Loading

அத்தியாயம் – 4

 

இன்டர்வியுவை முடித்து விட்டு வெளியே இருந்த சோஃபாவில் அமர்ந்தாள் மதுநந்தினி, பதற்றம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், ‘செலக்ட் ஆவேனா’ என்ற பயம் அவளைச் சூழ்ந்து கொண்டது,…

‘எல்லா கேள்விக்கும் சரியாக பதில் சொல்லிட்டேன், ஆனா என்னைத் தான் செலக்ட் பண்ணுவாங்கனு நம்பிக்கை வைக்க முடியாதே, இங்க வந்திருப்பவர்களில் எல்லாருமே நல்ல கம்பிடிடர்ஸ் போலத்தானே இருக்காங்க…’ என்ற எண்ணம் அவள் உள்ளத்தை கிளர்த்தியது…

இதில் அவளது அருகில் அமர்ந்திருந்த ஒருவன் கைபேசியில் யாருடனோ  பேசிக்கொண்டிருந்தான்… செவியை கூர்மையாக தீட்டி அவன் பேசுவதை கேட்டாள்,.. “எஸ் பாஸ்… டிரஸ்ட் பண்ணுங்க… இந்த வேலை எனக்கு கிடைக்காம போகாது என்னோட ப்ராஜெக்ட் எக்ஸ்பீரியன்ஸ் பார்த்து அவங்க ரிஜெக்ட் பண்ணவே மாட்டாங்க” என்று பெருமையாகச் சொன்னான்.

அடுத்த பக்கம், இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் மெதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள் அதுவும் அவள் காதில் விழுந்தது,.. “அவங்க அட்வான்ஸ் டெஸ்டிங் குவெஷன்ஸ் கேட்டாங்கப்பா… ரொம்ப கடினமா இருந்தது,”  என்று ஒருத்தி சொல்ல.. “ஆனா நீ நல்லா ஹாண்டில் பண்ணிருக்க, டென்ஷன் வேண்டாம்” என்று மற்றவள் ஆறுதல் கூறினாள்…

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மதுநந்தினி, தன் கையில் இருந்த கோப்புகளை சின்னச் சின்ன நரம்பு வலியோடு அழுத்திக் கொண்டாள்… ‘எனக்கு அனுபவம் கிடையாது… ஆனா நம்பிக்கை இருக்கு, கடவுளும் என்னோட பக்கம் இருக்கணும்…’ என்று உள்ளத்தில் ஜெபித்துக் கொண்டாள்…

சில நிமிடங்கள் கழித்து, அந்த அறையின் கதவு மீண்டும் திறந்தது, உள்ளே இருந்த ஸ்டாஃப் ஒருவர் வெளியில் வந்து, சில பெயர்களைக் கூற ஆரம்பித்தார்.. அனைவரின் கண்களும் ஆர்வமாக அவரை நோக்கிக் கொண்டிருந்தன….

“அடுத்து தேர்வு செய்யப்பட்டவர்கள்”

அந்த ஓசை மதுநந்தினியின் இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கியது…

அவர் தனது கையில் இருந்த லிஸ்ட்டை பார்த்துக் கொண்டே வாசிக்கத் தொடங்கினார்…

“ராஜீவ்… பிரியா… மதுநந்தினி… தினேஷ்குமார்…”

அந்த பெயர் கேட்கப்பட்டவுடன் மதுநந்தினியின் உள்ளத்தில் ஒருவித பரவசம், அந்த கணத்தில் அவள் காதுகளுக்கு சரியாக கேட்டதா? இல்லையா? என்ற சந்தேகம் வேறு… ‘என் பெயரா சொன்னார்’ என்று சில வினாடிகள் உறைந்து நின்றாள்….

அருகில் இருந்த ஒருவள் அவளைப் பார்த்து, “கங்கிராட்ஸ்… நீ செலக்ட் ஆகிருக்க” என்று புன்னகையுடன் சொன்னதும் தான், அது உண்மையென்று அவளுக்கு தெளிவானது…

அவளது உதடுகளில் தானாகவே ஒரு புன்னகை மலர்ந்தது. கண்களில் கண்ணீர் கூட படர்ந்தது. ‘கடவுளே உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி, எனக்கு நீங்க ரொம்ப பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கீங்க’…’ என்று உள்ளத்திலிருந்து இறைவனுக்கு நன்றி சொன்னாள்,..

