குளிர் ஊசி – 9 ❄️
சரண் சென்றவுடன் எரிச்சலுடன் அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை அழைத்து ஆபிஸ் எங்கே என்று கேட்டாள்.
அதில் அவன் குடில் போல் இருக்கும் வீட்டைக் கூட காண்பிக்காமல் குடிலுக்கு கெஸ்ட் ஹவுஸ் போல் இருக்கும் ஒரு இடத்தைக் காண்பித்தான்.
பேருக்கு மேலே மட்டும் துணியை விரித்து வைக்க, சதுரத்தின் நான்கு மூலையில் கம்பு தான் தாங்கி கொண்டிருந்தது. கீழே விலாசமாக இருந்தது. அதனைக் கண்டு மேலும் எரிச்சலுற்று அங்கே சென்று வாசல் என்று பெயருக்கு இருந்ததின் முன் நின்றாள்.
“ஹவ் மச் டைம் வில் யூ வெயிட் டு ஆஸ்க் ? ” ( இன்னும் எவ்வளவு நேரம் கேட்கிறதற்கு காத்திருப்பீங்க? )” என்று ஒரு ஸ்காட்டிஸ் ஆடவன் கேட்டான்.
அதிலேயே புரிந்தது தான் நின்று கொண்டிருப்பதை அவன் கவனித்துள்ளான் என்று . ஆனால், சிறிதும் பயம் இல்லாமல் ” ஷூட் ஐ ஆஸ்க் பெர்மிஷன் ஃபார் திஸ் நோ டோர் டென்ட் ? ” (கதவு இல்லாத குடிலுக்கு அனுமதி கேட்க வேண்டுமா? ) என்று கூறியவுடன் அவ்வாடவன் சிரித்துக் கொண்டே “நோ நீட் ” (தேவையில்லை) கூறினான்.
அதில் ஜனனி மனதிற்குள் யாருக்கிட்ட என்று நினைத்து அரை நொடி கூட ஆகவில்லை அவ்வாடவன் உள்ளே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து அவளின் அப்பாயின்மெண்ட் ஆர்டர்ரை கேட்டு இதயத்துடிப்பை எகிறினான்.
முப்பதிரண்டு பல்லும் தனக்கு சரியாக தான் உள்ளது என்பதை காண்பிக்கும் பொருட்டு சிரித்து சமாளித்தாள். அதனை கண்டு கொள்ளாமல் வேறு ஒருவரை சந்திக்க சொல்லி அனுப்பினான். இவளும் சிரித்துக் கொண்டே “சாரி “என்று கூற, “இட்ஸ் ஓகே” என்று அவனும் சிரித்துக் கொண்டு சாதாரணமாக தான் கூறினான்.
அதில் ஒரு வில்லங்கம் உள்ளது என்பது பின்பு தான் புரிந்தது அவளுக்கு . செல்லும் அவளையே நக்கலாக பார்த்தான். அவள் அந்த டென்டின் முன் நின்று அவன் கொடுத்த குறிப்பேட்டை பிரித்தாள். அதில் தமிழனின் பெயர் இருப்பதைக் கண்டு ” வாவ்…… பையன் எவ்வளவு நல்லவன். நம்ம கலாய்ச்சாலும் நல்லது தான் செஞ்சிருக்கான். பரவாயில்லை ” என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அந்த டெண்டினைத் திறந்து ஒருவன் வெளியே வர, இவள் உள்ளே போனாள். அங்கு அமர்ந்திருக்கும் ப்ளைட்டில் பார்த்த மாயவனைக் கண்டு வியந்து தன்னை மறந்து “வாவ்…… ” என்று கொஞ்சம் சத்தமாகவே கூறினாள்.
நிமிர்ந்து அவளின் ஆர்டரை வாங்க கைநீட்டியவன் “வாட்…… ” என்று கேட்க, தன்னை சமன் செய்து “கு ….கு……. குட்….. குட் மார்னிங் சார் ! “
“எஸ் …. குட் மார்னிங் ….. யுவர் ஆர்டர் லெட்டர் “
“ஹியர் சார் ” (இதோ) என்று எடுத்துக் கொடுக்க, அதை அரை மணி நேரமாக ஆராய்ந்தான். அந்த அரை மணி நேரத்தில் அவளை அமரக் கூடச் சொல்லவில்லை. முதலில் அவனை ரசித்துக் கொண்டிருந்தவள் நேரம் கடக்க கடக்க கால்கள் வலி எடுத்தது. அதில் முகம் சுணங்கினாள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காமல் “சார்…. மே ஐ சி ………”
“சீனியர் ஆபிஸர் வேலைப் பார்க்கும் பொழுது இப்படி கூப்பிட கூடாதுனு தெரியாதா? இதுக்கு தான் தமிழ் ஆளுங்களை கூப்பிடாதீங்கனு சொல்லுறது ? ” என்று அவன் போக்கில் புலம்பினான்.
