Loading

21. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் 

கதவு மூடப்பட்டதை மதுரா முதலில் கவனிக்கவில்லை.

அதுவும் வளைவான பகுதியை தாண்டி தான் கோப்புகள் இருந்த இரும்பு அலமாரியின் பகுதிக்கு வர முடியும் என்பதால் அவள் திரும்பிப் பார்ப்பதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.

சத்தம் கேட்காததாலோ என்னவோ, மதுராவின் கவனம் முழுவதும் தேடிவந்த… வருடத்தில் இருந்த கோப்புகள் எந்த வரிசையில் எங்கே இருக்கிறது என்று தேடுவதிலேயே இருக்க, 

கிட்டத்தட்ட அது எங்கே இருக்கிறது என்று பார்த்தும் விட்டாள்.

“அப்பாடி இங்க தான்‌ இருக்கா?”என்று முகத்தில் சிறு மகிழ்ச்சியுடனும் நிம்மதி பெருமூச்சுடனும் அதை எட்டி எடுத்தவள், 

அவள் நினைத்தது போலவே இடம் மாறி இருந்த பக்கங்களை சீராக அடுக்கி தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டவள் கோப்பை இருந்த இடத்தில் வைத்துவிட்டு வெளியே வர கதவை திறக்க, அப்பொழுதுதான் கவனித்தால் அது வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

தட்டி தட்டிப் பார்க்க கதவும் திறந்த பாடில்லை.

முதலில் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்து…

“ஹலோ வெளியே யாரு இருக்கா? டோர ஓபன் பண்ணுங்க .. விளையாடாதீங்க”என்று கதவை தட்டியவளுக்கு, நேரம் போகப் போக பயம் அதிகரிக்க, வேர்த்து வழிந்தது அவளுக்கு.

அவசரமாய் அவ்வறையிலேயே இருந்த சிறிய ஜன்னல் பக்கம் வந்து எட்டிப் பார்க்க, வெளி கேட் அருகே வாட்ச்மேன் இருப்பது போல் தெரியவில்லை. 

இருந்தும் ஒரு முயற்சிக்காக “வாட்ச்மேன் அண்ணா வாட்ச்மேன் அண்ணா” என்று தன்னால் முயன்றவரை கத்திக் கூப்பிட்டு பார்த்தவளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அவள் அழைப்பை கேட்டு வருவதற்கு அவர் அங்கிருந்தால் தானே!

அதிலேயே அவளுக்கு கண்களை இருட்டி கொண்டு வந்து விட,

அவளை மேலும் பயமுறுத்துவது போல்.. மேலடுக்கில் அடுக்கி வைத்திருந்த கட்டு கட்டான கோப்புகள் சில தன்னாலேயே கீழே விழுந்து அமைதியான அவ்அறையில் பெரும் சத்தத்தை உண்டாக்க, அதைக் கேட்டு திடுக்கிட்டவளுக்கு… ஒரு நொடி மூச்சே நின்று என்று போனது.

அதுவும் பிளாக் தற்கொலை செய்து இறந்து போனதாக சொன்ன  அப்பெண்ணின் நினைவும் வர, ‘பேய் லாம்  நிஜம் இல்ல மது’ என்று மனதிற்குள்ளே உறுவேற்றிக் கொண்டாலும், அவளின் உதடுகளோ அவளை மீறிய பயத்தில்,

“காக்க காக்க கனகவேல் காக்க…”என்று மந்திர உச்சாடனத்தை மொழிந்து மீண்டும் கடவுளின் துணையைத் தான் நாடியது.

இங்கு மதுரா இப்படி ஒரு சிக்கலில் சிக்கி இருக்க, 

அங்கோ மதுரா வர தாமதமாகும் என்பதை சொல்லிவிட்டதால்..அவள் வருவதற்குள் பேசி முடிக்க வேண்டும் என்று நினைத்தாள் வினோதா.

மெதுவாய் தன் தம்பி ஜெகதீஷிடம் மதுராவிற்கு வந்திருந்த வரன்களை பற்றிய விவரம் கேட்டுக் கொண்டிருந்தாள். பிரகதீஷிற்கு இன்று நைட் ஷிப்ட் என்பதால் அவனும் வீட்டில் இல்லை.

