் பண்ண முடியும், ஒன் மந்த் ஃபுல்லா கத்துக்க முடியாதுன்னு நினைக்காதீங்க உங்கள மேக்ஸிமம் எல்லாத்தையுமே கத்துக்க வச்சிடுவோம்” என்றான் சிரிப்புடன்.
“எனி கொஸ்டின்ஸ் “, என்றான் நிதர்சன் .
“டேய்! ராஜேஷ் கைய தூக்குடா”, என்றாள் அபு.
ராஜேஷ் கையை தூக்கிக் கொண்டே, “ஆமா எதுக்கு கைய தூக்க சொன்ன??” என்றான் சந்தேகமாக.
“போடா லூசு தூக்கிட்டு கேட்குறான் பாரு ” என்றான் கௌதம்.
“சூப்பர் நீங்க எந்திரிங்க” என்றான். ராஜேஷ் முழித்துக் கொண்டே எழுந்தான்.”என்ன கொஸ்டின் சொல்லுங்க??”.
“சமையல் கத்துக்கணும்னு ஆச கத்து தருவீங்களான்னு கேளுடா” என்றாள் அபு சிரிப்புடன் மெதுவாக. மற்ற மூன்று பேரும் மெதுவாக சிரித்தனர்.
“சார் எனக்கு எந்த டவுட்டும் இல்ல, இவ தான் தூக்க சொன்னா” என்று மாட்டிவிட்டான்.ஷ்யாம்,நிதர், அரவிந்த் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“யார் அவங்க எந்திரிங்க” என்றான் அரவிந்த்.
அபு ராஜேஷை முறைத்துக் கொண்டே எழுந்தாள். ஷ்யாமிற்கு அவளைப் பார்த்ததும் ஆச்சரியம். “அபு என்ன கேட்கப் போற ஏய்! அபு.. அபு..”, என்றனர் மாணவர்கள்.
“சைலன்ட் ஃப்ரெண்ட்ஸ்” என்றான் அரவிந்த்.
“என்ன கொஸ்டின் சொல்லுங்க உங்களுக்கு என்ன சந்தேகம்” என்றான் விடாமல் நிதர்.
‘இவ கிட்ட போய் கேட்கிறானே இவ கண்டிப்பா ஏதாச்சும் எடக்கு மடக்கா தான் கேக்க போறா, இல்ல ஆல்ரெடி கேட்டிருப்பா’ என்று மனதில் நினைத்தான் ஷ்யாம்.
“மாட்டிக்கிச்சே… மாட்டிக்கிச்சே..” என்று மெதுவாக பாடினான் தீபன். மற்ற மூன்று பேரும் இவளைப் பார்த்து சிரித்தனர். நான்கு பேரையும் பார்த்து பொய்யாக முறைத்தாள்.
“கேளும்மா என்ன சந்தேகமா இருந்தாலும் சொல்லு நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்” என்றான் அரவிந்த்.
“அது வந்து எனக்கு இன்டீரியல் டிசைன் கத்துக்கணும்னு ஆச சொல்லி தருவீர்களா” என்றாள். ஷ்யாமியிடம் இருந்து லேசான பெருமூச்சு வந்தது.
“கண்டிப்பா நீங்க எந்த டிபார்ட்மென்ட்” என்றான் நிதர்.
“ஆர்க்கிடெக்சர்”.
“கண்டிப்பா சொல்லித்தரோம். நீ உட்காரு மா, எனி கொஸ்டின்ஸ்” என்றான் அரவிந்த் .அனைவரும் அமைதியாக இருந்தனர்.அபு உட்கார்ந்தாள்.” ஓகே ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்கு எதுல இன்டர்ஸ்ட்னு லிஸ்ட் போட்டு கொடுங்க, நாங்க எப்ப ஸ்டார்ட் பண்ணலான்னு அரேஞ்ச் பண்ணிட்டு சொல்லுறோம் இப்ப நீங்க கிளம்பலாம்”.
