Loading

திருச்சி 

அந்த பெரிய வீட்டில் இல்லை இல்லை மாளிகையில் ஒரு போரே நடந்து கொண்டு இருந்தது…

“நீங்க மட்டும் என்ன தெய்வ பிறவியா நீங்களும் சாதாரண மாமியார் தானு… அது தான் யார் யாரோ சொல்றதை நம்பி என் அம்முவை நான் இல்லாத நேரமா பார்த்து வீட்டை விட்டு அனுப்பி இருக்கீங்க…. என் அம்மு மட்டும் என்கிட்ட வரட்டும்… அதுக்கு அப்பறம் எல்லாரையும் பார்த்துக்கறேன்….” என்று கோவமாக கத்தி விட்டு தன் ஜீப்பை எடுத்து கொண்டு அங்கிருந்து வேகமாக தன் காதல் மனைவியை தேடி கிளம்பினான் கௌதம் வாசுதேவ் சக்ரவர்த்தி…. 

அவன் வீட்டை விட்டு வெளியேறியதும் புயல் அடித்து அமைதியானது போல் இருந்தது அந்த வீடு… கௌதமின் அப்பா சக்ரவர்த்தி மெதுவாக தன் மனைவியின் அருகில் வந்து அமர்ந்தவர் “இளா நீ பண்ண ஒரே தப்பு பாப்பாவோட அக்காவை வீட்டுல சேர்த்தது தான்… அவன் அப்பவே சொன்னான்ல அந்த பொண்ணை வீட்டுல சேர்க்க வேண்டாம்னு நீ தான் பாவம்னு சேர்த்த… இப்போ பாத்தியா அந்த பொண்ணு என்ன பண்ணி வெச்சு இருக்குனு… இப்போ பாப்பா மட்டும் வாசு கைல கிடைக்கலனா அவன் என்ன பண்ணுவான்னு யாருக்கும் தெரியாது… எந்திரி தனியா இருந்தா கண்டதை யோசிப்ப… நான் உன்னை உங்க அண்ணன் வீட்டுல விட்டுட்டு உன் அண்ணனை கூட்டிட்டு போய் நான் ஒரு பக்கம் தேடுறேன்…” என்று அழுது கொண்டு இருந்தவரை தன் காரில் அமர வைத்துவிட்டு இளா என்கின்ற இளவரசியின் அண்ணன் வீட்டிற்கு காரை விட்டார்…

சக்ரவர்த்தி இளவரசியின் ஒரே மகன் தான் கௌதம் வாசுதேவ் சக்ரவர்த்தி… எப்போதும் இறுக்கமாக இருக்கும் வாசுவின் முகம் அவள் ஒருத்தியிடம் மட்டும் தான் மென்மையாக இருக்கும்… அந்த முகத்தை அவனின் நண்பர்கள் வட்டம் கூட இதுவரை பார்த்தது இல்லை… ஏன் அவனின் பெற்றோர்கள் கூட பார்த்தது இல்லை….

அவன் எப்போதும் வெளி உலகத்திற்கு மிக சிறந்த பிசினஸ்மேன்…. அவன் தொட்ட எந்த தொழிலும் தோல்வி என்று அடைந்ததே இல்லை…. அவன் அடைந்த முதல் தோல்வி அவன் காதல் மனைவி இன்று வீட்டை விட்டு சென்றது தான்…. 

சக்ரவர்த்தியின் கார் அடுத்த பத்து நிமிடத்தில் இளவரசியின் அண்ணன் வீட்டில் நின்றது…. சக்ரவர்த்தியின் வீட்டை விட சிறிய வீடு தான் என்றாலும் இளவரசியின் அண்ணன் வீடும் கொஞ்சம் பெரிய வீடு தான்….

