Loading

ஜெய் இழுத்த அதிர்ச்சியில் கையில் இருந்த குவளையை கீழே தவறவிட்டு விட்டாள்.

அந்த கடுப்பில் அவனை முறைக்க, “ஹே..  என்ன அதுக்கு மொறைக்குற.. நீ வந்த உடனே உள்ள வந்து இருந்தா.. இப்டிலாம் ஆகுமா.. நீ அப்டியே கனவு கண்டுட்டே நிக்கவும் தான் நான் உள்ள இழுத்தேன்”, என்று அவன் கைகளை விரித்து கொண்டு சொல்ல,

இன்னும் தான் வெறியாக முறைத்தாள். பதிலுக்கு அவன் வசீகர காதல் பார்வை வீச, அதற்கு மேல் முறைக்க முடியாமல் குனிந்து கொண்டாள் ஸ்வாதி.

“என்ன ஸ்வா.. ரொம்ப கோவமா இருக்கியா”, என்று மெல்லிய குரலில் அவன் குரலில் கேட்க, ஸ்வாதிக்கு சப்தமும் அடங்கி போனது.

“ஆமா நான் வரும் போது நீயும் ரிதுவும் ஏதோ சண்ட போட்டுட்டு இருந்திங்க, என்ன விஷயம்”, என்று அவளை சகஜமாக்கும் பொருட்டு அவன் கேட்க,

அதில் தெளிந்தவள், “அத ஏன் ஆகாஷ் கேக்கறிங்க.. ஹான் நீங்களே சொல்லுங்க.. நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லிட்டு இருக்கேன்”, என்று அவள் சொல்ல வர,

“என்ன கதை”, என்று அவள் தோளில் கை போட, அவனை ஒருமுறை ஏற இறங்க பார்த்து விட்டு, “ஆன் சொல்றேன்னு வச்சுக்கோங்க.. நல்லா திரில்லிங்கான ஒரு இடத்துல அத நிறுத்திட்டு வேணும்னே அதுக்கு மேல நான் சொல்லாமா விட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?”, என்று அவனை கேட்க,

“என்ன பண்ணுவேணா.. அன்னைக்கு மாறி இப்டி”, என்று அவள் இடை வளைக்க, சட்டென சுதாரித்தவள் அவனை தள்ளிவிட்டவள் ஓடியே விட்டாள்.

“ஸ்வா.. எங்க போயிற போற.. திரும்பி என்கிட்ட கண்டிப்பா மாட்டுவ..”, என்று அவள் சென்ற திசையை பார்த்து கத்த, அவன் குரல் காற்றில் கரைந்து போனது.

இந்த காதல் தான் எத்தனை அழகானது..

‘மாலை வேளையில் அந்த கடற்கரை பார்க்க மிகவும் வனப்புடன் இருக்கும்’, என்றும் ‘அந்த இடத்தில் ஒரு சிறிய கொண்டாட்ட விழா ஒன்றிற்கு ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது’ எனவும் அந்த விடுதி ஊழியர் கூறி அவ்விழாவிற்கு இருவரையும் அழைக்க, சூர்யாவும் தியாவை அழைத்து கொண்டு அங்கு சென்றான்.

அந்த ஊழியர் சொன்னது போலவே அந்தி வானம் கொள்ளை அழகை தனதாக்கி இருந்தது. செங்கதிர்கள் கடலுக்குள் புதைந்து கொண்டு இருந்தது. வழக்கம் போல் தியாவிற்கு மிகவும் பிடித்து இருந்தது.

நீலக்கடல் அலைகள் ஏறி நுரை சீறி ‘ஓ’ என்று கதறி ஓலமிட்டு விழுந்தன. பாவம் அந்தக் கடலலைகள், “இராமனுடன் வந்த வானரர்கள் கடலைக் கடந்து இலங்கை செல்ல மிதித்த வருத்தம் தாங்கமாட்டாது,  ‘ஓ’ இன்று வரை கடல் அலைகள் அனைத்தும் அழுகின்றன” என்று சிறு வயதில் அவள் அம்மா சொன்னது கூட  தோன்றியது தியாவிற்கு.

“இந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு சூர்யா”, என்று நயம் பட கூறியவளை ரசனையான பார்த்து வைத்தான்.

அவன் பார்வையை கண்டு கொள்ளாமல் அவ்விடத்தை ரசித்து கொண்டு இருந்தாள்.

அப்போது ஹோட்டல் ஊழியர், விழா ஆரம்பித்து விட்டது என்று அழைக்க, அங்கு விழாக்கள் நடத்துவதற்குக்காக கட்டபட்டு இருந்த சிறிய ஹாலுக்கு சென்றனர்.