மாணவர்கள் கலைந்தனர். சிலர் வந்து ஃபைவ் ஸ்டார் கேங்கிடம் பேசி விட்டு சென்றனர். அபு ராஜேஷை அடித்துக் கொண்டு இருந்தாள்” பிசாசு எதுக்குடி அடிக்கிற” என்று கத்திக்கொண்டு இருந்தான்.
“ஏய்! எரும உன்னால நா மாட்டி இருப்பேன் டா”, என்று மீண்டும் அடித்தாள்.
அவளை இழுத்து குனியவைத்து மற்ற மூன்று பேரும் அடித்தனர். “என்னைய எதுக்குடா அடிக்கிறீங்க” என்றாள் எழுந்து வேகமாக.
“உன்னால நாங்களும் மாட்டி இருப்போம்டி நாயே, நீ சமைக்க கத்துக்கிட்டு யாருக்கு டி விஷம் வைக்க போற” என்றான் கௌதம்.
“அவ பண்ற சாப்பாடே விஷம் மாதிரி தான் இருக்கும், இதுல விஷம் வேற வைக்கணுமா” என்று பொய்யாக அழுத்துக் கொண்டான் தீபன்.
“ஏய்! அப்படி சமைக்குற முடிவு இருந்தா முதல்ல உன் வீட்ல இருக்க சகுனி( பூர்ணா)-க்கும் சூனியக்காரி கிழவிக்கும்( பாட்டி ) பண்ணி கொடு டி” என்று யோசனை சொன்னாள் பிரியா.
“ம்ம்… சூப்பர் பிரியா ஐடியா… செம்ம… ரெம்ப்ப… கேவலமா இருக்கு” என்றான் ராஜேஷ் கிண்டலாக.
“ஹலோ ஸ்டூடண்ட் அஞ்சு பேரும் இங்க என்ன பண்றிங்க??? இங்க வாங்க ” என்றான் நிதர். ஐந்து பேரும் அவர்கள் மூவரின் பக்கத்தில் வந்தனர்.
‘அவளே போனாலும் இவன் வாங்கி கட்டிப்பான் போல’ என்று மனதில் நினைத்தான் ஷ்யாம்.
“என்னடா வீட்டுக்கு கிளம்பலையா” என்றான் அரவிந்த்.
“கிளம்ப போறோம்” என்றனர்.
“சார் அன்னைக்கு நீங்க தானே அபு கூட நைட் வந்தது ” என்றான் கௌதம் ஷ்யாமை பார்த்து.
“இவர் தான் டா, ஏய்! அபு உன் ஃப்ரெண்டு டி ” என்றான் தீபன் சந்தோஷமாக.
“ஆமா. நா தான் வந்தேன், என்ன அபு என்னைய மறந்துட்டியா? ” என்று கிண்டலாக ஷ்யாம் சிரித்தான்.
“ஏய்! அபு நீ சொன்ன ஹாண்ட்சம் ஃப்ரெண்ட் இவர்தானா டி ” என்றாள் பிரியா ஆச்சரியமாக.
“ஹாண்ட்சமா இங்க என்ன நடக்குது” என்றனர் நிதர் மற்றும் அரவிந்த். தீபன் மற்றும் கௌதம் அன்று நைட்டு நடந்த அனைத்தையும் சொன்னார்கள்.
“அப்ப நிதி சொன்னா அபு இவ தானா, ஷ்யாம் இவ அக்காவ தானே உனக்கு பேசி முடிச்சுருக்காங்க” என்றான் அரவிந்த் ஆச்சரியமாக.
“ஆமாடா” என்றான் ஷ்யாம்.
அபுவின் நண்பர்கள் நான்கு பேரும் அபுவை பார்த்தனர்.” ச்சா.. இவ்ளோ நல்லவர் போய் அந்த சகுனிக்கா?? இந்த கல்யாணம் நடக்க கூடாது… இவர் வாழ்க்கைய காப்பாத்து கடவுளே!!” என்று மெதுவாக வேண்டினாள் பிரியா. அபு பிரியாவை லேசாக முறைத்தாள்.