அந்த ஊழியர் மீண்டும், “தேர்வு செய்யப்பட்டவங்க நாளை காலை ஒன்பது மணிக்கு ஆபீஷியல் ப்ராசஸ்ஸுக்காக வரணும், உங்க ஆஃபர் லெட்டர் நாளையிலிருந்து வழங்கப்படும்” என்று அறிவித்து விட்டு சென்றுவிட, மதுநந்தினி தனது கையில் இருந்த பையை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு, மெதுவாக எழுந்தாள், அந்த தருணத்தில் உலகமே அவளுக்கு பிரகாசமாகத் தெரிந்தது, இந்த மகிழ்ச்சியை முதல் அம்மாவோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவசரத்துடன் அங்கிருந்து கிளம்பினாள்,…

இன்டர்வியூ ஹாலில் இருந்து வெளியே வந்தவளின் முகமெல்லாம் புன்னகையால் நிரம்பி இருந்தது, பஸ்ஸில் போகும் அளவிற்க்கு நிதானமும் இல்லை, எனவே ஆட்டோவில் தான் ஏறிக்கொண்டாள், ‘அம்மா இதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்படுவாங்க… என் கனவுகள் நனவாக ஆரம்பிச்சிடுச்சு…’ என்று எண்ணியவள், சற்று நேரத்தில் வீடும் வந்து சேர்ந்திருந்தாள்,…

“அம்மாஆ” என்ற சிறு கூவலுடன் உற்சாகமாக வீட்டிற்குள் நுழைந்த மகளின் முகத்தில் தெரிந்த ஒளியைப் பார்த்ததும், அவர் ஆச்சரியமாய்,.. “என்னம்மா, ரொம்ப  சந்தோஷமா இருக்க?” என்று கேட்டார்…

மதுநந்தினி பையை தரையில் போட்டுவிட்டு தாயின் அருகே விரைந்து வந்தவள்,…. தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க,… “ஆமா மா, ரொம்ப சந்தோஷமா இருக்கேன், இன்டர்வியூல நான் செலக்ட் ஆயிட்டேன், எனக்கு வேலை கிடைச்சிருச்சும்மா” என்று சொன்னவள், உணர்ச்சியில் மிகுதியில் தாயின் மடியிலே தலை வைத்து அழுதாள்….

பார்வதிக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை,.. “ரொம்ப சந்தோஷம்மா, நாம வேண்டின கடவுள் நம்மள கை விடல” என்று கூறி மகளின் கேசத்தை வருடி விட்டவர்,  அவளது முகத்தை கைகளால் தாங்கி, மகளின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டபடி, அவள் நெற்றியில் இதழ் பதித்து தன்னோடு அணைத்துக் கொண்டார்,.. அந்த தருணத்தில் அவர்களின் மனம் உணர்ந்த மகிழ்ச்சி அளவில்லாததாய் தான் இருந்தது,..

அடுத்தநாள் மிகவும் உற்சாகமாக தயாரானாள் மதுநந்தினி, தாய்க்கு தேவையான அனைத்தையும் தயாராக வைத்து விட்டு, அவருக்கு பல ஜாக்கிரதைகள் சொல்லிவிட்டு அஃபீசியல் ஆன்போர்டிங் பிராசஸ்க்கு நேரத்திற்கு முன்பே கிளம்பி, அந்த அடையார் கிளை அலுவலகத்தை அடைந்தாள், பாதுகாப்புக் காவலரிடம் கடிதத்தையும் அடையாள அட்டையையும் காட்டி உள்ளே சென்றாள்…

ரிசப்ஷனில் சென்று, “இன்னைக்கு ஆன்போர்டிங் பிராசஸ்க்கு வந்திருக்கேன், ஐம் மதுநந்தினி” என்று சொல்ல, அங்கே இருந்த பெண் புன்னகைத்து “வெல்கம் மேம், மூன்றாம் மாடி ஹாலுக்கு போங்க, எல்லா கேண்டிடேட்ஸும் அங்கே தான் இருக்காங்க” என்று  கூறினாள்….

