Loading

பிறை -51

 

பித்து பிடித்தவன் போல அந்த காட்டையே சுற்றி வந்தான் ஆதிதேவ். ஏனோ இந்த நொடி அவன் வாழ்வதற்கு தகுதியே இல்லாதவன் என அவனது மனம் நினைக்க தொடங்கியது.

 

வீட்டில் இருந்த இரண்டு பெண்களும் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்க.. அதே வீட்டில் காவல் துறையில் இருந்தும் அவனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்ற எண்ணமே அவனை கொள்ளாமல் கொன்றது.

 

” இந்த காட்டுல எங்க டா இருக்கு.. எனக்கு என்னமோ நம்மளை சுத்தள்ள விடுறானோன்னு சந்தேகமா இருக்கு டா ஆதி..” சரண் மூச்சு வாங்க பேசினான்.

 

” இல்ல இதுதான் இடம். ஆனால் காடு ரொம்ப பெருசு.. அதான் நம்மனால சீக்கிரமே கண்டு பிடிக்க முடியல.. ”

 

” அப்போ இந்த காட்டோட மேப் வாங்கி பார்த்தா என்ன ” என்றதும் அந்த யோசனையும் சரியாக பட.. அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தேறியது.

 

பத்தே நிமிடத்தில் அந்த வனத்தின் வரைபடம் அவனது கையில் இருந்தது. போனில் அதை ஜூம் செய்து பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

கிட்ட தட்ட அந்த காடு நூறு ஏக்கர் கொண்ட பரப்பளவை கொண்டது. அதுவும் அடர்ந்த காடு.. உள்ளே சூரிய ஒளி செல்வதற்கு கூட வழி இல்லாமல், கிளைகள் எல்லாம் அத்தனை நெருக்கமாக இருந்தது.

 

இப்படி ஒரு காட்டில் அந்த கிளைகளுக்குள் ஒரு ஆராய்ச்சி கூடத்தை உருவாக்கி இருந்தால் கூட அவர்களால் கண்டு கொள்வது கடினம். ஆனால் எப்படி இது சாத்தியம்.. தலையை பிடித்துக் கொண்டான்.

 

” மச்சான் ரிலாக்ஸ் பண்ணு.. அப்போதான் தெளிவான முடிவு கிடைக்கும். உள்ள தங்கச்சியும்.. உன் பொண்டாட்டியும் இருக்காங்க.. நம்ம எவ்வளவு சீக்கிரம் போறோமோ அவ்வளவு நல்லது. அதுனால கொஞ்சம் நிதானமா யோசி டா.. ” என சரணும் அந்த வரைபடத்தை பார்க்க தொடங்கினான்.

 

உன்னிப்பாக அதையே பார்த்தவன்.. ” மச்சான் இந்த காட்டுக்குள்ள போறதுக்கு நிறையா வழி இருக்கு. நம்ம ஏன் அந்த எல்லா வழியிலையும் டிரை பண்ணக் கூடாது ”

 

” டிரை பண்ணலாம் டா.. ஆனால் நமக்கு நேரம் கம்மியா இருக்கு. நம்ம லேட் பண்ண பண்ண அங்க அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு ”

 

” சரி இரு யோசிப்போம்.. ” என மீண்டும் வரைபடத்தை பார்த்து.. அதில் உள்ள சந்தேகங்களை கூகுள் ஆண்டவரிடம் கேட்டுப் பார்த்தான்.

 

” மச்சான்.. இந்த வழியை பாரேன்.. அதிகம் ஆள் நடமாட்டம் உள்ள வழின்னு போட்டிருக்கு.. இங்க ஏன் ஆள் நடமாடப் போறாங்க.. இங்க நிறையா டைம் சிக்னல் எல்லாம் காட்டிருக்கு ” என்றதும் காரை கிளப்பிக் கொண்டு காட்டின் மற்றொரு வழியை தேடி சென்றனர்.

 

அதேநேரம் ஆராய்ச்சி கூடத்தில் உள்ள அறையில் லேசாக மயக்கம் தெளிந்த நிலையில் இருந்தாள் பிறைநிலா.

 

கண்களை சிமிட்டி பார்த்தவளுக்கு முதலில் ஒன்றும் விளங்காமல் போக.. கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் நினைவிற்கு வந்தது.

