Loading

சைத்து மற்றும் வசந்தியை ஊருக்கு அனுப்பி விட்டு  வாசுவும் இளவரசியும் வீட்டிற்கு சென்றனர்… வாசு ஹாலில் இருந்த சக்ரவர்த்தயிடம் “அப்பா ஒரு ஒரு வாரம் எல்லா வேலையும் பாத்துக்கோங்க நான் வெளியூருக்கு போறேன்.. கொஞ்சம் கவனமா இருங்கஅம்மா நீங்களும் கொஞ்சம் கவனமா இருங்கஎன்று கூறிவிட்டு அறைக்கு சென்றவனை இளவரசிவாசு ஒரு நிமிஷம்என்று கூறி நிறுத்தினார்

அவன் திரும்பி கண்களாலேயே என்னவென்று கேட்டான்… “நானும் வெளியூருக்கு போகணும்அதனால எல்லா வேலையும் என்னால பாத்துக்க முடியாது.. நீ இங்க அப்பா கூட உதவிக்கு இரு.. நான் இன்னிக்கே டிரைவர் கூட கிளம்புறேன்…” என்று கூறி அவரும் அறைக்கு கிளம்பினார்

வாசு அதற்குநான் சொல்றதை நீங்க கேளுங்க.. இப்போவே கிளம்பி எங்க போக போறீங்கஎனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்குஒரு ரெண்டு நாள் அதுக்கு அப்புறம் நீங்க எங்க போறதுனாலும் போங்க…” என்று கொஞ்சம் கோவமாக கூறினான்..

இந்த விசயத்துல நீ சொல்றதை நான் கேட்க போறது இல்ல.. நான் இன்னிக்கே போய் ஆகனும்போடா நான் உனக்கு அம்மா.. நான் சொல்றதை நீ கேளு…” என்று அவரும் கோவமாக கூறினார்இதுவரை இளவரசி வாசுவிடம் ஒரு வார்த்தை கூட கோவமாக பேசியது இல்லை.. ஆனால் இன்று அவர் கோவமாக பேசியது அவனுக்கே ஆச்சர்யம் தான்

திவ்யா லேட் ஆனதால் இளவரசியுடன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.. அவள் இப்போது எல்லாம் அடிக்கடி இங்கு வருகிறாள்.. இந்த வீட்டின் செல்ல பிள்ளை ஆகிவிட்டாள்.. என்ன அவளுக்கு வாசு என்றால் மட்டுமே பயம்….

திவ்யா சக்ரவர்த்தியிடம்சக்ரா ப்பாஅம்மாவுக்கு என்ன ஆச்சு.. இன்னிக்கு அண்ணா கூடயே சண்டை போடுறாங்கஅப்படி எங்க போக போறாங்கஎன்று கேட்டாள்

அதற்கு அவரோரெண்டு பேருமே ஒரே இடத்துக்கு போக தான் சண்டை போட்டுட்டு இருக்காங்கனு நினைக்குறேன்ரெண்டு பேருமே சைத்து ஊருக்கு போக தான் இப்படி பண்ணிட்டு இருக்காங்க…” என்று கூறி இருவரின் கவனத்தையும்ரெண்டு பேரும் கொஞ்சம் சண்டை போடுறதை நிறுத்திறிங்களா..” என்று கொஞ்சம் சத்தமாக கூறி தன்னிடம் திருப்பினார்

இருவரும் அவரை பாக்கரெண்டு பேரும் முதல் எங்க போறீங்கனு சொல்லுங்கஅதுக்கு அப்பறம் சண்டை போடுங்கஎன்று கூறினார்..

இருவரும் அமைதியாகி இருக்கரெண்டு பேரும் சைந்தவியை பாக்க தானு போறீங்கஅதுக்கு சண்டை போடாதீங்கநான் இங்க பாத்துப்பேன் வரது மாமாவை வெச்சு.. திலீப் இங்க தானு இருக்கான்.. அது மட்டுமில்லாம கவின் தம்பியும் இருக்காங்க நான் பாத்துப்பேன்ரெண்டு பேரும் போயிட்டு வாங்க” என்று கூறினார்.. இருவரும் மறுத்து எல்லாம் எதுவும் கூறவில்லைஉடனடியாக கிளம்பிவிட்டனர்.. அவர்களுடன் திவ்யாவும் தான் பாக்க வேண்டிய வேலைகளை ஒதுக்கிவிட்டு இவர்களுடன் கிளம்பிவிட்டாள்

