Loading

டாக்டர் பிளாஸ்டிக் சர்ஜெரி பற்றி பேசி சென்று இருக்க இளவரசி வசந்தியிடம்  அதை பற்றி கேட்டார்… அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு “சைந்தவிக்கு எந்த சர்ஜெரியும் வேணாம்..  எப்படியும் அவளுக்கு பழைய முக அமைப்பு வர போறது இல்ல… அவளுக்கு இப்படியே இருக்குறது விட வேற மாதிரி முகம் மாற்றம் தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்… ஒரு ரெண்டு மாசம் அவ கஷ்டப்படுவாளா அதுக்கு அப்பறம் பழகிடும்… கொஞ்ச நாள் நம்பிக்கை இல்லாம இருப்பா… அதுக்கு அப்புறம் அவளுக்கே தன்நம்பிக்கை வந்துடும்… அதனால எந்த சர்ஜெரியும் வேண்டாம்… நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்… கொஞ்சம் பணம் எடுத்துட்டு வரேன்…” என்று கூறி சென்றுவிட்டார்…

அவரை தடுக்க கூட யாருக்கும் தோன்றவில்லை… யாருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை… அவர் சொல்வது சரி தான்… ஆனால் இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறதே இந்த முகமே அவளை மேலும் தாழ்வுமனப்பான்மைக்குள் சென்றுவிட்டால் என்ன செய்வது… இந்த முகத்தோடு வெளியே வர தயங்கினால் என்ன செய்வது… அதை வசந்தி யோசிக்கவே இல்லை… அதை அவரிடம் சொல்லவும் முடியவில்லை…

இங்கு நிறைய பெண்கள் எந்தவொரு சர்ஜெரியும் இன்றி அதே முகத்துடன் தன்நம்பிக்கையுடன் வெளியில் நடமாடுகின்றனர்… அவர்களை போல் சைத்து இருப்பாளா என்பது மிக பெரிய கேள்விக்குறி தான்…

வசந்தி வீட்டுக்கு வரும் போது ஒரு குத்து பாட்டை போட்டு விட்டு பிரியாணியை சாப்பிட்டு கொண்டு இருந்தாள்… ஒன்றுமே தெரியாதவள் போல் “என்னம்மா எங்க போயிட்டு வர” என்று கேட்டாள்…

வசந்தி நிதானமாகவே “நான் எங்க போயிட்டு வரேன்னு உனக்கு தெரியாதா” என்று கேட்டார்…

 

“ம்மா நீங்க எங்க போயிட்டு வரீங்கனு எனக்கு எப்படி தெரியும்… முதல்ல வாங்க பிரியாணி சாப்பிடலாம்… நானே என் கையால செஞ்சேன்” என்று எந்த ஒரு கவலையும் இன்றி கூறினாள்….

நிதானமாகவே அவள் முன் நின்றவர் சப்பென்று அவள் கன்னத்தில் அறைந்தார்… “அம்மா என்னை எதுக்கு அடிச்சீங்க… நான் என்ன பண்ணேன்… நான் பாட்டுக்கு அமைதியா இருக்கேன்… தேவையில்லாம ஏன் அடிச்சீங்க…” என்று கேட்டாள்…

“உனக்கு நடந்தது ஒன்னுமே தெரியாதுல… சைந்தவி ஹாஸ்பிடல்ல இருக்குறது உனக்கு தெரியாது… அவ மேல ஆசிட் அடிச்ச அந்த பையனை தெரியாது.. அந்த பையனோட அக்கா உன் பெஸ்ட் ப்ரெண்ட் அவளையும் தெரியாது…. உனக்கு எதுவுமே தெரியாது அது தானு…” என்று கண்களில் கோவம் பொங்க கேட்டார்…

“ம்மா என்ன சொல்ற அவ ஏன் ஹாஸ்பிடல்ல இருக்கா…  என்ன என்னமோ சொல்ற… எனக்கு புரியல… எந்த பையன்… யாரோட ப்ரெண்ட்” என்று புரியாமல் கேட்பது போல் கேட்டாள்…

“சஹானா உண்மையை ஒத்துக்கோ… நானே உன்னை பத்தி போலீஸ்ல சொல்லிடுவேன்… உண்மையை சொல்லு… அவ மேல ஏன் உனக்கு இத்தனை வன்மம்… அவ நீ சாப்பிடுற சாப்பாடுல மண் அள்ளி போட்டாளா…. ஏன் உனக்கு அந்த சின்ன பொண்ணு மேல இவ்வளவு வன்மம்….” என்று கோவமாக கேட்டார்…..

