அத்தியாயம் 9
ரேணுகாவோ வேந்தன் முறைப்பதை பார்த்து ஈஈ… என்று இழித்து கொண்டே கல்யாணியை பார்த்து என்ன சித்தி மச மசன்னு நின்னுகிட்டு போங்க போயி உங்க பொண்ண கூட்டிட்டு வாங்க என்று அவள் சொல்ல இதோ போயி கூட்டிட்டு வரேன் கண்ணு என்றுவிட்டு அவர் மாடிக்கு ரித்திகாவை அழைக்க சென்றார். அவர் அந்த பக்கம் சென்ற உடனே ரேணு அடுப்படிக்குள் இருக்கும் நிலாவிடம் எம்மா நிலா பொண்ணே ஜூஸ் கொண்டு வருவியா இல்ல நாங்க கிளம்பி வீட்டுக்கு போன பிறகு தான் வருவியா என்று ரேணு அவள் பாட்டிற்கு பேச அங்கு உள்ளவர்களில் தாத்தாவை தவிர மற்ற அனைவரும் அவளை என்னடா இவள் பண்றா என்ற பதட்டத்துடனே பார்த்தனர். அதுவும் அருளுக்கு தான் அள்ளுவிட்டது. பின்னே இவள் பாட்டுக்கு ஒன்று செய்ய அண்ணனிடமும் மச்சானிடமும் யார் வாங்கி கட்டிக்கொள்வது என்ற பலத்த யோசனையில் அவன். அவன் யோசனையை பார்த்த ராஜேஷ். அவனது முதுகை சுரண்டி மச்சான் மச்சான் அருளு நீ என்னதான் பாவம் போல மூஞ்சிய வச்சாலும் உன் பொண்டாட்டி பண்ற வேலைக்கு உனக்கு இன்னைக்கு மாவு கட்டு கன்ஃபிர்ம்டா மச்சான். அங்க ஏன் மாப்ள முகத்தை பாரு என்று ராஜேஷ் சொல்ல அருள் நிமிர்ந்து பார்க்க வேந்தனோ புருஷன் பொண்டாட்டி என்ற பாகுபாடு காட்டாமல் இருவரையும் முறைத்து கொண்டிருந்தான். ஆத்தி என்று நேராக ரேணுவிடம் திரும்பிவிட்டான். அடியே அடியே ரேணு என்று அவளை கூப்பிட அவளோ இன்று தான் உனக்கு கடைசி நாள் என்ற முடிவுடனே செயல் பட்டாள். இவள் செய்யும் அலப்பறையை பார்த்த அந்த பாவப்பட்ட ஜீவனுக்கும் உதட்டில் புன்னகை உதிர்ந்தது. நிலாவையே கவனித்து கொண்டிருந்தவனுக்கு அந்த சிறு மாற்றமும் அவன் கண்ணில் இருந்து தப்பவில்லை.
இதோ இவர்கள் விளையாட்டு தனத்தை எல்லாம் சற்று எரிச்சளுடன் கவனித்து கொண்டே மாடியில் இருந்து இறங்கினார்கள் தாயும் மகளும். ரித்திகா தான் அங்கு உள்ளவர்களை எடை போட்டு கொண்டே வந்தாள். மாமியார் மருமகள் இருவரையும் நன்கு கவனித்தாள் இருவரும் பெரிய வீட்டு பெண்கள் என்று சொல்லும் அளவிற்கு தான் அவர்களின் உடையும் நகையும் இருந்தது. அதிலும் கூடுதலாக சிவகாமியின் இடுப்பில் அந்த வீட்டின் சாவிகொத்து சொருகியிருந்தது. ரித்திகாவின் விழிகளில் சாவியும் கூடவே ரேணுவின் மீது அவள் விழிகள் சற்று ஏளனத்துடன் பதிந்தது. அதை யார் கவனித்தார்களோ இல்லையோ தன் எதிரில் உள்ளவர்களை எடை போடும் தன் விழியால் கவனித்து விட்டான் அவள் வந்த சிறிது நேரத்திலேயே.
இதை அனைத்தையும் பார்த்த பிறகு தான் அவள் கல்யாணம் செய்து கொள்ள போகும் வேந்தனையே நிமிர்ந்து பார்த்தாள். அவள் நிமிரும் போது அவனும் அவளை தான் ஆராய்ச்சி பார்வை பார்த்து கொண்டிருந்தான். அவளுக்கோ அவன் தன்னிடன் மயங்கி விட்டான் என்ற மமதை அவளுள் வந்தது. ஏற்கனவே இருக்கும் திமிரை விட வேந்தன் அவளை பார்க்கின்றான் என்ற கர்வமும் அவளுக்கு சேர்ந்துவிட்டது. ரேணுவோ சற்று குழம்பி விட்டாள். என்ன நம்ம மாமா பார்த்த பார்வைக்கு நிலாதான் நம்ம ஓரகத்திணு பார்த்தா இந்த மனுஷன் என்ன ரித்திகாவையும் அப்பிடியே பார்க்கிறாரு. என்ற யோசனைக்கு சென்றுவிட்டாள். நிலா தான் அவன் ரித்திகாவை பார்ப்பதை பார்த்துவிட்டு உள்ளுக்குள் உடைந்து விட்டாள்.
பூபதி தாத்தாவிற்கு தான் பேரன் ரித்திகாவை பார்ப்பது மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. அவரோ ரித்திகாவிடம் அம்மாடி இங்க வாடா என்று அவர் அழைக்க அவளோ கல்யாணியை நிமிர்ந்து பார்த்தாள். அவரோ அடியே இந்த கிழவன்கிட்ட மட்டும் நல்ல பேரு வாங்கிட்டேன்னு வை கல்யாணத்திற்கு அப்பறோம் அந்த வீட்ல உன் ராஜ்யம் தான். என்று அவள் காதுகளில் ஒதிக்கொண்டே வெளியில் சிரித்து. போமா தாத்தா தான் கூப்பிடுறாரங்களா போயி அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்று கூற ரித்திகாவோ உள்ளுக்குள் குமைந்து கொண்டு வெளியில் நடிப்பை கொட்டினாள். அவர் அருகில் போயி ஆசிர்வாதம் வாங்க அவர் தலையில் கைவைத்து நல்லா இருடாமாஇப்டி வா வந்து என் பக்கத்துல உட்காரு என்று கூற ரித்திகாவோ இருக்கட்டும் தாத்தா நான் இப்டி கீழயே உட்கார்ந்து இருக்கேன் என்று அவர் முட்டி பக்கத்தில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டாள். அங்கிருந்தவர்களுக்கு தான் இது உலக மகா நடிப்புடா சாமி என்று இருந்தது. அதிலும் சிவகாமி ரேணு தேவகி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். தேவகி தான் ரேனுவின் புறம் திரும்பி அடியே ரேணு என்னட்டி என்று அவள் திரும்ப எங்க அண்ணன மட்டும் இவ கட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டான்னு வையி உன் பாடும் எங்க அம்மா பாடும் அங்க திண்டாட்டம் தான் அந்த மேனாமினிக்கு பார்வையை சரியில்லை பாத்துக்கோ என்று அவள் சொல்ல. ரேணுவோ அவளை கொலைவெறியுடன் முறைத்து கொண்டிருந்தாள்.