மூவரும் சைந்தவியின்ருக்கு வந்து இருக்க இளவரசி இந்த ஊரில் இருக்கும் போது இருந்த வீடு இவர்களின் சொந்த வீடு தான் அந்த வீட்டை சுத்தம் செய்ய சொல்லி இரண்டு நாட்கள் முன்பே இளவரசி கூறி இருக்க அந்த வீடு சுத்தம் செய்யப்பட்டு இருந்தது.. இப்போது அந்த வீட்டில் தான் தங்குகின்றனர்

இங்கு சைந்தவியின் வீட்டில் சைந்தவி கிட்சனில் தான் அமர்ந்து இருந்தாள்அவளை அங்கு பாக்க தான் ஆளில்லைஅவள் இரவு முழுக்க அழுது கொண்டே அங்கேயே தான் அமர்ந்து இருந்தாள்.. அவளுக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லைஆனால் அவளால் இந்த வீட்டை தவிர வேறு வீடு இல்லை.. அவள் வீட்டை விட்டு வெளியேறலாம் என்று யோசித்தாள்ஆனால் அவளேஇல்லை வேணாம்இந்த வீட்டை விட்டு வெளிய போனா நம்ம முகத்தை  பார்த்து எதோ சொல்லுவாங்கவேணாம் இங்கேயே இருந்துக்கலாம்.. இனிமே காலேஜுக்கு போக வேணாம்.. இந்த முகத்தை வெச்சிட்டு எப்படி படிக்க முடியும்.. இனிமே இந்த வீடு மட்டும் தான்..” என்று எதோ எதோ யோசித்து கொண்டு இருந்தாள்..

மணி ஒன்று இருக்கும் தண்ணீர் குடிக்க எழுந்த வசந்தி கிட்சன் சென்றார்அவருக்கு அந்த நேரத்தில் சைத்துவின் நியாபகம் எல்லாம் இல்லைஅவளை கிட்சனில் பார்த்த பின் தான் அவருக்கு அவள் ஞாபகம் வந்ததுஅவளை பாக்க அவள் அருகில் சென்றார்.. அவள் அந்த நேரத்தில் அழுது கொண்டே இருந்ததால் மயங்கி இருந்தாள்.. ஆனால் அவள் எதோ உளறி கொண்டே இருந்தாள்

முதலில் அவள் என்ன பேசுகிறாள் என்று தெரியவில்லைஅதன்பின் அவள் பேசியது அவள் மேல் கோவத்தை தான் வர வைத்தது.. முதலில் அவர் கேட்டதுப்பா நீங்க எங்க இருக்கீங்கஇப்ப கூட என்னை பாக்க வர மாட்டிங்களாஎனக்கு உங்களை பாக்கனும் போல இருக்கு ப்பாவாங்க என்னையும் உங்க கூடயே கூட்டிட்டு போங்க ப்பா…” என்று கூறிக்கொண்டு இருந்தாள்

அதன்பின் வாசுவிடம் கூறுவதை போல்நான் உங்களுக்கு வேணாம்.. நீங்க என்னை உண்மையா தான் லவ் பண்றிங்கஆனா வேணாம் நான் உங்களுக்கு வேணாம்உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா நான் வேணாம்இந்த முகத்தை வெச்சிக்கிட்டு நான் என்ன பண்ண போறேன்…. நான் உங்களுக்கு வேணாம்என்று கூறிக்கொண்டே முழுதாக மயங்கி இருந்தாள்

அவருக்கு முதலில் அவரின் கணவன் பற்றி பேசியதே கோவத்தை தந்து இருக்க இதில் வாசுவை பற்றி பேசியதும் இன்னும் கோவத்தை கிளப்பி இருந்ததுஇருந்தும் அவளிடம் கோவத்தை காட்டாமல் அவள் மயங்கியதால் அவள் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பினார்

அவள் எழுந்ததும்இங்க ஏன் உட்காந்து இருக்கஅப்படி என்ன நடந்து போச்சுன்னு அழுது அழுது மயங்கி போய் இருக்க.. போய் ஒழுங்கா என் ரூம்ல படு..” என்று கோவமாக கூறினார்

அவள் அரை மயக்கத்தில் தான் இருந்தாள்.. அதனால் அவரிடம்உங்களுக்கு தனியா ரூம் இருக்குஉங்க பெரிய பொண்ணுக்கு தனியா ரூம் இருக்கு.. அப்போ எனக்குநான் இந்த வீடு பொண்ணு இல்லையா…” என்று உளறி கொண்டு இருந்தாள்.. கண்டிப்பாக நிதானமாக அவள் இருந்தால் இதை கேட்டு இருக்கவே மாட்டாள்எது நடந்தாலும் அப்படியே ஏற்று கொண்டு இருப்பாள்.. ஆனால் தற்போது அவள்  மன அழுத்தத்தில் இருந்ததால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் அவள் மனதில் அழுத்தி வைத்து இருந்தது அனைத்தும் வெளியில் வந்து இருந்தது….

