Loading

“எதுக்குயா கத்துன?” நிதர்ஷனா யாஷிடம் கேட்டதும், நிவேதன் “நான் ஒன்னுமே பண்ணல நிதா. ரொம்ப நேரமா ஒரே மாறிக்க படுத்துருக்கியே. கழுத்து வலிக்கும் உன் புருசனுக்கு கை வலிக்குமேன்னு உன்னை தள்ளி படுக்க வைக்க வந்தேன்” என்றான்.

“நல்லது தானயா பண்ண வந்தான்…” நிதர்ஷனா கேட்டதில் அவளையும் முறைத்து வைத்த யாஷ் பிரஜிதன், மீண்டும் கண் மூடிப் படுத்துக் கொண்டான்.

“நிதா… இவனை எப்புடி நீ லவ் பண்ணுன?” கிசுகிசுப்பாக நிவேதன் தங்கையிடம் கேட்க,

“ரொம்ப முக்கியம்! மூடிட்டு தூங்கு…” எனக் கடிந்ததில், “லவ் கதை கேட்டா ஏன் டென்சனாகுறா” எனப் புலம்பியவன், பின்னால் திரும்பிப் பார்த்தான். அந்த விமானத்தில் அந்தக் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருமில்லை.

அனைவருமே உறக்கத்தில் இருக்க, பக்கவாட்டு இருக்கையில் சின்ன இடைவெளியில் கண்மணி அமர்ந்திருந்தாள்.

அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் வலுக்கட்டாயமாக முகத்தை வேறு பக்கம் திருப்பி இருந்தாள்.

தன்புறம் அவள் திரும்பினால் பேச்சு கொடுக்கலாம் என எண்ணி இருக்க, அவளோ ஒரு முறை கூட திரும்பாது போனதில் சின்னதாய் ஒரு வருத்தம் அவனுக்கு.

கல்கத்தாவிற்கு கிளம்ப போவதாகக் கூறிய ரித்திகாவையும் தரதரவென தன்னுடனே இழுத்து வந்திருந்தான் ஆஹில்யன்.

யாஷ், அனைவரையும் இத்தாலியில் உள்ள தனது இரண்டடுக்கு பங்களாவில் தங்க வைத்தான்.

ஆதிசக்திக்கு அதுவரையில் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. தானும் அலெஸ்ஸும் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவானோ என்று!

வேறு வீட்டைப் பார்த்ததும் தான் அவரது முகம் சற்றே நிம்மதியடைந்தது.

அதனைக் கண்டுகொண்ட யாஷ் பிரஜிதன், “இது என் வீடு. இங்க என்னைத் தவிர யாரும் வர பெர்மிஷன் இல்ல” என்று கூறியதில் அவரிடம் ஒரு மென்புன்னகை. மகனின் புரிதலில் உள்ளம் உவகை கொண்டது.

“இம்மாம்பெரிய வீட்ல நீ மட்டுமா இருப்ப?” என கேட்டு வைத்தாள் நிதர்ஷனா.

சின்ன சிரிப்புடன் அனைவரும் நகர்ந்து கொள்ள, ஆஹில்யன் கீழேயும் மேலேயுமாக இருந்த அறைகளில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை காண்பித்தான்.

அனைவரும் நகன்றதும் பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்தபடி அவளிடம் திரும்பிய யாஷ், “நான் மட்டும் இல்ல. என் கூட அப்போ அப்போ கேர்ள்ஸ் இருப்பாங்க. ஃபன் பண்றதுக்கு…” என்றான் நக்கலாக.

உதட்டைச் சுளித்தவள், “எதுக்கு உன் எலிசாவுக்கு குளிப்பாட்டி விட்டு, அதுக்கு பூ பொட்டு வச்சு பூஜை பண்றதுக்கா?” எனத் துடுக்காய் வினவ,

“ப்ச் நோப் எனக்கு குளிப்பாட்டி விட!” அவன் கால்கள் அவளை நோக்கி நகர, அவளது கால்கள் தன்னிச்சையாய் பின்னோக்கி நகர்ந்தது.

