Loading

அத்தியாயம் 9

 

அடுத்த 2 ஹவர்ஸ் மோட்டிவேஷனல் ஸ்பீச் போலவே சென்றது. டிபார்ட்மெண்ட் ஸ்டாப்ஸ், ஹெச்.ஓ.டி, பிரின்ஸிபல், மேனேஜிங் டைரக்டர், வெளியிலிருந்து வந்த கெஸ்ட் என அனைவருமே தங்களது அனுபவத்தையும், மாணவர்களுக்கு வாழ்த்தையும் சொல்லி சென்றனர். முதல்ல கொஞ்ச நேரம் ஆர்வமாகவும், அடுத்து டயர்ட்டாவும், இறுதியில் கொட்டாவியாகவும் நேரம் செல்ல ஆரம்பித்திருந்தது இளைய தலைமுறைக்கு.

 

அடுத்து பேச வந்தவர் அதை புரிந்தாரோ என்னவோ, “கொஸ்டின் அண்ட் ரியாக்சன் செஷனா வச்சுக்கலாமா?” என்றார் வந்ததும்.

 

‘எல்லோரும் அது என்ன?’ என்பதாய் பாக்க. “ஓகே லெட் மீ எக்ஸ்பிளைன். உங்கள்ல யாருக்கு நல்லா ஆடவரும்?” யாருமே கை தூக்காமல் ஒருவரையொருவர் பார்த்தவாறு இருக்க.

 

ஒரு பெரியவர் எழுந்து, “இவேன் நல்லா ஆடுவானுங்கய்யா அதுக்குன்னு 3000 ரூவா செலவழிச்சு ஷூலா வாங்கி மாட்டினியான், இப்ப நீங்க வாத்தியார் கேக்கீக ௭ப்டி கம்முனு உக்காந்திருக்கான்னு பாருங்க ” என்க.

 

“ப்பா சும்மா இருங்கப்பா” என அந்த மாணவன் அவர் கையை பிடித்து பிடித்து இழுப்பதை கண்டுக்காமல் சொல்லி முடித்திருந்தார்.

 

அரங்கமே சிரிக்க, சிரித்த அந்த ஸ்பீச்சர், “உங்க பையன் பெயர் என்ன சார்?” என்றார்.

 

“கைய இழுக்காம இருடே, கேக்குறாவல்ல” என்று விட்டு திரும்பி “வைரம்ங்க” என்க.

 

“கமான் வைரம், கம் டு தி ஸ்டேஜ்” என்றார்.

 

வேறு வழியில்லாமல் நெளிந்துகொண்டே ௭ழுந்தவன் மெதுவாக அந்த மொத்த ஹாலையும் சுற்றிப் பார்த்துவிட்டு முன்னேறினான்.

 

“எந்த ஹீரோ பிடிக்கும், வைரம்?” ௭ன்றார் அந்த ஸ்பீச்சர் அவன் கிட்ட வரவும், “விஜய் சார்” உடனே பதில் வந்தது.

 

“அதான் டான்ஸ் ஆர்வத்துக்குக் காரணமோ?”. 

“இருக்கலாம், இல்ல டான்ஸ் மேல இருந்த ஒரு ஆர்வம். விஜய் நல்லா ஆடுறதனால அவர பிடிக்க காரணமா கூட இருக்கலாம்” என்க.

 

“வெறி குட். ஓகே சியர் அப், அப்ப விஜய் சாங்குக்கே நாலு ஸ்டெப் போட்டுட்டு போங்க” என்று விட.

“ஐயோ வேணாம் சார்” என்றான்.

“ஒரு சின்ன ட்ரை தானே” என ஊக்குவிக்க.

 

அந்த நேரம் ப்ரகலத்தன் உள்ளே நுழைய, “ப்ரகலத்தன் புட் ஒன் விஜய் சாங் பார் ஹிம் மேன்” என்க. 

“சுயர் சார்” என்று விட்டு மொபைலை ஸ்பீக்கரில் கனெக்ட் செய்து சாங் ப்ளே செய்தான். முதலில் வெக்கப்பட்ட வைரம், ஸ்டூடண்ட்ஸ் கைதட்டி ஆரவாரம் செய்ய தயக்கம் தொலைந்து முழு பாட்டிற்கும் ஆடிவிட்டே நின்றான்.

 

“இதுவே என்னோட கொஸ்டினும், அதுக்கு வைரத்தோடு ரியாக்சனும். குட் வைரம், வெரி நைஸ். நெக்ஸ்ட் வேற யாரெல்லாம் இங்க டான்ஸ் பெர்பாமன்ஸ் பண்ண இப்போ ஆசை வந்து ரெடியா இருக்கீங்க?” என தன் அடுத்த கேள்வியை முன்வைத்தார்.

