Loading

வாசுவும் சைந்தவியும் பின்பக்கம் அமர்ந்து இருக்க திலீப் வண்டி  ஓட்டி கொண்டு இருந்தான்… ஒருவழியாக மூவரும் திருச்சி வந்து சேர்ந்து இருக்க திலீப் நேராக வாசுவின் மாமா வீட்டிற்கு தான் விட்டான்… வாசுவின் அம்மா அப்பாவும் அங்கு தான் இருந்தனர்… 

சைந்தவிக்காக வெளியில் நின்று இருந்த இளவரசி அவள் இறங்கியதும் அவளை ஓடி சென்று அணைத்து கொண்டார்… சைந்தவியும் அவர் அழுததும் அழுக வாசு தான் இருவரையும் முறைத்து கொண்டு நின்றான்…

சக்ரவர்த்தி தான் இருவரையும் அவனின் முறைப்பில் இருந்து காப்பாற்றும் பொருட்டு அரசி எவ்வளவு நேரம் வெளிய நிப்ப பாப்பாவை கூட்டிட்டு உள்ள வா என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்… அவரை தொடர்ந்து அனைவரும் வீட்டிற்குள் சென்றனர்..

கோகிலா அனைவருக்கும் குடிக்க ஜூஸ் எடுத்து வர அத்தை அம்முவுக்கு வேணாம்… வரப்ப தான் குடிச்சா… திரும்பியும் குடிச்சா சளி பிடிச்சிக்கும்…  என்று கூறி அவள் ஜூஸையும் வங்கி அவனே குடித்துவிட்டான்… சைத்து தான் அவனை ஓரக் கண்ணில் முறைத்து கொண்டு இருந்தான்…

மாமியார் மருமகள் இருவரும் கொஞ்சி கொண்டு இருக்க வாசு அவன் அப்பாவை அழைத்து கொண்டு இன்று நடந்தை பற்றி பேச அழைத்து சென்றுவிட்டான்…

வரதராஜன் திலீப்புடன் பேசிக் கொண்டு இருந்தார்… அப்போது சைத்துவின் போன் அலற அது திலீப்பின் அருகில் தான் இருந்தது… 

போன் அடிப்பது கூட தெரியாமல் சைத்து பேசிக் கொண்டு இருக்க திலீப் தான் பேரை பார்த்து எடுத்து பேசினான்… அவன் ஹலோ என சொல்வதற்குள் திவ்யா பொரிய ஆரம்பித்துவிட்டாள்….

“ஹே லூசு சைத்து வீட்டுக்கு போனா போன் பண்ண சொன்னேன்ல வீட்டிக்கு போயிட்டியா இல்லையா… நீ கிளம்பி எவளோ நேரம் ஆகுதுனு தெரியுதா இல்லையா” என்று கோவமாக கேட்டாள்…

அவள் திட்டுவதை கேட்டு சிரித்த திலீப் “ஹெலோ மேடம் முதல்ல யார் பேசுறாங்கனு பாத்துட்டு பேசுங்க… தங்கச்சி இளாம்மா கிட்ட பேசிட்டு இருக்கா… வந்ததும் கால் பண்ண சொல்றேன்… அப்றம் நாங்க வந்து கால் மணி நேரம் ஆகுது ஓகேவா… நான் மறக்காம பாப்பாவை கால் பண்றேன்… வைக்கட்டுமா..” என்று கேட்டான்…

அவள் அந்த பக்கம் அமைதியாக இருக்க “ஹலோ மேடம் லைன்ல இருக்கீங்களா….” என்று கேட்டான்…

மீண்டும் கேட்ட போது சுயநினைவு வந்த திவ்யா “ஹான் இருக்கேன்… இல்ல நீங்க அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க… நான் அப்புறம் பேசிக்குறேன் அவ கிட்ட…  வைக்குறேன் பை…” என்று கூறி வைத்து விட்டாள்… அவனும் சிரிப்புடன் வைத்துவிட்டான்…

 

மாமியாரும் மருமகளும் ஒரு மணி நேரமாய் கொஞ்சி கொண்டு இருக்க நடுவில் கோகிலாவும் சேர்ந்து கொண்டார்… மூவரும் பாச மழையை பொழிந்து கொண்டு இருந்தனர்….

 

 

வாசு வந்து முறைத்து கொண்டு இருப்பது கூட அறியாமல் பேசி கொண்டு இருந்தனர்…. 