 

தாய் வீட்டில் இருக்கும் பொழுது அவளது போனில் இருந்து அவளது கணவனுக்கு அடித்து அடித்து ஓய்ந்து போனாள் பிறை. அத்தனை முறை அழைத்தும் அவன் எடுக்காத விரக்தியில் இருக்கும் பொழுது, இடையில் ஒருமுறை அவன் எடுத்து பேசியதில் சற்றே மனம் மகிழ்ந்தாலும்.. பார்கவியை பற்றியான செய்தி அவளை கலங்கச் செய்தது.

 

தன்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை என யோசிக்க தொடங்கி இருந்தாள் பிறை.

 

அதில் மேலும் மனம் அழுத்தம் தரும் படி.. அவளது அலைபேசிக்கு அழைத்திருந்தான் அர்ஜுன். முதலில் தெரியாத எண்ணை எடுக்க வேண்டாம் என நினைத்திருந்தவள்.. ஒருவேளை பார்கவி அழைத்திருந்தால் என்ற எண்ணம் தோன்ற வேகமாக எடுத்திருந்தாள்.

 

” ஹலோ யாரு… ” என அவசரமாக கேட்டாள்.

 

” ஹா ஹா… பொறுமை நிலா .. ஏன் இந்த அவசரம் ” என்றதும் அதிர்ந்து போனாள் பிறை.

 

” ஆ… ஆதி…. ” என குரலில் அத்தனை பதட்டம்..

 

” பரவாயில்லையே ஒரு முறை கேட்டதுக்கே டக்குன்னு கண்டு பிடிச்சுட்ட.. அதுசரி போலீஸ்காரன் பொண்டாட்டி இந்த அளவுக்கு கூட இல்லைன்னா எப்படி ” என நக்கலாக பேசினான்.

 

” நீதான் பார்கவியை கடத்திட்டு போனதா ”

 

” ரொம்ப லேட் …”

 

” உனக்கு என்ன தான் வேணும்.. எதுக்காக இப்போ அந்த சின்ன பொண்ணை கடத்திட்டு போயிருக்க.. ” என கத்த தொடங்கினாள்.

 

” ஸ்…. எனக்கு சத்தம் போட்டு பேசுறது பிடிக்காது நிலா.. ஆமா உன் புருஷனோட தங்கச்சி என்கிட்ட தான் இருக்கா.. உன் புருஷனே நினைச்சாலும் கண்டு பிடிக்க முடியாது.. ஒரு வேளை கண்டு பிடிச்சாலும்.. எனக்கு தேவையானதை நான் எடுத்துட்டு தான் விடுவேன் ” அவனது குரலில் இருந்த உறுதியில் உறைந்து போனாள் பிறை.

 

” சின்ன பொண்ணு.. அவளை எதுவும் பண்ணிடாத ”

 

” அப்போ எனக்கு தேவையானது உன்கிட்ட இருந்து கிடைக்கனும்.. அது கிடைச்சா நான் அவளை விட்டிடுவேன்.. ” என்றதும் நெஞ்சம் அதிர்ந்து போனது.

 

அதன் பிறகு அவளுக்கு பேச்சே வரவில்லை.

 

” என்ன சைலண்ட் ஆகிட்ட.. அப்போ உன்னால பண்ண முடியாதா ”

 

” என்ன பண்ணனும்..” ஒரு வித முடிவோடு கேட்டிருந்தாள்.

 

” குட்… நான் சொல்லுற இடத்துக்கு நீ மட்டும் வரனும்… நீ வீட்ல என்ன பொய் சொல்லிட்டு வருவியோ எனக்கு தெரியாது.. நான் உனக்கு டிராவலுக்கு எல்லாம் அரேஞ்ச் பண்ணி தருவேன்.. நீ மட்டும் வரனும்.. ரொம்ப ஸ்மார்ட்டா யோசிச்சு உன் புருஷனுக்கு தெரிய படுத்த நினைச்சன்னு வை… பார்கவியை இதுக்கு அப்பறம் நீங்க எப்பவுமே பார்க்க முடியாத படி பண்ணிடுவேன் ” என்றதும் வந்த அழுகையை அடக்கிக் கொண்டு தலை அசைத்தாள்.

