Loading

பிறை -49

 

நேரமும் காலமும் ஒரே போல இருக்கும் என எதிர்பார்ப்பது மூடத்தனம். அடுத்த நொடி வாழ்க்கையில் என்ன நடக்க போகிறது என தெரியாமல் இருப்பது தானே வாழ்க்கையின் மந்திரம். அதை தெரிந்து கொண்டால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டான். கடவுள் என்ற ஒருவர் காணாமல் அல்லவா போய் விடுவார்.

 

இதோ அடுத்த நொடி என்ன நடக்க போகிறது என தெரியாமல் அந்த நீள் கண்ணாடிப் பெட்டியில் படுத்திருந்தாள் பார்கவி.

 

முகம் முழுவதும் வேர்த்து விறுவிறுத்து போனது. ” உன்ன யாரும் கொலை பண்ண போறது இல்ல… கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு கவி.. அப்போதான் ரியாக்ஷன் கரெக்டா இருக்கும் ” என அருகில் இருந்து அவளை சமன் நிலைக்கு தயார் படுத்தினார் அர்ஜுன்.

 

அவனையே வெற்றுப் பார்வை பார்த்தவளுக்கு.. எப்படியாவது தனது அண்ணன் வந்து காப்பாற்றுவான் என்ற எண்ணம் சற்று இருக்கத்தான் செய்தது.

 

ஆனால் இவனை நம்பி மும்பை வரை வந்தது தான் அவள் செய்த தவறு. மும்பை வரை அவளை தேடிக் கொண்டு அவளது அண்ணன் வருவானா ?

 

அவள் மும்பையில் இருப்பதற்கான ஆதாரத்தையும் அவளுக்கே தெரியாமல் அண்ணனிடம் சேர்த்தது தான் கடவுள் செய்த மாயாஜாலம்.

 

பெட்டி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. புகையை பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள் பார்கவி. கொஞ்சம் கொஞ்சமாக பரவி.. அவளது மேனியை தொட்டு தீண்டியது. அதே நேரம் லேசாக பெட்டியை திறந்து அவளுக்கு ஒரு ஊசியை போட்டிருந்தார் வில்சன்.

 

அதோடு மயக்கத்திற்கு சென்றிருந்தாள் பார்கவி.

 

” நீ வா அர்ஜுன்.. அவ எந்திரிக்க டைம் ஆகும்.. நம்ம பேசிட்டு வரலாம் ” என வில்சன் அழைக்க அவரோடு சென்றிருந்தான் அர்ஜுன்.

 

” சோ வாட் நெக்ஸ்ட் ” என்றவரை ஆழ்ந்து பார்த்தவன்.. ” நிலா ” என்றான் அமர்த்தலாக.

 

” என்ன பிளான் பண்ணியிருக்க.. ஆல்ரெடி அவன் தங்கச்சியை தூக்கினது தெரிஞ்சு நம்மளை பத்தி தீவிரமா விசாரிக்க ஸ்டார்ட் பண்ணிட்டான்.. இதுல அவன் பொண்டாட்டியை தூக்கினா.. சும்மா இருக்க மாட்டான்.. நமக்கான வெற்றி நமக்கு கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்னு தோணுது.. ” வில்சன் எடுத்துக் கூறினார்.

 

” நோ… என்ன ஸ்மெல் தெரியுமா அந்த நிலா மேல.. அப்படி ஒரு ஸ்மெல்.. அது நமக்கு கிடைச்சா இதை விட அதிகமா சம்பாதிக்கலாம்..”

 

” புரியுது.. ஆனால் ஆதி ? ”

 

” அவனை நான் பார்த்துக்கிறேன்.. ”

 

” ஓகே கேர்புல்.. நான் போய் அந்த பார்கவி பொண்ணு கிட்ட என்ன மாற்றம் இருக்குன்னு பார்க்கிறேன் ” என்றவர் எழ போக.. அவரை தடுத்தவன்.. ” நானே அவளை ட்ரீட் பண்ணுறேன்.. ” என அவன் எழுந்து கொண்டான்.

