
மருத்துவமனைக்குள் நுழைந்த இதயாம்ரிதா முதலில் கண்டது விஷாலைத் தான்.
அவனைத் தாண்டி உள்ளே சென்றவள் ரிசப்ஷனில் விசாரிக்க, விஷால் பின்னாலிருந்து பேசினான்.
“ஷ்யாம் இப்ப அவுட் ஆஃப் டேஞ்சர். நிலோவை மட்டும் அவனைப் பார்க்க அலோ பண்ணிருக்காங்க!”
அவனது கூற்றில் சற்றே நிம்மதியடைந்தவள், “போலீஸ் கேஸ் ஆகியிருக்கும்ல?” என்றாள் புருவம் சுருக்கி.
“ம்ம்! அவன்கிட்ட தான் ரீசன் கேட்கணும்” என சில நொடிகள் அமைதியாக, அவளும் பேச்சை வளர்க்கவில்லை.
அதற்குள் நிலோஃபர் ஐசியூவில் இருந்து அழுது கொண்டே வந்தாள்.
“அம்ரி… இவனைப் பாருடி. என்னை ஏமாத்திட்டான்!” எனத் தேம்பிட, “என்னடி ஆச்சு. இப்ப எப்படி இருக்கான்?” என்றாள் பதற்றமாக.
“அவனுக்கு என்ன குத்து கல்லாட்டம் நல்லா தான் இருக்கான். என் தலைலல இடியை இறக்கி இருக்கான்” என்றதில் இருவருக்குமே எதுவும் புரியவில்லை.
விஷால், “பைத்தியமே… என்னன்னு முழுசா சொல்லு” எனக் கண்டிக்க,
“என்னன்னு சொல்றது. இவனுக்கு தான் ஏகப்பட்ட சொத்து இருக்குல்ல. அப்பறம் எதுக்கு இப்படி போய் மானத்தை வாங்குறான்” என்று புலம்பினாள்.
“உங்களுக்கே தெரியும். ஷ்யாமோட பேமிலி பில்டர்ஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க்ஸ்ல கோடி கோடியா சம்பாதிக்கிறாங்கன்னு. ஒரு கவர்மெண்ட் டெண்டர்ல, அது கைக்கு வர்றதுக்காக இவன் ரெண்டு கோடி ரூபா லஞ்சம் குடுத்து இருக்கான். அப்படி லஞ்சம் குடுத்தத ஒருத்தன் பார்த்து ஷ்யாமை பிளாக்மெயில் பண்ணிருக்கான். அப்ப கூட இந்த விஷயத்தை அவன் என்கிட்ட சொல்லவே இல்ல.
அவனுக்கு செட்டில் பண்றதுக்காக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல மீட் பண்ண பிளான் பண்ணிருக்கான். ஆனா அவன் ஷ்யாமோட ரூம்க்கு ஒரு பொண்ணை அனுப்பி இருக்கான். அந்தப் பொண்ணு ஏதேதோ பேசி இவனுக்கு ட்ரக் குடுத்து இருக்கு. கூடவே அவன்கூட தப்பா இருக்குற மாதிரி போட்டோஸ் எடுத்து, அதை இன்டர்நெட்ல அவன் முகம் மட்டும் வர்ற மாதிரி ஷேர் பண்ணிட்டா.
இவன் லஞ்சம் குடுத்தது தெரிஞ்சு பிசினஸ்ல செம்ம அடி. ப்ரெஷர் தாங்காம சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிருக்கான்…” எனக் கேவிட, விஷாலும் இதயாம்ரிதாவும் அவளை சமன்செய்தனர்.
விஷால், “அவன் அப்படி பட்டவன் இல்ல நிலோ. இடையில யாரோ கேம் ஆடிருக்காங்க. நீ வொரி பண்ணாத எல்லாம் சரி ஆகிடும்!” என்றதும், இதயாம்ரிதாவும் தன் பங்கிற்கு ஆறுதல் கூறியவள், அவள் சொல்லாமலேயே மருத்துவமனை பில்லைக் கட்டச் சென்றாள்.
ரசீதை வாங்கி விட்டுத் திரும்பும் போது அங்கு விஷால் நின்றிருந்தான்.
“யூ ஆர் ஆல்வேஸ் அ ஸ்வீட் ஹார்ட் அம்ரி…” என நெஞ்சைத் தொட்டுச் சொன்னவனை அசட்டை செய்து விட்டு நகன்றவளின் கையைப் பற்றினான்.
“இப்ப கூட எதுவும் கை மீறி போகல. டைவர்ஸ் எல்லாம் சட்டத்துக்கு தான. நீ ஏன் மறுபடியும் எல்லாத்தையும் புதுசா ஆரம்பிக்கணும். எல்லாத்தையும் மறந்து புது லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம் அம்ரி!” என்றான் தன்மையாய்.
