Loading

காதல்-8

 

“சொல்லு சாயா”

 

‘ என்ன சொல்லனும்’ என்பதை போல எதிரில் உள்ளவனை பார்த்த பின்பு தான் அவளுக்கு நினைவு வந்தது.

 

” எதுனாலும் சொல்லு சாயா நான் ரெடி” என்று பழனி சிரிக்க, அவனையே இரண்டு நொடி விடாமல் பார்த்தவள் அவளது சுண்டி விரலை நீட்டி அவனை பார்க்க, ” சான்ஸ்லஸ் சாயா நானும் இதான் நினைச்சேன் ” என்றவனது சுண்டு விரலில் அவள் விரல்களுக்கு கோர்த்து கொண்டது.

 

” கண்டிப்பா சாயா நம்ம நல்ல நண்பர்கள் தான் நமக்கு இந்த கணவன் மனைவி உறவு எல்லாம் செட் ஆகாது, அப்பறம் இன்னொரு விஷயம் சொல்லட்டா நீ இந்த முடிவு தான் எடுப்பன்னு எனக்கு ஏற்கனவே தெரியும் , நான் என் லவ்வர் கிட்ட சொல்லி தான் கூட்டிட்டு வந்தேன் ” எந்த பழனி கூற…

 

‘ அடப்பாவி லவ்வரா ‘ என்பதை போல பார்த்து வைத்தாள் சாயா…

 

” ஆமா சாயா நானும் அவளும் இரண்டு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கோம், டெய்லி வேலைக்கு போகும் போது ட்ரெயின் வரும்.. அப்போ நான் கேட் போடுவேன், அந்த நேரம் தான் மேடம் காலேஜ் போவாங்க அப்போ ஒரு லுக் விட்டிட்டே போவா பாரு அப்படியே கால போக்குல அது காதல் ஆகிடுச்சு ” என்று பழனி கண்கள் மின்ன கூறினான்.

 

“இதோ என் காதலி ” என்று அவனது காதலியை சாயாவின் முன்பு நிறுத்தி அறிமுகப் படுத்தினான். ” பேரு அஞ்சலி செம சுட்டி பொண்ணு , எப்படி இருக்கா ” என்று பழனி கேட்க.. ” சூப்பர்” என்பதை போல சைகை செய்து இருவரையும் கண் குளிர பார்த்து வைத்தாள்.

 

” அஞ்சு இவ தான் சாயா உன்கிட்ட சொல்லிருக்கேன்ல என் சின்ன வயசு தோழி”

 

“தெரியும் பழனி, ஹாய் அக்கா நான் தான் இவரோட வருங்காலம், நீங்க இன்னைக்கு என்ன பதில் சொல்லுவீங்கன்னு தெரியாம நைட் முழுக்க நான் தூங்கவே இல்ல  தெரியுமா .. தாங்க்ஸ் அக்கா ” என்று வெகுளியாய் கை பிடித்தவளை கனிவோடு அணைத்து கொண்டாள்.

 

“சரி வேலைக்கு நேரம் ஆச்சு நீ கிளம்பு சாயா நாம அப்பறம் பார்க்கலாம், நானே உன் வீட்ல வந்து பேசுறேன் ” என்று கூறிய பழனியை தடுத்து நிறுத்தி தான் பார்த்து கொள்வதாக சைகை காட்டி விட்டு வீட்டை நோக்கி நடையை கட்டினாள் சாயா.

 

” எங்க டி காலையிலேயே போயிட்டு வர, இன்னைக்கு காட்டுக்கு போகலையா உடம்பு இன்னும் சரி ஆகளையா டி ” என்று  தேனு கேட்க…

 

தலையை மறுப்பாக அசைத்து தமிழ் காதலன் புத்தகத்தின் மீது தலையை வைத்து படுத்து கொண்டாள். ‘ இன்னைக்கு தானே தமிழ் வந்து பேசுறேன்னு சொன்னாரு , கண்டிப்பா வருவாரா, ஐயோ அம்மாவை எப்படி சமாதானம் செய்யுறது ‘ என பல விதமான யோசனைகளில் சிக்கி தவித்தாள்.

 

சூடாக டீயை போட்டு வந்து சாயா முன்பு வைத்தவர் ” கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணிருக்க சாயா” என்று மெதுவாக பேச்சை தொடங்கினார்.

 

அமைதியாக டீயை வெறித்து கொண்டிருந்த தன் மகளை பார்த்தவர் ” உன் மனசுல எதுவும் இருக்கா சாயா… ” என்று தேனு தயங்கிய வண்ணம் கேட்டு வைக்க.. அவரை பரிதாபமாக பார்த்து வைத்தாள் சாயாலி..

