Loading

                                 கண்ணம்மா(இருவேறு காதலின் அறிமுகம்❤️💙)-1

கண்ணம்மா;

அவள் ஒரு ஓவியம்
தமிழே கண்டெடுத்த காவியம்
இயற்கையின் நடுவில் அவள் குழந்தை
அதை பாதுகாப்பதே அவளின் ஒரே சிந்தை.

அன்று ஒரு நாள்;

10 வயது தமக்கையை பள்ளியில் சேர்க்க சென்றாள்,கண்ணால் காண முடியா சோகத்தை கண்ணார கண்டாள் கண்ணம்மா.
மகிழுந்தில் பயணித்த மதியழகன் மதியிழந்து ஓட்டியதால்
மண்டையில் இரத்தம் சொட்ட விபத்தைக் கண்டான்!!

மதியழகன்;

கண்ணம்மாவை காதலால் மயக்கிய ஒருவன். காதலை மாலையாய் தினமும் சூட்டி அவள் கருவிழிகளைத் திருடியவன். அவனை இரத்த வெள்ளத்தில் கண்டவளின் இரத்த நாளங்கள் வெடித்தது. மதியிழந்த அவன் இப்போது நினைவுகளையும் இழந்தான்.

மயங்கிய அவனை மார்போடு அணைத்தவள்
அழைத்தாள் அவசர ஊர்தி 108-டிற்கு
கண்ணம்மாவிடம் மனதை இழந்தவன் ,இன்று மனநிலை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

மருத்துவமனை ;

வெள்ளை அங்கியில் செவிலிகளின் அணிவகுப்பு.
மயங்கி கிடந்த மதியழகன் மயக்கம் தெளிந்து எழுந்தான்.
வெள்ளை தேவதைகளுக்கு மத்தியில் வெள்ளந்தியாய் நின்ற தம் காதல் தேவதையைக் கண்டான்.

அன்பே கண்ணம்மா :

என் ஆருயிரே
என் உயிரை மீட்டெடுக்க
இப்புவியில் நீ உருவெடுத்தாயோ!
விதியின் விளையாட்டா இது இத்தேவதையில் விழிகள் என்னைக் கண்டது.
இன்பத்தில் பூரித்தவன்
இதயத்தை மீண்டும் பரிகொடுத்தான்.
வார்த்தைகளால் மீண்டும் தொடுத்த மாலை
அவள் இதழ்களை மௌனமாக்கியது,
இரத்தம் வழிந்த அவன் நெற்றியில் முத்தமிட்டாள் கண்ணம்மா.

விபத்து உன்னை பயத்தில் வீழ்த்திடலாம் வீறுகொண்டு எழு அன்பே நீ தமிழன் என்று வீரவார்த்தையை கூறினாள் கண்ணம்மா.
விபத்தைக் கண்டவன் விழிப்புற்றான்
கண்ணம்மாவின் கண்களை கவலையோடு நோக்கினான்.

கண்ணம்மா என் காதல் கனவே ,என் அருகில் நீ இருக்க  விதி என்னை விழுங்க முடியாது,
என் துணையாய் நீ நடக்க காலத்தால் என்னை கடத்த இயலாது.
கவலை கொள்ளாதே அன்பே
கணவனாக உன் காலம் முழுதும் உன்னை கண்ணில் புதைத்து காப்பேன்.

  என் விழியில் வசிப்பவனே
  இப்போது விடைபெறுகிறேன்
  உன் உடல்நலம் காக்க
  உன் துணையாய் வருவேன் காத்திரு
  விழிகள் அலைப்பாய விடைபெற்றாள் கண்ணம்மா!!

பேருந்து பயணம்:

 கண்ணில் கண்ணீர் மல்க மனதில் கவலை குடிகொண்டது

 காதல் கணவனால் வந்த கண்ணீரோ!!
  இல்லை, கண்ணம்மா  காலத்தின் கொடுமையால் தாயை இழந்தவள், தமக்கைக்கு தாயாய் வாழ்பவள்.
தாரமாய் மாறினால் தமக்கையின் நிலை தனிமை தானே. இதுவே இவளின் கண்ணீருக்கு காரணம். சிந்தித்தாள்,சிறுமிக்கு தாயா? சந்தித்தவனுக்கு தாரமா?
 காதலை விட்டு கடமையில் கண்ணானாள்.

கண்ணம்மா வீடு:
  முற்றத்தில் நின்ற வேப்பமரத்தின் முனுமுனுப்பா இல்லை, முட்டி மோதிக் கொண்டிருக்கும் அவளின் மனக் குறலா தெரியவில்லை,
 நெஞ்சம் சரிகமபா பாட
 மனது சங்கீத தொனிக்கு இசைமீட்ட சட்டென புகுந்தாள் வீட்டின் தாழ்வாரத்திற்க்குள்.
 தங்கை வரும் நேரமானதால்
 தாமதிக்காமல் தயார் செய்தால் மாலை சிற்றுண்டியை.

அறிவழகி ;

கண்ணம்மா வீட்டின் கடைக்குட்டி சிங்கம்.
குணத்தில் சுட்டிக்காரி,
படிப்பில் கெட்டிக்காரி,
பத்து வயது கடந்த நிலையில் பாதியில் தாயை இழந்தாள்.

தாயின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து, அக்காவை தாயாய் அணைத்து, துள்ளி விளையாடும் வயதில், பள்ளிப் படிப்பில் குறும்பை மறைத்தவள்!!
அது சோதனையோ, கடவுள் கொடுத்த வேதனையோ,
உலகில் அவதரிக்குமுன்
அப்பாவை அள்ளி கொடுத்தவள் என்ற அவச்சொல் பெற்றாள்.
அன்போடு அரவணைத்த தாயையும் இழந்தாள்.
எத்தனை வேதனைகளில் நீச்சலடிக்குமோ,
இப்பிஞ்சின் பொற்பாதங்கள்.

அறிவழகியின் வகுப்பறை ;

அன்போடு பழகினால் அனாதை பட்டம் வந்துவிடுமென்று, அளவோடு பழகுபவள் அறிவழகி.
தோழமையை வெறுத்தவள்,
தோழியானால் பாட புத்தகங்களுக்கு.

அன்றும் ;

பள்ளிக் கட்டணத்தொகை ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர்.
பாவம் அவளுக்கு படிப்பில் அர்வம் அதிகம், ஆனாலும்
கையில் பணம் குறைவு.
தாய் தந்தை இல்லா நிலையில் தவமிருந்தா பெறமுடியும் இத்தொகையை.
பள்ளி முற்றிற்று,
பயணமானாள் தன் பழமை வாய்ந்த வீட்டிற்க்கு.

பயணிப்போம்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்