Loading

பிறை -59

 

” நான் இப்போ என்ன பண்ணா நீ சந்தோஷமா இருப்ப கவி ” இந்த வார்த்தையை கேட்டதும் அதிர்ந்து போனாள் பார்கவி.

 

இந்த வார்த்தைக்காக தான் அவளது இத்தனை போராட்டமும்.. ஆனால் காதல் என்ற ஒன்று அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.

 

அவனுடன் சேர்த்து வாழும் எண்ணமும் இல்லை.. அவளது தற்காலிக சிந்தனை, அவனை இப்படி ஒரு இக்கட்டில் தவிக்க விடும் எண்ணமும் இல்லை. ஆனால் இதை தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லை. காதல் அவளது கழுத்தை நெறிக்கிறது.

 

தெரியாமல் அவனை காதலித்து விட்டு அவள் துடிப்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அதே வலியை அவனும் அனுபவித்தான். அவனது பேராசையும் நிராசையாக போய் விட்டது.

 

அவனது காதலும் கண் முன்பு அழுது கரைவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னை நம்பி என்னை காதலித்தவளுக்கு நான் என்ன செய்தேன். துரோகத்தை தவிர வேறொன்றும் இல்லை என யோசித்த பின்பு விளங்கியது.

 

எப்படியும் இவளது அண்ணன் தன்னை கொன்று விடுவான். தன் வாழ்க்கை முடிவதற்கு முன்பு, அவளுக்கு ஏதேனும் நல்லது செய்து விட்டு போகலாம் என்ற முடிவோடு தான் இந்த கேள்வியை கேட்டான். இந்த உதவியால் அவனுக்கு மோட்சம் கிடைக்கும் என நினைத்தானோ என்னவோ!

 

மலங்க மலங்க விழித்து கொண்டு அவனையே பார்த்தாள் பார்கவி.

 

” என்ன பார்க்குற கவி.. நீ அழுகுறத என்னால பார்க்க முடியல டி.. இதுக்கா டி உன்ன அவ்வளவு தூரம் காதலிச்சேன். உன்ன ராணி மாதிரி என் நெஞ்சுல வச்சுருக்கேன் டி. ஆனால் என் முன்னாடியே நீ எங்கையோ போய் சாக போறேன்னு சொல்லுற.. அப்படியே எனக்கு இங்க வலிக்குது டி.. எவ்வளவோ வலியை தாங்கிட்டேன்.. ஆனால் நீ அழுகுறது என்னைய என்னமோ பண்ணுது டி.. இந்த வலியை என்னால தாங்கிக்க முடியும்னு தோணல.. அதான் உன்கிட்ட கேட்டேன்.. உனக்கு என்ன வேணும்.. சொல்லு ” என்றவனை இமைக்க மறந்து பார்த்து வைத்தாள் அவனது காதலி.

 

” அர்ஜுன்.. நீ… என்ன சொல்லுற.. எனக்கு உதவி பண்ணுறேன்னு சொல்லுறியா” என ஒரு முறை உறுதிப் படுத்திக் கொள்ள கேட்டாள்.

 

” ஆமா கவி.. இனிமே நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாது. உன் குடும்பத்தோட நீ சந்தோஷமா இருக்கனும். என்னால இனிமே நீ எதையும் இழக்க கூடாது. நான் பண்ணது என்னோட போகட்டும்.. எதுவும் பண்ணாத நீ ஏன் அனுபவிக்கனும்.. என்ன காதலிச்சதை தவிர நீ வேற எந்த பாவமும் பண்ணல.. அதுனால நீ குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும் கவி ” என்றவனை பார்க்க பார்க்க வேதனை தாங்கவில்லை அவளுக்கு.

 

” ஏன் டா அஜூ… ஏன் டா தப்பு பண்ண.. ஐயோ.. என்னால முடியல டா.. லவ் பண்ணி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் அஜூ.. செத்துடலாம் போல இருக்கு டா.. ” என தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் பார்கவி. நிதர்சனம் அவளது மண்டையில் அடித்து உணர்த்தியது.