அவனை இளிவாய் ஏறிட்டவள், “உன் பாஷைல புது லைஃப்ன்றது, ஒண்ணா படுக்குறது தான?” என கேலிநகை புரிய, அவன் முகம் கறுத்தது.
“இல்ல ஜஸ்ட் ஒரு கிளாரிஃபிகேஷன்க்காக கேட்டேன். பட் நாட் இண்டரெஸ்டட்” என்றாள் தோளைக்குலுக்கி.
“உன்னால எவ்ளோ நாளைக்கு இந்த பிசினஸைத் தூக்கி நிறுத்த முடியும்னு நினைக்கிற? அதுவும் தனியா? என் ஹெல்ப் இல்லாம கஷ்டம் அம்ரி. என் பெஸ்ட்டி நீ. உன்னைக் கஷ்டப்படுத்துறது எனக்கும் கஷ்டமா இருக்கு அம்ரி” என வருத்தம் தெரிவித்தான்.
“வாட் டூ யூ மீன்? நீ இல்லாம இந்த ஃபீல்டுல நான் எதுவும் செய்ய முடியாதுன்னு நினைக்கிறியா?” எனக் கண்ணைச் சுருக்கிக் கேட்க,
“டெஃபெனைட்லி. ப்ராக்டிகலா யோசி. எப்பவுமே நீ எமோஷனலா தான் யோசிப்பல்ல” என்றவனை சிவந்த விழிகளால் சாடினாள்.
அவள் கையை இறுக்கி மூடி நிற்க, “சொன்னா புருஞ்சுக்கோ அம்ரி. நீ டாப் மாடலை எடுக்குறது கஷ்டம். நியூ ஃபேசஸ் ரீச் ஆகுறது அதை விட கஷ்டம். அதை மீறி நீ ப்ராடக்ட்டை மார்க்கெட் பண்ண யூஸ் பண்ற மாடல் ரீச் ஆனா, அவனை நான் விலை பேசுவேன். நானே விலை பேசாம உனக்காக விட்டுக்குடுக்குறேன்னு கூட வச்சுக்கோ. ஆனா இன்னொருத்தன் விலை பேசுவான். அவனைத் தடுக்க முடியாது” என்றவனை தீயாய் முறைத்தவள், அவனிடம் அகப்பட்டு இருந்த கையை கண்ணாலேயே காட்டி எரித்தாள்.
இப்போது வரை கூட அவளை நேருக்கு நேராய் எதிர்ப்பது அவனுக்கு சற்றே பயத்தை தான் கொடுத்தது.
சிறு வயது முதல் அவள் மீதிருந்த ஒரு வித மரியாதை எனலாம். நட்பைத் தாண்டி அவள் கண்களில் ஒரு எச்சரிக்கை எப்போதும் இருக்கும். நண்பர்களாக விளையாட்டாக ‘அடல்ட் கன்டென்ட்’ எனப்படும் பருவ வயதினரின் அந்தரங்க வாக்குவாதங்களுக்குள் செல்லும்போது விஷாலையும் ஷ்யாமையும் கண்டித்து விடுவாள்.
பேசும் பேச்சில் கூட அவளுக்கு ‘எதிக்ஸ்’ என்ற ஒன்று இருத்தல் அவசியம். சிறு வயதில் ஒரு முறை அவளைக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டதற்காகவே விஷாலின் தலையில் கல்லைத் தூக்கி அடித்தவள். நேராய் கண் பார்த்து அவள் நிற்கும் தோரணை அவனை எப்போதுமே ஒரு எல்லைக்குள் நிறுத்தும்.
அதையும் மீறி அவளிடம் காதல் பிறந்தது அவனுக்கு. அக்காதலால் அவனுக்கு ஏதும் இழப்பிருக்கவில்லை. ஆனால் அவளுக்கு?
விஷாலை அமைதியாய் வெறித்தவள், ஒன்றும் பேசாமல் நகர எத்தனிக்க மீண்டும் அவன் தடுத்து நிறுத்தினான்.
“இன்னும் ஒரு தடவை நல்லா யோசி அம்ரி. உன்னோட ரெப்புட்டேஷன், பீஸ்ஃபுல் லைஃபை நீயே கெடுத்துக்காத” என்றவனை காட்டத்துடன் ஏறிட்டவள், ஒற்றை விரலால் அவனை நகரச் சொல்லி அழுத்தமாய் சைகை காட்ட அந்தத் திமிர் அவனை கட்டுப்படைய செய்தது.
