Loading

ஆதிரை பைலை மும்முரமாக

பார்துக்கொண்டிருக்க  நித்தி “என்ன

ஆதி   சாப்பாட்டுக்கு எல்லாரும்

போயாச்சு நீ இன்னும் ஏதோ

பார்துகிட்டிறுக்க  ” இந்த பைலை கம்ப்ளீட்

செஞ்சிட்டா நாளைக்கு லீவ்

போட்டுக்கலாம்

அதான்”அம்மாவுக்காகதானே  அது ஓகே

நீ என்ன அரைமணிநேரமுமா சாப்பிட

போற அள்ளி எடுத்து போட அஞ்சு

நிமிஷம்  அதுக்கு எதுக்கு இவ்வளவு

யோசனை ப்ளீஸ் வாடி எனக்கு பசிக்குது

“என அவள் கொஞ்சலாய் கெஞ்ச “

இதழ்விரித்தவள்  “சரி வா போலாம்”

என்றவாறு  இருவரும் நடந்தனர் இரண்டு

வாய் சாப்பிட மூன்றாவது வாய்க்கு ஏதோ

யோசிக்க “என்னடி அதுக்குள்ள ஸ்டக்

அயிட்ட  என்னாச்சு  இன்னுமா அம்மாவ

பத்தி யோசிக்கிற? _ “இல்ல சூர்யா பத்தி ,

” அவளுக்கு என்ன இன்னும் ரெண்டு

வருஷம் போனா அவளும் வேலைக்கு

போக போறா?! “, ” உண்மைதான் ஆனா

அதுவரைக்கும் “, என்னடி சொல்ற?” ப்ச்

இதுல சொல்ல என்ன இருக்கு நித்தி

இப்ப கம்ப்யூட்டர் கோர்ஸ்  பண்றா

நாளைக்கு வேலைக்கு தேவையான

கோர்ஸ் போகனும்  செலவு இருக்கு, அவ

படிப்பு செலவே முடிய இன்னும் ஒரு

வருஷம் பிடிக்கும்  சேமிப்புனு பார்த்தா

அதுவும் ஒரு ஆறு மாசம்  வரை வரும்

இப்பவே மறுபடியும் சேக்க

ஆரம்பிச்சாதான் அவன் கல்யாணதுக்கு

மேற்படிபுக்குனு …. “புரியுது  ஆதி எல்லா

துக்கு ஒரு வழி இருக்கும் சாப்பிடு

பாத்துக்க லாம்”. அன்று சாய்ந்திரம்

சீக்கிரமே கிளம்பி விட்டாள். தன்

அம்மாவிற்கு மருந்து வாங்க கடைக்கு

சென்றாள் அங்கு தான் அவள் அவனை

பார்த்து அவன் தந்தையிடம் பேசினது

எல்லாம். சாய்ந்திரம்  வெளி கதவு

திறக்கும் சத்தம் கேட்க இந்த நேரத்தில்

யாரென  யோசித்துக் கொண்டிருக்கும்

பொழுதே  “அம்மா ,அம்மா “.. என்றவாறு

உள் நுழைந்தாள் ஆதிரா. “என்ன ஆதி

இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?,  ஏதாவது தல

வலியா? என வினவ “அதெல்லாம்

ஒன்னும் இல்ல இப்ப இருமல் எப்படி

இருக்கு? “ப்பூ  இதுக்கா  இப்படி மனசு

கசகிட்டு சீக்கிரம் வந்த ? ” உனக்கு

எல்லாமே விளையாட்டு தான் இத்தனை

வருஷத்துல நீ தலவலினு சொன்னது

இல்ல  அவ்வளவு ஏன் சோர்ந்து போய்

பார்ததுகூட இல்ல  இப்படி இருக்க

எனக்கு எப்படி வேலை ஓடும்? “அட

கடவுளே ஒரு போன் போட்டாலே

சொல்லியிருப்பேன் இதுக்கு ஏன்

சங்கடம்? சரி விடு இரண்டு முறை

கஷாயம் போட்டு குடிச்சேன் இப்ப

எவ்வளவோ தேவல,   போ நீ போய்  முகம்

கழு விட்டு வா காஃபி போடறேன் “

அப்படியே எனக்கும் “அடி தங்கம் நீயும்

வந்தாச்சா? ” நான்தான் காலையில

சொல்லிட்டு போனேன்ல  என்றவள் நீயும்

அம்மாகாக  சீக்ரம்வந்துடியாக்கா  தப்பு

செஞ்சி டேன் உன் கிட்ட

சொல்லியிருக்கும் நீ கொஞ்சம் ரிலாக்ஸ்

ஆகியிருப்ப இப்படி தவித்து போய்

வந்திருக்கமாட்டே   சாரிகா “, சிசீ  இதுக்கு

எதுக்கு சாரிலாம் தங்கம் டி நீ ” ஆஆ

இந்தா மா மருந்து கொடுக்க

மறந்துட்டேன்மா “என ஒரே  நேரத்தில்

ஒரே மாதிரியாக இருவரும் நீட்ட

புல்லரித்து போனால்  பெரியவள்

ஆனால் வெளி காட்டாமல் ” சரியா

போச்சு இரண்டுபேரும் சேர்ந்து  என்ன

நோயாளி யாவே ஆகிடுவிங்க போல

போங்க, “ரெண்டு பேரும் போய் முகம்

கழுவி உட மாத்தி ட்டு வாங்க காஃபி

குடிக்க ” என்றாள்  . மூவரும் கலைந்து

போயினர்.