மதுநந்தினி நெஞ்சம் ஒரு மாதிரி படபடக்க லிஃப்ட்டில் ஏறி மேலே போனாள், அவள் உள்ளே சென்றபோது, இன்னும் பத்து பேர் இருந்தனர், அனைவரும் புது முகங்களாக இருந்தார்கள், பதட்டத்தையும் மீறி ஒருவித உற்சாகம் அவளுக்கு, மனதில் பல கனவுகளுடன் அமைதியாக ஒரு இருக்கையில் அமர்ந்தவளுக்கு மனமெல்லாம் அவ்வளவு பூரிப்பு…

சற்றுநேரத்தில் ஒரு அழகான சீருடை அணிந்த மனிதர் உள்ளே வந்தார், கையில் ஃபைலும், கழுத்தில் ஐடி கார்டும் இருந்தது,..

“குட் மார்னிங் காய்ஸ், ஐ ஆம் முரளி, இந்த பிரான்ச்சோட HR மேனேஜர், உங்களுக்கு என்னோட வாழ்த்துகள், இனிமே நீங்க எல்லாரும் தீரஜ் ஐ.டி சொல்யூஷன்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கம்” என்று தொடங்கியவர், புது ஊழியர்களின் முகங்களில் மேலும் சந்தோஷத்தை கூட்டினார்….

முதல் செயல்பாடாக டாக்யூமெண்ட் வெரிஃபிகேஷன் நடந்தது,
ஒவ்வொருவரும் தங்கள் கல்விச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை சமர்ப்பித்தனர், மதுநந்தினியும் தனது நீட்டான ஃபைலை எடுத்துக் கொடுத்து பெருமையுடன் அங்கே நின்றாள், எல்லா ஆவணங்களும் சரியாக இருந்ததால் அவளுக்கு நிம்மதி மூச்சு ஒன்று வெளிவந்தது…

அதன் பிறகு ஓரியண்டேஷன் செஷன், முரளி ப்ரொஜெக்டர் ஸ்கிரீனில் கம்பெனி பற்றிய விஷயங்களை அறிமுகப்படுத்தினார்…

கம்பெனியின் விசன், மிஷன்

உலகளாவிய கிளைகள்

அவர்கள் கஸ்டமர்களில் கூகுள், மைக்ரோசாஃப்ட், சாம்சங் போன்ற பெரிய பெயர்கள் இருப்பது

ஊழியர்களுக்கான நலன்கள்  மெடிக்கல் இன்சூரன்ஸ், PF, போனஸ் இவை அனைத்தும் அவளை பிரமிக்க வைத்தது…

பின் டீம் அலாட்மென்ட் நடந்தது,
“மதுநந்தினி” என்ற பெயரை கூப்பிட்டார்கள், அவள் எழுந்து நிற்க, “நீங்க ப்ராஜெக்ட் மானிடரிங் அண்ட் சப்போர்ட் டீம்க்கு அலாட் செய்யப்பட்டிருக்கீங்க, உங்க ரிப்போர்டிங் மேனேஜர் மிஸ்டர் அசோக்” என்று கூறினார்…

மதுநந்தினியின் கண்களில் பெருமை துளிர்த்தது, அவள் உள்ளுக்குள்,.. ‘இப்போ என் வாழ்க்கை புதிய பாதையை நோக்கி போகப் போகுது’ என்று நினைத்துக் கொண்டாள்…

அந்த நாளின் முடிவில், அனைவருக்கும் ஐடி கார்டு, சிஸ்டம் லாகின் டீடெயில்ஸ், மற்றும் அடுத்த வாரம் ப்ராஜெக்ட் ஓரியண்டேஷன் ட்ரெயினிங் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன…

மதுநந்தினி அந்த பெரிய நிறுவனத்தின் அஃபீசியல் எம்ப்ளாயீ ஆன தருணமாக அது மாறியது,…

அடுத்த வாரம் திங்கட்கிழமை
மதுநந்தினியின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருந்தது, ஜாயினிங் டே அல்லவா!