இரட்டையர்களில் ஜெகதீஷ் தான் எப்பொழுதும் ஒரு படிக்கு மேலே போய் பொறுப்புகளை ஏற்று செய்பவன் என்பதால், அவனிடமே முதலில் விசாரித்தாள் வினோதா.

அவனும் எதையும் மறைக்க நினைக்காமல் தாங்கள் பார்த்து வைத்திருக்கும் வரன்களில்… அவர்களின்‌குடும்பத்தை பற்றியும் மாப்பிள்ளையின் படிப்பு வேலை மற்றும் இதர தகுதியை பற்றியும் சொல்லி மொபைலில் மாப்பிள்ளையின் புகைப்படத்தோடு காட்ட, அதைப் பார்வையிட்ட வினோதாவிற்கு ஏனோ திருப்தி இல்லை.

“ப்ப்ச்ச் நான் அனுப்புன மாப்பிள்ளையோட பயோடேட்டாவை பாக்கலையா? ஜெகா.. அருமையான மாப்ள எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. அதோட என்னோட மாமனாருக்கு ரொம்ப நல்லா தெரிஞ்ச இடம்… எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாத குடும்பம்.. நம்பி குடுக்கலாம்னு சொல்லி இருக்கார்”

“ம்ம் நானும் பாத்தேன் கா..  நல்லா தான் இருந்தார். பி எச் டி முடிச்சிருக்கார்… பிரைவேட்டா ரிசர்ச் சென்டர் வெச்சிருக்கார்னா வயசு இருக்குமே? அவர் பக்கத்துல மதுரா சின்ன பொண்ணு மாதிரி தெரிய மாட்டாளா?”

“என்ன பெரிய வயசு வித்தியாசம் டா… அப்பா அம்மா ரெண்டு பேரும் இறந்ததுக்கு அப்புறமா அண்ணனோட தயவுல வளர்ந்து இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்திருக்கறார்னா.. அவர் வாழ்க்கையில எவ்வளவு விஷயம் பார்த்து இருப்பார்? மதுராவ நல்லா பார்த்து பாருடா… அதோட மதுராவுக்கு இது ஒன்னு ஃபர்ஸ்ட் மேரேஜ் இல்ல செகண்ட் மேரேஜ்ன்னு ஞாபகம் வச்சுக்கோ.. அதனால இதே மாதிரி நல்ல வரன் அமையும் போதே முடிச்சிடனும்..”

“என்னக்கா பேசுற நீ? மதுராவுக்கு இது செகண்ட் மேரேஜ்ன்னு எப்படிக்கா நீ சொல்லலாம்? ஃபர்ஸ்ட் அவ மேரேஜ் …மேரேஜ் மாதிரியா நடந்தது?”

“எந்த மாதிரி நடந்திருந்தாலும் ஒரு தடவ அவ கழுத்துல தாலி ஏறிட்டு… யார் மறுத்தாலும் அது தான் அவளோட முதல் கல்யாணம்”

வினோதா சொல்வது உண்மைதான் என்றாலும் ஜெகதீஷ் முகம் இயல்பை தொலைத்து ஒரு மாதிரியாக மாறிவிட்டது.

அது கவனித்த வினோதா அவசரமாய் சொன்னாள்…

“நா ஒன்னும் அவசர அவசரமா மதுராவ கல்யாணம் பண்ணி குடுக்க சொல்லல டா… என் மாமனார் மதியம் தான் கால் பண்ணினார்.. மாப்பிள்ளைக்கு இந்த பக்கம் ஒரு முக்கியமான வேலை இருக்காம்.. நாளைக்கு  ஈவினிங் ஃப்ளைட்ல கொல்கத்தா ரீச் ஆயிடுவார்.. அவர் இங்க வந்ததும் நம்ம வேணா மதுராவையும் அவரையும் பேசி பழக வைக்கலாம் மதுராவுக்கு பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணி கொடுக்கலாம் …ஓகேவா..”என்று அபிப்பிராயம் கேட்பது போல் கேட்க,

தமக்கையை உறுத்து விழித்தவன்,

“அப்போ மொத்தமா முடிவு எடுத்துட்டு தான் என்கிட்ட சொல்றியா அக்கா?” என்று கோபமாய் கேட்க,

“டேய் ஜெகா அப்படி இல்லடா… என்னோட மாமனார் தான்… மதுரா பாவம்னு.. அவளுக்காக..”என்று வினோதா ஆரம்பிக்கவும்…

