Loading

காதல் -6

 

தொடர் மழை காரணமாக அன்று காலை எட்டு மணி அளவில் வானத்தை வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் சாயாலி.. நேற்று நடந்தது எல்லாம் கனவாக இருக்க கூடாதா என்று ஒரு மனம் ஏங்கினாலும் மறுமனமோ இல்லை உனக்கு இளைக்க பட்ட அனைத்தும் உண்மை தான் என்று நிதர்சனம் கூறியது.

 

தேநீரை கொண்டு வந்த தேனு அவள் அருகில் வைத்து விட்டு ” மன்னிச்சுடுன்னு கேட்க கூட எனக்கு தகுதி இல்ல சாயா, ஆனால் என் கஷ்டம் என்னனு உனக்கு தெரியும் , ஊரே பேசும் போது உனக்கு தெரியாமலா இருக்கும் ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் நீ என் கிட்ட கேட்டத்தில்ல , எனக்கு நடந்த மாதிரி உனக்கும் நடந்து போச்சுன்னு தான் ஒரு ஆதங்கத்துல வார்த்தையை விட்டுட்டேன், அம்மாவ மன்னிப்பியா டி ” என்று அவர் கண்கள் கலங்கிய வண்ணம் பேச.. அடுத்த நொடி தன் அன்னையை இறுக்க அணைத்து கொண்டாள் சாயாலி.

 

சிறு விசும்பல் மட்டும் அவளிடம் இருந்து வர, அவளது முதுகை வருடிக் கொடுத்து ” காபி சூடு போறதுக்குள்ள குடிச்சு முடி ” என்று தேனு உணவை தயாரிக்க சென்று விட்டார்.

 

காபியை எடுத்து அருந்தி கொண்டே  மழையை ரசித்தவள் மனதிற்குள் மின்னலென வந்து போனான் தமிழ் மறவன். சட்டென்று விழிகளில் வியப்பை காட்டி ‘ இது என்ன முட்டாள் தனம் சாயு, எதுக்கு இப்போ அவனை நினைக்கிற நம்மளை ஒரு ஆபத்துல இருந்து காப்பாற்றி இருக்கான், அதுக்காக அவனுக்கு நான் கடமை பட்டுருக்கேன் அவ்வளவுதான்..” என்று தன் மனதையே தேற்றி கொண்டவள்… மழை விடும் வரை பொழுது போக வேண்டுமே .. அடுத்த நொடி புத்தக அறையில் இருந்தாள்.

 

தமிழ் காதலனின் ஒரு காதல் நாவலை எடுத்து கொண்டு வந்தாள்.. இந்த புத்தகமும் தமிழிடம் இருந்து பறித்து வந்த புத்தகம் தான்.

 

முன் அட்டையில் பளிச்சென்று இருந்தது அந்த கதையில் பெயர் ” மனமிருந்தால் மார்கமுண்டு ” மனதிற்குள் படித்து ரசித்து கொண்டவள்,

 

முதல் பக்கத்தை திருப்பி பார்த்தாள் அந்த தமிழ் காதலனை பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா என்று , எடுத்தவுடன் கதைக்களம் தொடங்கி இருக்க முதல் வரியிலேயே கட்டி போடும் வார்த்தைகளை பார்க்கவும் அதில் இருந்து கண்களை மீட்க முடியாமல் அடுத்த அடுத்த வரிகளை படிக்க தூண்ட சரியாக அவள் வீட்டு கதவும் தட்டப்பட்டது .

 

மீனா கை வேலையாக இருக்கவும் சாயாலி எழுந்து சென்று கதவை திறந்தாள். முகம் முழுவதும் இரத்தம் வடிய அவளை காட்டிற்குள் வைத்து கெடுக்க நினைத்த அந்த காமூகன் நின்று கொண்டிருந்தான்.

 

திக்கென்று இருந்த நெஞ்சத்தை கட்டு படுத்த வழியறியாமல் கண்களில் கலவரத்தை தேக்கி பார்த்து கொண்டிருந்தாள்.

 

அந்த காமூகன் பின்னே இரண்டு போலீசார்கள் நின்று இருந்தனர்.

 

” சாயாலி வீடு இதானே மா ?”

 

” ஆம் “என்பதாய் தலை அசைத்தாள்

 

“அப்போ சாயாலி?”

 

” நான்தான் ” என்று செய்கை செய்ய .. அவளை பற்றி ஏற்கனவே அறிந்தவர்.

 

“இவன்தான் உன் கிட்ட காட்டுல தப்பா நடந்துக்க வந்தவனா?”