வண்ண வண்ண விளக்குகள் அந்த மங்கிய மாலையை எழிலாக காட்டிகொண்டு இருந்தது.

இருவரும் உள்ளே செல்ல மரியாதை நிமித்தமாக வரவேற்புகள் கிடைத்தன.
இருவரும் ஓரிடத்தில் அமர, விழா தொடங்கியது.

“ஹாய்.. ஹெலோ.. வணக்கம். நமஸ்தே.. வந்தனம்.. நான் உங்க சுசி.. இந்த செளிப்ரஷன் பங்கக்ஷநோட, ஹோஸ்ட். இன்னைக்கு நான் சொல்றத தான் நீங்க எல்லாரும் செய்ய போறீங்க..

யாரும் பயப்பட வேணாம்.. உங்கள வேலையெல்லாம் செய்ய சொல்ல மாட்டோம்.. நீங்க எல்லாரும் ஜோடி ஜோடியா இந்த ட்ரிப்ப enjoy பண்ண வந்துருக்கிங்க…

அதை இன்னும் ப்பன்னா மாத்த உங்களுக்காக நிறைய சூப்பரான ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சு வச்சுருக்கோம்..

இது ஒரு கேம் மாதிரி தாங்க மொத்தம் மூணு ரௌண்ட்ஸ் இருக்கு.. எல்லா ரௌண்டுமே எலிமிநேஷன் இருக்கும்..

கடைசியா இருக்க ஜோடிக்கு தான் இந்த போட்டியோட வின்னர்.. அவங்களுக்கு ஒரு அழகான பரிசு காத்திட்டு இருக்கு..

நீங்க எல்லாரும் தயாரா..”, என்று ஏற்ற இறக்கத்தோடு பேசிய தொகுப்பாளினி சுசி பேசிய பின் மைக்கை அனைவர் முன்னும் நீட்ட, அங்கு ஒரு உற்சாக கரகோஷம் எழுந்தது.

“சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்.. இதே எனர்ஜியோட கடைசி வரைக்கும் இருங்க..
இப்போ கேம்ம ஆரம்பிக்கலாமா..”, என்க தியாவும் சூர்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ரௌண்ட் ஒன் என்னனா.. இப்போ எல்லா இடத்துலயும் பாப்புலரா பேச படர, எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஷோ எது?..  என மைக்கை நீட்ட அனைவரும் ஒரு சேர, குக் வித் கோமாளி தான் என்று கூச்சல் இட, ( நானும் தான்.. நீங்க?)

“ரொம்பவும் அருமையா சொன்னிங்க.. அது தான் நம்ப முதல் ரௌண்ட்”, என்று தொகுப்பாளினி சுசி சொல்ல, அனைவரும் அவர்களுக்குள் பேசி கொண்டனர்.

சூர்யாவும் தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள பாவம் இவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

“நானே என்னனு விளக்கமா சொல்றேன்.. அன்பான கணவர்களே.. உங்க மனைவி வாயால சொல்ல சொல்ல நீங்க அதை கேட்டு சமைக்கனும்.. உங்க வைப் எந்த ஹெல்ப்பும் பண்ண மாட்டாங்க.. வாயால தான் சொல்லுவாங்க.. நீங்க அதை கேட்டு சமைக்கனும்”, என்றவள் மேடையில் இருந்து இறங்கி விட,

“தியா.. இதெல்லாம் நம்மலாள முடியுமா..”, என்று சந்தேகமாக கேட்க, “பாத்துக்கலாம் விடு”,என்ற அவளது குரலில் இருந்த நம்பிக்கை சூர்யாவையும் ஓட்டி கொண்டது,

இதோ அதோ என போட்டி தொடங்க, சூர்யாவும் சமைக்கும் இடம் சென்றான். தியா அவனுக்கு சொல்ல காத்து கொண்டு இருந்தாள்.

போட்டி ஆரம்பித்தது, முதலில் தயங்கி ஒவ்வொரு வரிகளில் சொல்லி கொண்டு இருந்த தியா, நேரம் போக தன்னை மீறி அவனிடம் உரிமையாக பேச தொடங்கினாள்.

சூர்யாவின் மனமோ சிறகே இல்லாமல் விண்ணில் பறந்தது. “இந்த ஷோவுக்கு கோடான கோடி நன்றிகள் டா.. நல்லா இருப்பீங்க”, என்று மனதில் பல பாராட்டு உரைகள் வாசித்தான்.