முடிக்க விடவில்லை அவன்,

“ஏன் என்னாச்சு.. மதுரா மேல உன் மாமனாருக்கு திடீர் கரிசனம்.. அவருக்கு சொசைட்டில அவர் குடும்பத்தோட ப்ரெஸ்டிஜ் ரொம்ப முக்கியம் ஆச்சே… இப்பவும் நாங்க அதே ஜெயில்ல இருக்கிற முத்து மாணிக்கத்தோட பிள்ளைங்க தான்… அது எப்பவும் மாறாது… அதோட எங்க தங்கச்சிக்கு என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்ன்னு அந்த ஆளுகிட்ட கிட்ட சொல்லி வை… தேவ இல்லாம எங்க விஷயத்துல தலையிட வேண்டாம்னு..” 

“ஏண்டா இப்படி பேசுற? அவர் நமக்கெல்லாம் பெரியவர் மரியாதை குடுத்து பேசு டா..”

“என்ன பெரிய பெரியவர்? ஒரு இக்கட்டான நேரத்துல சொந்த அக்காவையே எங்க கூட பேச கூடாதுன்னு சொன்னவருக்கு என்ன மரியாதைய நா குடுக்கணும்?எனக்கு வர கோபத்துக்கு இதுக்கு மேலயும் அசிங்கமா பேசுவேன்.. உனக்காக தான் பொறுத்து போயிட்டு இருக்கோம் க்கா… ஆனா அதுக்கும் ஒரு அளவு இருக்கு” என்று ஆத்திரத்துடன் வெறுப்பாய் கத்திய, தம்பியை பார்த்த

வினோதாவோ, “இந்த கல்யாணம் நடக்கணும் டா..இல்லனா..” என்று ஏதோ சொல்ல வந்தவளின் அடி வயிற்றில் விர்ரென்ற வலி எடுக்க ஆரம்பிக்க, ‘ஸ்ஸ்ஸ் ம்மா’ என்று முனங்கியவள் வலி தாளாமல் அடி வயிற்றை பிடிக்க, கோபத்தை மறந்தவன்,

“அக்கா என்ன ஆச்சு க்கா.. இவ்ளோ நேரம் நல்லா தானே இருந்த? என்ன பண்ணுது உனக்கு?” என்று பதறி போய் கேட்க,

“முடியலடா ஜெகா திடீர்னு ரொம்ப பெய்னா இருக்கு டா.. தாங்க முடியல டா.. பாப்பாக்கு எதுவும் ஆகிடுமோ? நான் செஞ்ச பாவம் என் பிள்ளையை கொன்னுடுமோ?” என்ற பிதற்றிக்கொண்டே தாங்க மாட்டாதவளாய் வலியில் கதறி அழுகவும், “அக்கா உனக்கு ஒன்னுமில்ல பாப்பாக்கு ஒன்னு ஆகாது…” என்று சமாதான வார்த்தைகள் சொன்னாலும்

தமக்கையின் நிலையைப் பார்த்து துடித்து தான் போனான் ஜெகதீஷ்.

அடுத்து சில நிமிடங்களில் அவர்களது அப்பார்ட்மெண்ட்டில் ஆம்புலன்ஸின் வருகை இருக்க, வலியில் துடிக்க துடிக்க,ஸ்ட்ரக்சரில் ஏற்றப்பட்டாள் வினோதா. 

இந்த கலவரத்தில் மதுரா வீட்டுக்கு வரவில்லை என்பதை மறந்தவனாய், வீட்டை பூட்டிவிட்டு வந்த ஜெகதீஷ் அவசரமாய் ஆம்புலன்ஸில் தமக்கையின் பின்னோடு ஏறினான். 

இதுதான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களோ என்னவோ தன் சொந்த அக்காவின் நிலையைப் பார்த்து துடித்தவன் இடைக்காலத்தில் வந்த தங்கையை மறந்து விட்டானோ!

இங்கு அறைக்குள் அடைபட்டு கிடந்தவள், மொபைலை வேறு தன் இருக்கையில் வைத்து விட்டு வந்திருக்க,

“போச்சு போச்சு… வசமா மாட்டிக்கிட்டேன்.. இனி வீட்ல இருந்து யாராவது தேடி வந்தா தான் உண்டு.. லன்ச் வேற சாப்பிடல … பசி வேற வயித்த கிள்ளுது” என்று நான் இருக்கிறேன் என்னை கவனி என்று இரைச்சலாய் கத்திய  வயிற்றை பிடித்து வாய்விட்டு புலம்பியவளுக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.