கார் வந்து  நின்றதை பார்த்த இளவரசியின் அண்ணன் வரதராஜன் சந்தோசமாக காரின் அருகில் வந்தவர் அழுது கொண்டே இறங்கிய தங்கையை பார்த்து வேகமாக வந்து தன் தங்கையை தோளோடு அணைத்து “அரசி ம்மா என்ன ஆச்சு ஏன்டா அழுகுற….” என்று கேட்டார்…

அப்போதும் அழுது கொண்டே இருந்தார் இளவரசி… சக்ரவர்த்தி தான் வீட்டில் நடந்ததை கூறினார்….. பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த வரதராஜனின் மனைவி கோகிலா அனைத்தையும் கேட்டவர் இளவரசியிடம் “நானும் அப்போவே சொன்னேன் கேட்டியா அந்த பொண்ணை வீட்டுக்குள்ள விடாதனு… இப்போ பாரு என்ன பண்ணி இருக்கானு… அரசி உள்ள வா போகலாம்… அண்ணா நீங்களும் வாங்க” என்று அரசியை கையோடு அழைத்து கொண்டு உள்ளே சென்றார் கோகிலா….

முதலில் அரசியை சோபாவில் அமர வைத்தவர் கிட்சன் சென்று அனைவருக்கும் காபி போட்டு எடுத்து வந்தார்….  காபியை மறுத்த அரசியை மிரட்டி குடிக்க வைத்த கோகிலா சக்ரவர்த்தியிடம் “என்ன பண்ணலாம்னு இருக்கீங்க  ண்ணா….. வாசு கூட யாரோ போய் இருக்காங்களா….” என்று கேட்டார்…

“தெரியல கோகி ம்மா … ஆனா கண்டிப்பா திலீப் போய் இருப்பான்னு நினைக்குறேன்…  நானும் மாமாவும் இன்னொரு பக்கம் போய் தேடுறோம்… இவளை மட்டும் பாத்துக்கோ ம்மா… மாமா கிளம்பலாமா….” கேட்டார் சக்ரவர்த்தி…

அவரும் சரி என்று கூறியதும் இருவரும் இன்னொரு பக்கம் தேட சென்றுவிட்டனர்… 

அங்கு கோவமாக சென்ற வாசுவோ தன் உயிர் நண்பன் திலீப் வீட்டிற்கு தான் சென்றான்… அங்கு தீலிப்பும் தயாராகி இருக்க இருவரும் வாசுவின் காதல் மனைவியை தேடி சென்றனர்….

திலீப் எதுவும் கேட்கவில்லை… கேட்டாலும் அவன் சொல்ல மாட்டான் அது வேறு விஷயம்…. மதியம் தேட ஆரம்பித்தவர்கள் இரவு வரை தேடியும் அவள் கிடைக்கவில்லை…

ஓங்கி ஜீப் ஸ்டீயரிங்கில் குத்தியவன் “அம்மு யாரோ சொன்னாங்கனு என்னை நம்பாம வீட்டை விட்டு போயிட்டல…. எங்க போனாலும் கண்டு பிடிச்சுடுவேன்னு தெரிஞ்சும் என்கிட்ட கண்ணாமூச்சி ஆடுறல… நான் இல்லாம ஒரு மணி நேரம் கூட இல்லாத நீ இன்னிக்கு அரை நாள் நான் இல்லாம இருக்குறல….. கண்டு பிடிப்பேன் அம்மு உன்னை….. உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் நாளைக்கு விடியுற அப்ப உன் முன்னாடி நான் இருப்பேன் அம்மு….” கத்தியவன் வேகமாக ஜீப்பை ஓட்டினான்….

பக்கத்தில் அமர்ந்து இருந்த திலீப் தான் உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தான்….

இங்கு அனைவரும் தேடிக் கொண்டு இருந்தவளோ ஒரு டவுன் பஸ்சில் அழுது கொண்டே ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தாள்… அவளுக்கு தெரியும் அவள் கணவன் இந்நேரம் வீட்டையே இரண்டாக்கி இருப்பான் என… அதுவும் தன் மேல் கொலை வெறியில் இருப்பான் என நன்றாக தெரியும்… ஆனால் தான் அவனுக்கு சரியான ஜோடி இல்லை என நினைத்து அவனை விட்டு பிரிந்து வந்து விட்டாள்…. அவள் சைந்தவி…. மற்றவர்களுக்கு சைத்து… அவளவனுக்கு மட்டும் சவி அல்லது அம்மு தான்… அதிகம் அம்மு என்று தான் அழைப்பான்…

