அன்று சைத்துவிற்கு மூன்றாம் வருடத்தின் கடைசி தேர்வு காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து விட்டு கல்லூரிக்கு கிளம்பி இருந்தாள்… அங்கு கல்லூரிக்குள் சென்ற போதே சைத்துவிடம் வம்பு செய்த மாணவன் சைத்துவிற்கு முன்பு வந்து நின்றான்…
அவனை பார்த்து பயந்தவள் ஒரு அடி பின்னே தள்ளி நின்றாள்… ஒரு சில மாணவர்களே வந்து இருக்க இவளை பார்க்க அங்கு ஆள் இல்லை…
அவளை பார்த்து வில்லத்தனமாக சிரித்தவன் “ஒழுங்கா என்னை லவ் பண்ணு… இல்லனா உன்னை கொல்ல கூட தயங்க மாட்டேன்” என்று கூறினான்..
சைத்து இன்னும் பயந்து போய் நிற்க அவள் கையை பிடிக்க வந்தான்… அவள் பின்னே தள்ளி நிற்க மீண்டும் கையை பிடிக்க வந்தான்… அவள் கோவத்தில் அவனின் கன்னத்தில் அறைந்து விட்டு வேகமாக ஓடி விட்டாள்…
அவன் அவளையே வன்மத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்… என்ன செய்ய வேண்டும் முடிவு எடுத்தவன் அவளை வன்மத்துடன் பார்த்து கொண்டே சென்றுவிட்டான்…
பதட்டமாகவே தேர்வு அறைக்கு சென்று தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்தாள்… தேர்வை முதல் ஆளாக முடித்து வெளியே வந்தவளின் முகத்தில் எதோ சூடாக பட அலறி அடித்து முகத்தை மூடி கொண்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தாள்…
அவளின் அலறளில் அவள் அறையில் இருந்த அனைவரும் ஓடி வர வலியில் துடித்து கொண்டு இருந்தவளை நோக்கி ஓடினர்… அவனோ ஆசிட்டை அடித்து விட்டு ஓடாமல் திமிராக அவளை பார்த்தாவாரு நின்று இருந்தான்…
அவனை அங்கு இருக்கும் மாணவர்கள் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்து விட சைத்துவை வேகமாக மருத்துவமனையில் அனுமதித்து வாசுவிற்கு தகவல் கூற பதறி அடித்து மறுத்துமனைக்கு ஓடி வந்தான்…
அங்கிற்கும் ஆசிரியையிடம் என்ன நடந்தது என கேட்க அவரும் நடந்த அனைத்தையும் கூறி இருந்தார்…
வாசு அங்கேயே இடிந்து அமர்ந்துவிட்டான்.. இளவரசி விஷயம் கேள்விப்பட்டு மயங்கி விழுந்துவிட்டார்… வசந்திக்கு தகவல் சொல்ல அவர் விஷயம் கேட்டு அசையாது நின்றுவிட்டார்…
பின் தெளிந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டார்… சஹானாவிற்கும் விஷயம் தெரிய அவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்… அவளுக்கு வேண்டியது சைத்து சாவது… அது இப்போது நிறைவேறும் போது அவளுக்கு சந்தசோமாக இருந்தது…
மருத்துவர் வெளியே வரும்போது வாசு அவன் முன் நின்றான்… அவரோ “கொஞ்சம் கிரிட்டிகல் தான்… ஒரு பக்க பேஸ் புல்லா டேமேஜ் ஆகி இருக்கு… அவங்க பல்ஸ் பயத்துல நார்மல் ஆக மாட்டிங்குது… பல்ஸ் நார்மல் ஆனா தான் எதுவா இருந்தாலும் பண்ண முடியும்… நீங்க போய் பேசி பாருங்க…” என்று கூறி அவர் சென்றுவிட்டார்…