ஆனால் இதெல்லாம் ட்ரைலர் மா… மெயின் பிக்சர் பார்க்கலையே! என்பது போல் அடுத்த நொடி  மின்சார இணைப்பு துண்டிக்கப்பட,

‘அம்புட்டுதான் ஜோலி முடிஞ்சது’ என்பது போல் இருட்டு என்றாலே பயந்து நடுங்குபவளுக்கு

அதீத பயத்தில் மூச்சு வாங்க அவளை இதய துடிப்பே பல மடங்காக்கி சத்தமாய்  வெளியே கேட்டு அவளின் பயத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

சுற்றி இருந்த பொருட்களெல்லாம் கூட ஆவிகளாகவும் பூதங்களாகவும் கண்ணுக்கு தெரிந்து மாயவித்தை காட்டி மிரட்ட,

தலைசுற்ற ஆரம்பிக்கவும் சுவர் ஓரமாய் சரிந்து அமர்ந்தாள் மதுரா.

நொடிகளோ நிமிடங்களோ கடக்க,

யாரோ அவளின் கன்னம் தட்டி “மது மது ” என்று எழுப்ப, பயத்தோடும் திகிலோடும் நெற்றி  புருவங்கள் சுருங்க கண்விழித்தாள்..

இன்னும் முழுவதுமாக வெளிச்சம் வரவில்லை என்றாலும், மொபைலில் இருந்த டார்ச் லைட்டின் மெல்லிய வெளிச்சத்தில்

கார்முகில் வர்ணன் அவளின் முகத்திற்கு நேரே தெளிவாகவே தெரிந்தான்.

அவனைப் பார்த்ததும் சுற்றம் பார்க்க கண்களை உருட்ட… அவள் நினைத்தது போலவே இன்னும் அலுவலகத்தில் தான் இருந்தாள். அதுவும் வசதியாக அவன் மடியில் படுத்துக்கொண்டு…

தன்னிலை உணர்ந்து பதறி எழுந்தவளுக்கு அப்படி ஒரு கோபம்…!

“மது ஆர் யூ ஆல்ரைட்…”

தன் விழிகளை உருட்டி முறைத்தவள், 

எடுத்த எடுப்பிலேயே, 

“யோவ் நீதான பூட்டிட்டு போன?” என்று அவனின் சட்டையை பிடிக்காத குறையாக கேட்க,

அவளின் ஏக வசனத்தில்… மரியாதை குறைவான அழைப்பில் முறைத்தாலும்,

அவன் பொய் சொல்லி மறைக்க முயலவில்லை உடனே ஒத்துக் கொண்டான்.

“எஸ்ஸ்..உன்ன விளையாட்டுக்கு உள்ள வச்சு பூட்டினது நான்தான்…பட் ஸாரி இப்டி பவர் ஷட் டவுன் ஆகும்னு  எக்ஸ்பெக்ட் பண்ணல…” என்றான் சாந்தமான முகத்துடன்..

 

அதோ அவளின் கொதிப்பை இன்னும் கூட்ட,

” எப்டி? எப்டி? பண்றதெல்லாம் மொள்ளமாரித்தனம் மூஞ்சிய மட்டும் முற்றும் துறந்த முனிவர் மாதிரியே வச்சிக்கறது..” என்று பல்லை கடிக்க,

“ஹேய்.. சும்மா விளையாட்டுக்கு தான் பண்ணேன் கேட்… அதோட நான் வெளியில தான் நின்னேன் .ஒரு டென் மினிட்ஸ்ல நானே டோர ஓபன் பண்ணி விட்ருப்பேன்… பட் எமர்ஜென்சியா ஒரு ஃபோன் கால் வந்துட்டு பேசிட்டு வரதுக்குள்ள கரண்ட் கட் ஆகிட்டு ப்ச்ச்… இன்னைக்கு பார்த்து ஜெனரேட்டர் வேற ஒர்க் ஆகல… சோ இத நான் பிளான் பண்ணல.. அன்எக்ஸ்பெக்டட்டா  நடந்தது தான்..”