 

” அழுகாத டி.. இதுவே நீ அழுகுறது கடைசியா இருக்கனும்.. ”

 

” எப்படியெல்லாம் நம்ம வாழ்ந்திருக்கலாம்.. ஆனால் எல்லாம் ஒரு நிமிஷத்துல முடிஞ்சதுல ” அவளது ஏக்க குரலில் உள்ள வலியை உணர்ந்தவனுக்கும் வலித்தது.

 

” உன் வீட்டோட நீ சந்தோஷமா இருக்க நான் என்ன பண்ணனும் ”

 

அவனையே கண் இமைக்காமல் பார்த்து வைத்தவள்.. ” என் அண்ணி பழைய மாதிரி திரும்பி வரனும்.. அவங்களோட இந்த நிலைமைக்கு காரணம் நான்தான் எல்லாரும் நினைக்கிறாங்க.. ஒதுக்குறாங்க.. ”

 

சற்றே அமைதியாகிப் போனவன்.. ” அவளுக்கு ஹெவி டோஸ் போட்டுருக்கேன்.. அதோட பேரு… ******” என சில மருந்துகளின் பெயர்களை கூறினான். அதை கவனமாக உள்வாங்கிக் கொண்டாள் பார்கவி.

 

” ஏன் அஜூ இப்படி பண்ண.. அவங்க என்ன பாவம் பண்ணாங்க ”

 

” உன் அண்ணனை பழி வாங்க பண்ணிட்டேன் டி.. அதை விட அவளோட ஸ்மெல் … ” என்றவன் பாதியில் நிறுத்தி விட்டு..

 

” நான் கொடுத்த மருந்துக்கு.. இந்த காம்பினேஷன் கொடுத்தா கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைமைக்கு வர முடியும் ” என அந்த மருந்தின் பெயரையும் கூறினான் அர்ஜுன்.

 

அனைத்தையும் நன்றாக கேட்டுக் கொண்டாள் பார்கவி. அதை விட அவளது உடலோடு பொறுத்து இருந்த கேமரா வழியாக நடப்பதை எல்லாம் வெளியே காணொலியாக பார்த்துக் கொண்டிருந்தனர் ஆதியும், சரணும்.

 

” இதை பண்ணா கண்டிப்பா சரி ஆகிடுவாங்களா அஜூ ”

 

” இதுலையாவது என்னைய நம்பு டி.. இப்போவும் உன்ன ஏமாத்த மாட்டேன்..”

 

” சரி நான் டாக்டர் கிட்ட கொடுக்கிறேன் அஜூ”

 

” இதுதான் நம்ம கடைசியா பார்க்குறது இல்லையா கவி ” வெறுமையாக வந்து விழுந்த வார்த்தையில் இருந்த காதல் அவளுக்கு புரியாமல் இல்லை. வெடித்து அழ துடித்த மனதை கட்டுப் படுத்துக் கொண்டு இருந்தாள் பார்கவி.

 

” இனிமே உன்னை பார்க்க முடியும்னு எனக்கு தோணல கவி.. கடைசியா உன்கிட்ட இதை சொல்லனும்னு தோணுது ” என்றவனை என்னவென்று நிமிர்ந்து பார்த்தாள் பார்கவி.

 

அவளது விழிகளை நேராக சந்தித்தவன்.. ” லவ் யூ கவி மா  ” அவனது காதலை உணர்வுப்பூர்வமாக கூறி இருக்க.. அதற்கு மேல் தாங்க முடியாமல் அங்கிருந்து வெளியேறி இருந்தாள் பார்கவி. அவன் முன்பு அழுகாத அழுகையை எல்லாம் அண்ணனின் மார்பில் சாய்ந்து கதறி இருந்தாள்.

 

சரண் அவளை அமைதியாக பார்த்து நின்றான். சில தினங்களே அவன் காதல் என்றாலும், அவளது அழுகை அவனையும் பாதித்தது.