அவள் காலை முதலே கூடுதல் பரபரப்போடு இருந்தாள், நீட்டாக உடை அணிந்து, தலைமுடியை பின்னிக் கொண்டு, தாயிடம் சொல்லிவிட்டு புறப்பட்டவள், ஃபைலுடன் பஸ்ஸில் ஏறிக் கொண்டாள், மனதில் ஒரு வித்தியாசமான உற்சாகமும், சிறு பதட்டமும் கலந்திருந்தது…

‘இது தான் என் வாழ்க்கையின் முதல் வேலை… எல்லாம் சரியா நடக்கணும்’ என்று மனதில் சொல்லிக்கொண்டே அலுவலகம் வந்தவள், ரிசப்ஷனில் சைன் செய்து, Employee Entry Card swipe செய்து உள்ளே நுழைந்த தருணத்தில் ஒரு பெருமிதம் அவளது முகத்தில் தெரிந்தது…

இரண்டாம் மாடியில் தான் ப்ராஜெக்ட் மானிட்டரிங் & சப்போர்ட் டீம் இருந்தார்கள், அவள் அந்த தளத்தில் காலடி வைத்தபோது, பல கணினிகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன, ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணிகளில் பிஸியாக இருந்தனர்…

“மதுநந்தினி?” என்று ஒரு குரல் கேட்க, திரும்பி பார்த்தாள், சுமார் முப்பது வயதிற்குள் இருக்கும் அழகிய இளைஞன் புன்னகையுடன் வந்து நின்றான்,..

“ஐ ஆம் அசோக்… உங்க ப்ராஜக்ட் மேனேஜர், வெல்கம் டூ த டீம்”
அவன் கையை நீட்ட, மதுநந்தினியும் சிறு தயக்கத்தோடு  கையை கொடுத்தாள்…

அவனே அவளை டீமிற்கு அறிமுகப்படுத்தினான்…

“இது சுபா  டேட்டா அனலிஸ்ட்,

இவன் விக்னேஷ் சாஃப்ட்வேர் டெஸ்டிங்,

அண்ட் இது ஹரிணி  கிளையண்ட் கம்யூனிகேஷன்”

அனைவரும் புன்னகைத்தபடி, “வெல்கம் நந்தினி” என்று கூறினர்…

அவளுக்காக ஓர் அழகான கேபின் தயாராக இருந்தது, அதில் புதிய லேப்டாப், கம்பெனி பிராண்டட் கப், நோட்புக், பேனா அனைத்தும் நேர்த்தியாக இருந்தது…

முதல் டாஸ்க் ப்ராஜக்ட் ட்ராக்கிங் டூல்-ஐ கற்றுக்கொள்ள வேண்டும்,
அசோக் நேரடியாகவே அவளை வழிநடத்தினான், “கவலைப்படாதீங்க, ஈஸி தான், உங்களுக்கு நாளைக்கு ஒரு சின்ன டெஸ்ட் இருக்கும், அதுக்கு முன்னாடி நானே எக்ஸ்ப்ளைன் பண்ணிடுகிறேன்” என்றான்,..

மதுநந்தினி முழு கான்சென்ட்ரேஷனுடன் அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் குறித்துக் கொண்டாள்….

மதிய உணவு நேரம் வந்ததும், ஹரிணி அவளிடம், “நந்தினி, நீ லன்ச் தனியா சாப்பிடுவியா என்ன? நாங்க எல்லாம் கேன்ட்டீனுக்கு போறோம், நீயும் வா” என்று உரிமையாக அழைத்தாள்….

அந்த தருணத்தில் அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி! முதல் நாளே டீமின் ஓர் அங்கமாக உணர்ந்தாள்..

அந்த நாள் முடிவில், சாளரத்தில் இருந்து நகரத்தை பார்த்தபடி அவள் நினைத்தாள்.. ‘இது தான் என் புதிய தொடக்கம். என் கனவுகளுக்கான முதல் படி’ என்று..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
36
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்