
பிறை -57
அறை அதிர்ந்தது. அதை விட அங்கிருந்த அனைவரும் பலமடங்கு அதிர்ச்சியில் இருந்தார்கள்.
மருத்துவர்களுக்கே என்ன செய்வது என தெரியவில்லை. கண் விழிப்பாள் என தெரியும்.. ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் விழிப்பாள் என யாரும் அறிந்திருக்கவில்லை.
ஊரில் இருந்து பிறையின் தாய் தந்தையும் வந்திருக்க.. வெளியே அனைவரும் பதட்டத்துடன் காத்திருந்தார்கள். ஆதி எதுவும் பேசாமல் அமைதியாக கதிரையில் அமர்ந்து அறை வாசலை வெறித்துக் கொண்டிருந்தான் . அவனுக்கு கொஞ்சமும் ஆறவில்லை. இப்படி ஒரு விஷயம் நடக்கும் என அவனும் எதிர்ப்பார்க்கவில்லையே.
பாதகத்தி பேச்சை கேட்காமல் அவள் செய்த செயலால் எப்படி ஒரு இக்கட்டில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறாள், மனம் ஊமையாக அழுதது.
ஆனால் அதே சமயம் அர்ஜுன் மீது கொன்று போடும் அளவிற்கு கொலை வெறியே வந்தது. இன்னும் இந்த உலகத்தில் தான் அர்ஜுன் இருக்கிறான். அர்ஜுன் என்ற ஒருவன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் பிறை மட்டும் தான்.
அன்று மும்பையில் பிறையை தன் பக்கமாக இழுத்துக் கொண்டவன்.. நொடிப் பொழுதில் நடந்த தாக்குதலை பார்த்து உதட்டை வளைத்தவன்..
” வெல்… எனக்கு வேலை மிச்சம்.. ” என தூசி தட்டுவதை போல கையை தட்டினான் ஆதி. வில்சன் அந்த இடத்திலேயே உயிரை விட்டிருந்தார்.
” தேவையில்லாம என்னைய பகைக்காத ஆதி.. என்கூட இருந்த இந்த பெருசையே நான் யோசிக்காம போட்டேன்.. நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல.. இதோட இங்க இருந்து போயிடு.. ” எச்சரித்தவனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தான் ஆதி.
” எப்படி மச்சான்.. இவ்வளவு தூரம் உன் இடத்துல நுழைஞ்சு என் தங்கச்சியையும், என் பொண்டாட்டியையும் காப்பாத்திட்டு.. உன்ன விட்டுட்டு போனா நல்லா இருக்குமா சொல்லு.. ஆனாலும் உன்னைய நான் ஒன்னும் பண்ண மாட்டேன்.. ” என நக்கல் சிரிப்பு சிரித்தான்.
” வேணாம் ஆதி… இப்படியே முடிச்சுட்டா உனக்கு நல்லது “
” மிரட்டி பார்க்குறியா “
” அப்படியே வச்சுக்கோ.. என் இடத்துக்குள்ள வந்துட்டு உன்னால வெளிய போக முடியும்னு தோணுதா “
” உன் கண்ணு முன்னாடி தானே என் தங்கச்சியை வெளிய வர வச்சேன்..” என்றதும் அர்ஜுனின் முகம் மாறியது.
” கவி.. எனக்கானவ ஆதி.. அவளை எங்க இருந்தாலும் நான் விட மாட்டேன்.. “
” காதலா? ” ஒற்றை புருவத்தை உயர்த்த..
” அதுக்கும் மேல “
” ஓ அதான் ஊசி போட்டு அவளை டெஸ்ட் பண்ணியோ “
” அது என் பிஸ்னஸ் ஆதி.. என்னோட பிஸ்னஸ்ல அவளுக்கும் பங்கு இருக்கு தானே “
” ** தா… யாருக்கு டா பங்கு இருக்கு. என் தங்கச்சி மேலே கை வச்சதுக்கே உன்ன கொன்னு புதைச்சிருப்பேன். ஆனால் என் பொண்டாட்டியை என்னமோ பண்ணியிருக்க.. ” வெறி கொண்டு கத்தினான் ஆதி.
உதட்டை வளைத்து சிரித்தவன்.. ” ரொம்ப தைரியம் தான் அந்த நிலாவுக்கு.. நீ வருவேன்னு ரொம்ப உறுதியா இருந்தா.. சும்மா சொல்லக் கூடாது அவ மேல இருந்து வந்த வாசனை என்னையே மயக்குது. அது மட்டும் மார்கெட்ல வந்துட்டா நான் தான் இங்க ராஜா. அதுக்கு உன் பொண்டாட்டி அவசியம் வேணும்.. நீயும் கொடுத்து வச்சவன் தான்.. தினமும் நைட்டு உன் பொண்டாட்டியை… ” என அவன் மேலும் பேசுவதற்கு முன்பு எட்டி அவன் வாயில் மிதித்து இருந்தான் ஆதி.
