அத்தியாயம் 4
தனது அம்மா பாட்டியுடன் வந்த கிருஷ்ணா அவர்களுடனே சென்று கொண்டிருந்தான். அவர்கள் பக்கத்தில் தான் நிலாவும் கொஞ்சம் காய்கறிகளும் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம் என வந்திருந்தாள் காய் வாங்கிவிட்டு பிறகு போயி அசைவ சமையலுக்கு தேவையானத்தை வாகிக்கொள்ளலாம் என்று எண்ணியிருந்தாள். அவள் அம்மா ஒரு கிலோ உருளை கிழங்கு என்று கேட்க அவர் ஒரு பெட்டியை எடுத்து கொடுத்து என்ன காய் வேணுமோ இதுல எடுத்து போட்டு கொடு தாயி நான் எடை போட்டு உனக்கு தாரேன். என்று அவர் சொல்ல அவளும் சரிங்க அம்மா. என்று அவளுக்கு தேவையான காய்களை போட்டு கொண்டிருந்தாள். அவள் எடுப்பதை பார்த்து விட்டு அந்த கடை அம்மா என்ன தாயி நீ ஊருக்கு புதுசா என்று கேட்க நிலாவோ ஆமா அம்மா. எந்த ஊரு தாயி வேந்தனூர் பக்கத்துல வயலூர் மா. என்று அவள் சொல்ல உன் பேரு என்னத்தா என்று கேட்க நிலவழகி அம்மா என்று அவள் சொல்ல. நல்ல பேருத்தா அப்டியே பேருக்கு ஏத்த மாதிரி அந்த நிலாவோட கலருல இருக்காதாத்தா. அம்மன் சிலையாட்டம் . உன்னோட அப்பா அம்மாலாம் எங்க இருக்காங்க தாயி என்று கேட்க அவள் முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது. அவர், ஏன்த்தா முகம் வாடி போச்சு என்று கேட்க. இவ்வளவு நேரம் அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த சிவகாமியும் ரேணுகாவும் தெளிவாக அவளை கவனிக்க ஆரம்பத்தார்கள். என்ன ஆச்சு இந்த புள்ளைக்கு என்று. நிலாவோ அப்டிலாம் இல்லைமா எனக்கு யாரும் இல்லை. வயலூர்ல கல்யாணி அம்மா இருக்காங்களா அவங்க வீட்ல தான் வேலை பார்க்குறேன் அம்மா. எனக்குன்னு உறவுலாம் இல்லை அம்மா என்று அவள் சொல்ல அங்கு அவளை பார்த்திருந்தவர்களுக்கு தான் மனதில் பாரம் ஏறிகொண்டது.
அந்த கடைக்கற அம்மா தான் அப்டிலாம் யாருமில்லனு சொல்லதா தாயி உனக்குன்னு கல்யாணம் ஆயிடுச்சுநா உன் புருஷன் உன்ன பாத்துப்பான் சாமி. இந்த தங்கத்த கட்டிக்க போறவன் உனக்கு எல்லாமுமா இருப்பான் என்று அவர் சொல்ல அவளுக்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்னத்தா இப்டி சிரிக்கிற என்று அவர் கேட்க. அவளோ அட நீங்க வேற. ஏன்மா நானே ஒரு வேலை சாப்பாட்டுக்கே அந்த பாடு பட வேண்டியதா இருக்கு என்ன போயி யாரு கல்யாணம் பண்ணிப்பா. நீங்க சும்மா சொல்லாதீங்க. இந்தாங்கமா நான் எனக்கு தேவையான காய்களை எடுத்துட்டேன் நீங்க எடை போட்டு தாங்க. என்று அவள் முகம் முழுவதும் சிரிப்புடனே சொல்ல. அருகில் இருந்த சிவகாமி தான் ஏன்மா அப்படி சொல்ற உனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இல்லையடாமா என்று அவர் கேட்க. அவளோ ஏன் வாழ்க்கையில நான் வாழுறதே கஷ்டம் அம்மா. அதுல ஆசை படுறத்துக்கலாம் உரிமை கிடையாதுமா என்று சொல்லிவிட்டு அவளுக்கு தேவையானதை வாங்கிவிட்டு கடைக்காரா அம்மாவிடமும் சிவகாமியிடமும் சொல்லிவிட்டு அருகில் இருந்த ரேணுகாவை பார்த்து வரேன் அக்கா என்று சிரித்துவிட்டு அவள் கையில் இருக்கும் கிருஷ்ணாவையும் கொஞ்சி விட்டு சென்றுவிட்டாள்.
ரேணுகா தான் போகும் அவளை பார்த்து கொண்டே இருந்தாள் சிவகாமி ஏட்டி ஏன் அந்த பொண்ணையே பார்த்துகிட்டு இருக்க என்று கேட்க. இல்லை அத்தை இந்த புள்ளயவே நம்ம வேந்தன் மாமாக்கு கட்டி வச்சால் என்ன என்று அவள் நாடியில் கை வைத்து கேட்க. அந்த நேரம் கிருஷ்ணாவோ அவளின் தலையில் அடித்து கொண்டே இருந்தான். அவளோ முகத்தை கோவத்துடன் வைத்து ஏன்டா என்னை அடிக்க என்று கேட்க அதுவா. பெரியப்பா கல்யாணம்ணு பேசுனா அவங்கள இப்டி தான் என்னய அடிக்க சொல்லிருக்கு என்று அவன் பெருமையாய் சொல்ல. சிவகாமி தான் அவளிடம் பாத்தியா எப்டி சொல்லிருக்காணு அவனை என்ன பண்ணவோட்டி எனக்கு ஒன்னும் புரியல. ஆனா இந்த நிலா புள்ள தேவதை மாதிரி இருக்குது. நம்ம வேந்தனுக்கு பொருத்தமாய் இருக்கும். பாப்போம் அந்த கடவுள் என்ன முடிவு பண்ணிருக்காருன்னு. என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.