Loading

அத்தியாயம் 6

 

ஆறெழில் தன் முடிவில் திடமாகவே இருந்தாள். அவள் மனது தான் விடாமல் அவளுடன் போராடி கொண்டிருந்தது. 

‘ஏன்!! இந்த வயசுல ஒருத்தர செலக்ட் பண்ண கூடாதுன்னா இருக்கு. அவங்க என்ன தொந்தரவா நினைக்குற மாறி ௭னக்கே என்னைக்கு தோனுதோ அன்னையோட அவங்கள பாலோவ் பண்றத நிறுத்திப்பேன்’.

 

‘௭ன்ன டிஸ்டர்ப் பண்ணாதன்னு மூஞ்சில அடிக்கிறாப்ல சொல்லிட்டாங்க, இதோ இப்ப சொல்லாம போய் உன்ன பிடிக்கலன்னும் புரிய வச்சுட்டாங்க. இன்னமு நீ அவங்கள பத்தி திங் பண்றது தப்பா தெரில?’ என அவள் மனது எடுத்துச் சொன்னாலும், ‘இன்னும் ஒரே ஒருக்கா ட்ரை பண்ணிடுறேனே. அப்பயும் அவங்க முகத்த திருப்பிட்டாங்கன்னா, பக்கா பிராமிஸ் அதுக்கப்புறம் அவங்க முகத்திலேயே முழிக்க மாட்டேன்’, 

‘அட்லீஸ்ட் ஸ்கூலயாவது மாத்து கொஞ்சம் சேஞ்சா இருக்கும்’. 

‘முடியாது, ப்ரெசிடெண்ட்ட மறக்குற மாதிரி எந்த விஷயத்தையும் பண்ணமாட்டேன்’, 

‘உன்ன திருத்த ட்ரை பண்றதே வேஸ்ட்’ மனதே டென்ஷனாகி சென்று விட்டது.

 

பதினொன்றில் அடியெடுத்து வைத்தவள், அவனைப் பற்றிய டீடைல் களெக்ட் செய்ய என்ன செய்யலாம் என சுற்றிவர தேட ஆரம்பித்தாள்.

 

அவளைப் பற்றி அவள் சொல்லாவிட்டாலும் புரிந்துகொள்ளும் லட்சு, “கொஞ்சம் ஓவரா தான் போயிட்ருக்க, இது உன்ன ௭ங்க கொண்டு விட போதுன்னு தான் தெரில. இருந்தாலும் உன்ன பாக்க பாவமா இருக்றதால சொல்றேன், நம்ம பி.டி சாருக்கு பெட் நம்ம ப்ரெசிடெண்ட், சோ கண்டிப்பா அவருக்கு ஏதாவது தெரிஞ்சுருக்கும், வா ஒரு ட்ரை பண்ணி பாப்போம்” என அழைத்துச் சென்று அவரிடம் அதையும், இதையும் பேசி விஷயத்தை கறந்தனர்.

 

“குட் ஈவினிங் சார்”

இருவரையும் என்ன என்பது போல் பார்த்தவர், “ஸ்பெஷல் கிளாஸ் இல்லையா உங்களுக்கு?” என்க.

“இல்ல சார், வீட்டுக்கு தான் கிளம்பிட்டோம். நம்ம பிரகலத்தன் அண்ணா கிட்ட நோட்ஸ் கேட்ருந்தேன், சரின்னு சொன்னாங்க, ஆனா குடுக்காமலே போய்ட்டாங்க, அதான் அவங்க நோட்ஸ் கிடைக்க என்ன பண்ணலாம்ன்னு  கேக்க வந்தோம்” லட்சு இழுத்து பிடித்து சொல்ல.

“உங்க ஸ்டாப்டையே கேட்டு வாங்க வேண்டியது தான?”.

“இல்ல சார், அந்த அண்ணா நல்லா சொல்லி தருவாங்க, அதான் அவங்கட்டையே கேக்கலாம்னு..”.

“அவன்  அண்ணா யுனிவெர்சிட்டி சேர்ந்துட்டானேம்மா, இனி அவன பிடிச்சு நோட்ஸ் வாங்கிறதுலாம் ஆவுறதில்ல, நீங்க உங்க சப்ஜெக்ட்  மிஸ் இல்ல சார்ட்டயே கேட்டு வாங்கி படிங்க. போங்க” என்றவர் சைக்கிள் ஸ்டாண்டில், கிளம்பாமல் அரட்டை அடித்து கொண்டிருந்த பசங்களை விரட்ட சென்றார்.                    

 

“இன்ஜினியரிங் சேந்துருக்காங்கலாம்” லட்சு சொல்ல, 

“ஆமா அப்ப நாமளும் இன்ஜினியர் ஆகப்போறோம்னு சொல்லு” என்றாள் ஆறு.