தியா ஒன்று சொல்ல அவன் ஒன்று செய்ய என போட்டி செல்ல, தியாவுக்கு தான் அவனை ரெண்டு மிதி மிதித்தால் என்ன தவறு என்று கூட தோன்றியது.

மிகவும் எளிமையான Bread உத்தாப்பம் தான் அவள் செய்ய சொன்னால், அதை கூட சரியாக செய்யாமல் ஆட்டம் போட்டால், அவள் திட்டதானே செய்வாள்.

“இப்போ எதுக்கு இவ முறச்சுட்டே இருக்கா.. நான் நல்லா தான பண்றேன். என்ன மாதிரி அருமையா சுவையா இங்க இருக்க எவன் பண்றான்..”, என்று எண்ணிக் கொண்டான், அனைவரும் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விட்ட படியே,

அவன் பார்த்தவரை அவனை விட பலர் மோசமாக தான் செய்து கொண்டு இருந்தனர். “நீ செய்டா.. “, என்று தன்னை உற்சாகப்படுத்தி கொண்டான்.

அவன் அலப்பறைகளை பார்க்க பார்க்க தியா தான் மனதில் அவனை வெட்டி கொல்லலாமா இல்லை குத்தி கொல்லலாமா என்று பட்டிமன்றம் நடத்தி கொண்டு இருந்தாள்.

அவனது குரங்கு சேட்டைகளோடு சமையல் முடிந்து விட, அதை தியா சுவை பார்த்தாள், அருமையாக இல்லை என்றாலும் உண்ணும் அளவிற்கு இருந்தது.

“எப்டி இருக்கு.. சூப்பரா இருக்குமே.. நீ என்ன சொல்லி என்ன பாராட்டலாம் னு தான நீ யோசிக்கற.. அதெல்லாம் வேணாம்.. எனக்கு தான் புகழ்ச்சி பிடிக்காது னு உனக்கு தெரியும்ல”, என்று அவன் பெருமை பட,

“கொஞ்சம் நிறுத்து டா.. அவளோ சீன்லாம் இல்ல.. ஓகே அவ்ளோதான்.. எப்படியும் இந்த ரௌண்ட் ஓட நம்மல அனுப்பிரறுவாங்க.. நீ வேணும்னா பாரு”, என்று அவள் மற்றவர்களை பார்த்து கொண்டே சொல்ல,

“தியா நான் ஒரு பார்ன் குக்.. என்னாலாம் எலிமினேட் பண்ண மாட்டாங்க..”, என்று காலரை தூக்கி விட்டான்,  “தலை எழுத்து டா சாமி இதெல்லாம் கேக்கணும் னு.. “, என்று தலையில் அடித்து கொண்ட நேரம்,

அவர்களின் இடத்திற்கு அந்த அற்புதமான உணவை சுவை பார்த்து விட்டு சென்றவர்கள், முடிவுகளை அறிவிக்க ஆயத்தமாகினர்.

இவர்கள் நான்காவது இடத்தை பிடித்து இருந்தனர். மொத்தமாக இரண்டாவது சுற்றுக்கு எட்டு ஜோடிகள் முன்னேறினர்.

முதல் சுற்றில் இருந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னெறியவர்களின் பெயர்களை தொகுப்பாளினி வசித்து முடிக்க, ஆனந்த கரகோஷம் எழுந்து அடங்கியது.

“எல்லாருக்கும்.. பிக் கங்கிராஜுலேசன்ஸ் அண்ட் பெரிய வாழ்த்துக்கள்.. முதல் ரௌண்ட்ல இருந்து ரெண்டாவதுக்கு போறீங்க..

இது தான் திரில்லிங்கான இடம்.. இதுல இருந்து மூணு ஜோடிகள் தான் மூணாவது ரௌண்டுக்கு போக போறீங்க.. சோ.. எல்லாரும் இந்த ரௌண்ட நல்ல பண்னுங்க..”, என்று அந்த தொகுப்பாளினி பெண் சொல்ல,

“தியா நம்ம தான் வின் பன்றோம்.. ரெண்டவதுல மட்டும் இல்ல மூனாவதுலயும்..”, என்று அவளை இடிக்க, “சும்மா இரு டா எரும.. அப்போ தான் அவங்க என்ன சொல்றாங்கனு தெரியும்”, என்றவள் மேடைபேச்சை கவனிக்க தொடங்கினாள்.

“ஆஹா.. என் தியா இப்டிலாம் பேசி எவ்ளோ நாள் ஆச்சு.. நாள் இல்ல வருஷம்.. அச்சு இந்த ஷோ ஏற்பாடு செஞ்சவனுக்கு ஊருக்கு போய் பெரிய கோவிலா கட்டணும்.. அப்றம் போன போகுது இந்த, ஜெய் பயலுக்கு அங்க போட்டி கடை வைக்க ஓரு சின்ன இடம் கொடுக்கலாம்..”, என்று மனதுக்குள்குதூகலித்தான் சூர்யா.