“அபு உன் ஃப்ரெண்ட்ஸ இன்றோ பண்ண மாட்டியா ” என்றான் நிதர். நான்கு பேரையும் அறிமுகம் செய்தாள்.
“அபு இவன் நிதர்சன் என் பெரியப்பா பையன், அன்னைக்கு வீட்டுக்கு என் கூட வந்தாலே நிதி அவளோட அண்ணன், இவன் அரவிந்த் எங்க உயிர் நண்பன், இப்ப எங்க மச்சான் நிதிக்கு இவன தான் கல்யாணம் பண்ண போறா” என்றான் சிரித்துக்கொண்டே.
“ஓ.. சரி ” என்றாள் சுரத்தே இல்லாமல்.
“ஓ.. சரியா?? இவன் உன் மாமா உன் அக்காவ கல்யாணம் பண்ண போறான் , சரி மாமான்னு சொல்லு” என்றான் அரவிந்த் கிண்டலாக.
அவள் நண்பர்கள் நான்கு பேரும் அரவிந்தை உற்று பார்த்தனர்.”அவ அப்படி கூப்பிட மாட்டா” என்றாள் பிரியா வெடுக்கென்று.
“ஏன்???” என்றனர் மூவரும்.
“அவ கூப்பிட மாட்டா இவர பாக்குறப்ப மாமான்னு சொல்ல தோணி இருந்தா அவ முதலையே கூப்பிட்டு இருப்பா” என்றான் ராஜேஷ்.
“அபு..” என்று ஷ்யாம் அபுவை உற்றுப்பார்த்தான். அவனை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தாள். “என்னாச்சுடா ஏன் இப்படி இருக்க??? என்னைய மாமானு கூப்பிட சொல்ல மாட்டேன், நீ எப்போதும் போல யூதுன்னு கூப்பிடு சரியா, நீ முதல்ல என் ஃப்ரெண்ட் அப்புறம் தான் இந்த உறவு எல்லாம்” என்றான் அவள் கண்களை பார்த்து. அவளின் கண்களில் லேசான மின்னல் வந்து மறைந்தது. அவள் குழிவிழும் கன்னம் அழகாக குழிவிழுது சிரித்துக் கொண்டே வேகமாக தலையை ஆட்டினாள்.
ஷ்யாமின் இந்த அணுகுமுறை இவள் நண்பர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கௌதம் அவள் கன்னத்தை கிள்ளி,” அபு சிரிச்சுட்டா ” என்று சத்தம் போட்டு அபுவை சுற்றி விட்டாள். மற்ற நான்கு பேரும் வளையம் போல் வட்டமாக வந்து அவளை சுற்றி விட்டு சிரிக்க வைத்தனர். ஷ்யாம், நிதர் மற்றும் அரவிந்துக்கு அபுவை ஒரு குழந்தைபோல் அவர்கள் நண்பர்கள் பார்த்துக் கொள்வதை பார்த்து சிரித்தனர்.
“போதும்டா விடுங்க” என்றாள் சிரிப்புடன். அனைவரும் சிரித்தனர்.
“ஆமா அபு நீ உண்மையாவே என்கிட்ட இந்த டவுட் தான் கேட்க வந்தியா” என்றான் நிதர் சந்தேகமாக.
“இல்ல” என்றனர் ஐந்து பேரும்.
“வேற என்ன??” என்றான் அரவிந்த்.
“சமைக்க சொல்லி தருவீங்களான்னு கேட்க வந்தா” என்றான் ராஜேஷ்.
“சமைக்கவா” என்றனர் மூவரும்.
“ஆமா என்ன ஆர்வமா இருந்தாலும் சொல்ல சொன்னீங்க இல்ல அதான்” என்றாள் குறும்பாக.
“நல்லவேள அதை நீ சொல்லல”.
“சமைக்க அவ்ளோ ஆர்வமா அபு” என்றான் ஷ்யாம்.
“சமைக்க இல்ல கொல பண்ண அவ்ளோ ஆர்வம் இல்ல அபு” என்றான் தீபன் கிண்டலாக.
