சைத்து வாசுவின் வீட்டிற்கு வந்து இரண்டு நாள் ஆகி இருக்க அன்று இளவரசிக்கு முக்கிய மீட்டிங் ஒன்று இருக்க சைத்துவின் கட்டாயத்தில் அவர் மீட்டிங் சென்று இருந்தார்.. திவ்யாவும் கல்லூரி சென்று இருக்க வீட்டில் வேலை செய்வோரும் சைத்து மட்டுமே வீட்டில் இருந்தனர்…
சக்ரவர்த்தியும் மீட்டிங் சென்று இருக்க வாசு முக்கியமான பைல் எடுக்க வேண்டும் என வீட்டிற்கு வந்தான்…
அவனுக்கு சைத்து தனியாக இருப்பது தெரியாது… திவ்யா உடன் இருப்பாள் என நினைத்து கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்…
வீட்டிற்கு வந்த போது தான் அவள் மட்டும் இருக்கிறாள் என அவனுக்கு தெரிய வந்தது… எனவே வேகமாக எடுக்க வந்ததை எடுத்து கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து அதை தேட ஆரம்பித்தான்…
ஆனால் அவனின் நேரம் அந்த பைல் கிடைக்கவே இல்லை… அவன் நீண்ட நேரமாக தேடி கொண்டு இருக்க சைத்து கத்தும் சத்தம் கேட்டு அனைத்தையும் அப்படியே விட்டு அவளிடம் ஓடினான்….
அங்கு அவளோ கால் தடுக்கி மீண்டும் கதவில் தலையை இடித்து கொண்டு தலையில் கை வைத்து கொண்டு கண் கலங்க நின்று இருந்தாள்…
“சவி என்ன ஆச்சு பாத்து வர மாட்டியா… வந்து உட்காரு… ரொம்ப வலிக்குதா ஹாஸ்பிடல் போலாமா….” என்று பதட்டமாக கேட்டான்…
“இல்ல அவளோ வலி இல்ல… கொஞ்ச நேரம் உட்காந்தா சரி ஆகிடும்…” என்று கூறினாலும் அவள் கண்கள் கலங்கி தான் இருந்தது…
“சவிம்மா ரொம்ப வலிக்குதா கண் எல்லாம் கலங்கி இருக்கு.. உண்மைய சொல்லு… ரொம்ப வலிக்குதா ம்மா…” என்று பரிவாக கேட்டான்…
“ரொம்ப வலிக்கல… ஆனா கொஞ்சம் வலிக்குது… நீங்க பதறாதிங்க….” என்று அவனின் கண்களில் தெரிந்த பதட்டத்தை பார்த்து மென்மையாக கூறினாள்…
“நிஜமா வலிக்கலல… இல்ல எனக்காக பொய் சொல்றியா” என்று மீண்டும் கேட்டான்…
“ஐயோ நிஜமா வலிக்கலங்க…” என்று அவளும் மீண்டும் கூறினாள்…
“ஓகே… நான் கிளம்புறேன்.. பத்திரமா இருக்கனும் ஓகேவா சவி…” என்று அவன் கூறிவிட்டு கிளம்ப தயாராக அப்போது தான் அவன் புதிதாக சவி என்று அழைப்பதை கவனித்தாள்…
“என்ன சவினு கூப்பிடுறிங்க” என்று கேட்டாள்…
“உன் பேர் தான் எல்லாரும் கூப்பிடுற மாதிரி நானும் கூப்பிட முடியுமா நீ எனக்கு சின்ன வயசுல இருந்து ஸ்பெஷல் ஆச்சே…” என்று கண் அடித்து கூறி விட்டு மீண்டும் பைல்லை தேடி எடுத்து கொண்டு சென்றுவிட்டான்…
இவள் தான் நடந்தது உண்மையா என்று திகைத்து போய் நின்று இருந்தாள்…. “ஐயோ இது உண்மையா அவர் கண் அடிச்சிட்டு போனாரா… இல்லை இது என் கனவா…” என்று கூறி கையை கிள்ளி பார்த்தாள்…