“உன்னைக் குளிப்பாட்டி, ட்ரெஸ் போட்டு விட தான் உன் ஆலம்பனா இருக்கே!”

“அந்த ஆலம்பனா போர் அடிச்சுடுச்சே!”

“அதே மாதிரி ஒரு நாள் நானும் போர் அடிச்சுடுவேன் உனக்கு… என்ன இருந்தாலும் நான் நாய் தான?” முணுமுணுப்பை உரைத்தாள்.

“ஆமா… இதெல்லாம் நல்லா ஞாபகம் வச்சுக்கோ. இதுக்காக நான் பண்ணுன சமாதானத்தை எல்லாம் மறந்துடு.”

“சமாதானம் பண்ணுனியா அரக்கா?” விழிகளை விரித்து அவள் கேட்க,

“எஸ்… என் ஸ்டைல்ல!” என்றான் விஷமமாக.

“எப்படி?”

அவள் கேட்ட நொடியில் “இதோ இப்படித்தான்…” என்று அவளது இதழுடன் தன்னிதழை இணைத்தவன், அவளை மூச்சடைக்க செய்திருந்தான்.

“ம்ம்ம்ம்ம்…” மறுப்புடன் அவனது நெஞ்சில் அடித்த கரத்தை இலகுவாக பிடித்து தனது முரட்டு கரத்தினுள் அடக்கிக் கொண்டவன், மெல்ல விலகி “ஒரே கிஸ்ல சமாதானம் ஆகிட்ட தான். பட், ஐ கேவ் யூ ஒன் மோர்!” என மீண்டும் அவளை நோக்கி குனிந்தான்.

தன்னுடன் நிதர்ஷனா வரவில்லையென்பதை உணர்ந்த நிவேதன், அவளை அழைக்க மீண்டும் கீழிறங்கியவன் “நிதா” என அழைத்துக்கொண்டு வர, வேகமாக யாஷை தள்ளி விட முயன்றாள்.

அவனோ சின்னப் புன்னகையுடன் முத்தத்தை சில நொடிகள் தொடர்ந்து விட்டே நகர்ந்தான்.

அவன் நகரவும் அங்கு நிவேதன் வரவும் சரியாக இருக்க, நிதர்ஷனா சிவந்து போன கன்னத்துடன் யாஷை படபடவென அடித்தாள்.

தேனிதழை சுவைத்த இதத்தில் சிக்கி இருந்த ஆடவன் அவளது அடிகளை மென்மையாய் தாங்கி கொள்ள நிவேதன் தான் விழித்தான்.

‘இவள் என்ன இந்த முரட்டு பீஸையே அடிக்கிறா? புருஷன்னு ஆகிட்டா அடங்கி தான் போகணும் போல…’ என எண்ணிக்கொண்டே நிற்க, அந்நேரம் நிதர்ஷனா நின்றிருந்த பக்கவாட்டு சுவரில் இருந்த இன்டர்காம் ஒலித்தது.

வீட்டில் இருந்தே சில மீட்டர்கள் தூரத்தில் இருந்த ராட்சசத ஆட்டோமேட்டிக் கேட்டைத் தாண்டி ஒரு ஈ கூட நுழைய இயலாது.

யாரேனும் தெரிந்தவர்களோ நண்பர்களோ வந்தாலும் கேட்டில் கொடுக்கப்பட்ட வீடியோ இன்டர்காம் மூலம் மட்டுமே ஆக்சஸ் செய்ய இயலும். அந்நபர்களை வீட்டினுள் ஒவ்வொரு அறையில் அமைக்கப்பட்டிருக்கும் இன்டர்காம் மூலம் கண்டறிந்து, வீடியோ வழியாக பேசியே அனுப்பி வைக்க இயலும், அல்லது யாஷ் விருப்பப்பட்டால் மட்டுமே அவர்கள் உள்நுழைய இயலும்.

இரு வருடங்களுக்கு முன் அவனது சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட இந்த பங்களாவில் இதுவரை ஆஹில்யனும் ரித்திகாவும் தவிர யாரும் வந்தது இல்லை. அலெஸ்சாண்ட்ரோ உட்பட.