 

‘ இப்படி வாய் பேச முடியாம இருக்கிற எனக்கு என்ன மா மனசுல ஆசை இருக்க போகுது ‘ சட்டென்று சைகையால் கேட்டு விட்டவள் அமைதியாக மீண்டும் அந்த புத்தகத்தின் மீது படுத்து கொண்டாள்.

 

” வாய் பேச முடியாதது அப்படி என்ன பெரிய குறை, ஏன் அவங்களுக்கு எல்லாம் ஆசை இருக்காதா சாயா, எனக்கு எப்பவுமே உன் சந்தோஷம் தான் முக்கியம் ” என்று மகளின் தலையை வருடியவாறு ஆரி போன டீயை எடுத்து கொண்டு மீண்டும் சூடு படுத்த சென்று விட்டார்.

 

சாயா மனம் எல்லாம் இப்போது மலை உச்சிக்கு போக வேண்டும் என்று தவித்து கொண்டிருக்க, ஏற்கனவே அங்கு நடந்த சம்பவத்தால் அமைதியாக தன் உணர்வுகளை அடக்கி கொண்டு படுத்து இருந்தாள்.

 

அப்போது அவர்கள் வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க.. சட்டென்று தலை உயர்த்தி வாசல் பக்கம் பார்த்தாள். மறவன் தான் அவள் வீட்டை நாடி வந்து கொண்டிருந்தான்.

 

‘ ஐயோ சொன்ன மாதிரியே வந்துட்டாரு, அம்மா கேட்டா என்ன சொல்லுறது ‘ என மனதிற்குள் தவித்து போனாள்.

 

” சாயா”  என்று வாசலின் அருகே நின்று சத்தமிட தேனு சென்று வரவேற்றார்.

 

” வாங்க தம்பி என்ன இவ்வளவு தூரம், இன்னைக்கு என் மகளுக்கு உடம்புக்கு முடியலை அதான் காட்டுக்கு வரலை ” என்று அவரே யூகித்து ஒரு பதிலை கூறினார்.

 

” ஓஹ்.. ஆனால் நான் பேச வந்தது வேற விஷயம் மா, இப்போ பேசலாமா?”

 

” உட்காருங்க பா” ஒரு நாற்காலியை எடுத்து போட்டார் தேனு.

 

சாயாவை ஒரு நொடி பார்த்தவன் ” எனக்கு சாயாவை ரொம்ப பிடிச்சு இருக்கு, அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன் , நீங்க சம்மதம் சொன்னா மேற்கொண்டு பேசலாம் ” பட்டென்று தான் பேச வந்ததை ஒரு நொடியில் பேசி விட சாயா தான் தவித்து போனாள்.

 

தேனு அதிர்ச்சியாக தன் மகளை பார்க்க, அவளும் கலவரமாக தன் அன்னையை பார்த்தாள்.

 

” இன்னொரு முக்கியமான விஷயம், எங்க ரெண்டு பேரை பத்தி ஊருக்குள்ள ஒரு தப்பான பேச்சு இருக்கு, அதை சரி பண்ணத்தான் இவளை கல்யாணம் பண்ணிக்க கேட்கிறேன்னு நீங்க நினைக்க வேணாம், உண்மையாவே எனக்கு சாயாலியை பிடிச்சு போய் தான் கேட்கிறேன் ” என்று தேனு அடுத்து கேட்க போகும் கேள்விக்கும் அவனே பதிலையும் கூறி விட.. தேனு கையை பிசைந்து கொண்டு நின்றார்.

 

” அது இல்ல தம்பி, உங்களுக்கே நல்லா தெரியும் நீங்க முதலாளி ஆனால் நாங்க அப்படி இல்ல காட்டு வேலை செஞ்சு கஞ்சி குடிக்கிறவங்க , நமக்கு இதெல்லாம் ஒத்து வராது தம்பி ” என்று தேனு தன் மனதில் உள்ளதை கூறி விட்டார்.

 

அவருக்கும் இந்த கல்யாணம் விஷயத்தில் சற்று மகிழ்ச்சி தான் இருந்தாலும் இவ்வளவு பெரிய இடத்தில் தன் மகளை கொடுத்து, வரும் காலத்தில் எதேனும் பிரச்சனை வந்து விட்டால் , அவர்களை எதிர்க்கும் அளவிற்கு கூட தங்களுக்கு தகுதி இல்லை  என்று அமைதியாக இருந்து கொண்டார்.