அதில் லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. அக்கோபத்தை கட்டுபடுத்த தன்னை சமன்படுத்த முயன்றவள் முடியாமல் “ஹலோ….. ” என்று கூறியவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளின் தேடலில் புருவம் சுருக்கினான்.
பின்பு அதனை உணர்ந்து அவளின் முன்பு தனது பெயர் பலகையை வைத்தான். அதில் மிஸ்டர் . அனந்த மயூரன் பைப்லைன் இன்ஜினியர் என்று பதித்திருந்தது.
அவனின் பதவியைக் கவனித்து விட்டு பெயரைக் காண மனதிற்குள் நினைப்பதாக நினைத்து “என்ன கெட்ட வார்த்தையைலாம் பேரா வச்சிருக்கான் ” முணுமுணுத்து விட்டாள்.
அதில் அவனின் செவிக்கு எட்டியவுடன் மண்டை சூடாகியது. கடுப்பில் நறநறவென பற்களைக் கடித்துக் கொண்டு “மிஸ் …… என்ன சொன்னீங்க ? “
அவன் கேட்கும் விதமே அவனின் செவிக்கு சென்றடைந்து விட்டது என்று புரிய, அதனை சமாளிக்கும் பொருட்டு “ஹலோ, என் பெயர் மிஸ். ஜனனி . அப்புறம் நீங்க எப்படி இன்ஜினியரோ நானும் ஒரு இன்ஜினியர் தான். நீங்க பைப்லைன் இன்ஜினியர் நான் ப்ராஜெக்ட் இன்ஜினியர். சோ ….. நீங்க ஒழுங்கா டிரிட் பண்ணுங்க . புரியுதா ? ” என்று கூறிவிட்டு படபடவென லெட்டரை வாங்கி கொண்டு வெளியேறி விட்டாள்.
அவள் பேச ஆரம்பிக்கும் பொழுது தனது கையில் லெட்டரை வைத்துக் கொண்டு , எதையோ வாய் திறந்து கூற வருவதற்குள் ஜனனியே பேசி விட்டு சென்றாள். புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவனுக்கு. தலையை குலுக்கி விட்டு மறு வேலையை பார்க்க செல்வதற்குள், மறு படியும் உள்ளே புயலென நுழைந்தாள்.
“இன்னும் என்ன ” என்பது போல் அவன் பார்வை இருக்க, நெளிந்து கொண்டே “சாரி சார் ” என்று கூறினாள்.
“ஏன் ” என்பதை விட “எப்படி ” என்பது போல் அவன் பார்க்க, பின்னால் முதலில் சந்தித்த அவ்வாடவன் வந்து நிற்க, அனந்தன் நக்கலாக அவளைப் பார்த்துச் சிரித்தான்.
பின்பு, “என்ன மிஸ். ஜனனி என்ன தான் ரெண்டு பேரும் இன்ஜினியர்னாலும் பைப்லைனுக்கும் ப்ராஜெக்ட்டுக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருச்சா? இதுக்கு தான் தமிழ் பசங்க வேணாம்னு சொல்லுறது. சும்மா எல்லாம் தெரிஞ்சவங்க மாதிரி பேசிறது … சில்லி தமிழியன்ஸ் ” என்று கூறிவிட்டு அவளுக்கான வேலைக்குரிய அட்டவணையை எடுத்துக் கொடுத்தான்.
அட்டவணையை வாங்கி கொண்டவள் “யோவ் பைப்லைனு ரொம்ப பேசாத … அடங்கு …… நீ இந்த ஒரு டிபார்ட்மெண்டுக்கு தான் இன்ஜினியர். நான் இந்த முழு ப்ராஜெக்ட்டுக்கும் இன்ஜினியர். நான் கேக்கிறதை டைம்முக்கு முடிச்சு கொடுக்கிற வழிய பாரு. புரியுதா ? ” என்று கூறி விட்டு அவள் பாட்டிற்கு வெளியில் சென்றுவிட்டாள்.
அருகிலிருந்த ஆடவனுக்கு புரியவில்லை என்றாலும் இவ்வளவு தைரியமாக பேசுகிறாளே என்ற ஆச்சர்யம் அவனுக்கு . அனந்தனோ ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தான். அவள் வெளியில் சென்றதை உணர்ந்து அவ்வாடவன் மெதுவமாக செருமி அவனை சுய நினைவிற்கு கொண்டு வந்து “தேங்க் யூ” என்று கூறிவிட்டு விடைபெற்றான்.
அதன் பின்பே அவன் “யூஸ்லெஸ் இடியட் ” என்று பேனாவை டேபிளில் குத்த, ஜனனியோ “அய்யோ …. என்ன கண்ணுடா சாமி ” ……..
கீர்த்தி ☘️