“என்னை அவமானப்படுத்தி நடுத்தெருவுல நிக்க வைக்க நினைச்ச. இப்ப நடுத்தெருவுல நிக்கப் போறது நீ தான் அம்ரி. உன்னோட எந்த முயற்சியும் வெற்றியடையாது. பிகாஸ் நீ ஒரு எமோஷனல் இடியட். பிசினஸ்ல எமோஷனல் ஒர்க் அவுட் ஆகாது. அண்ட் மோர் ஓவர் உனக்கு இந்த ஃபீல்ட் சுத்தமா தெரியாது. நான் இல்லாம, ஒரு ஃபேமஸ் மாடல் ப்ராடக்ட் இல்லாம உன்னால அடுத்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.
எப்படியா இருந்தாலும் நீ என்கிட்ட தான் வருவ! சின்ன வயசுல இருந்து உன்கூட இருக்கேன். உன்னைப் பத்தி என்னைத் தவிர வேற யாருக்குத் தெரியும் சொல்லு. உனக்கு எமோஷனல் பாலன்ஸ்க்காகவாவது யாரோ ஒருத்தர் வேணும். உன் அப்பாவ டிபென்ட் பண்ணியே இருந்த. இப்ப அவர் இல்ல. அதுக்கு அப்பறம் நான் இருந்தேன். என்னையும் நீ முழுசா அக்செப்ட் பண்ணியா இல்ல… இனி யார் இருப்பா?” என்று மூச்சிரைக்க சுற்றுப்புறம் மறந்து குரலை உயர்த்திக் கத்த,
அது இதயத்தின் ஆழத்தில் வடுவை ஏற்படுத்தினாலும் தனது ஆணவத்தை சற்றும் குறைக்காதவள்,
“அப்படி எமோஷனல் சப்போர்ட் வேணும்னா, ஹஸ்பண்ட் தான் வேணும்னு இல்ல விஷால். ஆம்பள தான வேணும். காசு குடுத்தா ஒரு நாள் நைட்டு என்னை சந்தோஷப்படுத்திட்டுப் போக ஆயிரம் பேர் இருக்காங்க…” என வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டு அவனை ஒரு பொருட்டாகவும் நினையாது காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள்.
அப்போது தான், இவர்களைத் தேடி வெளியில் வந்த நிலோஃபர், “போய்ட்டாளா விஷால்?” எனக் கேட்க,
“ம்ம்” என்றான் முகம் கடுகடுக்க.
“நீ பேசிப் பார்த்தியா?”
“ப்ச்…” என மறுப்பாய் தலையசைக்க, நிலோஃபர் பெருமூச்சு விட்டாள்.
“அவள்கிட்ட இருக்குற பிராண்டை வாங்கிட்டா, டைவர்ஸ் பண்ற எண்ணத்தை விட்டுடுவான்னு நினைச்ச. ஆனா எதுவும் நடக்கலையே. அதுவும் போக, இப்ப நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் அது உண்மையா?” என வினவ, விஷால் விழி நிமிர்த்திப் பார்த்தான்.
“சத்யா சார் அவளுக்கு பி. ஏன்னு கேள்விப்பட்டேன்” என ராகத்துடன் அவள் முடிக்க, விஷாலுக்கு அதிர்ச்சி பரவியது.
——–
நெடுஞ்சாலையில் கார் தீ வேகத்தில் சீறியது. அதை விட பாவையின் மனம் கொந்தளித்தது.
எத்தனை திணக்கம் அவனுக்கு? என்னை அத்தனை எளிதாய் எடைபோட்டு விடுவதா? ஸ்டியரிங்கில் கை முஷ்டியால் மொத்த பலத்தையும் கொண்டு குத்தினாள். அவளது சிவந்த வதனம் மென்மேலும் சிவந்து சிறுத்தது.
கூடவே அவளது மூளை பல்வேறு கணக்கிட்டது.
நேராய் வீட்டிற்குச் சென்றவளை வாசலிலேயே வரவேற்றார் உமா.
“நிலோவுக்கு என்ன ஆச்சு?” எடுத்ததும் அவர் வினவ, விஷயத்தை மேலோட்டமாய் உரைத்தவளை வருத்தத்துடன் ஏறிட்டார்.
“இப்ப பரவாயில்ல தான. நான் வேணும்னா அவளுக்கு ஹெல்ப்புக்கு இருக்கவா?” எனக் கேட்ட தாயைக் கனிவுடன் பார்த்தாள்.
“வேணாம் மாம். நாங்க பாத்துக்குறோம். அவங்க பேரண்ட்ஸ் இருக்காங்கள்ல. நீங்க கிளம்புங்க…” என்றவளின் கன்னத்தை வருடினார் உமா.
“என்னமா?”
“இதை சொல்லக்கூடாதுன்னு தான் நினைச்சேன் அம்ரி. ஆனா, ஒரு அம்மாவா என்னால இதை சொல்லாம இருக்க முடியல” என்றவரின் உடைந்த குரலில் புருவம் சுருக்கினாள்.