 

” லவ் ??? ” என அர்ஜுனை ஆழ்ந்து பார்த்தவருக்கு பதில் அளிக்காமல் , அங்கிருந்து சென்றிருந்தான் அர்ஜுன்.

 

**

 

திரையில் தெரிந்த படங்களை பார்த்து அதிர்ந்து போனான் ஆதிதேவ். எப்போதோ ஒரு முறை ப்ராஜெக்ட் செய்வதற்கு இவளது மெயில் ஐடியை அவனது போனில் ஓபன் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு வந்தது நினைவுக்கு வந்தது. அதன் பின் அதை அவன் லாக் அவுட் செய்யவில்லை.

 

இதோ ஆதி அர்ஜுனை பற்றிய விவரங்களை தேட டிரைவில் உள்ள போல்டரை கிளிக் செய்தவன்.. புதிதாக ஒரு மெயில் ஓபன் ஆகி இருப்பதை பார்த்தவன்.. அது பார்கவி மெயில் என தெரிய வந்தது. அதிலும் டிரைவ் ஓப்பன் ஆகி இருக்க.. அதில் பதிவேற்றம் ஆகி இருந்த தேதியை பார்த்து அதிர்ந்து போனான்.

 

நேற்றைய தினம் எதையோ சேமித்து இருக்கிறாள். அப்படி என்ன இருக்கிறது என திறந்து பார்த்தான்.

 

அவள் எடுத்த படங்களும். வீடியோ காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தது. அவனது அதிர்ந்த முகத்தை பார்த்த சரண், போனை வாங்கி அவனும் பார்த்தான்.

 

பார்த்தவனுக்கு நெஞ்சம் எல்லாம் நடுங்கியது. ” என்ன இடம் டா இது..  இது எப்படி உன் போன்ல”

 

” ப்ராஜெக்ட் பிரிண்ட் எடுக்க பார்கவி மெயில் ஓபன் பண்ணேன் டா.. அதை க்ளோஸ் பண்ண மறந்துட்டேன். இப்ப தான் டிரைவ்ல போய் பார்க்கும் போது தெரிஞ்சது.. நேத்து தான் இதையெல்லாம் பதிவு பண்ணியிருக்கா.. அப்போ இந்த இடத்தில தானே அவ இருக்கனும் ”

 

” கூகுள் போட்டோல லோகேஷன் காட்டும் டா ”

 

” ம்ம் மும்பை ” என்றவனுக்கு தொண்டை அடைத்தது.

 

” அங்க வரைக்கும் பார்கவி போனாளா ” சரணுக்கு நம்ப முடியவில்லை. சிறு வயதில் இருந்து அவனுக்கு பார்கவியை தெரியும்.. அமைதியாக தான் இருப்பாள். அவளுண்டு அவள் வேலையை உண்டு என இருக்கும் பெண். இவள் இத்தனை தைரியமாக மும்பை வரை சென்றது தான் ஆச்சரியம்.

 

” இது என்ன மாதிரி இடம் .. முதல்ல அதை கண்டு பிடிக்கலாம்.. ” என சரண் அவனுக்கு தெரிந்த லேபிள் வேலை பார்க்கும் நண்பனை அழைத்திருந்தான்.

 

அரை மணி நேரத்தில் அவனும் வந்து சேர.. அவனிடம் அந்த காட்சிகளை எல்லாம் காட்டினான் சரண். ” இது எந்த மாதிரி இடம்.. என்ன தயாரிக்கிறாங்க.. ஏதாவது தெரிஞ்சா சொல்லு டா.. பொண்ணுங்களை எல்லாம் அடைச்சு வச்சிருக்காங்க ” என சரண் பதட்டத்துடன் கேட்க.. ஆதி அமைதியாக அமர்ந்திருந்தான்.

 

அப்போதும் பிறை அழைக்க.. போனை தூக்கி போட்டு உடைத்தால் என்ன என்ற நிலையில் இருந்தவன்.. இம்முறை போனை எடுத்திருந்தான்.

 

” என்ன விஷயம்… ” எடுத்ததும் கடித்தான்.