 

” என்ன அமைதியா இருக்க ”

 

” எங்க வரனும் ”

 

” உன் வீட்டுக்கு நானே கேப் அனுப்புறேன்.. ஏறி வா.. அதுக்கு அப்பறம் எல்லாம் என் ஆளுங்க உன்ன கைட் பண்ணுவாங்க ” என்றதும்.. அனைத்திற்கும் சம்மதித்து போனை வைத்திருந்தாள்.

 

இதை அப்படியே கணவனிடம் கூற மனம் துடித்தாலும்… தன்னால் தான் அவனது தங்கைக்கு இந்த நிலை என அவனே கூறி இருக்கிறான். இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது .. எப்படியேனும் உயிரை பணயம் வைத்தாவது அவளை காப்பாற்ற வேண்டும் என உறுதியாக இருந்தாள்.

 

அதேபோல வீட்டில் உள்ளவர்களிடம் பேசி, அங்கிருந்து கிளம்பி வந்தவளை, காரில் அழைத்து சென்றவனே.. அவளை பத்திரமாக மும்பையும் அழைத்து வந்திருந்தான். அங்கிருந்தே அவளை அந்த லேப்பிற்கு அழைத்து வந்திருந்தான்.

 

இப்படித்தான் அவள் மும்பை வந்து சேர்ந்தது. இடையில் அவளது கணவனும் அவளுக்கு அழைக்கவில்லை. அவளும் அவனுக்கு அழைக்கவில்லை.

 

வந்ததுமே அவளிடம் இருந்த அலைபேசியை பறிமுதல் செய்து கொண்டார்கள். மும்பையில் இருந்து காரில் ஏறியதுமே அவளை மயக்கமடைய செய்து தான் அழைத்து வந்தார்கள்.

 

இப்போது தான் அவளுக்கு நினைவு திரும்பியது. கண்களில் கலக்கத்தோடு அந்த அறையையே சுற்றிப் பார்த்தாள்.

 

அப்படி ஒன்று அவளுக்கு வித்தியாசமாக தெரியவில்லை. வெளியில் அறை எடுத்து தங்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இதுவும் இருந்தது.

 

மயக்கம் தெளிவதை சிசிடிவி காட்சியில் பார்த்தவன் , நேராக பிறை இருக்கும் அறைக்கு வந்தான் அர்ஜுன்.

 

அவனை பார்த்ததும் யாரென்று தெரியாமல் குழம்பிப் போனவள்… ” நீ யாரு.. பார்கவி எங்க இருக்கா.. ” என எடுத்ததும் கேட்டு வைத்தாள்.

 

” அதுக்குள்ள என்ன அவசரம்… இப்போதானே வந்திருக்க” என நக்கல் சிரிப்பு சிரிக்க.. அதில் அதிர்ந்தவள்., அவனது குரலை வைத்து ” ஆதி நீ தானா ” என சந்தேகமாக கேட்டாள்.

 

” நாட் பேட்… ரொம்ப புத்திசாலி தான்.. குரலை வச்சே இவ்வளவு தூரம் கண்டு பிடிக்கிற ”

 

” ஆனால் உன் முகம் ஏன் இப்படி இருக்கு ” என் குழம்பி போனாள்.

 

” ஓ உன் புருஷன் மாதிரி இல்லைன்னு ஃபீல் பண்ணுறியா என்ன ”  என அவன் பயன்படுத்திய மாஸ்கை தூக்கி வீச.. அதில் முகத்தை சுழித்தவள்..

 

” இவ்வளவு கேவலமானவனா நீ.. ” என அவனை அருவருப்பாக பார்த்தவள்.. ” நீ சொன்ன மாதிரி நான் வந்துட்டேன்.. இப்போ நீ பார்கவியை விடு ” என சற்றே தைரியத்தை வரவழைத்து கொண்டு பேசினாள்.

 

” ஓகே மேடம் ஆர்டர் போட்டு செய்யாம இருப்பேனா ”

 

” நீதான் கடத்திட்டு வந்திருக்க.. ஆனால் பார்கவியை அவளோட லவ்வர் தான் கடத்திட்டு போனதா நினைச்சுட்டு இருக்காங்க.. ” என கத்தினாள்.

 

” ஓ… அப்படியா ” மீண்டும் அதே நக்கல்..