அவர் எதுவும் கூறாமல் அவளை தன் அறைக்கு அழைத்து சென்று உறங்க வைத்து இருந்தார்.. ஆனால் அவள் தான் உறங்காமல் உளறி கொண்டே இருந்தாள்.. அவள் உளறியதில் அதிகமாக இருந்தது அவள் அப்பாவும் வாசுவும் மட்டும் தான்இருவரிடமும் பேசுவதை போல் தான் பேசிக் கொண்டு இருந்தாள்

நள்ளிரவு இரண்டு மணி மேல் தான் உளறலை நிறுத்தி உறங்கி இருந்தாள்.. ஆனால் வசந்தி தன் உறக்கத்தை மறந்து இருந்தார்அவருக்கு சைந்தவி பேசியது மட்டும் தான் மூளையில் ஓடி கொண்டு இருந்ததுஅவரும் தன்னை மறந்து உறங்கி இருந்தார்

அடுத்த நாள் காலை எட்டு மணி இருக்கும்மெதுவாக எழுந்த சைந்தவி வசந்தியின் அறையிலேயே குளித்துவிட்டு அமர்ந்து இருந்தாள்அவள் அறையை விட்டு வெளியே வரும் போது எட்டரை மணி இருக்கும்..

வசந்தி காலை உணவை சமைத்து வைத்து இருக்க சைத்து காலை உணவை உண்ண அமர்ந்தாள்.. இரண்டு வாய் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாள்அப்போது சாப்பிட வந்த சஹானாம்மா இந்த மூஞ்சை பாத்துட்டு எப்படி ம்மா சாப்பிடுறது… எனக்கு இப்பயே அருவருப்பா இருக்குதயவு செஞ்சி அவளை எழுத்து போக சொல்லுங்க.. ஒரு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போகலாம்னு வந்தா இவை முகத்தை எல்லாம் பாக்க வேண்டியது இருக்குச்சே” என்று மீண்டும் அறைக்கு திரும்ப போனாள்

சைந்தவி அவளின் அம்மாவை தான் பார்த்தாள்.. ஆனால் அவர் அமைதியாக தான் இருந்தார்அவரின் அமைதி தான் அவளை கொன்றதுஉடனே கையை தட்டிலேயே கழுவிவிட்டு அந்த வீட்டின் பின்பக்கம் போய் அமர்ந்து கொண்டாள்அவளுக்கு அப்போது இளவரசியின் ஞாபகம் தான் வந்தது..

அவரும் அதே நேரத்தில் இவளை பாக்க இவள் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்மூவரும் அவர் வீட்டிற்கு வரும் போது சஹானா அவள் அம்மாவிடம்அம்மா அவளை எல்லாம் என்னால பாக்க முடியல… அருவருப்பா இருக்கு எனக்கு…” என்று கூறி கொண்டு இருந்தாள்

இதை கேட்டு வாசுவிற்கு கோவம் கண்ணை மறைத்ததுஇருந்தும் சைந்தவிக்காக அமைதியாக இருந்தான்இளவரசி அவளை பேச விடாமல்வசந்தி” என்று கூறிக்கொண்டு உள்ளே நுழைந்தார்அவரை பார்த்து என்ன கூறவேண்டும் என்று கூட வசந்திக்கு தெரியவில்லைவாசு முக்கிய வேலையாக சைந்தவி தென்படுகிறாளா என்று தான் பார்த்தான்

வசந்தி வரவேற்க கூட இல்லைஆனால் இளவரசி அதை கவனிக்காமல்சைத்து எங்க ரூம்ல இருக்காளா..” என்று கேட்டு அவளை தேடினார்அவரின் குரல் சைந்தவிக்கும் கேட்டதுஅவரின் குரல் கேட்டு அடுத்த நொடி இளவரசியை நோக்கி ஓடி வந்து அணைத்து கொண்டு அழுது இருந்தாள்

அவள் அழுவதை வாசு நெஞ்சம் விம்ம பார்த்து கொண்டு இருந்தான்.. அவனால் அணைத்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம்அவளை தான் கண் கலங்க பார்த்து கொண்டு இருந்தான்..

வாசுவின் பார்வை சைந்தவி மேல் இருப்பதை பார்த்த சஹானா கோவம் கொண்டு சைந்தவியை எரிக்கும் பார்வை பார்த்து கொண்டு இருந்தாள்…..

 

(அப்படியே எல்லாரும் படிச்சிட்டு லைக் அன்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா இந்த சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி… 😁)

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்