 

உண்மையிலேயே இவள் அர்ஜுனை இந்த அளவிற்கு நேசித்திருப்பாள் என அவனும் எதிர்பார்க்கவில்லை. இந்த அளவிற்கு அவனுக்காக துடிக்கும் இவளது மனதை மாற்றி வாழ்க்கையை வாழ்ந்து விட முடியுமா என்ற பெரிய கேள்விக் குறியே அவனுள் எழுந்தது.

 

” ரிலாக்ஸ் பாரு… இங்க பாரு அவ்வளவு தான்.. நமக்கு தேவையானது கிடைச்சிடுச்சு. இனிமே அவனை பத்தி யோசிக்க ஒன்னும் இல்ல. அவன் காதல் உண்மையா இருந்தாலும், அதை அனுபவிக்க தகுதி இல்லாதவனா போயிட்டான் பாரு.. இதோட அவனை மறக்க முயற்சி பண்ணு, அதுக்கு எல்லா விதத்துலையும் சரண் உனக்கு உதவியா இருப்பான் ” என நண்பனை காட்டி விட்டு காரில் ஏறியவன்..

 

” சரண் அவளை வீட்டுல விட்டுடு.. நான் நேரா ஹாஸ்பிடல் போறேன்.. அவ வீட்ல ரெஸ்ட் எடுக்கட்டும் ” என ஆதி கிளம்பி விட.. சரண் அமைதியாக அவளைத்தான் பார்த்தான். இத்தனை நேரமும் இவன் முன்பு காதலனுக்காக அழுததை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற பயத்தில் அமைதியாக இருந்தாள் பார்கவி.

 

யாருகோ அழைத்து காரை கொண்டு வரும்படி உத்தரவிட்டவன்.. அமைதியாக காத்திருக்க, ஐந்தே நிமிடத்தில் காரும் வந்து சேர்ந்தது.

 

” போகலாம் வா  ” என அவளை அழைத்து கொண்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன்.. அவளுக்கு முன் பக்க கதவை திறந்து விட்டான்.

 

அமைதியாக ஏறிக் கொண்டாள் பார்கவி. நெஞ்சம் எங்கும் அர்ஜுனின் தாக்கம் ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சரண் தன்னை எப்படி நினைத்திருப்பார் என்ற எண்ணமும் அவளை அலைக்கழித்தது.

 

சற்று தூரம் சென்றதும்.. ” நான் ரொம்ப லக்கி பாரு” என அவனே பேச்சை ஆரம்பித்தான்.

 

அவள் பேசாமல் அமைதியாக அவனை பார்த்தாள். ” இப்படி தப்பு பண்ணவன் காதலுக்காக இந்த அளவுக்கு அழுகுற ஒரு பொண்ணை இப்போதான் பார்க்கிறேன். அவன் உன்னைய மட்டும் இழக்கல. பெரிய பொக்கிஷத்தை இழந்துட்டான்.. நான் அந்த முட்டாளா மட்டும் இருக்க மாட்டேன். உன்ன கல்யாணம் பண்ணுறது தான் இனிமே என்னோட வேலையே.. நீ எவ்வளவு டைம் வேணாலும் எடுத்துக்கோ. நான் காத்திருக்கேன். ஆனால் நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கோ .. ஐ வோண்ட் டிஸ்டர்பிங் யூ அட் எனி சிசுவேஷன் ” என உறுதி அளித்தவனை அமைதியாக பார்த்து வைத்தவள்.. வீடு வரும் வரை அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

 

வீட்டில் அவளை இறக்கி விட்டவன்.. அவளது பதிலை எதிர்பார்த்து காத்திருக்க.. அவளோ அமைதியாக இறங்கி வீட்டிற்குள் சென்று விட்டாள். அவளது செயல் அவனை துவள செய்தாலும்.. நம்பிக்கையோடு காத்திருக்க ஆரம்பித்தான்.. சற்று முன்பு தான் அவள் அழுத அழுகையை நேரில் பார்த்தானே.. அவனுக்காக இத்தனை தூரம் கண்ணீர் சித்தியவள், அதற்குள் வெளியே வந்து தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தவறானது என அவனது மனசாட்சி உணர்த்தியது.