 

” பார்கவி எங்க ”

 

” பார்க்கனுமா”

 

” ஆமா ”

 

” உடனேவா ”

 

” பார்த்தே ஆகனும் ” என அவள் கத்தி இருக்க.. அவளை அழைத்து கொண்டு அறையில் இருந்து வெளியேறியவன்.. மாடியில் இருந்து கீழே உள்ள ஆராய்ச்சி கூடத்தை காட்டினான்.

 

” பாக்ஸ் நம்பர் 25.. அதுல தான் பார்கவி இருக்கா ” என கையை காட்ட.. அந்த பெட்டியை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

 

” தப்பு மேல தப்பு பண்ணுற ஆதி.. அவ சின்ன பொண்ணு அவளை ஏன் இப்படி பண்ணியிருக்க ” என அவனது சட்டையை பிடிக்க..

 

அவள் இத்தனை அருகில் வந்ததை பார்த்து, சட்டென அவளது கழுத்து வளைவில் வாசம் பிடித்தவன்.. ” ம்ம்…. ம்ம்…. இந்த ஸ்மெல்.. இதுதான்.. இதுக்கு தான் இத்தனையும் பண்ணேன்.. வாட் அ பென்டாஸ்டிக் ஸ்மெல்… ” என ஆழ்ந்து இழுத்தவனை அருவருபோடு தள்ளி இருந்தாள்.

 

” என்ன பண்ணிட்டு இருக்க.. இதெல்லாம் என் புருஷனுக்கு தெரிஞ்சா அவரு உன்ன சும்மா விட மாட்டாரு.. ”

 

” ஐயோ நிலா.. உன் புருஷன் வரச் சொல்லு… அவனா நானான்னு பார்க்கலாம்.. ஆனால் இப்போ இல்ல.. என்னோட ஆராய்ச்சி முடியவும் அவனை கண்டிப்பா மீட் பண்ணுறேன் ”

 

” அப்படி என்ன எழவ தான் கூட்டுற ”

 

” பெர்ஃப்யூம் பிஸ்னஸ்”

 

” புரியல ”

 

” பொண்ணுங்களை வச்சு தான்.. பொண்ணுங்க மூட் ஆகும் போது அவங்க உடம்புல ஈஸ்ட்ரோஜன் அப்படின்னு ஒரு ஹார்மோன் சுரக்கும்.. அப்படி வர அப்போ.. அவங்க உடம்பு ஒரு வித போதையில இருக்கும்.. அந்த நேரத்துல பெண்களோட உடம்புல இருந்து ஒரு வகையான வாசனை வரும்.. தட் இஸ் அவர் பிஸ்னஸ். அந்த ஸ்மெல் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணி சேல் பண்ணுறேன்.. அதாவது என்கிட்ட வர கஷ்டமருக்கு பொண்ணுங்களோட உடம்பை விட வாசனையை ரொம்ப விரும்புறாங்க..  அவங்க விரும்புற வாசனையை நம்ம தயாரிச்சு கொடுத்தா.. எந்த பொண்ணு வந்தாலும் அவங்களை திருப்தி படுத்த முடியும்.. அதுல வர சந்தோஷத்துல அள்ளி கொடுப்பாங்க பாரு பணம்.. அப்படியே பண மழையா கொட்டும்.. ” என வெறித்தனமாக பேசியவனை அதிர்ந்து பார்த்தாள் பிறை.

 

” என்ன பார்க்குற.. ஆனால் நான் பார்த்த பொண்ணுங்கள்ள நீ கொஞ்சம் ஸ்பெசல்.. எப்படி தெரியுமா.. மூடு வராமலே உன் ஸ்மெல் அட்டகாசமா இருக்கு.. உன்ன வச்சு நிறையா பிளேவர் தயாரிக்கலாம்.. ” என ஹஸ்கி வாய்சில் பேசியவனை கொலைவெறி கொண்டு முறைத்தாள் பிறை.

 

” இப்போ என்னோட மிகப்பெரிய டார்க்கெட் நீதான் நிலா.. உன்ன வச்சு நான் கோடீஸ்வரனாகானும்.. ” என கனவு கோட்டை காண்பவனை பார்க்க பார்க்க அவளுக்கு வெறியாக வந்தது.

 

” நீ நினைக்கிறது எதுவுமே நடக்காது ஆதி.. ” உறுதியாக கூறும் பிறையை புருவ முடிச்சுகளுடன் பார்த்து வைத்தான் ஆதி.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்