“ஐயோ வலிக்குதே… இது உண்மை தானா… அம்மாவுக்கு மட்டும் இது தெரிஞ்சது நான் காலி… இனிமே இவங்க கிட்ட பேசவே கூடாது… பார்க்கவும் கூடாது…” என்று முடிவை எடுத்து கொண்டு மீண்டும் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டாள்…
அவள் முடிவு எடுத்தால் போதுமா கடவுள் முடிவு எடுத்துவிட்டார் அவனுக்கு இவள் தான் என…
இங்கு காரில் சென்று கொண்டிருந்தவன் “ஐயோ அம்மு… இவளோ அப்பாவியா இருக்கியே என் பார்வையே உனக்கு தெரியலயா…” என்று சிரித்து கொண்டு கல்லூரிக்கு சென்றுவிட்டான்…
திவ்யா வந்ததும் நடந்த அனைத்தையும் கூறிவிட்டாள் ஒன்றுவிடாமல்… திவ்யா முதலில் திகைத்து சைத்துவை பார்த்து சிரித்தவள் “சும்மா விளையாட்டுக்கு பண்ணி இருப்பாங்க… பெருசா எடுத்துக்காத… சரியா.. கொஞ்ச நேரம் தூங்கு… எனக்கு எழுதுற வேலை இருக்கு” என்று கூறி எழுத சென்றுவிட்டாள்… அவளும் விளையாட்டுக்காக செய்து இருப்பார் என்று நினைத்து அதை அப்படியே விட்டுவிட்டாள்….
சைத்து இப்போது குணமாகி இருக்க இளவரசிக்கு அவளை அனுப்பவே மனசே இல்லை… என்ன செய்வது அவளை இங்கு தங்க வைத்து கொள்ள முடியாதே… வசந்தியிடம் கேட்க ஆசை தான்… ஆனால் சைத்துவிற்கு இன்னும் அதற்கான வயது வரவில்லை… அதனால் அமைதியாக இருந்து கொண்டார்…
சைத்துவும் மனதே இல்லாமல் தான் கிளம்பினாள்… திவ்யா இது போன்று எல்லாம் இருந்ததே இல்லை… சைத்துவை விட திவ்யா தான் மிகவும் வருந்தினாள்…
இருவரிடமும் அடிக்கடி இங்கு வர வேண்டும் என செல்ல கட்டளையிட்டு தான் அனுப்பி வைத்தார் இளவரசி… சைத்து கிளம்பும் வரை வாசுவை காணவே இல்லை… ஆனால் அவளுக்கு தெரிந்து இருந்தது அவன் அவளை தான் பார்த்து கொண்டு இருக்கிறான் என.. அவள் எதுவும் கூறவில்லை காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்…
வசந்தி திட்டிய பின் கொஞ்சம் அடங்கி தான் இருந்தாள் சஹானா… நாட்கள் வேகமாக செல்ல மற்றொரு ஆண்டும் கடந்து இருந்தது…
சஹானா படிப்பை முடித்து இருக்க வேலைக்கு எல்லாம் செல்லவில்லை… வீட்டில் வெட்டியாக பொழுதை கழிக்க ஆரம்பித்தாள்…
இதற்கிடையில் சைத்துவிற்கு ஒரு பிரச்சனை முளைத்து இருந்தது… சீனியர் மாணவன் ஒருவன் என்னை காதல் செய் என்று தொந்தரவு செய்து கொண்டு இருந்தான்… முதலில் சாதாரணமாக விட்டவள் அதன்பின் தினமும் தொந்தரவு செய்யவே திவ்யாவிடம் அழுது கொண்டே அனைத்தையும் கூறிவிட்டாள்…
திவ்யா அதை அப்படியே இளவரசியிடம் கூற அவர் வாசுவிடம் கூற அவன் அந்த பையனை மிரட்டி விட்டு இருந்தான்…