 

பிள்ளைகளைவிட பெற்றோர் குஷியாகி விட, நிறைய ஸ்டுடன்ஸ் அதன்பின் தைரியமாய் முன்வந்தனர். அதில் ஆறெழில் அருகிலிருந்த பெண்ணும் அதன் திறமையைக் காட்டி விட்டு வர, ஜெயந்தி அருகில் இருந்த அந்த பெண்ணின் தாயாரிடம், “சின்னப் பிள்ளையிலிருந்து உங்க பொண்ணு யோகா கத்துக்குறாளா, நல்லா பெண்ட் பண்ணுறா, ஹெல்த்தியும் கூட ரைட்? ” என்க.

 

“ஆமா நிலா அப்பாதான் சேர்த்துவிட்டார். போகப் போக இஷ்டமாகி இப்போ வர டெய்லி மார்னிங் யோகா பண்ணிடுவா” என பேசிக்கொண்டிருக்க.

 

“ஹாய் நிலா”, 

 

“ஹாய் உன் நேம்?” ௭ன்றாள் நிலா. 

 

“ஆறெழில், யோகா நல்லா பண்ணுன. எந்த ஸ்கூல்” என அடுத்தடுத்த கேள்விகளில் நட்பு மலர ஆரம்பித்தது. அன்றைய நாளை லஞ்சுடன் நிறைவு செய்வதாக கூறி, மறுநாளிலிருந்து கிளாஸ் ஸ்டார்ட்டாகும் என முடிவுறை கொடுத்தனர்.

 

ஆடிடோரிய பழக்கத்தில் லட்சு, அமலா என்ற தோழியை புதிதாக பழகிக் கூட்டிக்கொண்டு வர, ஆறெழில் நிலாவை அறிமுகப்படுத்த. நால்வருமே இ.ஸி.இ என்பதால் நான்கு வருடம் உடன் வரயிருப்பவர்கள் என பாண்டை இறுக்கிக் கொண்டனர். லஞ்ச் முடித்து சற்று நேரம் பேசி கொண்டிருந்து விட்டு நிலாவும், அமலாவும் விடை பெற, தானும் கிளம்புகையில் ப்ரகலத்தனை தேடினாள் ஆறு.

 

“ப்ரெசிடெண்ட்ட பாத்தியாடி” ௭ன லட்சு அவள் தலையை உருட்டி தேடுவதை வைத்தே கேட்க.

 

“ஆமா, வந்ததும் பாத்தேன். ஷாக்க பாக்கணுமே., அந்நேரம் அந்த பூன கண்ணு விரிஞ்சது பாரு. செமையா இருந்துச்சுடி” ௭ன கனவுக்கு செல்லவிருந்தவளை.

 

“சரி சரி ரொம்ப பொங்காத. என்னமோ அந்த அண்ணா வீட்டுக்கு வந்துட்டு கிளம்புற மாறி சொல்லிட்டு தான் கிளம்புவியோ. வா நாளைக்கு பாத்துக்கலாம். அல்ரெடி நம்ம 4 பேரும் கத பேசிட்ருந்து லேட் ஆகிடுச்சு, முன்னப் போன உன் அம்மாவையும், என் அப்பாவையும் வேற சமாளிக்கணும், வா” என இழுத்துச் சென்றாள்.

 

அப்படியும் சுற்றி சுற்றி தேடிக்கொண்டே தான் வந்தாள் ஆறு.

 

கொஞ்ச நேரம் அப்படியே வேடிக்கை பார்த்தவாறு வந்த லட்சு, “ஹே எரும, நீ என்ன தேடுனாலும், அந்த அண்ணன கண்டு பிடிச்சுக்க மாட்டடி” என்றாள்.

 

“ஏண்டி நெகட்டிவாவே பேசுற” என அவள் கையில் நறுக்கென கிள்ள.

 

“அடி பாவி வலிக்குதுடி. அங்க முன்ன பாத்து தொல” என்றாள் வலித்தக் கையைத் தேய்த்துக்கொண்டே.

 

“எங்கடி?” என முன்ன, வெளியேறிய ஸ்டூடண்ட்ஸ் கூட்டத்தில் ஆறெழில் தேட.

“செக்யூரிட்டி ரூம் பக்கத்துல உள்ள கேட்ல பாரு” ௭ன்க.

 

“ஐ அம்மாட்ட பேசிட்டுருக்காங்க” ௭ன துள்ளி குதித்தாள். 

“அதுக்குள்ள மாமியாரையும் இன்ட்ரோ பண்ணிட்டியோ?, நா வர 10 நிமிஷம் தானடி லேட்டு, இதெல்லாம் ௭ப்ப நடந்தது”.