“நம்பிட்டேன்…யாரு பாத்தா… என்ன பயமுறுத்தக் கூட நீங்களே கரண்ட் கட் பண்ணிட்டு ஜெனரேட்டர் ரிப்பேர்ன்னு அளந்து   விட்ருக்கலாம்…”

“ஏய் அப்டில்லாம் இல்ல கேட்… நம்பு டா.. நான் வேணும்னே பண்ணல…”

“நம்பனுமா? அதுவும் உங்களையா? ஹா…இனி உங்கள நம்பவே மாட்டேன்… ஏற்கனவே ஒருத்தி கூட பல்ல காட்டிட்டு எங்கேஜ்மென்ட் முடிச்சுட்டு … ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதும் அவள ஏமாத்திட்டு எனக்கு தாலி கட்டினவர் தான நீங்க? என்ன பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு? நீங்க விளையாடுற பொம்மை மாதிரி இருக்கா? உங்க இஷ்டத்துக்கு என்ன ஆட்டிப்படைக்கிறீங்க” என்றாள் அழுகுரலில்..

பேச வேண்டும் என்று பேசவில்லை  உணர்ச்சியின் பிடியில் இருந்தவள், தன்னையும் மீறி மனதில் இருப்பதை கொட்டித் தீர்த்து விட்டாள்.

அவளின் வலியை அவனும் உணர்ந்தான்.

“மது அது அப்டி இல்ல…” என்று ஏதோ சொல்ல வந்தவன் தன்னிலை  உணர்ந்து பேச்சை பாதியிலேயே நிறுத்தினான்  வார்த்தைகளற்று…

“என்ன பதில் சொல்ல முடியலையா?”

அவன் இன்னும் மௌனமாக இருக்க, 

“நான் வீட்டுக்கு போறேன்..”என்று எழுந்தாள் அவள். 

அவளின் கையைப் பிடித்து அவள் செல்வதை தடுத்தவன்,

“நில்லு மது… வீட்ல யாரும் இல்ல… ஜெகதீஷ் வினோதா கூட ஹாஸ்பிடல்ல இருக்கான்..” உடனே பதறியவள், 

அவனின் கையை உதறி விட்டு நான்கடி பின்னால் நகர்ந்தவள்,

“ஹாஸ்பிடல்லா? யாருக்கும் எதுவும் இல்லையே?”என்று கேட்க,

” இப்ப எதுக்கு நீ பதறுற? …வினோதாவுக்கு ப்ரெக்னன்ட் டைம்ல வர்ற ஹீட் பெயின்னாம்… இப்போ ஓகே ஆகிட்டாம்… எதுக்கும் நைட்ல அப்சர்வேஷன்ல வச்சுட்டு மார்னிங் தான் விடுவாங்களாம்”

ஒரு நொடி புருவம் சுருக்கி அவனைப் பார்த்தவள், 

“அது உங்களுக்கு எப்படி தெரியும்?”என்று கேட்க, 

“இப்பதான் கால் வந்துச்சு… இப்ப வீட்ல யாரும் இல்ல நீ அங்க போனா வெளியில தான் இருக்கணும்… அண்ட் ஸ்பேர் கீ… உன்கிட்ட இல்ல தான?”

இன்னும் சந்தேகம் வலுக்க,

“எங்க வீட்ல நடக்கிறது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?’என்று கேட்டாள்.

“உங்க அப்பார்ட்மெண்ட்ல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க அவங்க மூலமா தான்…”

“எங்கள எங்களுக்கு தெரியாம ஸ்பை பண்றிங்களா? இது தப்பா தெரியலையா உங்களுக்கு” என்றாள் கோபமாய்…

“கண்டிப்பா தப்பு இல்ல… என் வைஃப் குடும்பத்தோட ஆக்டிவிட்டீஸ தான நோட் பண்றேன்..”

