தன் சிதைந்த முகத்தை பார்த்து மயங்கி விழுந்த சைத்து அரை மணி நேரம் கழித்து தான் கண் திறந்தாள்… அவளுக்கு மனநல மருத்துவர் கவுன்சலிங் கொடுத்தார்… அவர் கூறியது அவளுக்கு கேட்டாலும் அதற்கு எந்த எதிர்விணையும் ஆற்றவில்லை..
மருத்துவரும் “அவங்க ரொம்ப அதிர்ச்சியா இருக்காங்க… அவங்க நார்மல் ஆக கொஞ்ச நாள் ஆகும்… ரெண்டு மூனு சிட்டிங்ஸ் அவங்களுக்கு கவுன்சலிங் தரணும்… பத்து நாள் கழிச்சு கூட்டிட்டு வாங்க… கொஞ்சம் அவங்க கிட்ட சிரிச்சு பேசுங்க… அவங்களுக்கு பிடிச்ச விஷயமா செய்ங்க…” என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்…
இளவரசிக்கு சைத்துவை தங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ள ஆசை தான்… ஆனால் இந்த பத்து நாட்களில் வசந்தி இளவரசியிடம் குறைவாக தான் பேசினார்… அவர் எப்போதும் அப்படி தான் பேசுவார்… ஆனால் இப்போது எல்லாம் அவர் பேசுவதில் ஒரு மாற்றம் தெரிகிறது…. அதனால் அவர் வசந்தியிடம் வேறு எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை… ஆனால் வேறு ஒன்று யோசித்து அமைதியாகிவிட்டார்…
வசந்தியும் சைத்துவும் மட்டும் தான் தற்போது வீடு திரும்புகின்றனர்… திவ்யா தனக்கு வேலை இருக்கிறது என கூறி திருச்சியிலேயே இருந்து கொண்டாள்…
அதை கூட சைத்துவால் கவனிக்க முடியவில்லை… அவள் பித்து பிடித்தது போல் இருந்தாள்… அவளை பார்க்க பார்க்க வாசுவிற்கு நெஞ்சம் வெடித்தது…. அவளை தன் கைக்குள்ளேயே வைத்து கொள்ள வேண்டும் என தோன்றியது… ஆனால் தான் என்ன செய்தாலும் வசந்தியின் மனதில் தவறாக தான் படும் என எண்ணி அவனும் ஒரு முடிவை எடுத்து கொண்டான்…
வசந்தியும் சைத்துவும் வீட்டிற்கு வர சைத்து எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்….
அவர்கள் வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் வீட்டின் கதவு வேகமாக தட்டப்பட்டது…
இரவு பத்து மணி இருக்கும்… யார் கதவை தட்டுவது என தெரியாமல் தான் வசந்தி கதவை திறந்தார்…. அங்கு நின்றது என்னவோ சஹானா தான்… அவள் இன்று வருவாள் என அவர் எதிர்பார்க்கவில்லை…
“அம்மா எனக்கு தூக்கமா வருது… நான் என் ரூமுக்கு தூங்க போறேன்… நான் வர வழியில சாப்பிட்டு வந்துட்டேன்…” என்று கூறி அவள் அறைக்கு சென்றாள்… அவள் அறையோ உள் பக்கம் பூட்டி இருந்தது…
உடனே கோவமானவள் “அம்மா என் ரூம்ல யார் இருக்கா… என் ரூமை யாராவது யூஸ் பண்ணா எனக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியும்ல…. இப்போ யார் உள்ள இருக்கா… அவங்களை ஒழுங்கா வெளிய வர சொல்லிடு” என்று கூறி கதவை வேகமாக தட்டினாள்…
சைத்து நீண்ட நேரம் அமர்ந்து இருந்தவள் சஹானா கத்தி கொண்டே இருந்ததால் வேகமாக கதவை திறந்து ஹாலில் ஓரமாக சென்று படுத்து கொண்டாள்…
சஹானா அவள் முகத்தை பார்த்து பயந்துவிட்டாள்… அவள் ஒரு பக்க முகம் மிகவும் சிதைந்து இருந்தது…
அவள் இன்னும் சைத்துவை காயப்படுத்தும் நோக்கில் “அம்மா அவளை போக சொல்லுங்க… பாக்கவே பயமா இருக்கு எனக்கு…” என்று கூறினாள்…
வசந்தி பேச வருவதற்குள் பக்கத்தில் இருந்த கண்ணாடி குவளையை கீழே போட்டு உடைத்து இருந்தாள் சைந்தவி… அவளின் இத்தனை நாள் மௌனம் தற்போது ஏற்பட்டு இருக்கும் மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து அவளை இவ்வாறு செய்ய தூண்டி இருந்தது….