“போடா லூசு” என்றாள் பொய்யான கோபத்துடன்.
“சரி வாடா லூசு” என்று மீண்டும் கிண்டலாக அவளின் கையை பிடித்து இழுத்தான். அனைவரும் சிரித்தனர்.
“கௌதம் உன்னைய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குடா” என்றான் அரவிந்த்.
“ம்ம்.. ஒரே தெருவுல்ல தான் அண்ணா நம்ம ரெண்டு பேரும் இருக்கோம், உங்க வீட்டு பக்கத்துல தான் என் வீடும் ஆனா நாம பேசிக்கிட்டது இல்ல”.
“ஆமா டா உன் கிட்ட நா பேசினது இல்ல, இனிமே பேசலாம் இப்ப தான் நாம எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே ” என்றான் சிரிப்புடன்.
“கண்டிப்பா அண்ணா” என்றான் சிரிப்புடன்.
“வர வெள்ளிக்கிழமை நிதிக்கும் இவனுக்கும் என்கேஜ்மென்ட் ஈவினிங் தான் , எல்லாரும் வந்துருங்க ” என்றான் நிதர்.
“நிதி ஓ… உங்க சிஸ்டர் ஓகே! ஓகே! என்ன அரவிந்த் அண்ணா செம்ம லவ்வா” என்றான் தீபன் கிண்டலாக.
“செம்ம லவ்குறதுனால தான் வீட்ல தண்ணி தெளிச்சு கல்யாணம் பண்றாங்க, இது கூட உனக்கு தெரியல டா ” என்றான் ராஜேஷ் கிண்டலாக .
“டேய்! கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க டா அண்ணாவ பேச விடலாம், அப்புறம் அண்ணா இந்த பிரியாவும் நானும் கடந்த நான்கு வருஷமா காதல் காவியம் எழுதுறோம், எங்கள ப்ரெண்டுனு சொல்லிட்டீங்க அதனால சொல்லுறோம்” என்றான் கௌதம் சிரிப்புடன்.
“சூப்பர்டா” என்றனர் மூவரும்.
“ஈஈஈஈ …. வீட்ல சொல்லிட்டோம், வேலைக்கு போய் சொந்த கால்ல நின்னதுக்கு அப்புறம் தான் கல்யாணம் அண்ணா” என்றான் மூவரிடமும்.
“இப்ப மட்டும் என்ன கட்ட கால்லயா நிக்கிற” என்றாள் அபு கிண்டலாக.
“அபு…” என்றனர் பிரியா மற்றும் கௌதம்.
“ஓகே ஓகே டைமாச்சு போலாமா”.
“இன்னும் என்கேஜ்மென்ட்கு வரேன்னு சொல்லவே இல்லையே”, என்றான் ஷ்யாம் ஐந்து பேரையும் பார்த்து.
“சாரி அண்ணா நாங்க வரமாட்டோம், அபு ஃபேமிலி இருக்கற இடத்துக்கு எங்களுக்கு வர பிடிக்காது” என்றாள் பிரியா நேரடியாக.
“ஏன்??”, என்றனர் மூவரும் கோரசாக.
“அது அப்படி தான் எங்க அபுவ கஷ்டப்படுத்துற யாரும் எங்களுக்கு ஒரு நாளும் தேவை இல்ல ” என்றான் தீபன் விளையாட்டுத் தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு.
“யாரு கஷ்டப்படுத்துறா” என்றான் ஷ்யாம் வேகமாக.
“ஏய்! ஸ்டார்ஸ் நா நல்லாத்தான் இருக்கேன், என்னைய யாரும் கஷ்டப்படுத்துல, வர விருப்பம் இல்லனா வரலைன்னு சொல்லுங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை யூது என்னைய பலி ஆடா ஆக்கப் பார்க்கிறாங்க” என்று சீரியஸாக ஆரம்பித்து விளையாட்டாக முடித்தாள்.