 

காலம் கண்டிப்பாக அவளது மனதை மாற்றும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே நம்பிக்கையில் நாமும் பயணிப்போம்.

 

***

 

அன்று மருத்துவமனையே பரபரப்பாக இருந்தது. இரண்டு மாதங்கள் கழித்து பூரணமாக குணமடைந்து இருந்தாள் பிறைநிலா.

 

மாற்று மருந்தையும் அர்ஜுன் கூறி இருந்ததால், மருத்துவர்கள் அது சரியான மருந்தா என்பதை மட்டும் உறுதிப் படுத்திக் கொண்டு அதையே அவளது உடலில் செலுத்தி இருந்ததால் அவளது உடல் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல முன்னேற்றத்தை பெற்றது.

 

அவன் மருந்து கூறவில்லை என்றால் இத்தனை எளிதில் அவளை காப்பாற்றி இருக்க முடியாது . இரண்டு மாதமும் மருத்துவமனையே கதியென கிடந்தான் ஆதி.

 

எப்போது அவள் என்ன செய்வாள் என தெரியாததால் அவனே அவளது அருகில் இருந்து பார்த்துக் கொண்டான். திடீரென்று அவள் ஏதாவது கலவரம் செய்தால் மீனாட்சி மற்றும் சிவகாமியால் அவளை சமாளிக்க முடியாது என்பதால் மொத்த பொறுப்பையும் அவன் ஒருவனே ஏற்றுக் கொண்டான்.

 

மெடிகல் லீவில் இருந்தாலும், மருத்துவனையில் இருந்து சில பல ஆணைகளை பிறப்பித்துக் கொண்டு இருந்தான்.

 

அன்று பிறை மொத்தமாக குணமடைந்து இருந்தாள். அவளை பார்க்க குடும்பத்தில் உள்ள அனைவருமே வந்திருந்தனர்.

 

சிவகாமி , சிவானந்தம் இருவருமே கண்ணீரோடு மகளை அணைத்துக் கொண்டார்கள்.

 

” எனக்கு ஒன்னும் இல்ல பா.. நான் நல்லா தான் இருக்கேன்.. அழுகாத மா ” என அவர்களுக்கு அறுதல் கூறினாள்.

 

” நீ நல்லா ஆகனும்னு நான் வேண்டாத தெய்வம் இல்ல. நீ இல்லாம எனக்கு சமையல் செய்யக் கூட விருப்பம் இல்லாம போயிடுச்சு பிறை ” என மீனாட்சி அவளது தலை கோத.. அன்பாய் அவளை பார்த்து வைத்தாள்.

 

அடுத்ததாக திவாகர் அவரது பங்கிற்கு நலம் விசாரித்தார். பார்கவி தான் அவளை பார்த்த மகிழ்ச்சியில் துள்ளினாள்.

 

” அண்ணி நீங்க சரி ஆனதே எனக்கு போதும்.. ” அவளை கட்டிக் கொண்டாள் பார்கவி.

 

” உன் அண்ணன் எங்க பாரு ” மெதுவாக அவனது தங்கையிடம் கேட்டு பார்த்தாள் பிறை.  எழுந்ததில் இருந்து அவனை பார்க்க முடியவில்லை.

 

” நாங்க எல்லாரும் வெளியே போனதும் அண்ணன் வருவாரு அண்ணி” என்றவள்.. அனைவரையும் அழைத்து கொண்டு வெளியே சென்றிருந்தாள்.

 

அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.

 

கணவனின் வருகையில் உடல் சிலிர்த்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.. அவனது அதிரடியை பற்றி அறியாதவளாய்!

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்