 

ஒரு நொடி அவனது கோர முகத்தை நன்றாக பார்த்து விட்டு அடுத்த நொடி “ஆம் ” என்று அவனை காட்டி கொடுக்க.. ஒரு பேப்பரில் அவளிடம் கையெழுத்து வாங்கி கொண்டு அவனை சரமாரியாக அடித்து இழுத்து கொண்டு சென்றனர்.

 

போகும் முன்பு சாயாலியை கொல்லும் வெறியில் பார்த்து கொண்டு சென்றான். பின்னால் இருந்த மீனா படபடக்கும் நெஞ்சத்துடன் ” ஏன் டி அவனை காட்டி கொடுத்த பிரச்சனை எல்லாம் போதாதா ஆம்பளை இல்லாத வீடு நாளைக்கு நமக்கு ஏதாவது ஆனாலும் கேட்க ஆள் இல்லை, அவன் பார்வையே சரி இல்லை” என்று அவர் ஆதங்கத்தை வெளிபடுத்த… தன் தாயை ஒரு பார்வை பார்த்தவள் அமைதியாக சென்று மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள்.

 

“மழை விட்டிடுச்சு வேலைக்கு போகலையா ” என்று மீனா தயங்கிய வண்ணம் கேட்க..

 

பெரும் மூச்சை விட்டவள் மீண்டும் தன்னை பற்றியான தகவல்கள் அடங்கிய பேப்பர்களை எடுத்து கொண்டு புது வேலையை தேடி செல்வதற்காக கூடையை எடுத்து கொண்டு கிளம்பி விட்டாள்.

 

**

 

“இன்னும் எத்தனை நாள் அதையே நினைச்சுட்டு உன் வாழ்க்கையை பாழாக்க போற தமிழ்… ” வார்த்தைகள் கடுமையாகவே வந்து விழுந்தது கிருஷ்ண மூர்த்தியின் குரலில்.

 

அவருக்கு எந்த பதிலையும் உரைக்கமால் அவன் போக்கில் கிளம்பி கொண்டிருந்தான். ” யாரு யாழி” என்று அடுத்த கேள்வி அவன் செவிகளில் விழ..

 

புருவத்தை சுருக்கி தன் தந்தையை புரியாமல் பார்த்தவன் ” எந்த யாழி ” என்று அவரிடமே கேட்டு வைத்தான்.

 

” என்ன பார்த்தா இடியட் மாதிரி இருக்கா தமிழ், நைட் நீதான் அந்த பெயரை சொல்லி புலம்பிட்டு இருந்த”

 

” அப்படி யாரையும் எனக்கு தெரியாது ” என்று அசால்டாக தோளை குலுக்கி விட்டு அறையில் இருந்து வெளியேறினான்.

 

அலுவலகம் சென்றவன் இன்றும் பதிவேட்டில் சாயாலியை எதிர்பார்க்க.. அவள் கையெழுத்து இல்லாமல் போனதும் ” ப்ரீத்தி…. ” என்று உரக்க அழைத்தான்.

 

அவன் குரலில் பதறி அடித்து ஓடி வந்த பிரீத்தி ” சார் சொல்லுங்க சார் ” என்று படபடப்புடன் நிற்க..

 

” இன்னைக்கு சாயாலி வரலையா ”

 

” ஆமா சாரா அங்க கூட சேர்த்து ரெண்டு பேர் லீவ், அவங்க ரெண்டு பேரும் இன்பார்ம் பண்ணிட்டாங்க, ஆனால் சாயாலி பத்தி ஒன்னும் தெரியலை ” என்று அவள் முடித்து கொள்ள..

 

“ஓகே லீவ்” என்று அமைதியாக அமர்ந்தவன் .. சற்று நேரத்தில் காரை எடுத்து கொண்டு எஸ்டேட் பக்கம் கண்களை சுழல விட்டான்.

 

இதோடு இரண்டு இடத்தில் வேலைக்கு கேட்டு இல்லை என்ற பதிலில் சோர்ந்து போனாள் சாயாலி. அடுத்தது யாரிடம் கேட்பது , இருக்கிற வேலையையும் சொல்லி கொள்ளாமல் விட்டு வந்ததின் விளைவு ‘ ஐயோ அந்த ஆளு கண்ணுல மட்டும் பட்டுடவே கூடாது’ என்று கூடையை தூக்கி கொண்டு நடந்தவள் முன்பு காரை நிறுத்தி அதன் மேல் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் தமிழ் மறவன்.

 

அவனை பார்த்ததும் திக்கென்று ஆக காலையில் நடந்த சம்பவத்திற்கும் இவனுக்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமோ என்று கூட தோன்றியது. முகத்தில் எதையும் காட்டாமல் அவனை கடந்து செல்ல போக…

 

” எனக்கு சொந்தமான பொருள் உன்கிட்ட இருக்கு கொடுத்துட்டு போறியா ?” என்றவனது கணீர் பேச்சில் சட்டென்று நின்று விட்டால் சாயாலி..