“சரி.. சரி..” என்றனர் நிதர் மற்றும் அரவிந்த் . ஷ்யாம் கூர்மையாக அபுவை பார்த்தான். அவள் கண்கள் அவனிடம் கெஞ்சியது ,’கேட்காதே’, என்று அவன் பார்வையை விலக்கிக் கொண்டான்.
“ஆமா அண்ணா முடிஞ்சா வரோம்” என்றான் ராஜேஷ்.
“ம்ம்.. சரி” என்றனர்.
“பாய் ” என்று அனைவரும் கிளம்பினர்.
பாதி தூரம் சென்ற கௌதம் வேகமாக ஷ்யாமிடம் வந்து அவன் கையை பிடித்து, “அண்ணா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா அபுவ உறவா இருக்க சொல்லாம ஃப்ரெண்டா இருக்க சொன்னதுக்கு” என்றான் உண்மையான சந்தோஷத்துடன்.
“ஏன்டா இதுக்கு போய் தேங்க்ஸ் சொல்ற ” என்றான். நிதர் மற்றும் அரவிந்த் இவர்களை அமைதியாக பார்த்தனர்.
“உங்கள அவளுக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா, உறவுன்னு சொல்லி இருந்தா அபு பேசியிருக்க மாட்டா, ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னால தான் பேசுறா, இல்லனா உங்கள விட்டு தூரமா விலகிப் போய் இருப்பா” என்றான் உண்மையாக.
“ஏன்??” என்றனர் மூவரும்.
“அவள உங்களுக்கு புரியாது அண்ணா, உங்க கூட பிரெண்டாயிட்டானா அவ மன புத்தகத்த அவளே திறந்நு காட்டுவா நீங்க கேட்காமலே , சரி அண்ணா பாய் ஃபிரண்ட்ஸ் எல்லாம் வெயிட்டிங்” என்று வேகமாக ஓடினான்.
மூவருக்கும் அபு புரியாத புதிராக தெரிந்தனர் .” டேய்! ஷ்யாம் உன் மச்சினிச்சி சூப்பர் டா, பேசாம நா அவள கல்யாணம் பண்ணிக்கிட்டா” என்றான் நிதர் விளையாட்டாக.
“வாய மூடிக்கிட்டு வா நீ இப்படி பேசினாது அவளுக்கு தெரிஞ்சா உன் பக்கம் கூட திரும்ப மாட்டா, உள்ள உறவையும் கெடுத்துக்காத” என்றான் ஷ்யாம் லேசான கோபத்துடன்.
“ஆமாடா ஷ்யாம் சொல்றது கரெக்ட் தான், அபு ரொம்ப வித்தியாசமா இருக்கா இவள கையாள்றது பொறுமையா தான் கையாளன்னும், பொண்ணு பார்க்கப் போனப்ப நிதி அங்க நடந்த எல்லாத்தையும் சொன்னா, உன் கிட்டயும் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்” என்றான் அரவிந்த்.
“சொன்னா டா”.
“சரி வா போலாம்” என்று கிளம்பி சென்றனர்.
நிதர் பெற்றோர் மற்றும் ஷ்யாமின் பெற்றோர் அபுவின் வீட்டிற்கு இல்லல்ல பூர்ணாவின் வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் வரும்படி அழைத்தனர். வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலை வந்தது. அபு தலைவலியுடன் வீட்டிற்கு வந்தாள்.
“அபு உனக்கு உன் ரூம்ல டிரஸ் எடுத்து வச்சிருக்கேன், குளிச்சுட்டு ரெடி ஆயிட்டு வா” என்றார் மேகலா.
“எங்க???” .
“என் நாத்தனார்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம், சீக்கிரம் போய் கிளம்பி வா” என்றாள் பூர்ணா.
“நா வரல செமையா தல வலிக்குது”.
“ஏய்! அவங்க எல்லாரும் வரணும்னு சொல்லிட்டு போயிருக்காங்க உன்னைய கூட்டிட்டு போகலைன்னா, எங்கன்னு கேட்பாங்க சீக்கிரம் போய் கிளம்பி வா, இவ கிட்ட இதே அக்கப்போரா போச்சு” என்று பாட்டி திட்டினார்.