 

“செருப்பு பிஞ்சிரும், ஓ தலையெழுத்து நீ போய் படி, நா எதுக்கு துணைக்கு? ஒங்க போதைக்கு என்ன ஊறுகாவாக்க பாக்குறியோ?” லட்சு பல்லை கடிக்க.

 

“ஹே வாடி ரெம்பத்தான், நீயு நல்லா படிச்சு என்ஜினீயர் ஆனன்னா, இன்னொரு இன்ஜினியரிங் படிச்ச மாப்பிளய கட்டிக்கலாம் அவ்வளவுதான”.

 

“எனக்கு இன்ஜினியரிங் மாப்பிளயே வேணாம்டி, ஆள விடு” ௭ன்றாள் லட்சு பெரிய கும்பிடு போட்டு.

 

“இங்க பாரு சும்மான்னு இருந்தவள பிரேயர்க்கு வரவச்சு லவ் பண்ண வச்சுட்டு, இப்டி பாதில கலண்டுக்க பாக்குற. அப்றம் காலேஜ்ல போய், எனக்கு ஒரு ஹெல்ப்ன்னா யார் பண்ணுவா?” ஆறெழில் கேக்க.

 

“எனக்கு தெரியும்டி அங்கயும் உனக்கு கூஜா தூக்கத்தான் என்ன வா, வான்னு இழுக்கறன்னு, அதான நா வரமாட்டேன்றேன். உனக்கு அங்க ஒரு இளிச்சவாயி மாட்டணும்ன்னு மாங்காடுக்கு விரதமிருந்து வேண்டிக்கிறேன் போதுமா?”.

 

“போதாது, நீதான் வேணும்”.

 

“போடி இவளே” என்றுவிட்டு கோபமாக வாசலை நோக்கி சென்று விட்டாள் லட்சு. சிரித்துக்கொண்டே அவளை துரத்தி சென்றாள் ஆறெழில்.

 

 

ப்ரகலத்தன் காலேஜில் சேர்ந்து படிப்பில் கவனமாக இருக்க, முதல் வருடத்திலேயே வாலிபால் விளையாட்டில் கலந்துகொள்ள, அவன் லாவகமாக விளையாடுவதைக் கண்டு டீமில் சேர்த்துக்கொண்டனர். விளையாட்டு, படிப்பு என அவன் நாட்கள் சென்றது. அங்கு அவனது நெருங்கிய நட்பு வட்டமாக அகத்தியன், கயிலைநாதன், மூர்த்தி என்றானது. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் எடுத்து படித்தான். ஃபஸ்ட் இயரில் எல்ல குரூப்ஸ்ம் ஒன்றாகவே இருக்க, அதில் அம்மூவர் ஏரோநாட்டிக்கல் என இன்ட்ரோ ஆக, அன்றிலிருந்து நட்பு ஆரம்பமாகியது. அவ்வப்போது ஆறெழில் எண்ணம் வந்து போகும். ஏதாவது பெண்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும்போது ஆட்டோமேட்டிக்காக அவள் எண்ணம் வந்துவிடும். கல்லூரியிலும் அவனது பூனை கண்ணுக்கு பெண்கள் ஃபாலோவ்வர்ஸ் அதிகமே. ரெண்டு பேர் தைரியமாய் வந்து ப்ரொபோஸூம் செய்தனர்.

 

‘டூ லேட், ஸ்கூல்லயே ஒருத்தி புக் பண்ணிட்டா’ என நினைத்து சிரித்தவன். அதன்பின் பதிலை எதிர்பார்த்து நிற்பவர்களுக்கெல்லாம் பதில் சிரித்த முகமாகவே  “என்கேஜ்/இன் ரிலேஷன்ஷிப்” என்பதாகத்தான் இருக்கும்.

 

அப்படி ஒரு நாள், அவன் நண்பர்கள் முன் வந்து அவர்கள் கிளாஸ் மேட் பெண் ப்ரபோஸ் செய்ய, அவன் “சாரி அல்ரெடி இன் ரிலேஷன் ஷிப்” ௭ன நகர்ந்து விட்டான்.

 

இதை கவனித்த அவன் நண்பர்கள், அகத்தியன் “டேய் மூர்த்தி நாமளும் இவனுக்கு இருக்க மாதிரி பூனைக்கண்ணு லென்ஸ் வாங்கி வச்சிட்டா என்னடா? ஒரு பக்கியும் நம்மள திரும்பி பாக்க மாட்டேங்குதே” என்க.

 

“இப்ப வச்சு ஓகே பண்ணிருவ சரி, அப்றம் உண்ம தெரியவர அன்னைக்கு லென்ஸோட கண்ணையும் நோண்டி கையில் கொடுத்துடுவாங்களே பரவால்லயா?” மூர்த்தி சொல்ல.