வாசு தயங்கி தயங்கி தான் உள்ளே சென்றான்… அங்கு அவளின் ஒரு பக்க முகத்தில் கட்டு போட்டு மயக்க நிலையில் இருந்தாள்… ஆனால் அவளின் பல்ஸ் ஏறி இறங்கி கொண்டே இருந்தது… அவளை பார்த்து கொண்டே வந்தவன் அவள் அருகில் வந்ததும் சத்தமாக அழுதுவிட்டான்…
“அம்மு உன்னை நான் நல்லா பாத்துக்கலயா… ஆமா பாத்துக்கல… அதனால தான் உனக்கு இப்படி ஆச்சு… நான் அப்பயே அவனை கொன்னு இருந்தா உனக்கு இப்படி ஆகி இருக்காதுல… நான் தப்பு பண்ணிட்டேன் அம்மு..” என்று அவள் கையை பிடித்து கொண்டு கேட்டான்…
அவள் அப்படியே இருக்க “அம்மு என்னை பயப்பட வைக்காத அம்மு… எந்திரிச்சு வா.. உன் அம்மா கிட்ட நான் என்ன பதில் சொல்லுவேன்… உங்களை நம்பி தானு என் பொண்ணை விட்டேன்… பாக்காம விட்டுட்டீங்கனு கேட்டா நான் என்ன சொல்லுவேன்…. தயவு செஞ்சு எந்திரிச்சி வா அம்மு… இதுக்கு அப்புறம் உன்னை என் கைக்குள்ளயே வெச்சுக்குவேன்.. உன் அம்மா ஒத்துக்கிட்டாலும் இல்லைனாலும் நீ எனக்கு மட்டும் தான் அம்மு…. எனக்கு தெரியும் உனக்கு இந்த லவ் எல்லாம் பிடிக்காதுனு… ஆனா நீ எனக்கு மட்டும் தான் அம்மு…” என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டு வெளியேறினான்…
இளவரசி தான் மிகவும் தவித்து போய் விட்டார்.. தன்னை நம்பிவிட்டது பெண்ணை தான் ஒழுங்காக பாத்துக்கொள்ளவில்லையோ என்று மிகவும் வருந்தினார்…
வசந்தியும் மருத்துவமனை வந்து இருக்க இளவரசி அவர் கையை பிடித்து கொண்டு “என்னை மன்னிச்சுடுங்க என்னை நம்பி தான் பாப்பாவை இங்க விட்டீங்க… ஆனா நாங்க ஒழுங்கா பாத்துக்கல…” என்று கண் கலங்கி கூறினார்…
வசந்தி அவரின் கையை தட்டி கொடுத்து “நீங்க என்ன பண்ணுவீங்க… எல்லாம் விதி… நீங்க கவலை படாதீங்க” என்று கூறி இளவரசியின் குற்றவுணர்ச்சியை கொஞ்சம் குறைத்தார்…
வாசு பேசிய பின் கொஞ்சம் பல்ஸ் நார்மலாக அவளுக்கு டிரீட்மென்ட் குடுக்க ஆரம்பித்தனர்… அவளின் ஒரு பக்க முகம் வெந்து இருக்க தோல் எல்லாம் சுருங்கி பார்க்கவே கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது…
மருத்துவர் வெளியில் வந்தவர் இவர்களிடம் “டிரீட்மென்ட்ல சரி பண்ண முடியாது அவங்க முகத்தை… ரொம்ப டேமேஜ் ஆகி இருக்கு… வேணும்னா பிளாஸ்டிக் சர்ஜெரி மூலமா சரி பண்ண வாய்ப்பு இருக்கு… கன்பார்மா சொல்ல முடியாது… ஏன்னா அவங்க தோல் ரோம்ப டேமேஜ் ஆகி இருக்கு… அவங்க பழைய முகம் மாதிரி வேணும்னா கொண்டு வரலாம்… ஆனா அதே மாதிரி கொண்டு வர முடியாது… என்ன முடிவோ அதை நீங்க டிஸ்கஸ் பண்ணி சொல்லிடுங்க… அவங்க கண்ணு முழிக்க எப்படியும் அரை நாள் ஆகிடும்… அதுக்குள்ள உங்க முடிவை சொல்லுங்க… இப்ப சென்னைல பெஸ்ட் பிளாஸ்டிக் சர்ஜெரி டாக்டர் இருக்கார்.. நெஸ்ட் டூ வீக்ஸ்ல அவர் அப்ராட் கிளம்பிடுவார்… முடிவு பண்ணிட்டு சொல்லுங்க… அவர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிக்கலாம்…” என்று கூறி சென்றுவிட்டார்…