“யாரு யாருக்கு வைஃப்? நான் என்னைக்கு என்னோட தாலிய கழட்டி உங்ககிட்ட தந்தேனோ அப்பவே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாம போச்சு.‌. அதோட நம்ம மேரேஜ ரிஜிஸ்டர் பண்ணல ஆபிஸர் சோ சட்டப்படி நா உங்க வைஃப்பும் இல்ல.. என் குடும்பம் உங்களுக்கு சொந்தமும்  இல்ல.. தனக்கு சொந்தம் இல்லாதத உரிமை கொண்டாட உங்களுக்கு எந்த ரைட்சும் இல்லை” என்றாள் மற்றவர் மனம் நோக சுடு சொற்களையே பேசாதவள்… இன்று பேசினாள்..அவனுக்கு வலிப்பதற்காகவே…

அது நன்றாகவே வேலையும் செய்தது‌…

அவ்வளவு நேரம் உணர்வுகளற்று போய் இருந்தவனின் முகத்தில் மெதுவாய் வலி பரவ,

” நமக்குள்ள எந்த உறவும் இல்லையா அப்போ??” என்று கேட்டான் ஆழிப்பேரலைக்கு முன்பான நிசப்தமுடன்….

“ஆமா இல்ல தான்.. நமக்குள்ள எந்த உறவும் இல்ல.. என் மேலயும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல மிஸ்டர்” என்றாள் அவளும் அழுத்தமாய். அவனை தன்னிடமிருந்து விலக்கி வைக்கும் நோக்கமே அவளை அப்படி பேச வைத்தது.

“ஓ‌‌.‌‌..அப்போ இத்தன மாசத்துல  நான் உன்ன தேடி  வருவேன்னு நீ எனக்காக வெயிட் பண்ணல்லையா மது?” என்று இறுகிப்போன குரலில் கேட்டவன்  அவளை நோக்கி ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தான்.

அதை உணராதவளாய்,

“எனக்கு எந்த உறவும் இல்லாத உங்களுக்காக நான் எதுக்கு வெயிட் பண்ணனும்?… கண்டிப்பா வெயிட் பண்ணல..”என்றாள் அவனின் பார்வையை தவிர்த்து..

“ஓ… எந்த உறவும் இல்லாத என்ன ஃபர்ஸ்ட் டைம் இங்க பார்த்தப்போ ட்ராபிக்னு கூட பாக்காம ஏன் தேடி ஓடுன?”என்று கேட்டவன் மற்றொரு அடியையும் வெற்றிகரமாக அவள் அருகில் எடுத்து வைத்திருந்தான்.

‘இவனுக்கு எப்படி தெரியும்.. அன்று தன்னை தெரியாத மாதிரி தானே இருந்தான்’ என்று அதிர்ந்தவள், தேஜு சொல்லி இருப்பாள் என்று அவளாகவே யூகித்து,

“தெரிஞ்சவர்ன்னு தேடுனனே தவிர ஹஸ்பண்ட்ன்னு உறவு கொண்டாட தேடல.. இப்டி என்ன இம்ச பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா தேடி இருக்கவே மாட்டேன்” என்றாள் எரிச்சலாய்…

அப்பொழுதும் பதறாமல் இதழை வளைத்து சிரித்தவன்

“ஹான் அப்டியா?”என்று கேட்டு அவளின் ரத்த கொதிப்பை அதிகமாக்கி விட்டு,

“அப்போ மண்டபத்துல நான் மயங்கி விழுந்ததும் நான் உன்னை மறந்துட்டேன்னு நெனச்சு எனக்காக நீ துடிச்சு போய் அழுதது… உன் ஃப்ரெண்ட் என்ன பத்தி கேட்டதும் நான் தான் உன்னோட ஹஸ்பண்ட் ன்னு சொன்னது எல்லாமே பொய்யா?”என்று ஆளைத் துளைக்கும் பார்வையுடன் கேட்டவன்  இப்பொழுது அவளை இன்னும் நெருங்கியிருக்க, 

அவளோ அதற்கு பதில் அளிக்காமல்…தன்னை திணறடிப்பதற்காகவே கேள்வி மேல் கேள்வி கேட்பவனை எப்படி சமாளிக்க? என்று யோசனையில் இருந்தாள்.

அதை சாதகமாக்கி இன்னும் அவன் நெருங்க, 

தன் முகத்தில் உணர்ந்த அவனின் உஷ்ணமான மூச்சில்  திடுக்கிட்டு அவன் தன்னை இன்னும் இறங்காமல் அவன் மார்பில் கை வைத்து தடுத்தவள்,

“எதுக்கு பக்கத்துல வரீங்க பிளாக்? எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசுங்க? என்கிட்ட வந்திங்க அவ்வளவுதான்”

என்றாள் மிரட்டும் தோணியில்…

தன் மார்பில் இருந்த அவளின் கைகளை இறுக்கமாய் பிடித்தவன்,

“இப்படித்தான் பிளாக் பிளாக்ன்னு சொல்லியே கடமைல கட்டுக்கோப்பா இருந்த என்ன ஃபிளாட் ஆக்கிட்ட..” என்றான் சம்பந்தமில்லாமல்.