“இது என்ன போனை சொவத்துல தொங்க விட்டுருக்கீங்க?” நிவேதன் வியப்பாகக் கேட்க, யாஷ் அவனைத் திரும்பிப் பாராமலேயே, “இது இன்டர்காம்” என ஆரம்பித்து இது செய்யக்கூடிய வேலையைக் கூறியதில் மலைத்துப் போனான்.

“அப்போ கேட்டுல வாட்ச்மேன் எல்லாம் தேவை இல்லையா?” வாயில் கை வைக்காத குறையாக கேட்க, நிதர்ஷனாவிற்கு அவனது செயற்கை நுண்ணறிவை கேட்டு கேட்டு பழகி விட்டதால், அசட்டையாக இருந்தாள்.

அந்நேரம், நிவேதனின் காலில் இருந்த தூசியைத் துடைக்கும்பொருட்டு, தரை துடைக்கும் இயந்திரம் நிவேதனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, அவன் துள்ளினான்.

“அயோ நிதா… இங்க யாரோ பாம் போட போறாங்க. வா ஊருக்கே போய்டலாம்” எனத் தங்கையை அழைக்க, அவளோ வாயைப் பொத்தி சிரித்தாள்.

“அடேய்… அது பாம் இல்லடா ஆலம்பனா…” என்றிட, “பைத்தியமாடி நீ. எப்ப வேணா வெடிக்கும் இது” எனப் பதறினான்.

“ஆமா திரியைப் பிச்சு விட்டு நெருப்ப பத்த வை. பரதேசி. அது வீடு கூட்டுறதுடா” நிதர்ஷனா தலையில் அடித்தாள்.

“வீடு பெருக்க வெளக்கமாறு தான வேணும்?” நிவேதன் விழிக்க, நிதர்ஷனாவோ தனது செயற்கை நுண்ணறிவு அறிவை எல்லாம் அவனுக்கும் செலுத்திக்கொண்டு, அவளுக்கும் ஆலம்பனாவிற்கும் இருக்கும் நட்புறவை எடுத்துரைத்தாள்.

அலெஸ்ஸாண்ட்ரோ ஏற்கனவே மூன்று முறை அழைத்திருக்க, நான்காவது முறையில் தான் தன்னவளின் மீதிருந்த கண்ணைத் திருப்பி இன்டர்காமை ஆன் செய்தான்.

நொடிப்பொழுதில் வீடியோ ஸ்க்ரீனில் அலெஸ் தெரிந்தார்.

“அந்த ‘பிட்சை’ இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த யாஷ்?” ஆதிசக்தியை குறிப்பிட்டு அலெஸ் எடுத்ததும் கடிய, “மைண்ட் யுவர் வொர்ட்ஸ் பப்பா!” என முதன்முறை தாய்க்கு ஆதரவாய் கோபத்தைக் காட்டினான்.

அதில் அவரது கோபம் இருமடங்கானது. “ஐ வில் கில் யூ ஆல் யாஷ்! ஓபன் தி டோர்” என்று மூச்சிரைக்க,

“சாரி டேட். இங்க உங்களை அலோ பண்ண முடியாது. ஆபிஸ்ல பாக்கலாம். பார்த்தே ஆகணும் உங்கள!” என்றான் அழுத்தமாக.

“வரதா எங்க?”

“ஏன் இவ்ளோ அவசரம் பப்பா. கூல்! எதையாவது பண்ணிட்டு நீங்களும் அவர் இருக்குற இடத்துக்குப் போய்டாதீங்க. காட் மை பாய்ண்ட்.” என்று மிரட்டி விட்டே அலைபேசியை வைத்தான்.

இருவரும் பேசும் மொழி புரியாது அண்ணனும் தங்கையும் திருதிருவென விழித்தனர்.

“ஏய் நிதா… என் மச்சானுக்கு ரெண்டு மொழி தெரியுமா?” என நிவேதன் மெல்லமாய் கேட்க,

“உன் நொச்சானுக்கு பல மொழி தெரியுமாம். ஆனா அவன் தமிழ் பேசுனாலே எனக்கு பாதி தான் புரியும்…” என்று நக்கலாய் முணுமுணுத்ததில்,

“ஆமா ஆமா உனக்கே புரியலைன்னா எனக்கு சுத்தம். தமிழையே இங்கிலீசு மாதிரி பேசுறாரே… நீ எப்படி ஊமை பாச பேசி காதலிச்சியா?” எனக் கேட்டான் சந்தேகமாக.