“என்ன நான் ரொம்ப அழகா இருக்கேனா?” கண் சிமிட்டிக் கேட்டதில் வலியுடன் புன்னகைத்தவர், “என் பொண்ணு எப்பவும் அழகு தான். அதுல என்ன குறை…?” என்றார் பெருமையாய்.
இதழோரம் சின்னதொரு விரக்தி புன்னகை அவளிடம்.
அது அவரையும் காயம் செய்தாலும், சொல்ல வந்ததை சொல்லியே ஆக வேண்டுமென்ற உறுதியில் பேசினார்.
“நீ உன்னை ப்ரூவ் பண்ண நினைக்கிறது ஓகே. ஆனா அதுலேயே உன் லைஃபை தொலைச்சுடாத அம்ரி. உனக்குன்னு ஒரு லைஃப் வேணும்!”
“லைஃப்?” இதழ்களை ஏளனமாய் வளைத்துக் காட்டியவள், “வாங்கிடலாம்” என்றாள் நக்கலாக.
“அம்ரி!” உமா கண் கலங்க நிற்க, “மார்னிங்க்ல இருந்து ஆபிஸ் போகல மாம். என் சார்மிங் பி. ஏ மீட்டிங்க நடத்த முடியாம திணறிட்டு இருக்கான். ஐ ஹேவ் டூ கோ. உங்களுக்கு பிளைட்க்கு டைம் ஆச்சு. கிளம்புங்க” என்று அவரைக் காரில் ஏற்றி அனுப்பி விட்டாள்.
மீண்டும் அலுவலகம் நோக்கிச் சென்றவள், கடும் கோபத்தில் இருந்தாள்.
அவளை சற்றே ஆசுவாசப்படுத்தும் விஷயமாக சத்யா அவள் முன் நின்றான்.
“புதுமுகமா ஒரு பொண்ணும் பையனும் மாடல் ஆடிஷன்ல செலக்ட் ஆகிருக்காங்க மேம். நீங்க பார்த்தா பெட்டரா இருக்கும்…” என்றதும், அவளும் ஆடிஷன் நடக்கும் அறைக்குச் சென்றாள்.
அங்கு ஒரு ஆணும் பெண்ணும் இறுதிச் சுற்றில் தேர்வாகி இருந்தனர். அவளுக்கும் திருப்தியாய் இருக்க, “ஓகே தான்… கேமரா டெஸ்ட் பண்ணிடுங்க. சன்ஸ்க்ரீம் வச்சு தான் நம்ம ஃபர்ஸ்ட் ஆட் இருக்கணும். ஆட் டைரக்டர்ஸ் வர சொல்லிடுங்க சத்யா” எனக் உத்தரவிட, அவள் எள் என்றால் அவன் எண்ணெயாய் நின்றான்.
“ஆல்ரெடி வர சொல்லியாச்சு மேம். நீங்க இன்னும் கம்பெனி அண்ட் ப்ராடக்ட் நேம் லீகலா அனவுன்ஸ் பண்ணல. அதைப் பண்ணிட்டா பேக்கேஜிங் ஒர்க் முடிஞ்சுடும்” என்றவனை புருவம் உயர்த்தி மெச்சுதலாக ஏறிட்டவனிடம்,
“நேம் பிக்ஸ் பண்ணி ரெஜிஸ்ட்ரேஷன்க்கு குடுத்துருந்தேன். அண்ட், லோகோ டிசைனும் இன்னும் கொஞ்ச நேரத்துல கைக்கு வந்துடும் சத்யா” என்றவள், ஆட் டீமை அழைத்து விளக்கினாள்.
ஒளிரா. இது தான் இதயாம்ரிதாவின் பிராண்ட் பெயர்.
‘பழையதை விட்டு ஒழிந்து. புதிதாய் ஒளிருங்கள்!!!’ இதுவே அவளது பிராண்டின் தாரக மந்திரம்.
அதாவது, முகப்பரு, தழும்புகள், வெயில் தாங்காது கறுக்கும் முகத்தில் இருக்கும் காயங்களை ஒழித்து, ஒளிர வேண்டும் என்பதே இதன் அர்த்தமாம்.
இதைச் சுற்றி தான் விளம்பரத்தின் உள்பொருளும் இருத்தல் வேண்டுமென சிறு விஷயத்தையும் ஆராய்ந்து அதனை நேர்த்தியாய் செயல்படுத்தியவளைக் கண்டு புருவம் உயர்வது தற்போது சத்யாவின் முறையானது.
புது காதல் மலரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
67
+1
5
+1
3
⬅ Prev Episode
4 – 🦋💋 புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
Next Episode ➡
6 – 💋🦋 புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

விஷால் நிலோபர் நட்புகள் தானா சந்தேகம் வருகிறது.