இரவு மணி எட்டை எட்டி இருக்க அவள் இறங்கிய இடமோ திருச்செந்தூர்… மதியம் பன்னிரண்டு மணிக்கு பஸ் ஏறியவள் பஸ் மாற்றி மாற்றி ஏறி கடைசியில் இறங்கியது என்னவோ திருச்செந்தூரில் தான்…

அவள் இறங்கியதும் அவள் பக்கம் ஒரு வண்டி வேகமாக வந்து நின்றது… முதலில் பயந்து அவள் வந்த ஆளை பார்த்து பெருமூச்சு விட்டு “நீ தானா திவி நா நான் பயந்தே போயிட்டேன்…” என்று கொஞ்சம் திக்கி திக்கி கூறி முடித்தாள்..

“உன் மேல பயங்கர கோவத்துல இருக்கேன் சைத்து… எதுவும். பேசாம வண்டில ஏறு…. வீட்டுக்கு போய் பேசலாம்…” என்று தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள் திவ்யா…. சைந்தவியின் உயிர் தோழி….

திவ்யா ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருக்க அன்று விடுமுறை என்று மதியம் நான்கு மணிக்கு நிம்மதியாக மதிய உணவை உண்டுவிட்டு உறங்கி கொண்டு இருந்தாள்… மாலை ஆறு மணி வரை ஆழ்ந்த உறக்கம்….

முதல் தடவை அவளின் அலைபேசி சத்தம் குடுக்க யார் என்று எடுத்து பார்த்தவள் நம்பர் வந்ததும் எடுக்காமல் மீண்டும் உறங்கிவிட்டாள்…. மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் கோவமாக போனை எடுத்தவள் அந்த பக்கம் சைந்தவியின் அழுகை குரல் கேட்டதும் அமைதியாகி அவளிடம் பேசினாள்….

சைந்தவி கூறியது இது மட்டும் தான்…. “திவி நான் வீட்டை விட்டு வந்துட்டேன்… உங்க வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்.. என்னை எதுவும் கேட்காத…  நான் இங்க கேட்டேன் ரெண்டு மணி நேரத்துல திருச்செந்தூருக்கு பஸ் வந்துடும்னு சொன்னாங்க…. தயவு செஞ்சு மாமா கிட்ட மட்டும் இதை சொல்லாத….” என்று கூறி வைத்துவிட்டாள்….

அதில் இருந்து பயந்தவாறே அமர்ந்து இருந்தாள்… அவளுக்கு தான் தெரியுமே வாசுவின் காதலும் கோவமும்…. “ஐயோ இந்த முட்டாள் என்ன இப்படி பண்ணி வெச்சு இருக்கா… அண்ணா கிட்ட வேற சொல்ல வேண்டாம்னு சொல்லி இருக்கா…  முதல்ல அவ வீட்டுக்கு வந்ததும் அவ கிட்ட என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்கனும்” என்று தனக்குள் பேசியவாரு அமர்ந்து இருந்தாள்…

எழரை மணிக்கே பஸ் ஸ்டாண்ட் வந்தவள் வரும் பஸ் அனைத்திலும் சைந்தவி இறங்குகிறாளா என்று பார்த்து கொண்டு இருந்தாள்…. 

கோவமாக வண்டியை எடுத்தவள் மெதுவாக தான் வீட்டிற்கு சென்றாள்… அவளுக்கு வேகம் என்றாலே பயம் தான்… தன் கோவத்திலும் தோழியின் பயத்தை அறிந்து மெதுவாக தான் வண்டியை ஒட்டி கொண்டு வீட்டிற்கு சென்றாள்…

 

இங்கு இப்படி இருக்க திருச்சியில் புயல் வேகத்தில் ஜீப்பை ஓட்டி கொண்டு இருந்தான் கௌதம் வாசுதேவ் சக்ரவர்த்தி…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
15
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Super start ji… 🥰
      Puyal pola hero🔥… Poo pola heroine.. 🌷

    2. எல்லாம் தெரிஞ்சும் ஏன் போறா??… சீக்கிரம் கண்டுபிடிச்சு, காரணத்தையும் சொல்லுவான்னு வெயிட்டிங்!!… இன்ட்ரஸ்டிங்!!!