 

” என்ன ” என்பதாய் அவனை பார்க்க..?

 

” இன்னைக்கு ஏன் வேலைக்கு வரலை ?” என்று அடுத்த கேள்வியை கேட்டான்

 

அவள் அமைதியாக நிற்கவும் ” சும்மா அமைதியா நிற்காத, நீ ஆக்ஷன் செஞ்சு காட்டுனா எனக்கு புரியும் , கண்ணை பார்த்தே எல்லாம் கண்டுபிடிக்க முடியாது ” என்று பொரிந்து தள்ளினான்.

 

அதில் அவனை வெறியாக முறைத்து பார்க்க ” இங்க பாரு டி நேத்து தான் இவ்வளவு நடந்துச்சு இன்னைக்கு இந்த சாயா புள்ள நம்ம முதலாளி கூட பேசிட்டு இருக்கிறதை ” என்று காடுகளுக்கு செல்பவர்கள் பேசி கொண்டே போக.. கூடையை இறுக்க பற்றி கொண்டு தன்னை கட்டு படுத்திய வண்ணம் நின்றாள்.

 

அப்போது அந்த எஸ்டேட் விட்டு வெளியே வந்த சண்முகம் ” ஏய் இந்தா பொண்ணு நீ இன்னும் போகலையா ஏற்கனவே உன்ன பத்தி ஊருக்குள்ள என்னமோ பேசுறாங்க, உன்ன வேலைக்கு வச்சா மத்த புள்ளைங்களுக்கும் சிரமம் ஆகிடும் இடத்தை காலி பண்ணு ” என்று அவர் காரில் ஏறி பறந்து விட.. தமிழின் முகத்தை பார்க்க முடியாமல் கலங்கி நின்ற கண்களை மறைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள்.

 

“சாயா ?? ”

 

“சாயா என்ன பாரு” என்று கத்தி விட….

 

அவனை நிமிர்ந்து இயலாமையுடன் பார்த்து வைத்தவள் , படபடவென கையை வெட்டி ஏதேதோ பேசி காட்ட..  முழித்து நின்றான் மறவன்.

 

” என்ன சொன்ன இப்போ , கொஞ்சம் மெதுவா ஆக்ஷன் பண்ணு” என்று மீண்டும் கேட்க…

 

அவனை சரமாரியாக முறைத்து வைத்தவள் , மீண்டும் நிதானமாக அவனுக்கு புரியும் படியாக அவள் செய்கை செய்ய அவள் கூற வருவது ஓரளவிற்கு புரிந்து போனது.

 

‘ பார்த்திங்களா இந்த பேச்சுக்காக தான் நான் வேலைக்கு வரல, என்கிட்ட இப்ப இருக்கிறது என் மானம் மட்டும் தான் அதையும் வாங்கிடாதீங்க பிளீஸ் ‘ என்று கைகூப்பி நின்றவளை முறைத்து பார்த்தவன்.

 

” இங்க பாரு  நான் உன் மானத்தை வாங்கி இருக்கேனா , நல்லா யோசி உன்ன காட்டுக்குள்ள யாரு காப்பாத்துனா , ஹான் ” என்று அவள் கையை இறுக்க பற்ற … சாயாலி அவளை அதிர்ந்து பார்த்தான்.

 

கையை அவனிடம் இருந்து விடுபட போராட முடியாமல் போனது, இறுதியாக அவனிடம் கெஞ்சும் பார்வையை செலுத்த , அவளது கையை விடுவித்தான்.

 

போவோர் வருவோர் எல்லாம் ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே செல்ல இதற்கு மேல் இங்கு வைத்து பேசினால் நன்றாக இருக்காது என்று அவளை இழுத்து கொண்டு தன் காருக்குள் தள்ளி கதவை அடைத்தவன் , அடுத்த நொடி காரை ஜெட் வேகத்தில் கிளப்பி இருந்தான்.

 

சாயாலி உச்சகட்ட அதிர்ச்சியில் அவனை பார்த்து வைக்க, ” கொஞ்சம் நேரம் அமைதியா இரு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் ” என்று அவனது வீட்டிற்கு அழைத்து சென்றான்.

 

காரில் இருந்து இறங்காமல் அடமாக அமர்ந்திருந்தாள் சாயாலி. ” கீழே இறங்கி வா சாயாலி ” என்று மறவன் அழைக்க..

 

‘இங்கேயே பேசுங்க ‘ என்று செய்கை காட்டினாள்.