” இதுக்குமேல ஒரு வார்த்தை அவளை பத்தி உன் வாயில இருந்து வரக்கூடாது.. ” என்றவன்.. அருகில் இருந்த காவலாளிகள் கையில் இருந்த திரவத்தை வாங்கி , அர்ஜுன் சுதாரிக்கும் முன் அவன் மேல் ஊற்றி இருந்தான்.
திரவத்தை ஊற்றிய அடுத்த நிமிடம் துடித்து போனான் அர்ஜுன்.
” ஆஆஆஆஆஆஆ……. ஆதி…. முடியல… என்ன டா பண்ண ” என கத்தியவனை காதில் வாங்காமல்… அவனை ஒரு பார்வை பார்த்தவன்.. அவனோடு அழைத்து வந்திருந்த ஒரு மருத்துவரை விட்டு, அவனது கையில் ஒரு ஊசியை போட வைத்தான். அவனை சுற்றி காவலர்கள் அவனை பிடித்துக் கொள்ள.. வெற்றிகரமாக ஊசியும் போடப்பட்டது.
” டேய் ஆதி… இது வேணாம்…. ஐயோ……. ” என அலறியவனை கண் இமைக்காமல் பார்த்தவன், அவனை மும்பையில் இருந்து சிறப்பு விமானம் வழியாக சென்னை கொண்டு வந்திருந்தான் ஆதி. இன்னும் அவனது இடத்தில் உயிரோடு இருக்கிறான் அர்ஜுன்.
பிறை கண் விழித்து அனைத்தும் நலம் என்றால் மட்டுமே அவனை மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தான் ஆதி.
பிறை கண் விழித்து விட்டாள் என்ற மகிழ்ச்சியை கூட கொண்டாட முடியாத சூழலில் இருந்தது அந்த குடும்பம்.
காலையிலேயே மீனாட்சி கண் விழிக்கும் பொழுது, பிறை கண் விழித்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்ததும் ஆனந்தத்தில் கத்திய மீனாட்சி… ” பிறை.. கண்ணு முழுசுட்டியா டி தங்கம்… ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எங்களை எல்லாம் பயப்பட வச்சிட்ட.. ஆதி ரொம்பவே சோர்ந்து போயிட்டான் மா.. இத்தனை வருஷத்துல அவன் இப்படி இருந்து நாங்க பார்த்ததே இல்ல.. இந்த விஷயத்தை சொன்னா அவன் ரொம்ப சந்தோஷமா இருப்பான் மா.. உடனே அவனுக்கு கால் பண்ணுறேன்.. ” என அவரே பேசிவிட்டு மகனுக்கு அழைத்தார்.
அன்று அவனுக்கு இரவில் ஒரு வேலையாக வெளியே சென்றிருக்க.. மீனாட்சி தான் இரவில் அவளை பார்த்துக் கொண்டார். அவரோடு சிவகாமியும் இருந்தார். மருத்துவமனையில் நோயாளிகளோடு ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்பதால் இரவில் எப்போதுமே ஆதி மட்டும் தங்கிக் கொள்வான்.
இன்று வேலை வரவும்.. தாயை துணைக்கு வைத்து விட்டு, சிவகாமியை இரவு பத்து மணிக்கு மேல் கட்டாயம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார் மீனாட்சி.
அதனால் பிறை கண் விழிக்கும் பொழுது அவர் மட்டுமே மருத்துமனையில் இருந்தார். முதலில் ஆதிக்கு அழைத்தவர் அவன் எடுக்காமல் இருக்கவும்.. திவாகருக்கு அழைத்தவர் விஷயத்தை கூறி, சிவானந்தம், சிவகாமியை அழைத்து வரக் கூறினார்.
விஷயத்தை கேள்விபட்டு அனைவருமே கிளம்பி மருத்துவமனை வந்தனர். காலை செவிலியர் அறைக்குள் வந்ததும், பிறை விழித்திருப்பதை பார்த்து , வேகமாக மருத்துவரிடம் தகவல் கூறினார்.
விஷயத்தை கேள்விபட்டு அவரும் உடனே வந்துவிட்டார். இன்னும் அசையாமல் அப்படியே விட்டத்தை பார்த்த வண்ணம் படுத்திருந்தாள் பிறைநிலா. மீனாட்சிக்கு சற்று பயம் வந்தது.
அங்கிருந்த செவிலியரிடம்.. ” ஏன் மா என் மருமகள் பேசாம இருக்கா ” என கேட்டு வைக்க..
