ஹாய் நட்புறவுகளே… இங்க யாரெல்லாம் ஹீரோ ஆர்மி இருக்கீங்க? உங்களுக்கு கதைகள்ல வர்ற நாயகனைப் பிடிக்குமா? இல்ல நாயகனை மட்டுமே பிடிக்குமா… நம்ம கதையில நம்ம ஹீரோ இப்படி இருக்கணும்பா, அப்டின்னு ஹீரோ மெட்டீரியலை பார்த்து பார்த்து உருவாக்குறது தான் உங்க ஸ்பெஷாலிட்டியா? அப்போ இது உங்களுக்கான நாவல் போட்டி தான்.
எஸ்… தூரிகை தமிழ் நாவல்கள் தளம் நடத்தும் “மிஸ்டர் ஹீரோ!” நாவல் போட்டி.
நீங்க உருவாக்குற ஹீரோ நெகட்டிவ் ஷேட்ஸ் இல்லாம, கெத்தா, கேரிங்கா, லவ்வபிளா… இன்னும் எப்படி எல்லாம் இருக்கணும்னு நினைக்கிறீங்களோ அதை வச்சு நாயகனை உருவாக்கலாம். அவன் அன்பை கோபமா காட்டலாம், பாசமா காட்டலாம், நேரடியா காட்டலாம், மறைமுகமா காட்டலாம், காமெடியா காட்டலாம், சாப்பிட்டுக்கிட்டே காட்டலாம், தூங்கிக்கிட்டே காட்டலாம், அழுதுகிட்டே கூட காட்டலாங்க. ஆனா அவனோட அன்பால ஸ்தம்பிச்சுப் போகுறது நாயகி மட்டும் இல்ல வாசகர்களாவும் இருக்கணும்.
பக்கா ஹீரோ மெட்டீரியலை உருவாக்கி ரசிக்கத் தயாரா…? அந்த ஹீரோ மெட்டீரியலை வச்சு ஒரு அழகான காதல் கதையை உருவாக்குங்கள்!
காமெடி, க்ரைம், சஸ்பென்ஸ், பேமிலி டிராமா, பாண்டஸி இப்படி எந்த வகையினூடும் கலந்து மனம் கவரும் காதல் கதையை எழுதலாம்.
இப்ப இருந்தே உங்க கதையை நீங்க ஆரம்பிக்கலாம் நட்புகளே…
ஜுலை 23, 2025 முதல் அக்டோபர் 31 வரை போட்டி நடக்கும். டிசம்பர் பதினைந்திற்குள் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வார்த்தை அளவு : 25000 முதல் 50000 வரை இருக்கலாம்.
போட்டியில் முதல் பரிசு பெறும் கதை யான் பதிப்பகம் வாயிலாக புத்தகமாக வெளிவரும். அப்புத்தகம் புத்தகத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும்.
முடிவு பெறும் போட்டிக்கதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மொத்தம் ஐந்து கதைகள் வரை தேர்ந்தெடுக்கப்படும். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை தலா மூவாயிரம் வழங்கப்படும்.
நான்கு மற்றும் ஐந்தாம் பரிசாக, ரூபாய் ஆயிரம் வழங்கப்படும். கதைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே சிறப்பு பரிசுகளும் தீர்மானிக்கப்படும். கதைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பின், பரிசுகளின் எண்ணிக்கையும் குறையலாம்.
வோட்டிங் மூலம் முதல் கட்ட வாக்கில் தேர்ந்தெடுக்கப் படும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
வெற்றி பெறும் வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் பொருட்டு சீல்டு வழங்கப்படும்.
வாசகர்களுக்கான சிறந்த விமர்சகர் ஷீல்டுகளும் உங்கள் வீடு தேடி வந்தடையும்.
வோட்டிங் ப்ளஸ் நடுவர்கள் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தள வேறுபாடுகள் இன்றி யார் வேண்டுமென்றாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியை நேர்மையுடன் நடத்துவதே எங்கள் நோக்கம்.
நிச்சயம், போட்டியில் பதிவு செய்யப்படும் கதை புதிய கதையாக, சொந்தப் படைப்பாக இருத்தல் அவசியம்.
இம்முறை எழுத்தாளர் பெயர் மறைத்தே போட்டி நடைபெறவிருக்கிறது. எனவே, போட்டி முடிந்து முடிவுகள் வரும் வரை, எழுத்தாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடாது.
கெஸ்ட் எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
மனதை வருடும் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கலாம். அதே நேரம், முகம் சுளிக்க வைக்கும் படுக்கையறைக் காட்சிகளைத் தவிர்ப்பது நலம்.
எழுத்துப் பிழை, இலக்கணப் பிழைகள் அதிகம் இருப்பின் வெற்றி வாய்ப்பு நழுவிப் போகலாம்.
போட்டியில் பங்கேற்க, 8124489417 என்ற எண்ணிற்கு வாட்சப் செய்யலாம் அல்லது megavani.writer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கதைப்பெயரைப் பதிவு செய்யலாம்.
பதிவு செய்யும் இறுதி நாள் : ஆகஸ்ட் 10
போட்டி தொடங்கும் நாள் : ஜூலை 23, 2025 (இன்றிலிருந்தே)
போட்டி முடிவடையும் தேதி : அக்டோபர் 31, 2025
போட்டி முடிவுகள் வந்த பின், ஒரு மாத காலத்திற்கு புத்தகம் பதிப்பிக்கப்படும் கதை தவிர மற்ற கதைகள் தளத்தில் இருக்க வேண்டும்.
Mr. Hero போட்டியில் கலந்து கொண்டு, வாசகர்கள் மனத்தைக் கொள்ளைக் கொள்ளும் அசத்தலான நாயகனை உருவாக்கிட வாழ்த்துகள்.