 

“எஸ், அதெல்லாம் அப்டி தான், சொன்னாலும் உனக்கு புரியாது” என சுடி நெக்கை தூக்கிவிட்டுக் கொண்டாள்.

 

“தூ இதெல்லாம் ஒரு பொழப்பாடி” என லட்சு முனுமுனுக்க, இருவரும் அவர்களை நோக்கி நடந்தனர், ஆறெழில் இவளை இழுத்து ஓடவே ஆரம்பித்திருந்தாள்.

 

“ஏய் விடுடி வரேன்” என்றவாறே தலையிலடித்துக் கொண்டு உடன் சென்றாள் லட்சு.

 

அவன் அவளுக்காகவே அங்கு நின்றான். கிளம்பும் போது கண்டிப்பாக காண வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தான். அது போலவே கேண்டீனில் இருந்தவன், அவள் அம்மா வெளியேற போவதை கானவும், “கிளம்பிட்டீங்களா ஆண்ட்டி” என வந்து எதிரில் நின்று விட்டான்.

 

“ஆமாப்பா. கொஞ்சம் நோட்ஸ், ஸ்டடி மெட்டீரியல்லா கிடைக்குறதுக்கு அவ டிபார்ட்மெண்ட்ல யாராவது தெரிஞ்சவங்க இருந்தா ரெஃபர் பண்ணி விடுப்பா” என்க.

 

“இதெல்லாம் நீங்க சொல்லணும்மா ஆண்ட்டி” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, வந்த இருவரும் நெருங்கி இருந்தனர்.

 

“போலாமா கிளம்புற நேரத்துல எங்க போனீங்க ரெண்டு பேரும்” என ஜெயந்தி கேட்க.

 

“அண்ணன தேடி தான்” என்றிருந்தாள் லட்சு. அவன் இதழ் பிரிக்காமல் சிரிக்க, ஆறெழில் அவள் கைக்குள் இருந்த தன் கையின் நகத்தால் லட்சு கையை அமுக்க.

 

“ஸ்” என கையை உதறி “எரும” எனத் திட்ட.

 

“எங்க  டிபார்ட்மென்ட் பில்டிங் தேடிட்டுருந்தோம். அப்படியே நாளைக்கு எங்க நாங்க நேரா வரணும், ஐ.டி கார்டு எப்ப தருவாங்க, மொபைல்லா அலோவ்டா, இப்டி ஏகப்பட்ட கொஸ்டின் மார்க் இருக்குல்லம்மா. எல்லாத்தையும் கிளீயர் பண்ணிக்கணும்னு தான், ப்ரெசிடெண்ட்ட பாத்தா கேட்கலாம்னு” என சமாளித்தாள் ஆறு.

 

“அதெல்லாம் நாளைக்கு வந்தா அவங்களே சொல்லிடப் போறாங்க. அதுக்குள்ள என்ன அவசரம். கிளம்புவோமா?” என்றார் லட்சுவின் அப்பா.

 

“ம் போலாம் அங்கிள்” என்றுவிட்டு, “ஆட்டோவா ஷேர் ஆட்டோவாம்மா?” என்றாள் தாயிடம். 

“ரொம்ப வெயிலா இருக்கு. ஆட்டோ புடிச்சே சீக்கிரம் போயிடலாம்” என்றார் அவர்.

 

“சரி இரு அப்ப நா போய் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்” என நகரப் போக. 

“நீ இரு எழில், நா போய் கூட்டிட்டு வரேன்” என நகர்ந்தான் ப்ரகலத்தன்.

 

“அப்ப நீங்க கிளம்புங்க சார். நாங்க போயிருக்கிறோம்” ௭ன்றார் ஜெயந்தி லட்சு அப்பாவிடம். 

 

“இருக்கட்டுமா. ஆட்டோ வரட்டும்” என ஆட்டோவை ப்ரகலத்தன் கூட்டி வரவும் தாயும், மகளும் மூவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

 

“நல்ல பையன் பொறுப்பா இருக்கான்ல” என ஜெயந்தி சிலாகிக்க, ஒரு நொடியில் உயரப் பறந்து இறங்கினாள் ஆறு. ‘அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அன்று போல் இன்றும் முகத்தை திருப்பி சென்று விடுவானோ? நம்மைப் பார்த்தால் எப்படி ரியாக்ட் செய்வான் என்ற குழப்பத்தில் சென்றவளுக்கு, அவன் கிளம்பும்போது வந்து நின்றது பரம திருப்தியே’.