“அடப்பாவி இத ஜெய் கேட்டா என்ன ஆகறது”, என்று அவன் மனம் கேட்க, “ஆமா அவன் பெரிய இவன்.. பாரு”, என்று மனதை அடக்கியவன், ஜெய்யை நினைத்து நெகிழ மறக்கவில்லை.

கல்லூரி நாட்களில் அவள் இப்படி அவனிடம் உரிமையாக பேசினாள். அதன் பின் வாழ்வில் விதி விளையாட, மீதி வாழ்வு சூனியம் ஆனது. பிறகு இன்று தான் எங்கோ ஒரு மூலையில் ஒரு ஒளி வட்டம் சூர்யாவின் விழிகளுக்கு தெரிவது போல இருந்தது.

சட்டென விளக்குகள் எல்லாம் அனைத்து விட, சூர்யா தான், “வேளங்குமுடா.. நல்லா வேளங்கும் என் வாழ்க்கை”, என்று கடுப்பில் நொந்து போனான்.

பின், இரண்டாவது சுற்றை பற்றி கேட்க தொடங்கினான்.  சூர்யா: தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல..
வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக் கேத்தபடி.. வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா..
உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா.. சின்னக் கண்ணே..

தியா: எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது..
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது..
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது..
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது ஓடை..
நீரோடை இந்த உலகம் அது போல ஓடும் அது ஓடும்..
இந்தக் காலம் அது போல..
நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே..
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..

சூர்யா : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லா துளிர்க்குது..
நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம்
ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள்
ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே அழகெல்லாம் கோலம் போடுது

தியா: குயிலே குயிலினமே அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்..

சூர்யா தியா இணைந்து:, தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல..
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக் கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையிலே உள்ளது என்ன என்ன?வண்ணங்கள் என்ன என்ன?..

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல..
திங்கள் வந்து காயும் போதுஎன்ன வண்ணமோ நினைப்புல..

இருவரும் பாடி முடிக்க அரங்கமே அதிர கரகோஷம் எழும்பியது. பாடி முடித்த பிறகு தான் கண்களை திறந்தாள் தியா. அவள் பார்த்தது எழுந்து நின்று தங்களை பாராட்டி வாழ்த்தும் அவையோர்களை தான்.

அதில் மகிழ்த்தவள், சூர்யாவை பார்க்க மெலிதாக சிரித்து வைத்தாள். இருவரும் மேடையில் இருந்து கீழே அங்கும் அதே போல வாழ்த்து மழை பொழிய ஆனந்தமாக இருவரும் அதில் நினைத்தனர்.

ஆம் இரண்டாம் சுற்று கணவன் மனைவியாக இணைந்து பாடல் பாடுவது தான். அதற்கு தான் இருவரும் தங்களுக்கு பிடித்த இசைஞானியின் பாடலை பாடினார்.

இதே பாடலை இருவரும் இணைந்து கல்லூரி நாட்களில் பாடினார். அதனால், இன்று சுலபமாக பாடி முடித்தனர். இருவரும் சில பல நொடிகள் கல்லூரி நாட்களுக்கு சென்று தான் வந்தனர்.

பிறகு மற்றவர்கள் பாடுவதை கவனிக்க தொடங்கினர். “சூர்யா.. இவங்க நல்லா பாடறாங்கள..”, என்று மேலே பாடுபவர்களை பார்த்து தியா சொல்ல,

“என்ன பெருசா பாடறாங்க.. நம்மால விடவா.. நம்மலனு சொல்றத விட.. என்ன விடவா நல்லா பாடறாங்க..”, என்று சற்று பந்தாவக அவன் கேட்க, அவன் வெறியாக முறைத்தாள்.

“ஓகே ஓகே.. மொறைக்காத.. நீயும் ஏதோ நல்லாத்தான் பாடுன..”, என்று பெருந்தன்மையாக விட்டு கொடுக்க, “ஐயா சாமி அந்த புகழ்லாம் எனக்கு வேணாம்.. நீயே வச்சுக்கோ..”, என்று கும்பிடு போட்டவள், முகத்தை திருப்பி கொள்ள,

“வேணாம்னா போ.. எனக்கு என்ன”, என்று உதட்டில் இருந்து பகுமானமான பேச்சு வந்தாலும், மனதளவில் அவன் மகிழ்வுக்கு எல்லை என்பது இன்று இல்லை தான்.

