Loading

இவள் பைக் பற்றியே நினைத்து கொண்டு ஒரு நாள் இரவு தண்ணீர் குடிக்க மேல் இருந்து கீழே வர நினைக்க, தூக்க கலக்கத்தில் படியில் தடுமாறி விட உருண்டு கீழே விழுந்து விட்டாள்.

 

அவளின் “அம்மா……” என்ற சத்தத்தில் எல்லாரும் பதறி ஓடி வந்து, இவளின் நிலையை அறிந்து உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல,

 

“பெருசா அடி இதுவும் இல்ல. நெற்றியில் இரண்டு தையில் போட்டு இருக்கோம். காலில் தான் கொஞ்சம் பலமான அடி. எலும்பு முறிவு இல்லை தான் ஆனா கால் ஜவ்வு விலகி இருக்கு. ஒரு மாசம் காலிற்கு அதிக வேலை, அழுத்தம் தர வேண்டாம். மார்னிங் ஆழைச்சிட்டு போகலாம்” என அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. இருந்தும் அவளை தங்களால்  அளவு நல்லாவே பார்த்து கொண்டனர்.

 

அன்று அவளின் செக் அப் நாள். பிரணவ் சமத்தாக வீட்டில் இருக்க கூட மாதவ் வந்தான். மருத்துவமனை உள்ளே இருவரும் நுழைந்தனர்.

பொறுமையாக மெல்ல  அடி எடுத்து வைத்து வந்தாள் பிரணிதா. அவள் அருகே அவளின் தோள் பையை சுமந்து கொண்டு கண்களால் யாரையோ ஆர்வமாக தேடிக் கொண்டே வந்தான் மாதவ்.

 

அதை கவனித்த பிரணிதா “என்ன மாம்ஸ் வர வர ரொம்ப பொறுப்பா என் கூட ஹாஸ்பிடல் வர மாதிரி இருக்கே. வாட்ஸ் தீ மேட்டர்” என

 

“ஹி ஹி… அது வந்து பிரீ குட்டி உனக்கு என்னால பண்ண முடியற சின்ன ஹெல்ப்” என்று தன் மொத்த பற்களையும் காட்டி சொல்ல,

 

“ஹெல்ப்…. சரி தான். நீங்க பண்ற வேலையில் எனக்கும் என் பிரெண்டக்கும் ஏதாவது பிராப்ளம் வந்துச்சு…. பிரணவை அடிக்க ஒரு பெரிய கட்டை இருக்கே அது தான் பேசும் இப்பவே சொல்லிட்டேன்” என்றவளை பாவமாக பார்த்தவன் மனதில் ‘கட்டுன பாவத்துக்கு அவன் வாங்குறான் வொய் மீ’ கடுப்பாக நினைத்தாலும் இவளின் துணை வேண்டுமே.

 

ஒரு அவளுக்கு அவள் கால் சரியாகி இருந்தது. இருந்தும் அவளால் முன்னை போல் வேகமாக நடக்க முடியவில்லை. சற்று தடுமாறி தான் போனாள். இன்னும் கொஞ்ச நாள் ஆகும் அதற்கு.

 

அன்று மாலை,

 

“மாம்ஸ் நியூஸ் பார்த்தீங்களா. நேஷனல் ஃபக் ரேஸ் அனௌன்ஸ் பண்ணி இருக்காங்க. இந்த முறை கண்டிப்பாக பிரணவ் கலந்துகணும். அது மட்டும் இல்ல ஜெய்க்கணும்” என்று கனவோடு சொல்ல,

 

இவளின் நிலைமை உணர்ந்து “இந்த மாதிரி டைமில் நீ ரிஸ்க் எடுக்கிற மாதிரி இருக்கு குட்டி. நெஸ்ட் டைம் பார்த்துக்கலாம். பிரணவ் கிட்ட சொன்ன புரிஞ்சிப்பான்” என்று பொறுப்பாக மாதவ் சொல்ல,

 

“இல்ல மாம்ஸ் இந்த முறை என் பிரணவ் வீன் பண்ண வைக்கிறேன். பாருங்க” என்று இந்த செய்தியை பிரணவிடம் சொல்ல சந்தோசமாக சென்றாள்.

 

இந்த விஷயத்தை கேட்டு பிரணவ் மிகுந்த ஆனந்தம் கொண்டான்.  “நான் கண்டிப்பா ஜெயிப்பேன் தானே” என 

 

“கண்டிப்பா…. நாளைக்கு மார்னிங் ரெடி யா இரு. நம்ம நேம் ரெஜிஸ்டர் பண்ண போகலாம்” என்று அதற்கு என்ன தேவை என்று எல்லாம் பார்க்க சென்று விட்டனர்.

 

அடையாரில் இருக்கும் இந்த மிக பெரிய கட்டிடம் முன் இருவரும் நிற்க, பலர் இந்த போட்டியில் கலந்து கொள்ள பல மாநிலத்தில் இருந்து பல நாடுகளில் இருந்து வந்து இருக்க,

 

இவளின் முறை வந்ததும் இவளும் இவனின் டீடெயில்ஸ் சொல்ல, ஒருவர் பிரணவ் வை ஆராய்ந்து “நல்லா இருக்கிறவங்களே இதுல நல்லபடியா வண்டி ஓட்டுறது கஷ்டம் இவனை மாதிரி ஆள் எல்லாம் எங்களால்  அல்லோவ் பண்ண முடியாது” என்று முகத்திற்கு நேர சொல்லி விட, என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்த சமயம் இவர்களின் நல்ல நேரம் பியூஸ் அன்று தான் தானும் தன் பெயரை கொடுக்க வந்தான்.

 

வந்தவன் என்ன என்று விசாரிக்க, ஒருவன் மேலோட்டமாக “அந்த மேடம் ஒரு சார் நேம் கொடுக்க வந்தாங்க. ஆனா ஆஃபீஸ்ர் வேண்டாம்னு சொல்லிட்டார்” என்றதும் எதை பற்றியும்  விசாரிக்காமல் தன் தந்தையை   அழைத்தவன்  “டாட் பிரணவ்  கேண்டிடேட் நேம் ரெஜிஸ்டர் பண்ண சொல்லுங்க” என அவரும் அடுத்த நிமிடம் அந்த  செய்து முடித்தான்.

 

அன்றில் இருந்து இருவரும் நிற்க கூட நேரம் இல்லை. மொத்த நேரமும் கிரௌண்ட்டில் தான். வேறு எந்த சிந்தனையும் அவர்கள் மனதில் இல்லை. முக்கியமாக பிரணவ் மனதில் இல்லை. இல்லாதது போல் பார்த்து கொண்டாள் ப்ரணீதா.

மறுநாள் மேட்ச் டே. எல்லாருக்கும் ஒரு விதமா பதட்டம் இருந்தது. ஜான்வி அவனை பார்க்க அவர்களது இல்லம் தேடி வந்தாள். மாதவ் அவளை ஏக்கமாக பார்க்க, அவளின் பதில் என்னவாக இருக்குமோ??

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்