 

அவன் கோபமாக இருப்பதை உணர்ந்து அமைதியாக இருந்தவள்.. ” அது.. வந்து.. பார்கவி பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதாங்க.. அதுக்கு தான் போன் பண்ணேன் ” குரல் நடுங்கியது.

 

” எப்படி கிடைப்பா.. அவ மும்பைல மாட்டிக்கிட்டு இருக்கா.. சந்தோஷமா.. கொஞ்சம் கூட மெச்சூரிட்டி இல்லாம சின்ன பிள்ளை மாதிரி எப்படி ஒரு விஷயத்தை மறைச்சிருக்க நீ .. ” என அவன் கத்த, அதற்கு மேல் அடக்க முடியாமல் போனை வைத்தாள் பிறை.

 

கண்ணீர் ஆறாக ஓடியது. இப்படி ஒரு விஷயம் நடக்கும் என அவள் கனவா கண்டாள். ஓடிப் போன தங்கையை விட்டுவிட்டு இவளிடம் காய்வதில் என்ன நியாயம்!

 

‘ தப்பு பண்ணிட்டேன்.. அப்போவே இவங்க கிட்ட சொல்லிருக்கனும்.. இப்போ எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகிடுச்சு .. கடவுளே பார்கவி மட்டும் கிடைச்சுடனும் ‘ என வேண்டுதலை போட்டு விட்டு அமைதியாக இருந்து விட்டாள்.

 

லேப் இருந்த நிலையையும்.. அங்கு உபயோகப்படுத்தும் கேமிக்கல் பெயர் கொண்ட பலகையை வைத்தும் ஓரளவிற்கு யூகித்து இருந்தான் சரணின் நண்பன் சக்தி.

 

” என்னாச்சு டா.. ”

 

” இது நம்ம யோசிக்கிறத விட விஷயம் பெருசா இருக்கும் போலையே டா..”

 

” முதல்ல என்ன விஷயம்னு சொல்லு ”

 

” இது வாசனை திரவியம் தயாரிக்கிற இடம் டா. அதுக்கான கெமிக்கல்ஸ் தான் இங்க இருக்கு. ஆனால்… ”

 

” ஆனால் என்ன.. ”

 

” பொண்ணுங்க தான் இதுல ஹைலைட்டு ”

 

” என்ன சொல்லுற ”

 

” எனக்கு தோணுறத சொல்லுறேன்.. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மைன்னு நீங்க தான் கண்டு பிடிக்கனும்”

 

” ம்ம் … ”

 

” இது வாசனை திரவியம் தயாரிக்கிற லேப் மாதிரி தான் இருக்கு. எல்லாம் அதுக்கு யூஸ் பண்ணுற கெமிக்கல்ஸ் தான். இதுல பொண்ணுங்களை வச்சு பெர்ஃப்யூம் தயாரிக்கிறாங்க.. அதாவது எப்படினா.. அந்த வீடியோல இருக்குற மாதிரி பொண்ணுங்களை அந்த கண்ணாடி பெட்டிக்குள்ள போட்டு வியர்க்க வச்சு… அந்த ஸ்மெல்ல கலெக்ட் பண்ணுறாங்க.. தென் போதை ஊசி மாதிரி போட்டு.. அந்த பொண்ணு மூட் ஆகி இருக்கும் போது அவ மேல இருக்கிற ஸ்மெல்ல கலெக்ட் பண்ணுறாங்க… இதுல அது தெளிவா ரெகார்ட் ஆகியிருக்கு.. ”

 

நண்பர்கள் இருவரும் அதிர்ந்து போய் அப்படியே அமர்ந்திருந்தனர்.

 

” இதுல வர ஸ்மெல் எல்லாத்தையும் அதிக விலைக்கு வித்திடுவாங்க.. ஒவ்வொரு பொண்ணுங்க கிட்டயும் ஒவ்வொரு விதமான ஸ்மெல் இருக்கும். அதை கலெக்ட் பண்ணி விக்கிறாங்க ”

 

” என்ன டா சக்தி சொல்லுற ”

 

” இது என்னோட கெஸ் தான்.. உண்மை என்னனு நீங்க தான் கண்டு பிடிக்கனும் ”

 

” ம்ம் ” என சரண் அமைதியாகி விட.. சக்தி மேலும் அந்த வீடியோவில் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என பார்க்க தொடங்கினான்.