“ப்ச்ச் என்ன உளறிட்டு இருக்கீங்க ‌… ஃபர்ஸ்ட் கைய விடுங்க.. உங்க கிட்ட பேசவே எனக்கு இஷ்டம் இல்ல… நீங்க தொட்டாலே அருவருப்பா இருக்கு”

என்று வீரியம் புரியாமல் வார்த்தையை விட்டவள்…

அவனை உதறிவிட முயல,

அசைக்க முடியவில்லை… பாறாங்கல்லை போல அல்லவா நின்றான் அவன். 

அதுவும் அவளின் அருவருப்பு என்ற சொல் அவனுக்குள் இருந்த கோபத்தையும் ஆற்றாமையையும் கிளர்ந்தெழுக்க, அடுத்த நொடி அவளின் எதிர்ப்பை எல்லாம் மீறி தனது ஒற்றை கையால் தன்னை தடுக்க முயன்றவளின் இரண்டு கைகளையும் அடக்கி தூக்கி பிடித்தவன் அவள் திமிற திமிற…மற்றொரு கையால்  இடையே பிடித்து அவளை சுவற்றோடு சாய்த்து நிற்க வைத்திருந்திருந்தான்.

அவனிடமிருந்து இத்தகைய அடாவடியை எதிர்பார்க்காதவள்,

முதலில் அதிர்ந்து …பின் முகம் சிவக்க அவனை முறைத்து நின்ற மதுரா, 

“தப்பு பண்றீங்க பிளாக்… என்ன விடுங்க.. இல்லன்னா நான் சத்தம் போடுவேன்.. உங்களுக்கு தான் அசிங்கம் பாத்துக்கோங்க” என்றாள்‌‌ பயத்தை குரலில் காட்டாமல் கோபமாய்..

அவனோ, “நான் தப்பு பண்ணவே ஆரம்பிக்கலையே! தப்பு பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் கத்து…” என்றவனின் குரல் கிண்டல் கலந்த கோபத்தோடும்… கண்களோ, அவ்வறையின் மெல்லிய வெளிச்சத்தில்  என்றும் இல்லாத உரிமையோடும் அவளையே ஆழ்ந்துப் பார்ப்பதை உணர்ந்து ஒரு திகிலோடு அவனைப் பார்க்க,

அவனோ அத்தனை நெருக்கத்தில் கோபமும் தாபமும் கலந்த விழிகளுடன், அவளின் ஒவ்வொன்றையும் பார்த்தான் கணவனின் பார்வையுடன்..!

அதை அவன் செயலிலும் காட்ட, திணறிப் போனாள் மதுரா.

முதலில் நெற்றியில் இதழ் பதித்து, அவளின் சிந்தனைகளுக்கு தடா போட்டவன், அடுத்து

எரிமலையின் சீற்றத்துடன் தன்னை எரிக்க முயன்ற கரு விழிகள் இரண்டிலும் மெல்லமாய் இதழ் பதித்து குளிர்விக்க, அதன் தாக்கத்தில் அவளின் மென் உடலில் நடுக்கம்! 

அதை உணர்ந்தாலும் விலகவில்லை அவன்… மாறாய் இன்னும் நெருங்கியவன் கோபத்தில் சிவப்பு மிளகாய் போல விடைத்து நின்ற மூக்கின் நுனியில்.. தன் பற்களால் லேசாக கடிக்க, 

‘ஸ்ஸ்’ என்ற சத்தத்துடன் கோபத்துடன் முகத்தை திருப்பி கொண்டாள்.

அது அவனுக்கு இன்னும் வசதியாய் போக.. தன் கண்முன்னே ஆரஞ்சு சுளை நிறத்தில் புசுபுசுவென்று பளபளக்கும்… அவளின் பஞ்சு  கன்னங்களில், அவனின் இதழ்கள் இச்சென்ற சத்தத்துடன் புதைய, அதை எதிர்பார்க்காத மதுராவின் கண்கள் அதிர்ச்சியில் இன்னும் பெரிதாய் விரிய…அவளின் கால் விரல்களோ உணர்ச்சி பெருக்கில் தன்னை சுருக்கி கொண்டன.