நிதர்ஷனா அவனை முறைத்து வைக்க, “இல்ல நிதா… சோற தவுற ஒனக்கு ஒன்னும் தெரியாது. எனக்கு வேற என்ன ஆச்சுன்னு தெரியாம ஒரே கன்பியூசாக்கீது…” என இளித்தான்.

“இந்த ஸ்லாங் பேசுனா, அவன் கட்டி வச்சு அடிப்பான். நீ உன் திருவாய மூடு!” என்றவளுக்கு சட்டென ஏதோ பொறி தட்டியது.

“யாஷ்…” வேகமாய் அவனை அழைத்ததும் யாஷ் நிமிர்ந்தான்.

“இது உன் அப்பாவா?”

“ம்ம்!”

“இவரை நான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு…” என்றபடி மெல்ல சிந்தித்தாள்.

ஆடவனின் புருவ மத்தியில் முடிச்சுகள் உருவானது.

“இவரை எங்க பார்த்திருக்க?”

“தெரியல. ஆனா பார்த்த மாதிரி தான் இருக்கு…” என நெற்றியைப் பிடித்தாள்.

“வெய்ட்…” என்ற யாஷ், இண்டர்காம் ஸ்க்ரீனில் ரெகார்ட் ஆகியிருந்த அலெஸ்ஸின் வீடியோவை மீண்டும் ஒளிபரப்பி “நல்லா பார்த்து சொல்லு நிது” என்றான்.

மீண்டும் மீண்டும் வீடியோவை ஓட விட்டும் அவளுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

ஆனால் நிவேதனின் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

“இது இந்த குரல்… என்னைக் கடத்துன இடத்துல இந்த குரலை நான் கேட்டுருக்கேன்” நிவேதனின் கூற்றில் யாஷ் தீவிரம் அடைந்தான்.

“ஆஹில்!” சத்தமாய் அழைத்ததும், அந்நேரம் வரை ரித்திகாவிற்கு தனி அறையை காட்ட வந்தவன், “இங்கேயே நானும் ஸ்டே பண்ணிக்கட்ட மேடம்” என்று அவளுடன் சில்மிஷங்கள் செய்து கொண்டிருந்தான்.

மிகவும் அரிதாய் கிடைக்கும் இது போன்ற தருணங்களில் முத்தங்களில் மூழ்கிப் போய் விடுவார்கள். அதே போல இப்போதும் ஆஹில்யன் அவளை முத்தமிட வந்தவன், யாஷின் குரல் கேட்டு தெறித்து கீழே ஓடினான்.

“தொடை நடுங்கி” ரித்திகா அவனைத் திட்டியபடி அவளும் கீழே வர, யாஷ் பிரஜிதன் ஆஹில்யனை பார்வையால் சுட்டான்.

“என் பப்பா இட்டாலில இருந்தா தான சொன்ன? எப்ப அவர் இந்தியா வந்தாரு?”

அவனது சினத்தில் மிரண்டவன், “பாஸ்… நிதா ஹாஸ்பிடல்ல இருக்கும்போது வந்தது தான். அதுக்கு அப்பறம் அவர் இந்தியா வரலை. போன்லயும் யார்ட்டயும் காண்டாக்ட் பண்ணல. என்னாச்சு பாஸ்?” எனக் கேட்டான்.

“நோ! கண்டிப்பா அவர் தமிழ்நாட்டுல இருக்குற லோக்கல் ரௌடிஸ் கூட டச்ல இருந்துருக்கணும். நிவேதனை அவர் ஏன் கடத்தணும்?” என்றவனின் கேள்விக்கு அடுத்த கணமே விட கண்டுபிடித்து விட்டான்.

“கிரேட் மூவ்!” தந்தையை மெச்சியும் கொண்டான்.