” அது டாக்டர் வந்து செக் பண்ணிட்டு சொல்லுவாங்க மா … பயப்படாதீங்க ” என தைரியம் கூறினார்.
உள்ளே வந்ததும் அவளை பரிசோதித்தவர்… ” ஹலோ… இங்க பாருங்க… இங்க… ” என அவளது விழிகள் முன்பு கைகளை ஆட்டி அவரது இருப்பை காட்டினார் மருத்துவர்.
கைகள் சென்ற திசைகளில் எல்லாம் அவளது விழிகளும் சென்று வந்தது.
” இங்க பாருங்க ” என அவரது கையை அவரது முகத்தின் அருகே கொண்டு சென்றவர்… ” நான் பேசுறது உங்களுக்கு புரியுதா ” என முகத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளிடம் கேட்டார் மருத்துவர்.
பதிலேதும் பேசாமல் அமைதியாக இருந்தாள் பிறை. மேலும் இரண்டு முறை பேசிப் பார்த்தவர்… ” இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்குது. அப்போ பிரச்சனை இல்லை. கண்டிப்பா பேசிடுவாங்க. அவங்க கான்சன்ட்ரேட் பண்ணுறாங்க.. அதுவரைக்கும் பிரச்சனை இல்ல.. அவங்க பேசிட்டா எனக்கு இன்பார்ம் பண்ணுங்க ” என மருத்துவர் சென்று விட… மீனாட்சி கலங்கிய விழிகளோடு மருமகளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.
சரியாக கால் மணி நேரத்தில் ஏதோ ஒரு விதமான உணர்வில் மெதுவாக நகர ஆரம்பித்தாள் பிறை. கொஞ்சம் கொஞ்சமாக அவளது முகமும் மாறிப் போனது.
திடீரென வேர்த்து விறுவிறுத்து திணறிப் போனவள்.. வேகமாக மூச்சிகளை விட.. மீனாட்சி பயந்து மருத்துவருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே அவளது அறைக்கு வந்தவர்.. ” ஹலோ.. இங்க பாருங்க பிறைநிலா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க.. ஒன்னும் இல்ல.. நீங்க நல்லா தான் இருக்கீங்க.. டோண்ட் ஓரி ” என அவளை சமன் செய்ய முயன்றார்.
என்ன பேசியும் அவளை சமாதானம் செய்ய இயலவில்லை. பித்து பிடித்தவள் போல அங்கும் இங்கும் எதை எதையோ பார்த்தவளுக்கு தலை கிறுகிறுத்தது.
” வேணும்.. ஆஆஆஆஆஆஆஆஆ…. முடியல.. எனக்கு அது வேணும்… சீக்கிரம்… என்னமோ பண்ணுது.. வேணும்….. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ” என வெறி பிடித்தவள் போல கத்தினாள் பிறை.
அதில் அதிர்ந்தவர்.. ” என்ன வேணும் … தெளிவா சொன்னா தானே கொண்டு வர முடியும் ” என அவள் வழியில் பேசியே விஷயத்தை கேட்டார்.
” அந்த ஊசி… ஐயோ….வேணும்… கடவுளே… எனக்கு இப்போவே வேணும்.. முடியல…. ” என கத்தியவளை அதிர்ந்து பார்த்தவர்.. செவிலியரை அழைத்து அவளை பார்த்துக் கொள்ள கூறிவிட்டு வேகமாக அறைக்கு திரும்பினார்.
அதற்குள் குடும்பம் மொத்தமும் அங்கு வந்தது. திவாகர் ஆதிக்கும் தகவல் கூறியிருக்க.. அவனும் அடித்து பிடித்து ஓடி வந்தான்.
” கொஞ்சம் சீரியஸ் கண்டிசன் தான்… உயிருக்கு அந்த ஆபத்தும் இல்ல.. ஆனால் அவங்க உடம்புல உள்ள போதை மருந்து அவங்களை கண்ட்ரோல் பண்ணுது.. என்ன காம்பினேஷன் போட்டிருக்காங்கன்னு தெரியல.. அது தெரிஞ்சா தான் அவங்களை வெளிய கொண்டு வர முடியும்.. இல்லைன்னா கஷ்டம் தான்.. சீக்கிரம் அதை கண்டு பிடிங்க மிஸ்டர் ஆதி.. ஷி இஸ் இன் அப்நார்மல் கண்டிசன் ” என நிலைமையை தெளிவாக கூறினார்.