 

“என் நெத்திக்கண்ண திறந்துட்ட மாப்ள, இல்லன்னா அப்டியே செஞ்சு மாட்டி உள்ள கண்ணையும் நொள்ளையாக்கிட்டுருப்பேன்”.

 

“கவலப்படாத மச்சான் உன் நெற்றிக்கண்ண இனிமே மூடாம பாத்துக்கிற பொறுப்பு என்து” ௭ன மூர்த்தி அருள்பாலிக்க.

 

“ரொம்ப முக்கியம்டா அது, ரெண்டு பேரும் வந்த புரோபோசல் பத்தி பேசினீங்களே, அதுக்கு அவன் ஆல்ரெடி ஆள் இருக்குன்னு சொன்னத கவனிச்சீங்களா? ஸ்கூல்லயே உசார் பண்ணிட்டு தான் வந்துருக்கான்” என்றான் கயிலைநாதன்.

 

“நீ ஒரு க.க.போ டா நாது” என்ற அகத்தியன், மூவரின் பேச்சையும் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த ப்ரகலத்தனிடம் திரும்பி, “மகனே ப்ரகலாதா, சிரித்தது போதும் உன் காதல் மலர்ந்த கதைய கொஞ்சம் கூறு” என்க.

 

“சும்மா சொல்லிவச்சா இருக்குன்னு சொன்னேன்டா. இது எப்டியும் நம்ம கிளாஸ் ஃபுல்லா பரவிடும், அப்ப எந்த பொண்ணும் என்ன திரும்பிப் பாக்காது. அவங்க பாக்கலன்னா எனக்கும் பெருசா இன்ட்ரஸ்ட் வராது, அதான் சொன்னேன்” ௭ன நிறுத்த.

 

“பொதுவா பொண்ணுங்க தானடா இப்டி எல்லாம் ட்ரிக் ஃபாலோவ் பண்ணுவாங்க” மூர்த்தி சொல்ல.

 

“ஏன் நாமளும் பண்ண கூடாதுன்னு சட்டமா என்ன?”.

 

“அப்போ உண்மையிலேயே எந்த பொண்ணும் இல்லையா?” அகத்தியன் கேக்க.

 

“இல்ல”.

 

“இனியும் வர வேணாம்கிற. அப்ப சாமியாரா போக ஐடியா எதுவும் இருக்கா?” நாது இடைப்புக.

 

“அடி வாங்க போற எரும. முதல்ல ப்ரொஃபஷன தேடுவோம், அப்றம் பொண்ணத் தேடலாம்னு சொல்ல வந்தேன்”.

 

“இத அரேஞ்ச் மேரேஜ் தான் பண்ணிப்பேன்னு ஷார்ட்டா சொல்லிருக்கலாமே மாப்பிள”.

 

அந்நேரம் அவனுக்கு ஒரு புது நம்பரில் இருந்து போன் வர, அவர்களை விட்டு நகர்ந்து வந்து எடுத்தான்.

 

“நா ஆறெழில் அப்பா பேசுறேன்பா, ஞாபகம் இருக்கா?” என்றார் அந்த பக்கம் குணசீலன் , 

ஒரு நொடி ஆச்சர்ய பட்டாலும், “சொல்லுங்க அங்கிள், எப்படி இருக்கீங்க?” என்றான்.

 

“நாளைக்கு வீடு வர வர முடியுமாப்பா?” ௭ன்றார் ௭டுத்ததும், 

“ஏன் அங்கிள்? அங்க எதுவும் பிரச்சனயா? என்ன திடீர்னு”.

 

சற்றுநேர மவுனத்திற்கு பிறகு “அதெல்லாம் ஒன்னுமில்லப்பா சும்மாதான், ஒரு விஷயம் பேசணும்”.

 

“சரி அங்கிள் கண்டிப்பா வாரேன்”. அது தான் அவர் அவனிடம் கடைசியாக பேசியது.

 

நண்பர்களிடம்  வந்து, “டேய் நாளைக்கு ஹாஃப்டே பெர்மிஸ்ஸன் போடப் போறேன். அஃப்டர்நூன் லேப் சோ கண்டிப்பா வந்துருவேன்” என்றான் போனை பாக்கெட்டில் வைத்து கொண்டு .

 

“என்ன மாப்பிள எதும் சீரியஸா?” என்றான் மூர்த்தி.

 

“சீரியஸா இல்லன்னு தான் நினைக்கிறேன், நாளைக்கு போனா தான் மேட்டர் என்னன்னு தெரியும்” ப்ரகலத்தன் யோசனையாக சொல்ல.

 

“சரிடா எதும் ஹெல்ப் வேணும்னா போன் பண்ணு”.

 

“சுயர் டா பை” என கல்லூரி  முடிந்ததிருந்ததால் அனைவருமே விடைபெற்றனர்.