 

அடுத்த நாளும் பரபரப்புடனே கிளப்பினாள். காலையில் அவனைக் காண முடியாமல் போக. கிளாஸ் முழுவதும் செல்ஃப் இன்ட்ரோவில் போனது. நிலா, ஆறெழில், லட்சு, அமலா நால்வரும் இரண்டாவது ரோவில் சேர்ந்து அமர்ந்து கொண்டனர். ஃபர்ஸ்ட் இயர் பிளாக் என தனியாக இருக்க, எல்லா டிபார்ட்மெண்டும் கலந்தே இருந்தனர்.

 

ப்ரேக்கிலும், லஞ்ச்சிலும் அவனை பார்த்துவிட எதிர்பார்த்தாள். சுற்றி தேடியும் திரிந்தாள். நிறைய ப்ளாக் இருக்க, அவன் டிபார்ட்மெண்ட் கண்டுபிடித்து செல்ல முடியவில்லை. ஈவினிங்குள் எல்லா ஸ்டூடண்ட்ஸ் நேம், ஸ்டாப்ஸ் நேம் மனப்பாடமாகியிருந்தது.

 

அன்றைய கிளாஸ் முடிந்து ௭ல்லோரும் கிளம்பி வெளியேற மற்ற மூவரும் பேசிக்கொண்டே வர, எழில் சோர்வாகி விட்டிருந்தாள். அமைதியாகவே வந்தாள்.

 

பைக் ஸ்டாண்டில், பைக்கில் அமர்ந்து அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரகலத்தன். ‘என்ன ரொம்ப சோகமா வாரா?’ என இவன் யோசிக்க. தற்செயலாக இவன் பக்கம் பார்த்தவள், முதலில் சந்தோஷித்து பின் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு, “காலையிலேயே உங்கள தேடினேன்” என இவள் இங்கிருந்தே சைகையில் சொல்ல, 

அவன் அங்கிருந்து “புரியல, என்ன கேக்குற?” என்க.

 

அது இவளுக்கு புரியாமல், மாற்று கேள்வியாக “உங்க ப்ளாக் எங்கயிருக்கு” என்க. 

“என்னம்மா?” என்றான் அவன் வாய் அசைவில் மறுபடியும். இருவரும் கூடயிருந்த மூவரை மறந்துவிட்டிருக்க.

 

அதை அவர்களே  “நாங்களும் இருக்கோம்” என்று ஞாபகப்படுத்தினர்.

 

“அந்த அண்ணா எங்க ஸ்கூல் சீனியர்டி. ரெண்டு பெரும் நல்ல பிரெண்ட்ஸ் அதான் இப்டி பேசுக்கிறாங்க” என லட்சு முந்திக்கொண்டு எடுத்துக் கொடுக்க.

 

“நாங்க கேட்காமலேயே நீயா ஆஜர் ஆகுற” என அமலா கேக்க. 

“ஸ்கூல்ல இருந்து இப்டித்தான் கூஜா தூக்குறியா?” என்றாள் நிலா.

 

“உன் வாய் தாண்டி உனக்கு எமன்” என தன் தலையிலடித்துக் கொண்டாள் லட்சு. இங்கு எதையும் கண்டுகொள்ளாமல் சைகை காட்டும் வேலையை செவ்வனே செய்தாள் எழில்.

 

“யார் மாப்ள அது?” அகத்தியன் வந்து ப்ரகலத்தன் தோளில் கைபோட்டு கேட்க. 

“சைகைலேயே பதில் சொல்றத பாத்துமா தெரியல. சார் சொன்ன ஆல்ரெடி எங்கேஜ்டு, சிஸ்டர் தான் போலடா” என்றான் மூர்த்தி.

 

“டேய் நேத்து தான்டா நீ ரெம்ப நல்லவன்னு பேசிட்ருந்தோம், அதுக்குள்ள நீ அத அழிச்சிட்ட” ௭ன்றான் நாது.

 

“நாங்களும் மூணு பேரு, சிஸ்டர்க்கும் ப்ரண்ட்ஸ் 3 பேர் இன்ட்ரோ பண்ணிவிடுடா” என்றான் மூர்த்தி. 

“சூப்பர்டா மூர்த்தி” அகத்தியன் கை-பை கொடுக்க. 

“அசிங்கமா பேசாதீங்கடா பக்கிகளா, சின்னப் பிள்ளைக” என்றான் ப்ரகலத்தன்.

 

“மாப்ள பேக் டு பார்ம்” என மூவரும் அமைதியாகிவிட. ஆற்றல் பேச முடியாத சோகத்தில் சோகமாகவே “பை” சொல்ல. “சரி நாளைக்குப் பேசலாம்” என தூரத்திலிருந்து “பை” சொல்லி அனுப்பி வைத்தான்.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
23
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்