 

அவன் முறைத்து கொண்டு இருப்பதை பார்த்த இளவரசி “அண்ணி வாங்க நாம போய் நைட் சமைக்கலாம்” என்று கோகிலா விடம் கூறி அவரை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்…

 

 

நானும் வருகிறேன் என்று கூறிய சைத்துவை வேண்டாம் என கூறி அவர்கள் இருவர் மட்டும் சென்றுவிட்டனர்…

 

 

 

அவர்கள் இருவரும் சென்ற பின் தான் சைத்து வாசுவை பார்த்தாள்… அவன் முறைத்து கொண்டு இருப்பதை பார்த்து ஜெர்க்கானவள் யாரும் ஹாலில் இல்லை என்பதை பார்த்து அவனை பார்த்து பறக்கும் முத்தத்தை பறக்க விட்டு சிட்டாக அறைக்குள் ஓடிவிட்டாள்..

 

திலீப்பை தேடியவன் அவன் யாரிடமோ பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து அமைதியாக அவன் அருகில் சென்று நின்று கொண்டான்…

 

திலீப் ஒரு மருத்துவர் அவன் அரசு மருத்துவராக அரசு மருத்துவமனையில் ஆறு மாதமாக தான் பணி புரிந்து கொண்டு இருக்கிறான்… இப்போதும் மருத்துவ மனையில் இருந்து தான் அழைப்பு வந்து இருந்தது…

 

 

பேசி முடித்தவன் “சொல்லுடா என்ன விஷயம் அமைதியா எல்லாம் இருக்க…” என்று கேட்டான் 

 

 

 

“பேக்டரில மெடிக்கல் கேம்ப் போடுறது பத்தி தான்… உனக்கு எப்போ பிரீயோ அப்போ பண்ணிக்கலாம்” என்று கேட்டான்…

 

 

“டேய் நாளைக்கு லீவ் தான்… அதுக்கு அப்புறம் நைட் டூட்டி தான் சோ நைட் டூட்டி முடிஞ்சதும் மார்னிங் கொஞ்ச நேரம் தூங்கிட்டு பன்னிரண்டு மணில இருந்து பண்ணிக்கலாம் ஓகேவா…” என்று திலீப்பும் கேட்டான்…

 

 

“ஓகே தான்… உன் ஆசைக்காக தான் கொஞ்ச நாள் கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ண ஓகே சொன்னேன்… நம்ம ஹாஸ்பிடல்ல எப்போ ஜாயின் பண்ணலாம்னு இருக்க…” என்று கேட்டான்….

 

 

“இன்னும் ஒரு வருஷம் ஒர்க் பண்றேனே… அதுக்கு அப்புறம் கண்டிப்பா அங்க ஜாயின் பண்ணிக்குறேன்… ஓகே டா.. இப்போ கொஞ்சம் அர்ஜென்ட் ஹாஸ்பிடல் போய் ஆகனும்… நான் கிளம்புறேன்… அம்மா கிட்ட சொல்லிடு… பை… எனக்கு பாப்பா ரிப்போர்ட்ஸ் அனுப்பி வை… நான் டாக்டர்ஸ் கிட்ட பேசிட்டு சொல்றேன்… பீல் பண்ணாத எல்லாத்தையும் பாத்துக்கலாம்…” என்று கூறி அவனிடம் இருந்து விடைபெற்றான்…

 

 

தன் இன்னொரு போனில் இருந்து திலீப்பிற்கு ரிப்போர்ட் அனுப்பி வைத்தவன் அறைக்கு சென்றான்…

 

 

அங்கு அவள் தூங்கி இருப்பாள் என நினைத்து சென்றவன் அவள் வரைந்து கொண்டு இருப்பதை பார்த்த வாசு அவள் பின் இருந்து அணைத்தவன் அவள் கையை பிடித்து ஏற்கனவே வரைந்து விட்டதை மாற்ற ஆரம்பித்தான்…

 

 

 

அவள் மறுப்பதையும் மீறி வரைந்து முடித்து தான் அவளை விட்டான்.. அவளோ அவன் தோளில் அடித்து “ஏன் மாமா இப்படி பண்றிங்க… எனக்கு அந்த மாதிரி தான் வேணும் போட்டோ தான் அந்த மாதிரி எடுக்க முடியாது அதனால ட்ராயிங்ஸ் ஆச்சும் பண்றேனே….” என்று கெஞ்சலாக கேட்டாள்…

 

 

“நோ அம்மு ஒழுங்கா இரு… இது தான் அழகா இருக்கு” என்று காதலாக கூறினான்…

 

 

அவள் அழுது கொண்டே “எது மாமா இந்த முகம் நல்லா இருக்கா…. சொல்லு மாமா இந்த சிதைஞ்சு போய் இருக்க முகம் அழகா இருக்கா…” என்று தன் ஒரு பக்க முகத்தை பார்த்து கேட்டாள்…

 

 