 

அதேபோல் அங்கு ஆறெழில் 11ஆம் வகுப்பில் இருந்ததால், ரிலாக்ஸாகவே இருந்தாள், படிப்பு பிரஷர் ௭துமில்லை.

 

இயல்பாகவே இருக்க முயற்சித்தாள். சில நேரங்களில் அவன் நினைவு வந்து, “தன்னை ஏற்றுக் கொள்வானா?” என மிரட்டிச் செல்லும். மற்றபடி சந்தோஷமாக பள்ளி நாட்களை கழித்தாள். என்ஜினீயரிங் சேர வேண்டும், அண்ணா யுனிவர்சிட்டி சீட் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே ஜபமாக இருந்தது. என்ன லட்சுவிற்கும் சேர்த்து ஜெபம் செய்து அவள் உயிரையும் வாங்கிக் கொண்டிருந்தாள்.

 

அப்படி நாட்கள் செல்ல, ஒரு நாள் காலை அம்மாவும், மகளும் பள்ளி கிளம்பினர். எப்போதும் 7 மணிக்கு கிளம்பி கடைக்கு சென்று விடும், ஆறெழிலின் அப்பா, அன்று 9 மணி வரை அறையில் இருந்து வெளியே வராமல் இருக்க, அங்கு ஒரு பார்வை வைத்தவாறே சமையல் வேலையை முடித்து லஞ்ச் பேக் பண்ணி தானும் கிளம்பி, மகளையும் பள்ளி கிளப்பி தயாரான பின்னரே, “ஏ உங்க அப்பா என்ன இன்னைக்கு இன்னமும் சொர்க்க வாசலைத் திறக்காம இருக்காரு, போய் என்னன்னு பாத்துட்டு வா” என்க.

 

“சரிமா” என ஆறெழில் தோளில் மாட்டியிருந்த ஸ்கூல் பேக்கை சோபாவில் கழட்டி வைத்துவிட்டு தந்தையைத் தேடிச் சென்றாள்.

 

மகள் “அப்பா, ப்பா” என அழைக்கும், சத்தத்தை அடுத்து, “ம்மா, அப்பா எந்திக்கவே மாட்றாங்கம்மா” என்ற அழைப்பிற்கு ஜெயந்தியும் அவர் அறைக்குள் சென்றார்.

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அறைக்குள் நுழைகிறார், அவர் பேசாமல் விலகி விலகிச் செல்லவும் அவர் இருக்கும் அறைப் பக்கமும்கூட போகாமல் இருந்துகொண்டார்.

 

எந்த அசைவுமில்லாமல் தூங்கிக்  கொண்டிருந்த கணவரை கண்டு மனது திக் திக்கென்று அடித்துக்கொள்ள, “தண்ணீ எடுத்துட்டு வா ஆறு” என்றார் மகளிடம்.

 

ஆறெழில் தண்ணீர் ௭டுக்க போக, மெதுவாக அவர் கையில் தன் கைகள் நடுங்க தட்ட, ம்கூம் எந்த அசைவும் இல்லை, அதற்குள் ஆறு தண்ணி எடுத்து வந்திருக்க, அதை வாங்கி முகத்தில் தெளித்தார் ஜெயந்தி, அதன் பின்பும் அவரிடம் எந்த ரியாக்ஷனும் இல்லாததால் பரபரப்பானவர், வேகமாகத் தட்டி “என்னங்க, என்னங்க” என்றார்.

 

பயந்துகொண்டு நெஞ்சில் கை வைத்து பார்க்கத் துடிப்பே இல்லை, தூக்கிவாரிப் போட, அப்படியே தரையில் அமர்ந்து விட்டார்.

 

“என்னாச்சும்மா, ஹாஸ்பிடல் போவோமா? இல்லனா விஜயா ஆண்டி (அம்மாவின் தோழி டாக்டர்) ஃபோன் பண்ணலாமா?” என தாயை எழுப்பிவிட பார்க்க.

 

“உன் அப்பா நம்மட்ட சொல்லிகாமலே போயிட்டார்டி” என்றார்.

 

அதிர்ந்தவளுக்கும் அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. முதல் நாள் இரவு பள்ளியில் நடந்த கதை எல்லாவற்றையும் சொல்லி விட்டுதான் சென்று படுத்தாள். பதில் கூறாவிட்டாலும் அவளையே பார்த்தவாறு அமர்ந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாறே, விடிந்தால், இரவு தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா இல்லை, இதை எப்படி எடுத்துக் கொள்ள  என ஆறெழில் முழிக்க.

 

அவள் திருதிருவென பரிதாபமாய் முழிப்பதைக் கண்ட ஜெயந்தி, அவளையும் இழுத்தனைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். இரு பெண்களுக்கும் அடுத்து என்ன என்பதே விளங்கவில்லை.

 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 55

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
51
+1
3
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்