“ஏய் உனக்கு என்ன தைரியம் இப்படி மூஞ்சை வெச்சிட்டு கோவம் வேற வருதா உனக்கு…” என்று அவளை அடிக்க சென்றுவிட்டாள் சஹானா…
வசந்தி தான் அவளை திட்டி ரூமுக்கு அனுப்பி வைத்தார்… அந்த வீட்டில் மூன்று ரூம்கள் இருந்தாலும் இரண்டு ரூம் தான் உபயோகத்தில் உள்ளது… ஒன்று வசந்திக்கு இன்னொன்று சஹானாவிற்கு… அவர் அப்போது கூட சைந்தவியை பற்றி யோசிக்கவில்லை… ஒரு ரூம் ஸ்டோர் ரூமாக தான் பயன்படுத்தி வருகின்றனர்…
வசந்தி அவளிடம் “சைந்தவி எழுந்து என் ரூம்ல போய் படு” என்று கூறினார்… அவள் கேட்காதது போல் படுத்து கொண்டாள்…
அவளுக்கு மன அழுத்தத்தில் என்ன யோசிக்கிறோம் என்று தெரியாமல் “ரெண்டு ரூமும் அவங்க அவங்க ரூம்னா என் ரூம் எது… இது என் வீடு இல்லையா… நான் யாரோவா… நான் இந்த வீட்டு பொண்ணு இல்லையா….” என்று யோசித்து கொண்டு இருந்தாள்… தேவை இல்லாத யோசனை தான்… ஆனால் இந்த மன அழுத்தத்தில் எதோ எதோ யோசித்து கொண்டு இருந்தாள்… வசந்தி இரண்டு முறை அழைத்தும் உள்ளே செல்லாமல் ஹாலில் தூங்க அவர் எப்படியோ போ என்று அறைக்கு சென்றுவிட்டார்…
அது இன்னமும் அவளை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது……
சைத்து பொதுவாகவே பாசத்திற்கு ஏங்குபவள்… தற்போது ஏற்பட்ட மன அழுத்தத்தில் தாய் பாசத்திற்கு மிகவும் ஏங்கினாள்…
ஆனால் வசந்தி பேசாமல் இருப்பது அவளை மிகவும் வருத்தியது… அவளுக்கு தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எல்லாம் யோசனை வந்தது….
அதை நடைமுறையும் படுத்த முயற்சி செய்தாள்… ஆனால் அவளால் அதை செய்ய முடியவில்லை…
அவள் கத்தியை எடுத்து கையை அறுத்து கொள்ள செல்லும் போது அவளுக்கு மூன்று முகம் கண்ணில் தோன்றி மறைந்தது…
மூன்றில் ஒருவர் இளவரசி அவரின் அந்த தாய் பாசம் தான் ஞாபாகத்தில் வந்தது…
அடுத்து வாசு அவனின் அம்மு என்ற அழைப்பு உனக்காக நான் இருப்பேன் என்று கூறிய வார்த்தை… அவனின் கண்ணில் தெரிந்த காதல் என அனைத்தும் அவளை செய்ய முடியாமல் தடுத்தது…
கடைசியாக அவளின் நினைவில் வந்தது அவள் அப்பா… ஆம் அவள் அப்பா தான்… அவர் வீட்டை விட்டு செல்லும் முன் அவளின் பத்து வயதில் கூறியது இன்னும் நியாபகத்தில் இருந்தது…
“பாப்பா அப்பா மேல கோவப்படாத… நான் இங்க இருந்து வேற ஊருக்கு போறேன்… இனிமே உன்னை பாக்க வர மாட்டேன்… உனக்கு இது இப்போ புரியலனாலும் பெரிய பொண்ணு ஆனதும் புரியும்… யார் உன்னை என்ன சொன்னாலும் தப்பான முடிவு மட்டும் எடுக்காத பாப்பா.. உன் உயிர் முக்கியம்… உன் அம்மா நல்லவ தான்… ஆனா அவ பேச்சை தான் கேட்க முடியாது… ரொம்ப கோவம் வரும்… அப்பா சொல்றதை ஞாபாகம் வெச்சுக்கோ டா… எப்பயும் வாழ்க்கையை முடிச்சிக்கிறது பத்தி மட்டும் யோசிக்க கூடாது…”என்று கூறிவிட்டு செல்லும் போது அவள் கூறிய வார்த்தை அவரை நிறுத்தி வைத்தது…