“என்ன ஆச்சு?” நிதர்ஷனா குழப்பமாக வினவ, “இவனை பப்பா தான் கடத்திருக்காரு…” என்றான் யோசனையாக.

நிவேதனோ, “ஆனா எனக்கு அவரை யாருன்னே தெரியாதே. என்னை ஏன் கடத்தணும்?” எனும்போதே மற்றவர்களும் அங்கு குழுமி விட்டனர்.

ஆதிசக்திக்கு நெஞ்சம் தீப்பற்றி எரிந்தது.

“அந்த அலெஸ் செய்யக்கூடிய ஆள் தான் யாஷ். பட் எதுக்கு?” எனப் புரியாது வினவ,

“சிம்பிள் லாஜிக். எலைட் கம்பெனிக்கு என்னை சேர்மன் ஆக்கணும்னு அப்பாவோட ஆசை. அந்த நேரத்துல தான் நிவேதன் உயிரோட இருக்குறது வரதராஜனுக்கு தெரிஞ்சுருக்கணும். அவன் மூலமா டாட்க்கு தெரிஞ்சுருக்கும். நிவேதன் திரும்பி வந்தா, இவ்ளோ வருஷமா பிசினஸ்ல ஆக்டிவா இருக்குற வரதராஜனோட பையனுக்கு தான் சேர்மன் போஸ்ட் போகும்னு கெஸ் பண்ணி, அவனை இல்லாம செய்றதுக்கு பிளான் பண்ணிருக்கலாம்…” எனத் துல்லியமாய் கணித்திருந்தான்.

இங்கோ அலெஸ்ஸாசாண்ட்ரோ வெறித்தனமாய் அதிவேகத்துக்குடன் காரை இயக்கினார்.

தி கிரேட் எலைட் நிறுவனத்தின் உரிமையாளராக தானோ தனது மகனோ மட்டுமே இருக்க வேண்டுமென்பது அவரது பல வருட கனவு.

சரியாக அந்தக் கனவு நிறைவேறும் நேரம், தனது மகன் என்று ஒருவனை கண்டுபிடித்திருப்பதாக வரதராஜன் கூற அலெஸ்ஸிற்கு ஆத்திரம் சூழ்ந்தது.

நிவேதனுக்குப் புரிய வைத்து எப்படியும் திரும்பி அழைத்து வந்து விடுவதாக வரதராஜன் உறுதியாய் கூறியதில் தான் தனது திட்டத்தை அரங்கேற்றினார் அலெஸ்ஸாண்ட்ரோ.

கடத்தி கொலை செய்து விட்டால், தன் மீது சந்தேகம் திரும்பும் என்பதாலேயே, நிவேதனைக் கடத்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கொலை செய்ய போதை மருந்தை செலுத்தினார்.

நிவேதன் மீண்டும் காணாமல் போனதில் நிம்மதியுற்றவருக்கு எரிச்சலை ஊட்டியது ஆதிசக்தியிடம் இருந்து வந்த அழைப்பு.

யாஷிற்கு தேவையான ஆராய்ச்சிக்கு உதவ வேண்டுமென்றால், தன்னுடன் இருக்க வேண்டுமென அவர் கூறிய நிபந்தனையைக் கண்டு எவ்வித பயமும் இருக்கவில்லை அவருக்கு. ஏனெனில், தனது மகனை வெறும் சென்டிமென்ட்டால் கரைக்க இயலாது என்று அறிந்து வைத்திருந்தார்.

இதில் அவர் எதிர்பாராத ஒன்று, அவன் ஒட்டுமொத்தமாக ஒரு பெண்ணிடம் அடிபணிந்து காதல் வலைக்குள் சிக்கிக் கொண்டது.

சேர்மன் கனவு கைகூடும் முன்னே, அதற்கு தடையாய் மகனே நின்று விட, அனைவரையுமே கொன்று போட வேண்டுமென்ற வெறி எழுந்தது அவருக்கு.

அது அவருக்கே பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென இப்போது வரை அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னவளின் இந்நிலைக்கு காரணமே அவர் தான் என யாஷ் அறிந்து கொண்டால், பின் தனது முடிவு அவன் கையில் தான் என்ற உண்மை உணர்ந்தாலும், அவரிடம் சிறு வெற்றிப்புன்னகை மிளிர்ந்தது.