 

“சாயாவை மட்டும் நீங்க கொடுத்தா போதும் ,அவ கிட்ட இருந்து நான் எதுவும் எதிர்பார்க்கலை.. முதலாளி தான் நான் இல்லனு சொல்லலை ஆனால் நானும் சராசரி மனுஷன் தான் , எனக்கு சாயா வேணும் ” என்று மறவன் மீண்டும் அவன் பிடியில் நிற்க.. தேனு இதற்கு மேல் தன் மகள் எடுக்கு முடிவு தான், அவளுக்கு வந்த நல்ல வாழ்க்கையை நான் தட்டி பறித்ததாக இருக்கக் கூடாது என்று ஒரு முடிவோடு தன் மகளை பார்த்தார்.

 

” நீ சொல்லு சாயா உனக்கு சரின்னா மேற்கொண்டு பேசலாம் ” என்று தன் மகளின் முடிவில் விட்டு விட்டார்.

 

மறவன் தற்போது தன் பார்வையை சாயாலியின் பக்கம் திருப்ப ‘ எனக்கு சம்மதம் ‘ என்பதை போல கட்டை விரலை உயர்த்தி காட்டினாள் சாயாலி. எங்கே தாமதித்தால் தன்னை கொலை கேஸில் உள்ளே தள்ளி விடுவானோ என்ற பயத்தில் உடனே தலையை ஆட்டி வைத்தாள்.

 

சாயாலி தலையை ஆட்டியதும் தேனு அவளை ஆச்சரியம் கலந்த பார்வை பார்த்தார். நேற்றில் இருந்து பழநியுடனான திருமணத்திற்கு சம்மதம் கேட்கும் போது ஒரு வார்த்தை பேசாத தன் மகள் இப்போது மறவன் வந்து கேட்ட அடுத்த நிமிடம் தலையை ஆட்டுவதை பார்த்து தன் மகளுக்கு அவரை பிடித்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் உண்மை அதுவல்லவே.

 

” அப்போ வீட்ல பெரியவங்க வந்து பேசினா முறைப்படி எல்லாம் செய்யலாம் தம்பி ” என்று தேனு தன் மகளை பார்த்து கொண்டே கூற சாயா தலை குனிந்த படி நின்று விட்டாள்.

 

” அப்போ நான் அப்பாவை வந்து பேச சொல்லுறேன் , இன்னொரு முக்கியமான விஷயம் எங்க கல்யாணத்துக்கு அப்பறம் சாயா கூட நீங்களும் என் கூட வந்துடுங்க ” என்று மறவன் கூறிய அடுத்த நொடி சாயா, தேனு இருவரும் உறுதியாக மறுத்தனர் ஆனால் வேறு வேறு காரணங்களுக்காக.

 

” பொண்ணு கொடுத்த இடத்தில நான் தங்க மாட்டேன் தம்பி என்ன மன்னிச்சுடுங்க, இவ்வளவு நாள் என் பொண்ணு எனக்காக உழைச்சதே போதும் அவ உங்க கூட சந்தோஷமா குடும்ப நடந்துனாலே எனக்கு நிம்மதி தான் ”  என்று மறுத்து விட்டார்.

 

” அப்போ நான் சாயா கிட்ட பேசனும் ” என்று மறவன் கேட்க.. தேனு மனதில் பல குழப்பத்துடன் வெளியேறினார்.

 

” என்ன சாயா உடனே ஓகே சொல்லிட்ட ”  என்று அவன் சாயாலியின் அருகே நெருங்க…

 

சற்றும் அசராமல் அப்படியே நின்று கொண்டு ‘ அம்மா நம்ம கூட வர வேணாம், எப்படியும் நான் இங்க திரும்பி வர தானே போறேன் ‘ என்று அவள் செய்கை காட்ட, சற்று நிதானித்து அனைத்தையும் புரிந்து கொண்டவன்.. ” ஓகே உன் இஷ்டம், நெக்ஸ்ட் வீக் கல்யாணம் பண்ணிக்கலாம் , அம்மா தான் வர மாட்டாங்க, நீ வருவ தானே ” என்றவனது வார்த்தையில் நக்கல் தூக்கலாக இருந்தது.

 

அவனை முறைத்து பார்த்தவள் ‘ வருவேன் ‘ என்பதை போல தலை அசைத்தாள்.

 

” அப்போ ஈவ்னிங் ரெடியா இரு, புடவை எடுக்க போகலாம்”

 

‘ வேணாம் ‘ என்பதை போல தலையை ஆட்டினாள் சாயா.