இருக்காதா பின்னே, ஒரு நாளா?.. ஓரு மாதமா?.. இல்லை ஓரு வருடமா?.. முழுதாக இரண்டரை வருடங்கள் தவம், ஆசை, ஏக்கம், பொறுமை.. இன்னும் எண்ணில் அடங்கா உணவர்வுகளை உள்ளடக்கி வாழ்கிறான்.. அவளது இந்த இயல்பான பேச்சுக்காக அவன் காத்திருந்தன தருணங்கள் தான் எத்தனை.

பாடல் பாடும் சுற்று முடிவுக்கு வந்தது.. அனைவரும் போட்டி முடிவுக்காக காத்து கொண்டு இருந்தனர்.

முடிவுகளும் வந்தன, இவர்கள் இரண்டாவது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். இருவரின் மகிழ்வுக்கு எல்லை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

“ஹெலோ.. ஆல்.. எல்லாரும் செகண்ட் ரௌண்ட் வின் பண்ண சந்தோசத்துலயே இருப்பீங்க.. போல.. கம் ஆன் பிப்ல்ஸ்.. அடுத்த ரௌண்ட் போலாம்.. அது இன்னும் இன்டெர்ஸ்டிங்கா இருக்கும்.. என்ன என்னனு சொல்லவா”, என்று மைக்கை நீட்ட, கூச்சல் எழுந்தது.

“ஓகே.. ஓகே.. அடுத்தது.. என்னனா. நீங்க இதே மாறி உங்க பேரோட வந்து டான்ஸ் ஆடனும்”, என்று சொல்ல, சூர்யா உடனே விசில் அடித்து கை தட்ட அங்குள்ள அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்க்க, தியாவும் அவ்வாறு தான் பார்த்தாள்.

“என்ன தியா லுக்கு.. எனக்கு வெக்கமா இருக்கு”,  என்று ஒரு கையால் கண்களை மூட, “இது திருந்தவே திருந்தாது..”, என்று தலையில் அடித்து கொண்டு திரும்பி விட்டாள்.

“ஹான்.. ரொம்ப தான்.. போடி”, என்று தானும் சிலுப்பி கொண்டான். இருவரும் விதி முறைகளை கவனிக்க ஆரம்பித்தனர். “நாங்க பர்ஸ்ட் ஒரு சாங் போடுவோம்.. அதுக்கு நீங்க டான்ஸ் பன்னும் போதே வேற பாட்ட மாத்துவோம் நீங்க அதுக்கு ஏத்த மாதிரி அப்டியே ஷிப்ட் ஆகி ஆடனும். இந்த மாதிரி மாற மாற ஆடனும்.. யாரு சூப்பரா எல்லா சாங்க்கும் ஆடாறாங்களோ அவங்க தான் வின்னர். ஓகே யா.. ரூல்ஸ் புரிஞ்சுதா”, என்று முடித்தாள் வினவாக,

சந்தேகம் இருப்பவர்கள் கேட்க, சூர்யாவோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவனை புரியாமல் பார்த்த தியா, “என்ன யோசனை”, என்று அவனை கேட்க, “அது வந்து.. அது.. கிட்ட வா சொல்றேன்..”, என்று கூற,

“என்ன”, என்று நெருங்கி சென்றவள், வெகு சிரத்தையாக கேட்டாள். “என்ன பாட்டுக்கு என்ன ஸ்டெப் போடலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்”, என்று அவன் சொல்ல, அவனை வெட்டவும் முடியாமல் குத்தவும் முடியாமல் முறைத்து விட்டு திரும்பி கொண்டாள்.

பின், ஒருவர் பின் ஒருவராக குழுக்கல் முறையில் அழைக்க பட, சென்று அழகாய் நடனமாடி வந்தனர். சூர்யா குதூகலமாக காத்துகொண்டு இருந்தாலும், தியாவிற்கு என்னவோ போல் இருந்தது.

அவனோடு ஆடுவது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல. ஆனால் அன்று இருந்த நிலையும் இன்று இருக்கும் நிலையும் ஒன்று இல்லையே. அதே நினைக்கவே அவள் மனம் சொல்லலென வருத்தத்தில் புதைய, தன்னை சிரமப்பட்டு மீட்டு கொண்டாள்.

தியா என்று அவன் உலுக்க, “என்ன”, என்றாள், மெதுவாக “நம்ம தான் அடுத்து. வா.. “, என்று கையை பிடித்து இழுக்க பொம்மை போல் அவன் பின்னே சென்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்