” நான் கண்டிப்பா டிரை பண்ணுறேன் டாக்டர்.. அதுவரைக்கும் அவளை கொஞ்சம் சரி பண்ணுற மாதிரி பார்க்க முடியாதா.. ஏதாவது இப்போதைக்கு கொடுத்து அவளை கண்ட்ரோல் பண்ணலாம்ல “
” ஆல்ரெடி அவங்க உடம்புல ஏகப்பட்ட மருந்து இருக்கு.. இதுல நம்ம ஒன்னு கொடுத்து.. அது உடம்புல வேற மாதிரி ரியாக்ட் ஆகிடுச்சுன்னா கஷ்டம் மிஸ்டர் ஆதி.. அதுனால நீங்க சீக்கிரம் எனக்கு தகவல் சொல்லுங்க.. நான் அவங்களை தூங்க வைக்கிறேன் ” என தூக்க ஊசியை எழுதினார்.
நேரம் ஆக ஆக வீரியம் கூடியதே தவிர.. அவளை செவிலியர்களால் கூட சமாளிக்க முடியாமல் ஓய்ந்து போனார்கள். அந்த அளவிற்கு ஆக்ரோஷமாக அந்த மருந்து வேலை செய்ய.. பிறை மொத்தமாக மாறி இருந்தாள்.
கதவை திறந்து உள்ளே வந்தவன்.. மனைவி இருந்த கோலத்தை பார்த்து துடித்து போனான். ” ஆஆஆஆஆஆஆ… எனக்கு இப்போவே வேணும்.. என்னால முடியல… ” என பெட்டில் ஏறி நின்று முடியை விரித்து பைத்தியம் போல கதறிக் கொண்டிருந்தவளை பார்த்தவன் … அதிர்ந்து போனான்.
அவனை பார்த்தும் கூட அவளது மூளை வேலை செய்யவில்லை. தற்போது அவளுக்கு வேண்டியது எல்லாம் அந்த போதை ஊசி தான். அந்த அளவிற்கு அவளது உடலை அது கட்டுப் படுத்தியிருந்தது.
ஒரே நாளில் அவளது உடலை கட்டுப்படுத்தும் அளவிற்கு, அந்த ஊசியின் தரத்தை அதிகரித்து அவளுக்கு செலுத்தியிருந்தான் அர்ஜுன்.
அதற்கு மேல் அவளை பார்க்க சக்தியற்று அங்கிருந்து புயல் வேகத்தில் கிளம்பி இருந்தான் ஆதி.
காரை தாறுமாறாக செலுத்தியவனை சரண் தான் அவனை அதட்டி காரை வாங்கி அவன் இயக்கிக் கொண்டு ஆதியை அருகில் அமர்த்தி இருந்தான்.
” இப்போ புரியுதா…. நான் ஏன் இன்னும் அவனை கொல்லாம விட்டு வச்சேன்னு இப்போ புரியுதா… ” என வெறிக் கொண்டு கத்தினான் ஆதி.
” புரியுது மச்சான்… கொஞ்சம் அமைதியா இரு டா.. அப்பறம் உன்னால அவனை ஹேண்டில் பண்ண முடியாது. போதை மருத்து போட்டு உடம்பை மெருகேத்தி வச்சிருக்கான். அவனை அடிச்சாலும் உண்மையை வாங்க முடியுமான்னு தெரியல.. அவனை மிரட்டி வாங்க குடும்பமும் இல்ல.. அவனை நீ வேற மாதிரி பேசி தான் ஹேண்டில் பண்ணனும்.. ” என சரண் ஆதிக்கு புரிய வைத்தான்.
அதில் கொஞ்சம் நிதானம் அடைந்தவன், அர்ஜுனிடம் இருந்து எப்படி உண்மையை வாங்குவது என ஆழ்ந்து யோசித்தவனுக்கு பளிச்சென்று வந்தது யோசனை. ஆனால் அதை அவனால் செய்ய இயலுமா.. ?
“சரண்.. அவன் கிட்ட இருந்து விஷயத்தை வாங்க ஒரே ஒரு வழி தான் இருக்கு “
” என்ன டா “
” பாரு ” என்றதும் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தியிருந்தான் சரண்..
” டேய் யோசிச்சு தான் பேசுறியா “
” இதை தவிர இப்போ நமக்கு வேற ஆப்ஷன் இல்ல டா “
” எப்படி டா அவன் கிட்ட போய் பாருவை விட முடியும்.. அவளை ஏதாவது பண்ணிட்டா.. “
” பண்ண விடாத அளவுக்கு பாரு பேசனும் டா.. அவன் இன்னும் பாருவை லவ் பண்ணுறான் டா ” என்றதும் சரண் அமைதியாக இருந்தான்.
” மச்சான்.. ” என ஆதி அழைக்க..
” பாருவை கூட்டிட்டு போகலாம் மச்சான் ” சரண் கூறியதும்.. அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான் ஆதி.
சனா💖