ஆனால் அவன் அடங்குவதாக இல்லை…. கொஞ்ச நாள் அமைதியாக இருந்தவன் மீண்டும் அவளை தொல்லை செய்ய ஆரம்பித்து இருந்தான்…
சைத்து மிகவும் பயந்து போய் இருந்தாள் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை… அவள் வசந்தி வந்த போது அழுது கொண்டே அவரிடம் கூறி இருக்க “பயப்படாம இரு” என்று கூறி அவளுக்கு தைரியம் கூறிவிட்டு இளவரசியிடம் கூறி இருந்தார்…
“நீங்க கவலை படாதீங்க நான் பாத்துக்கிறேன்…..” என்று கூறிவிட்டு நேராக கல்லூரி சென்று அந்த மாணவனுக்கு ஒரு வாரம் சஸ்பென்ட் செய்துவிட்டார்… அவனுக்கு அது எல்லாம் பெரிய விஷயமாகவே தெரியவில்லை…
அவனின் பெற்றோரை அழைத்து கேட்ட போது நாங்க பாத்துக்குறோம் என்று கூறியவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை…
அந்த மாணவன் வேறு யாருமில்லை சஹானாவின் தோழியின் தம்பி… அவள் தான் அவனை தூண்டிவிடுவது… அவன் நல்லவன் எல்லாம் இல்லை… அஃக்மார்க் கெட்டவன்… அவனிடம் இல்லாத கெட்ட பழக்கமே இல்லை… ஆனால் வாசுவை அடைவதற்காக இவனிடம் சைத்துவை மாட்டி விட்டு இருந்தாள் .
அன்று அவன் மிகவும் தொந்தரவு செய்து இருக்க இவளுக்கு பயத்தில் காய்ச்சல்லே வந்து இருந்தது…
வாசு அவளை தனியாக சந்தித்து “சவி எதுக்கு எடுத்தாலும் பயப்படாத… அவனை நான் பாத்துக்குறேன்.. அவனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது… தைரியமா இருக்கனும்” என்று கூறி அவள் கையை பிடித்து ஆறுதல் கூறிவிட்டு சென்றுவிட்டான்…
அதன்பின் அவனை கொஞ்சம் மிரட்டி அடித்து அவனை அடக்கி வைத்து இருந்தான்… அவனும் சிறிது காலம் அமைதியாக இருந்தான்… சஹானா அந்த மாணவனிடம் “என்ன என்னமோ சொன்ன… அவளை ஒரே நாள்ல மயங்க வைக்குறேன்னு… நீ தான் இப்போ அடங்கி இருக்க போல…” என்று நக்கலாக பேசி அவனை ஏற்றிவிட்டாள்…
அவனும் “ஏய் அவ எனக்கு மட்டும் தான்… எனக்கு கிடைக்கல அவளை யாருக்கும் கிடைக்க விட மாட்டேன்” என்று கோவமாக கூறி வைத்து விட்டான்…
“ஹே சைத்து வாசு எனக்கு மட்டும் தான்… ஒன்னு அந்த பொறுக்கியை கட்டிக்கிட்டு கஷ்டப்பட்டு சாவு… இல்லனா அவன் கையாலயே செத்து போயிடு… நீ போனா தான் என் வாசு எனக்கு கிடைப்பாரு…” என்று கோவமாக கூறினாள்..
நாட்கள் அதன் போக்கில் செல்ல அன்று சைத்துவிற்கு மூன்றாம் ஆண்டின் கடைசி தேர்வு… சந்தோசமாக தேர்வை எழுதி முடித்து வந்தவள் அந்த மாணவன் செய்த செயலில் அங்கேயே சுருண்டு விழுந்து இருந்தாள்…
(அப்படியே லைக் அன்ட் கமெண்ட் பண்ணிட்டு போனீங்கனா நான் ஹாப்பி…. 😁)