அப்போதும் அவள் இல்லை என்றே சாதித்து பொய்யை உண்மையை போல் கூறினாள்… “அம்மா என்ன சொல்றிங்கனே எனக்கு புரியல..  அவ ஹாஸ்பிடல்ல இருக்குறதுக்கு நான் என்ன பண்ணுவேன்.. என்னை அடிக்குறிங்க… நான் வீட்டை விட்டு வெளிய போறது கூட இல்ல… என்னமோ சொன்னிங்களே அவ மேல ஆசிட் அடிச்ச பையனை தெரியாதானு இவ அவனை ஏமாத்தி இருப்பா… அதுனால ஆசிட் அடிச்சு இருப்பான்… அதுக்கு நான் என்ன பண்ணுவேன்… உன் சின்ன பொண்ணு ஊர் மேஞ்சிட்டு ஒருத்தன் கூட சுத்திட்டு அவனை ஏமாத்திட்டு இன்னொருத்தன் கூட போய் இருப்பா… அது தான் அவன் ஆசிட் அடிச்சிட்டான்…” என்று பொய்யை உண்மை போலவே கூறிவிட்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்…

 

வசந்தியே அவள் பேசுவதை ஒரு நிமிடம் நம்பிவிட்டார்… ஆனால் ஒரு நிமிடம் தான் பின் இவளை இப்படியே விட்டால் சரி வராது என யோசித்து அவளை வேலைக்கு அனுப்ப வேண்டும் என முடிவு எடுத்து கொண்டு பணத்தை எடுத்து கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பினார்…

 

அங்கு சைந்தவி கண் முழித்து இருக்க வாசுவிடம் மருத்துவர் கூறினான்…. அவரிடம் அனுமதி கேட்டு அவளை பாக்க சென்றான்… அவள் கண் முழித்து இருக்க முதலில் எங்கு இருக்கிறோம் என்றே புரியவில்லை… கொஞ்ச கொஞ்சமாக அனைத்தும் ஞாபாகம் வர பயத்தில் உடம்பு எல்லாம் நடுங்கியது அப்போது தான் வாசு உள்ளே நுழைந்தான்… 

அவள் நடுங்குவதை பார்த்து “அம்மு பயப்படாத… ஒன்னுமில்ல உனக்காக நான் இருக்கேன்… எதுக்கு இந்த பயம்…” என்று கேட்டான்…

அதன் பின் அவனே “அம்மு பேச முயற்சி பண்ணாத… கொஞ்ச நாள் தான்… சரியா அதுக்கு அப்பறம் என்ன வேணும்னாலும் பண்ணலாம்… கொஞ்ச நாள் என்ன நடந்தாலும் யார் என்ன பேசுனாலும் அமைதியா இருக்கனும் அம்மு… ஆனா ஞாபகம் வெச்சுக்கோ அம்மு என்ன நடந்தாலும் உனக்காக நான் இருக்கேன்…” என்று கூறி அவள் நெற்றியில் வலிக்காமல் முத்தமிட்டான்….

அதே நேரம் சரியாக வசந்தி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார்… அவர் இதை பார்த்து அதிர்ச்சியாக இதில் சஹானா சொன்னது வேறு தேவையில்லாமல் காதில் வந்து சென்றது…

 

வாசு பயப்படவெல்லாம் இல்லை… தைரியமாக தான் இருந்தான்… ஆனால் சைத்து தான் பயந்தாள்… அவள் பயந்ததை போல் வசந்தி எதுவும் சொல்லவில்லை… 

 