 

அதே நேரம் முன்பை மாநகரத்தில் போதைக்கு அடிமையான ஆண்கள் எல்லாம் பெண்களை நாடுவது சகஜம். ஆனால் கிடைத்த பெண்களோடு இருப்பதை விட.. அவள் மீது வரும் வாசனையில் மயங்குபவர்கள் தான் அதிகம். அவர்கள் விரும்பும் வாசனை இல்லையென்றால் இந்த திரவியத்தை, வரும் பெண்கள் மீது அடித்து அனுபவித்து கொள்வார்கள்.

 

அப்படி ஒரு வாசனை வெறியர்கள். பெண்கள் சதை மீது தான் காமம் என்றால், அவர்களது வாசனைகளை கூட விடாத வெறியர்களாகி போனார்கள்.

 

இதைத்தான் வில்சன் மற்றும் அர்ஜுன் இருவரும் தயாரித்து வருகிறார்கள். போதை மருந்தை போல இந்த திரவியமும் ஒரு வித போதை தான். அவர்களுக்கு பிடித்த வாசனை என்றால் மார்கெட்டில் அள்ளி கொடுத்து வாங்குவார்கள். இல்லையென்றால் அது குப்பைக்கு சென்று விடும்.

 

குப்பைக்கு செல்லும் திரவியத்திற்கு சொந்தமான பெண்களை விடுதலை செய்து விடுவார்கள்.

 

எந்த திரவியம் சூடி பிடிக்கிறதோ அதை விடாமல் தயாரித்து வருவார்கள். அரசாங்கத்திற்கு தெரியும். காசை வாங்கிக் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்.

 

இதோ பெண்கள் மீது வரும் பிரத்யோக வாசனைகளை எல்லாம் களவாடிக் கொண்டிருந்தான் அர்ஜுன். இதில் பிறைநிலாவின் வாசனையை நுகர்ந்தவனுக்கு அதை எப்படியாவது மார்கெட்டில் கொண்டு வர வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் அவளை தக்க சமயம்  பார்த்து தூக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறான்.

 

இவன் தயாரிக்கும் வாசனை திரவியத்திற்கு மார்கெட்டில் மதிப்பு ஜாஸ்தி என்பதால், எப்போதுமே இவன் வெளியிடும் பெர்ஃப்யூம் மக்களிடையே வரவேற்கப்படும்.

 

பெண்களின் மீது வரும் அற்புதமான வாசனைகளை விற்று பணம் சம்பாதித்து வரும் வில்சன் மற்றும் அர்ஜுன் .. எதற்காக தமிழ்நாட்டில் இருக்கும் ஆதியின் குடும்பத்து பெண்களை கடத்தி இதை செய்ய வேண்டும் ?

 

முதல் கட்ட சோதனை முடிந்திருந்தது. பார்கவி மெதுவாக கண் விழித்தாள். அவள் எதிரே அமைதியாக அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

 

அதே நேரம் அடுத்த நொடியே மும்பைக்கு டிக்கெட் போட்டிருந்தான் சரண். இருவருமே மும்பை கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

 

” மச்சான் உன் பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டு வா டா ”

 

” பேசாம இரு டா.. பாரு தான் அறிவு கெட்டு போய் பண்ணிருக்கா சரி.. இவ எதுக்கு வீட்ல மறைச்சா.. ”

 

” உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஒரு வாரம் தானே ஆகுது.. எப்படி அதுக்குள்ள அந்த பொண்ணு வீட்ல சொல்லும். நீ தேவையில்லாம தங்கச்சி கூட சண்டை போடற ஆதி ” என சரண் கூறியும் காதில் வாங்காமல் கிளம்பி இருந்தான் ஆதிதேவ்.

 

ஆனால் அவனுக்கு முன்பு அவனது மனைவி அங்கு கண்ணாடிக் குடுவையில் இருப்பாள் என அறியாமல் கிளம்பி விட்டான்.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்