இருந்தாலும் ‘இவனிடம் மயங்காதே மதுரா ஆபத்து!’ என்று மூளை ஒருபுறம் எச்சரிக்க, சற்று தெளிந்து…உடலை நெளித்து தலையை ஆட்டி அவனிடமிருந்து விலக முயல, அவனும் விலக விடாமல் பிடிக்க …நடந்த தள்ளுமுள்ளுவில் அவளின் மற்றொரு கன்னத்திற்கும் இச்சு கிடைக்க, இவளுக்கு தான் அவனிடம் போராடியதில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

அவனோ,எந்த மெனக்கெடலும் இல்லாமல் கிடைத்த இதழ் ஒற்றில் கிறங்கிப் போய் அவளையே தான் ஆழ்ந்து பார்த்தான்.

சாயம் பூச அவசியமில்லாமல் சிவந்து கிடந்த ரோஜா நிற இதழ்கள் துடிக்க… நெற்றியில் வடிந்த வியர்வை துளிகள் அவளின் வெண்சங்கு கழுத்தில் பட்டு தெறிக்க.. கோபத்தில் ஏறி இறங்கிய மார்பும், தன் கைகள் உணர்ந்த குறுகிய இடையில் எட்டிப் பார்த்த குட்டித் தொப்பையும்..என்று தூர இருந்து பார்ப்பதற்கு சிறுபிள்ளை போல இருந்தாலும் அவளின் அங்க லாவண்யங்கள் அப்படி இல்லை என்று கட்டியம் கட்டி சொல்ல, அவனிடமிருந்து வெளிவந்தது உஷ்ணப் பெருமூச்சு..

அவனின்  இத்தகைய அத்து மீறிய பார்வையில்,

முகத்தை சுழித்தவளோ, மீண்டும் அவன் பிடியில் திமிறிக் கொண்டே..

“ச்ச..நான் கூட நீங்க ரொம்ப டீசண்ட்ன்னு நெனச்சேன்… அதுவும் பொய்யா போயிட்டு.. எதுக்கு இப்டி நடந்துக்கிறீங்க என்கிட்ட? என்ன விடுங்க நான் வீட்டுக்கு போகணும்” என்றாள் அவனின் நடவடிக்கையால் சிவந்து உருகிக்குலைந்த  தன் உடலை பிடிக்காதவளாய்!

“கட்டின பொண்டாட்டி கிட்ட டீசண்டா நடக்குற அளவுக்கு புத்தர் பரம்பரை இல்ல நா… எனக்கும் எல்லா விதமான ஆசா பாசமும் இருக்கு” 

“அந்த ஆசா பாசத்த வேற யாருகிட்டயாவது காட்டுங்க.. ஏன் சொல்றேன்னா என்னோட பிரதர்ஸ் எனக்கேத்த மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க ..  என்னோட வருங்கால புருஷனுக்கு இதெல்லாம் தெரிஞ்சா நல்லா இருக்காதே!”

“வாட்??” என்று அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவனின் கண்களில் அதிர்ச்சியும் பதற்றமும் கோபமும் சரி விகிதத்தில் தெரிய,’மவனே என்கிட்டயேவா? எல்ல மீறுற… வச்சு செய்றேன் உன்னைய’ என்று  பல்லைக் கடித்த மதுராவிற்குள் அவனின் திகைத்த முகம் சின்ன திருப்தியைக் கொடுக்க,  மெலிதாய் சிரித்தாள்.

தான் உண்மையை தான் சொல்கிறோம் என்பதை உணராமல்… 

தொடரும்…

போனா பதிவிற்கு கருத்துக்களும் விருப்பங்களும் தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! 😊

இந்தப் பதிவை பற்றிய தங்களது கருத்துக்களையும் விருப்பங்களையும் பதிவிடவும் நட்பூஸ் 🙂♥️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
28
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. வினோதா பழி செய்ய தான் துடிக்கிறாள்.இவள் திருந்த மாட்டாள். பிளாக் மதுவை கண்காணிக்கிறது நல்லது தான்.