ஆனால் அதன்பின் அவளை விட்டு நகரவில்லை… வாசுவின் ஹாஸ்பிடல் என்பதால் இவர்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் இருக்க வசந்தி கட்டாயப்படுத்தி பணத்தை செல்லுதினார்…

 

அவரின் செயலே வாசுவிற்கு உணர்த்தியது தாங்களும் உங்களுக்கு எல்லாரையும் போல் தான்..  எங்களுக்கு எந்த சலுகையும் வேண்டாம் என கூறிவிட்டார்…

 

சைத்து பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் இருக்க அந்த நாட்களில் வாசு அவளை பார்க்கவே வரவில்லை… அவளின் கண்கள் தான் அவனை தேடியது… 

வசந்திக்கு வாசு சைத்துவின் நெற்றியில் முத்தமிட்டது தான் ஞாபாகம் வந்தது… அது மட்டுமில்லாமல் சஹானா சொன்னது காதுக்குள் கேட்டு கொண்டே இருந்தது..

 

இந்த பதினைந்து நாட்களில் சஹானாவை சென்னைக்கு அனுப்பிவிட்டார்… தெரிந்தவர் மூலம் வேலைக்கு ஏற்பாடு செய்து அங்கு அனுப்பிவிட்டார்… 

 

சஹானாவும் இதற்கு மறுத்தால் தன் மீது சந்தேகம் வந்துவிடும் என்பதற்காக சரி என்று ஒத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டாள்…

 

 

 

பதினைந்து நாட்களில் அவளை டிஸ்சார்ஜ் செய்து இளவரசி தங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று கூறியும் மறுத்து அவளை தன் வீட்டிற்கே அழைத்து சென்றுவிட்டார்… 

 

 

அவளுக்கு மீண்டும் சிறைக்கு வந்தது போல் இருந்தது… இதில் அவளுக்கு ஏற்பட்ட சிறு சந்தோசம் என்னவென்றால் திவ்யாவும் இவர்களுடன் வந்தது தான்…

 

 

 

சைத்து வீட்டிற்கு வந்து பத்து நாட்கள் ஆகி இருந்தது…. வசந்தி வீட்டில் இல்லாத போது தான் திவ்யா சைத்துவிடம் பேசுவாள்… அவளும் கேட்டுக்கொள்வாள்…. ஆனால் அவளால் இன்னும் பேச முடிவது இல்லை… அவளுக்கு இன்னும் முகத்தில் கட்டை பிரிக்கவில்லை… பத்து நாட்கள் கழித்து மீண்டும் வர சொல்லியதல் இன்று மூவரும் மருத்துவமனை செல்கின்றனர்…

 

 

திவ்யா இருந்ததால் மட்டுமே சைத்து கொஞ்சம் சிரிக்கவாவது செய்கிறாள்… வசந்தி அவளிடம் பேசுவது கூட இல்லை…

 

 

 அங்கு மருத்துவமனையில் ஏற்கனவே வாசுவும் இளவரசியும் இருக்க இளவரசி சைத்துவை பார்த்ததும் அணைத்து கொண்டார்….  அவளும் அவரை அணைத்து கொண்டாள்… சைத்து ஏங்குவது இந்த தாய் பாசத்திற்கு தானே… அது கிடைத்தால் எப்படி அனுபவிக்காமல் இருப்பாள்… அது தான் அவரை அணைத்து கொண்டாள்…

 

 

டாக்டரிடம் காட்ட சைத்துவுடன் வாசுவும் வசந்தியும் மட்டுமே சென்றனர்… அங்கு அவளை சோதித்து விட்டு மெது மெதுவாக கட்டை பிரித்தனர்…

 

 

 

 

அவளிடம் பயப்பட கூடாது என கூறி அவள் முகத்தை கண்ணாடியில் பார்க்க கூறினார்… அவளும் பயந்து கொண்டே கண்ணாடியில் பார்த்தவள் அங்கு தெரிந்த தன் சிதைந்த முகத்தை பார்த்து மயங்கி விழுந்து இருந்தாள்….

 

 

(அப்படியே படிச்சிட்டு லைக் அன்ட் கமெண்ட் பண்ணிட்டு போனா நான் ஹாப்பி அண்ணாச்சி… 😁)

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்