“அம்மு உன்கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன்… இதை பத்தி பேச கூடாதுனு… எனக்கு எப்பயும் இந்த முகம் தான் அழகு… இனிமே இதை பேசுன நிஜமாவே என் கோவத்தை பார்ப்ப அம்மு… வா கீழ போகலாம்…” என்று கூறி அவளின் சிதைந்த முகத்தில் அழுத்தி முத்தமிட்டவன் அவள் கண்களை துடைத்து விட்டு அவளை கீழே அழைத்து கொண்டு வந்துவிட்டான்…

 

 

எப்போது வாசு சைத்துவிற்கு கல்யாணம் ஆனதோ அப்போதே சைத்துவிற்கு பிடித்த அனைத்து பொருட்களும் வரதராஜனின் வீட்டிலும் வாங்கி வைத்துவிட்டனர்…. அதனால் தான் அவள் இங்கு வந்தாலும் வரைய ஆரம்பித்து விடுவாள்….

 

 

அனைவரும் சாப்பிட்டு முடித்து கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்தனர்… அதன் பின் அனைவரும் தூங்க சென்று விட வாசு மட்டும் போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தான்…. அவனை பார்த்து கொண்டு இருந்த சைத்து சோபாவில் சாய்ந்தே உறங்கி இருந்தாள்…

 

 

போன் பேசிவிட்டு வந்த வாசு உறங்கி கொண்டு இருக்கும் சைத்துவை பார்த்து சிரித்து விட்டு அவளை தூக்கி கொண்டு அறைக்கு சென்று உறங்க வைத்தான்….

 

 

சிறு வேலை ஒன்று இருக்க லேப்டாப்பில் பார்த்து கொண்டு இருந்தவன் அதை முடித்து விட்டு உறங்கும் தன்னவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்…

 

 

அவனின் ஞாபகம் அவளை முதன் முதலில் பார்த்த நாளுக்கு சென்றது… 

 

 

அப்போது சைத்துவிற்கு பன்னிரண்டு வயது தான் இருக்கும்… அழகாய் மடித்து கட்டிய பின்னலுடன் தன் தோழிகளுடன் நொண்டி விளையாடி கொண்டு இருந்தாள்…. பின்னலை மடித்து கட்டி கொண்டு இருந்தாலும் அவளின் கூந்தல் முதுகு வரை இருக்கும்… மிகவும் அழகாக இருப்பாள்… 

 

 

வாசுவிற்கும் பதினெது வயது தான் இருக்கும்.. அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்… பார்த்தவுடன் அந்த கோலி குண்டு கண் அவனை ஈர்த்து விட்டது… ஆனால் சிறு பெண் என நினைத்து அந்த நினைப்பை தள்ளி நிறுத்தினான்…

 

 

 

அப்போது ஒரு நடுத்தர வயதுடைய பெண் கோவமாக வந்து “ஏய் சனியனே இங்க என்ன ஆடிட்டு இருக்க… உன்னை சாமான் எல்லாம் கழுவ தானு சொன்னேன்… நீ என்ன இங்க விளையாடிட்டு இருக்க” என்று கோவமாக திட்டி அவளை அடித்து இழுத்து கொண்டு சென்றார்…

 

 

அவளோ அழுது கொண்டே “ம்மா நிஜமா எல்லாம் கழுவி வெச்சிட்டு தான் ம்மா வந்தேன்… எல்லாத்தையும் கழுவிட்டு வீடு கூட்டி வெச்சிட்டு சமைக்க காய்கறியும் வெட்டிட்டு தான் வந்தேன் ம்மா” என்று பாவமாக கூறினாள்…

 

 

 

 ஆனால் அவளின் அம்மாவோ எதையும் காதில் வாங்காமல் இழுத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்… 

 

வாசுவும் அவர்கள் பின்னே செல்ல பார்க்க அவனை ஒரு கை தடுத்தது…. திரும்பி பார்க்க அவனின் அம்மா இளவரசி தான் நின்று இருந்தார்…

 

 

“ம்மா என்ன ம்மா ஒரு சின்ன பொண்ணை இப்படி அடிச்சு இழுத்துட்டு போறாங்க யாரும் எதுவும் கேட்காம இருக்கீங்க…” என்று கோவமாக கேட்டான்…

 

 

 

“வாசு அமைதியா வா… இங்கையும் உன் கோவத்தை காமிக்காம இரு… இங்க இப்படி தான்… நான் சொல்றேன்… அந்த பொண்ணு பேரு சைந்தவி…” என்று அவளை பற்றி அவனிடம் கூற ஆரம்பித்தார் இளவரசி…

 

 

(சைத்து யாருனு நாளைக்கு தான் சொல்லுவனே… 😁)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்