வினோவும்  அவன் நண்பர்களும்

உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க  “ராகவ்

இன்னும் எத்தனை மாசம் ஆகும்டா  என்

வேலை விஷயம் முடிய? ” கவலை படாத

மச்சான் இன்னும் ஒரு ஆறுமாசம்

பொறுடா” இன்னும் ஆறுமாசமா ?_வினோ   “நீ 

நினைக்கறமாதிரி ஈசி இல்ல வினோ

இப்பலாம் நிறைய ப்ரோசிசர் ஆகி

போச்சு அவன் மட்டும்  என்ன செய்வான்?

” என்றான் கேசவ். என்னமமோடா எங்க

அப்பா இப்ப கொஞ்சம் சைலென்டா

இருக்கார் இல்லனா கல்யாணம் பண்ண

சொல்லி  எனை  மூட்அவுட்

பண்ணிட்டிருப்பார்”டேய் உனக்கு ஏன்

கல்யாணம் னா அவ்வளவு கசப்பு?

கல்யாணதுக்கும் கனவுக்கும் கனெக்சன்

இல்லடா? _கார்த்தி “யாரு சொன்னா

சிவா கதை தெரியும் இல்ல? “, -ராகவ் “

எல்லாரும் அப்படியே இருப்பாங்களா

“இருக்கமாட்டாங்கனு வை இருக்குற

லிஸ்ட்ல நாம வந்துட்டா”_ராகவ்” நீ 

ஒருத்தன் போதும் அவனை

கெடுக்க”_கார்த்தி  “டேய் எனக்காக  நீங்க

ஏன்டா சண்ட போடுறீங்க ” கொஞ்ச நேரம்

சும்மா இருங்க.”நம்ம வாழ் கையிலும்

பிரியமானவளே மாதிரி அக்ரிமெண்ட்

வாழ்கை இருந்தா எவ்வளவு நல்லா

இருக்கும்  _ராகவ்  .” விளங்கிடும்” -கார்த்தி 

“சரி சரி போதும் நா கம்பனிக்கு போகனும்

பைடா “-வினோ சொல்லி

கிளம்பிவிட்டான் . ஆனால்  காரில்

போகும் பொழுது ராகவ் கடைசியாக

கல்யாணத்தை பற்றி பேசியது ஏனோ

அவன் காதுகளில் ஒளித்துக்கொண்டே

இருந்தது.

தாயும் மகள்களும் ஒன்றாக

அமர்ந்து சாப்பிடு கொண்டிருந்தனர்.

சூர்யா தான் ஆரம்பித்தாள் “அக்கா நா

பார்ட் டைம் ஜாப் போகலாம் னு

இருக்கேன் நீ என்ன சொல்ற? “அப்படினா

என்ன சூர்யா? ” என தாய்  வினவ  ஆதிரை

விளக்கினாள்” அதுமா  படிசிக்கிட்டே

வேலைக்கு போறது”, “எதுக்கு தங்கம்

படிக்கறவைசுல  அனுபவிக்காம  ஏன்

கஷ்ட படனும்? ” எங்க ரெண்டு பேர்

தலையெழுத்துதான் இப்படி இருக்கு

உனக்கு என்னடா? ,”அம்மா  உனக்கு

எப்படி சொல்ல, இரு அதுக்கு முன்னாடி நீ

சொல்லுகா  நா  போகவா?, “நல்ல விசயம்

சூர்யா, நம்பிக்கை வரும் தைரியத்தை

வளர்துக்க உதவும் தப்பில்லை ஆனா நீ

டிசைட் பண்ணு அம்மா சொல்ற மாதிரி

இது அனுபவிக்க வேண்டிய வயசு

ரொம்ப கஷ்டம் இல்லாம பாத்துக்க

அவ்வளவுதான் மத்தபடி நல்ல

டிசிஸன்.”இது போதும் கா என் ப்ரண்ட

தான் சொன்னா அவகிட்டயே பாக்க

சொல்லியிருக்கேன் இன்னும் ஒரு

வாரத்துல சொல்றேனு

சொல்லியிருக்கா  , அம்மா வாழ்கையை

சம்பாதிசிகிட்டும் அனுபவிக்கலாம் நான்

சம்பாதிச்சா  அக்காவும் கொஞ்சம்

வாழ்கையை அனுபவிப்பாள என்ன

நா சொல்றது ?,தாயவள்

கலஙக்கிவிட்டாள் அவளை வாரி

அனைத்துக் கொள்ள ஆதிரை யும்

இணைந்து கொண்டாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்