“அப்பா நானும் உங்க கூடவே வரேன்.. அக்காவும் அடிக்குறாங்க… அம்மாவும் அடிக்குறாங்க… நீங்க போயிட்டா எனக்கு யார் சாப்பாடு ஊட்டுவா… அன்னிக்கு அம்மா கிட்ட என் பொண்ணை கூட்டிட்டு போறேன்னு தானு சொன்னிங்க… இப்போ நீங்க மட்டும் போறீங்க” என்று அழுது கொண்டே திக்கி திக்கி கேட்டாள்…
“பாப்பா ஆனா நீ கேர்ள் பேபில அப்பாவால உன்னை நல்லா பாத்துக்க முடியாது டா… நான் எங்க போறேன்னே தெரியல… நீ இங்கேயே இரு.. நான் ஒருநாள் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்…” என்று கூறி விட்டு தான் சென்றார்…
ஆனால் சிறுபிள்ளை அனைத்தும் மறந்து தந்தை தன்னை அழைத்து செல்லவில்லை என நினைத்து தான் அழுதது…
அவர் அப்போது கூறியது இப்போது தான் புரிகிறது… அவர் சொன்ன தப்பான முடிவு மட்டும் எடுக்க கூடாது என்பது மட்டும் மூளைக்குள் உணர்த்தியது… அதனால் எடுத்த கத்தியை அப்படியே போட்டுவிட்டு அங்கேயே அமர்ந்து முகத்தை கைகளால் மூடி அழுக ஆரம்பித்துவிட்டாள்…
“அப்பா என்னை ஏமாத்திட்டிங்கல நீங்க அப்பயே கூட்டிட்டு போய் இருந்தா நான் நல்லா இருந்து இருப்பேன்ல பாருங்க என்னை யாருக்குமே பிடிக்கல… அப்பா நீங்க இருக்கீங்களா இல்லையா… எனக்கு நீங்க வேணும் ப்பா… நானும் சின்ன வயசுல இருந்து உங்களை பத்தி பேசாம இருந்துட்டேன்… ஆனா இப்போ உங்க பாசம் ரொம்ப தேட வைக்குது ப்பா…”
” அதோட இளாம்மா உங்களை மாதிரியே பாசம் காமிக்குறாங்க… அதே போல் அவங்க பையன் நான் எதுவுமே பண்ணாம என்னை ரொம்ப லவ் பண்றாங்க ப்பா… ஆனா என்னால இனிமே அவங்களை எப்படி ப்பா லவ் பண்ணுவேன்… அதுவும் இந்த முகத்தை வெச்சிட்டு எப்படி ப்பா லவ் பண்ணுவேன்” என்று தன்னுடன் இல்லாத அப்பாவுடன் வாய்விட்டு பேசி கொண்டு இருந்தாள்…
அவள் நினைத்து கொண்டு இருந்த மூவருக்கும் ஒரே நேரத்தில் விக்கல் வந்தது… மூவரும் அந்த விக்கலில் அவளை தான் நினைத்து பார்த்தனர்…
இதில் வாசுவும் இளவரசியும் சைந்தவியின் ஊருக்கு காரில் வந்து கொண்டு இருக்க அவர்களுடன் வந்த திவ்யா இருவரையும் தான் மாறி மாறி பார்த்து கொண்டு வந்தாள்… இருவரும் ஒரு பெரிய சண்டையை வீட்டில் போட்டு விட்டு தான் இப்போது இங்கு கிளம்பி வருகின்றனர்…
(என்ன சண்டையா இருக்கும்… சைந்தவி அப்பா எங்க இருக்காரு… எல்லாமே இனி வரும் பதிவுகள்ல…
அப்படியே உங்க கருத்தை சொல்லிட்டு போனா ரொம்ப ஹாப்பி.. லைக்கும் சேர்த்து பண்ணிட்டு போனா இன்னும் ஹாப்பி… போன எபி ரொம்ப கம்மி லைக்ஸ் தான் வந்துச்சு… எதோ குறை இருந்தாலும் மறக்கமா சொல்லிடுங்க… 😁)