 

” புடவை வேணாம்ன்னா அப்போ ஜீன்ஸ் போட்டு கல்யாணம் பண்ணிக்கிறியா ” என்று கேள்வி கேட்டவனை முறைத்து வைத்தவள்.. ‘ நீங்களே புடவை எடுங்க, நான் வரலை ‘ என்பதை போல கையை ஆட்டி காட்ட , அவள் வாய்பேசது கண்களும் கைகளும் பேசும் அழகை ஒரு நொடி இமைக்க மறந்து பார்த்தவன் ஆட்டி ஆட்டி பேசும் அந்த பிஞ்சு கரத்தை சட்டென்று பற்றி கொண்டான் மறவன்.

 

அதில் அதிர்ந்த சாயா பதட்டமாக அவன் கைகளில் இருந்து தன் கைகளை விடுவிக்க பார்க்க ” ஈவ்னிங் 4 க்கு நான் வருவேன் ரெடியா இருக்கனும் ” என்றவாரே அவள் கரத்தை விடுவித்தான்.

 

அடுத்த நொடி தன் ஆள் காட்டி விரலை நீட்டி , ‘ தொட்டு பேசுற வேலை வேணாம் ‘ என்று அவள் தைரியத்தை வரவழைத்து கொண்டு எச்சரித்தாள்.

 

இன்னும் அவளிடம் நெருங்கிய மறவன் ” எனக்கு உன் மேல எந்த இன்ரஸ்ட்டும் இல்ல சாயா, ஆனால் நீ இந்த மாதிரி என்ன கை நீட்டி பேசும் போது தொட்டா என்ன ? அப்படின்னு என் மனசு சொல்லுது, அதுனால என்கிட்ட பேசுறததுக்கு முன்னாடி யோசிச்சு பேசனும் ” என்று அவள் கன்னத்தில் விழுந்த குழியில் அவன் மனம் விழமால் இருக்க செய்ய பெரும் பாடு பட்டு வீட்டை விட்டு வெளியேறினான் தமிழ் மறவன்.

 

அவன் சென்றவுடன் தேனு அவசரமாக வீட்டிற்குள் வந்தவர் ” சாயா உனக்கு பிடிச்சு தான் இந்த முடிவு எடுத்தியா இல்ல இந்த ஊர் வாய மூட இந்த முடிவு எடுத்தியா ” என்று தவிப்பாக கேட்டார்.

 

அவரையே ஆழ்ந்து நோக்கியவள் மனதை கல்லாக்கி கொண்டு ‘ பிடிச்சிருக்கு ‘ என்று மீண்டும் மேஜையில் படுத்து கொண்டாள்.

 

“தம்பி சாயங்காலம் நாலு மணிக்கு உனக்கு துணி எடுக்க வரதா சொல்லிட்டு போயிருக்காங்க , நீ நல்லா கிளம்பி போகனும்,இப்போ நான் பழனி வீடு வரைக்கும் போயிட்டு வரேன் .. ” என்று தேனு நடையை கட்டி விட்டார்.

 

இப்போது அவள் மனம் சீற்றம் கொண்ட கடல் போல ஆர்பரிக்க தொடங்கியது. இவனை திருமணம் செய்து விட்டால் இந்த கொலை வழக்கில் இருந்து தப்பித்து விடலாம் ஆனால் எத்தனை நாட்கள் இவரோடான வாழ்க்கை என்பது தான் தெரியவில்லை. வாழ்க்கையை இழந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தால் தேனு உயிரை மாய்த்து கொள்வது உறுதி, தன் மகிழ்ச்சிக்காக இருப்பவரை நோகடிக்க விரும்பவில்லை , அதே சமயம் இப்போது அவருக்காக தானே வாழ்கையை பணயம் வைத்திருக்கிறாள்.

 

இதற்கு ஒரே வழி தமிழ் காதலனின் கவிதை .. ஆனால் வாசிக்க மனம் இல்லை..  நேற்று போல் இன்றும் பக்கம் திருப்பி எதையேனும் காட்டி விடுமோ என்ற பயத்தில் மூடி இருந்த புத்தகத்தின் மேல் பென் ஸ்டாண்டை தூக்கி வைத்தவள் அப்படியே அதில் படுத்து உறங்கியும் போனாள்.

 

சரியாக நான்கு மணிக்கு சாயாவின் வீட்டின் முன்பு தமிழின் கார் வந்து நிற்க..  வெளியே வந்த சாயாலியை பார்த்தவன் ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.

 

சனா💝

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்