“நா தான் வரலைன்னு சொல்றேன்ல, எனக்குத் தலை வலிக்குது” என்றாள் கோபமாக.
“ஆமா எனக்கு நல்லது நடந்தா தான், உனக்கு எல்லாம் வலிக்குமே இந்த வரன் எனக்கு அமஞ்சுருச்சு அத பாதியிலேயே நிக்கணும் தானே இப்படி எல்லாம் பண்ற” என்றாள் பூர்ணா கோபமாக.
“ஏற்கனவே டைமாச்சு எதுக்கு சத்தம் போட்டு இருக்கீங்க, எல்லாரும் போய் சீக்கிரம் கிளம்புங்க” என்று வந்தார் மோகன் .
“எல்லாம் உங்க செல்ல பொண்ணு தான் நிச்சயதார்த்தத்திற்கு வர முடியாதாம்” என்றாள் குத்தலாக.
“அபு போய் கிளம்பு எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு” என்றார் கோபமாக. அபு வேகமாக அவள் அறைக்கு சென்றாள். பூர்ணா வெற்றி சிரிப்புடன் கிளம்ப போனாள். மேகலா அபுவிற்கு டீயை போட்டுக்கொண்டு அவள் அறைக்கு சென்றார். தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள்.
“அபு இந்த டீய குடி தலைவலி கொஞ்சம் குறையும்” என்றார் கவலையாக. அபு எதுவும் பேசாமல் வாங்கி குடித்தாள். “உனக்கு டிரஸ் எடுத்து வச்சிருக்கேன் போட மாட்டேன் சொல்லாத, அதுக்கு ஒரு பிரச்சனை கிளம்பும், சீக்கிரம் கிளம்பி வா டா” என்று வருத்தமாக சொல்லிவிட்டு சென்றார்.
அபுவிற்கு பர்புல் நிற சோலியை எடுத்து வைத்திருந்தார் மேகலா. குளித்து கிளம்பி கீழே வந்தாள். அபுவை பார்த்ததும் மேகலாவிற்கு அவரையே அறியாமல் கர்வம் வந்தது. ‘இவ என் பொண்ணு, எவ்ளோ அழகா இருக்கா ,அவ கலருக்கு இந்த சோலி ரொம்ப நல்லா இருக்கு ‘என்று மனதில் நினைத்து கொண்டார். பூர்ணா பச்சை நிற சோழி போட்டு அலங்காரத்துடன் அழகாக வந்தாள்.
அபுவைப் பார்த்து, “என் சோலி உன் சோலிய விட எவ்வவோ காஸ்ட்லின்னு தெரியுமா” என்றாள் நக்கலாக.
“பூர்ணா கிளம்பி போறப்ப என்ன பேச்சு இது, அவ உன்கிட்ட உன் சோலி என்ன ரேட்னு கேட்டாலா, ஏதாச்சும் உன்கிட்ட பேசினாலா” என்றார் மேகலா.
“அம்மா நா என்ன சொல்ல வந்தேன்னா ” என்று இழுத்தாள்.
“நீ ஒன்னும் சொல்ல வேணாம், பூர்ணா வா கிளம்பலாம்” என்றார் கண்டிப்பான குரலில். பூர்ணா உர்ரென்று காரில் ஏறி உட்கார்ந்தாள். அபுவிற்கு இது அனைத்தும் பழக்கப்பட்ட ஒன்றே முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் கிளம்பினாள்.
அங்கு நடக்கப்போகும் விபரீதம் தெரிந்தாள் அபு போவாளா???? பூர்ணாவுக்கு ஓர் அதிர்ச்சி காத்து கொண்டு இருக்கிறது அதை அவள் அறிவாளா??? ஷ்யாம் புதிரை கண்டுபிடிப்பானா??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்……..
💗வரமாய் வருவேனடி💗…….