 

” ப்ச் டென்ஷன் பண்ணாத , மரியாதையா இறங்கி வா ” என்று மறவன் கத்த… காரை திறந்து கூடையை எடுத்து கொண்டு அவன் பின்னே சென்றாள்.

 

தன்னை ஒரு இக்காட்டான நிலைமையில் இருந்து காப்பாற்றியவன் எப்படியும் எல்லை மீற மாட்டான் என்று அவளுக்கு மறவன் மீது சிறிது நம்பிக்கை இருந்தது.

 

அத்தனை பெரிய வீடு , ஊட்டியில் இப்படி ஒரு வீட்டை இப்போது தான் பார்க்கிறாள். மண்டபம் போல் அத்தனை பெரிதாக இருந்தது. கண்ணுக்கு தெரிந்த வரையில்    வீட்டில் ஒருவரும் இல்லை.

 

“உட்காரு” என்று இருக்கையை காட்ட அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

 

பின் நியாபகம் வந்தவளாக கூடையில் இருக்கும் அவனது சட்டையை எடுத்து “துவச்சுட்டேன் ” என்று செய்கை செய்து கொடுக்க..

 

அவளை ஒரு பார்வை பார்த்தவன் சட்டையை வாங்கி அருகில் வைத்து கொண்டான். “இன்னைக்கு காலையில போலீஸ் உன் வீட்டுக்கு வந்திருப்பாங்களே ” என்று சரியாக கேட்டான்.

 

” ஆம் ” என்று தலை அசைத்தாள்.

 

” மழை விட்டும் ஏன் தோட்டத்துக்கு வரலை”

 

‘ இனிமே இங்க வேலை பார்க்கமாட்டேன் ‘  என்று அவள் திட்டவட்டமாக செய்கையில் கூற..

 

” ஓஹோ அப்போ உங்க அம்மா ட்ரீட்மென்ட்க்காக வாங்குன பத்தாயிரம் ரூபாய்யை என்ன பண்ணலாம்னு இருக்க ”  என்று அவன் சாதரணமாக கேட்க.. அப்போது தான் மருத்துவ செலவிற்கு அங்கே முன் பணம் வாங்கியது நினைவிற்கு வந்தது.

 

‘காசை வாங்கி கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்றால் அவன் என்னை பற்றி என்ன நினைத்திருப்பான் ‘ சத்தியமாக அவளுக்கும் நினைவில்லை என்பதே உண்மை .. எப்படியாவது தமிழுடன் தன்னை சேர்த்து வைத்து பேசும் அவப்பெயரை தடுக்கத்தான் அவள் வேலையில் இருந்து நின்றது.

 

அவளது முக பாவனையை வைத்தே புரிந்து கொண்டவன் , ” நாளைக்கு வேலைக்கு ?? ” என்று நிறுத்த..

 

” வரேன்” என்பதை போல தலையை ஆட்டினாள்.

 

தனியாக அந்த வீட்டில் இருக்கவே அத்தனை பயம் ” கிளம்பலாம் ” என்று அவள் எழ போக..

 

” அதுக்குள்ள என்ன அவசரம் சாயாலி நான் இன்னும் பேச வேண்டிய விஷயத்தை பேசி முடிக்கலையே.. ” என்று பொடி வைத்து பேசினான்.

 

புருவத்தை சுருக்கியவள் அவனையே பார்க்க… ” உன்கிட்ட தப்பா நடந்துக்க வந்தவன் யாருன்னு உனக்கு தெரியுமா ?” என்று அழுத்தமாக கேட்க…

 

சிறிது யோசனையில் ‘ தெரியாது ‘ என்பதாய் தலை அசைத்தாள்..

 

“மிஸ் சாயாலி ஒரு தப்பை செய்யிறதுக்கு முன்னாடி தடயம் இல்லாமல் செய்யனும் ரைட் ” என்று அவனுடைய வார்த்தைகளில் வெளிப்பட்ட உண்மை அவளை நிலை இழக்க செய்ய… தவிப்புடன் அவனை பார்த்து வைத்தாள்.

 

” தப்பு எங்க செஞ்சன்னு நியாபகம் இருக்கா சாயாலி ?” என்று அவன் உதட்டை வளைத்து கேட்க..

 

கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது , முகம் வெளிறி அவனையே பார்த்தாள். ” நீ செஞ்ச கொலை தான் இப்போ உன்ன விடாம துரத்தி வருது ”  என்று மறவன் கூற சாயாலி அதிர்ந்து போனவள் , அடுத்த நிமிடமே மயங்கி சரிந்தாள்.

 

சனா💖

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சாயாலி கொலை செய்தாளா???