மஹிமா அப்படிக் கேட்டதும் தீக்ஷிதா அவளை சில கணங்கள் பார்த்து விட்டு ,
” ஷ்யூர் ”
ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டார்கள்.
தீக்ஷிதா,
‘ எதற்கு இவள் தன்னிடம் தனியே பேச வேண்டும் என கூறுகிறாள் ? ஒருவேளை இவளுக்கும், கார்த்திக்கிற்கும் இடையில் காதல் உள்ளதா ? ‘
என்று மஹிமாவைப் பார்க்க,
மஹிமாவோ உரையாடலை எப்படி ? எதிலிருந்து ஆரம்பிப்பது ? எனத் திணறிக் கொண்டு இருந்தாள்.
தீக்ஷிதா ” ஹலோ ! என்னங்க ஏதோ பேசனும்னு சொல்லிட்டு , பேசாம அமைதியா நிக்குறீங்க ? “
மஹிமா ” அது எப்படி ஆரம்பிக்கறதுனு தான் தெரில ! ” என தடுமாறினாள்.
தீக்ஷிதா, ‘ இவ திக்கித் திணறுறதைப் பாத்தா ஏதோ பெரிய விஷயமா இருக்கும் போலயே! ‘
என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது,
மஹிமா ” உங்களுக்கு கார்த்திக்கை ரொம்ப பிடிக்குமா ? “
“ஆமாம். அதுனால தான் போய் புரப்போஸ் பண்ணேன். அதுல உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்கா ? “
தீக்ஷிதாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. ஏனென்றால் , தானும், கார்த்திக்கும் காதலிப்பதாக மஹிமா கூறி விட்டால், அதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை நினைத்து அச்சம் கொண்டாள்.
மஹிமா ” இல்ல. இந்த நாலு மாசத்துல கார்த்திக்கை நீங்க நல்லா புரிஞ்சுகிட்டிங்களா ? ஆர் யூ ஷ்யூர் ? “
தீக்ஷிதா ” என்ன கேட்க வர்றீங்க ? “
மஹிமா ” உங்களுக்கு என் கேள்வி புரியலையா ? இந்த கொஞ்சம் கால அவகாசத்துல கார்த்திக்கைப் பத்தி என்ன புரிஞ்சுகிட்டிங்கனு , அவனை லவ் பண்ண ஆரம்பிச்சிங்க ? “
தீக்ஷிதாவிற்கு ‘ இதைக் கேக்க இவ யாரு ? ‘ என்பது போல் தோன்ற , இருந்தாலும் தனது கணிப்பு சரி தானா ?என யூகிக்கப் பொறுமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து அவளுக்கு விடையளிக்கத் தொடங்கினாள்.
” அவனை நான் நிறைய தடவை பாத்து இருக்கேன். அவனோட கேரக்டர் , அப்பறம் மத்தவங்ககிட்ட நடந்துக்குற விதம் முக்கியமா பொண்ணுங்க கிட்ட கண்ணியமா நடந்துக்கிறான். அதுனால அவனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு “
மஹிமா அவளை ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்து விட்டு,
” உங்க ஜட்ஜ்மெண்ட் தப்புங்க.அவனோட ரியல் கேரக்டர் அது இல்ல. என்கூட பேச சம்மதிச்சதுக்குத் தாங்க்யூ ” நன்றி தெரிவித்து விட்டு மஹிமா அங்கிருந்து சென்றாள்.
தீக்ஷிதாவின் தலைக்குள் இப்போது பல விஷயங்கள் ஓடிக் கொண்டு இருந்தன.
முதல் விஷயம் ‘ கார்த்திக்கின் உண்மையான குணம் இது இல்லையா ? ‘
இரண்டாவது ‘ அவனைப் பற்றி மஹிமாவிற்கு
எப்படி தெரியும் ? ” ஒருவேளை தான் நினைத்தது போல் அவர்கள் காதலர்களாக இருந்தார்களா ? ‘
மூன்றாவது ‘ அப்படி இருந்தால் கார்த்திக் மஹிமாவை தெரிந்து கெண்டது போல் ஏன் காட்டிக் கொள்ளவில்லை ? ‘
நான்காவது ‘ மஹிமா கூறுவது உண்மையா ? பொய்யா ? இப்படி பல குழப்பங்கள் அவளுள் ஓடிக் கொண்டு இருக்க,
தனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கார்த்திக், தமிழைக் கிண்டல் செய்து கொண்டிருந்தான்.அவனை விழி எடுக்காமல் பார்த்து விட்டு நகர்ந்தாள் மஹிமா.
இவர்களை தீக்ஷிதாவின் விழிகள் குழப்பத்துடனும்,ஆச்சர்யத்துடனும் பார்த்தன.
– தொடரும்