வசந்திக்கு என்ன முடிவு எடுப்பது என்றே தெரியவில்லை… வாசு சக்ரவர்த்தியிடம் “அப்பா முக்கியமான ஒரு இடத்துக்கு போயிட்டு வரேன்…” என்று கிளம்பியவன் மின்னல் வேகத்தில் சைத்து மீது ஆசிட் அடித்தவனை அடைத்து வைத்து இருந்த இடத்திற்கு தான் சென்றான்…
அங்கு அவனை தலை கீழாக தொங்க விட்டு இருக்க நடந்து வந்த வாசுவை பார்த்து நக்கலாக சிரித்தான்… “என்ன அவ செத்துட்டாளா…” என்று கேட்டான்…
கண்களில் ரௌத்திரம் பொங்க அவனை நெருங்கியவன் அங்கு இருப்பவனுக்கு கண் காட்ட அவன் க்ளவுஸ் போட்டு கொண்டு ஏதோ கண்ணாடி ஜாடியை கொண்டு வந்தான்…
இன்னொருவன் அவனை கீழே இறக்கி சேரில் கட்டி போட்டான்… வாசு அதை வெற்று கையில் வாங்கி அவன் சட்டை இல்லா உடம்பில் மெதுவாக ஊற்றினான்…
ஊற்றிய அடுத்த நொடி கதற ஆரம்பித்துவிட்டான்… அவனால் கை காலை கூட அசைக்க முடியவில்லை…
ஐந்து நிமிடம் விட்டவன் ஏற்கனவே ஊற்றிய இடத்திலேயே அதை மீண்டும் ஊற்றினான்… ஏற்கனவே வலியில் இருந்தவன் மீண்டும் ஊற்றியதில் அழுகவே ஆரம்பித்துவிட்டான்…
அவனின் பெற்றோர் விஷயத்தை அறிந்து அவனையும் தேட அவன் எங்கு உள்ளான் என்பது அவர்களுக்கு தெரியவில்லை…
அவர்களுக்கு வாசுவின் மீது தான் சந்தேகம்… அவனை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்யும் போது வாசு அதை மறுத்துவிட்டான்… இந்த செயலிலேயே வாசுவிடம் தான் அவன் மகன் உள்ளான் என தெரிந்து இருந்தது…
ஆனால் எங்கு இருக்கிறான் என்று தான் தெரியவில்லை… நீண்ட நேர முயற்சிக்கு பின் தான் அவனிடம் பேச முடிந்தது…. இதற்குள் அவனின் அக்கா இதற்கு சஹானாவும் தான் ஒரு காரணம் தன் தம்பியிடம் சைந்தவியை காட்டியது சஹானா தான் என்று கூறியவள் நடந்த அனைத்தையும் கூறி இருந்தாள்…
அனைத்து விசயத்தையும் ரெகார்ட் செய்தவன் அதை அப்படியே வசந்திக்கு அனுப்பி இருந்தான்… அதை சக்ரவர்த்திக்கும் அனுப்பி இருக்க அவரும் பார்த்துவிட்டு இளவரசியிடமும் கூறினார்… அவர் அருகில் அமர்ந்து இருந்த வசந்தியும் இதை கேட்டு சஹானாவை நினைத்து மிகவும் வேதனை அடைந்தார்… அவளை நானா பெற்றேன் என்று கூறி இளவரசியிடம் அழுதார்…
திவ்யாவிற்கு சொல்ல மறந்து இருக்க அவள் விஷயம் அறிந்து அழுது கொண்டே மருத்துவமனை வந்து இருந்தாள்… இளவரசியை பார்த்ததும் மேலும் அவரை அணைத்து கொண்டு அழுக ஆரம்பித்து இருந்தாள்…
எந்த டிரீட்மென்ட்டும் அவனுக்கு பார்க்க வேண்டாம் என கூறி விட்டு மீண்டும் மருத்துவமனை வந்த வாசு வசந்தியிடம் என்ன முடிவு எடுத்து உள்ளார் என கேட்டான்…
அந்த கேள்விக்கு அவர் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியாக அனைவரும் அவரை பார்த்தனர்…
(அது என்னனு நாளைக்கு தான் சொல்லுவேன்… நீங்க என்னனு கெஸ் பண்ணி கமெண்ட்ல சொல்லுங்க பாக்கலாம்… அப்படியே லைக்கும் தட்டி விட்டுட்டு போனா சூப்பரா இருக்கும் 😁😁)
Plastic surgery panna sollirupangalo..🤔🤔
Waiting next episode sis