“நீ என்னைக்கும் அவளை காப்பாத்தவே முடியாது மை டியர் சன்!” உதடு சிரித்தாலும் கண்களில் அனல் பறந்தது.

—–

“சேர்மன் போஸ்ட்டா? அப்டின்னா இன்னான்னு கூட இவனுக்கு தெரியாதே…” கதிரவன் முதல் ஆளாக வாயில் கை வைத்தான்.

நிவேதனும் அதனை ஒப்புக்கொண்டு, “ம்ம்க்கும் சேர் வேணும்னு கேட்டுருந்தா, நானே வாங்கி குடுத்து வழி அனுப்பிருப்பேனே. இதுக்காக என்னை காந்தி காலத்துக்கு கூட்டிட்டுப் போய் எதுக்கு இந்த வீண் செலவு?” என்றான் வெள்ளந்தியாய்.

அவனை கனிவாய் ஏறிட்ட யாஷ், “என் பப்பாவோட செல்பிஷால நீ இதுல பலியாகிட்ட நிவேதன்… ஐ காண்ட் பிலீவ் திஸ். உன் சிஸ்டர்க்காக உன்னை எங்க எங்கயோ தேடி… ப்ச்…” என எரிச்சலுற்றான்.

தனது தந்தையை அதிகமாய் கவனித்து இருக்க வேண்டுமென்ற ஏமாற்றம் அவனிடம்.

“அட விடுங்க மச்சான். என்னை மனுசனா மதிச்சு தேடுனதே பெருசு!”

அதில் நிதர்ஷனா அவனை முறைத்து வைத்தாள்.

“நீ ஏன்டா திருச்சிக்கு போறேன்னு லெட்டர் எழுதி வச்ச. அதுனால தான் எனக்கு உன்னை கடத்தி இருக்காங்கன்னு சந்தேகமே வரல!” என்று முதுகில் சுள்ளென அடித்தாள்.

“அட லூசு. இடைல ரொம்ப கடன் ஆனதுல, போய்டலாம்னு நெனச்சு எழுதி வச்சேன். ஆனா உன்ன எப்படி அப்படி அம்போன்னு வுட்டுட்டு போவேன். அதுனால திருச்சில வேல கிடைக்கவும் உன்னையும் கூட்டிட்டுப் போகலாம்னு இருந்தேன். அந்த லெட்டர கிழிச்சு போடாம உள்ளார வச்சுட்டேன் போல. அத படுச்சுட்டு தான் நான் ஓடிப்போனதா நெனச்சுருக்க. அந்தக் காசியாண்ட உன்னை அடகு வச்சுட்டு நான் ஓடிப்போவேனா நிதா…” கண் கலங்கி விட்டது அவனுக்கு.

அவளுக்கும் விழியில் நீர் தேங்கியது.

“மொதோ ஒரு வாட்டி, இந்த கதிரு குடுத்த ஐடியால நீ ஒரு மாசம் ஓடி போன தான. அப்படி நெனச்சுட்டேன். சாரி நிவே.”

“அப்ப போனேன்னா… அப்ப எந்த கடனும் இல்ல. ஒரு மாசத்துக்கு நீ வீட்டை சமாளிக்க காசும் வச்சுட்டு தான போனேன்” ஆற்றாமையாய் கேட்டதில், நிதர்ஷனா தன்னை நொந்தாள்.

லேசாய் நிவேதன் குரலை உயர்த்தியதில், அவனைத் தவறாய் எண்ணியதற்காக நிதர்ஷனாவின் கண்ணீர் மழை பெருகியதும் யாஷிற்கு கோபத்தீயை உண்டு செய்தது.

“நீ அழுதா எனக்குப் பிடிக்கலைன்னு பல தடவை சொல்லிட்டேன்! ஸ்டாப் திஸ்” யாஷ் கர்ஜித்ததில் பட்டென அழுகையை நிறுத்தி விட்டாள்.

அந்நேரம், யாரிடமோ அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த ஆஹில்யன் அதிர்ந்து வேகமாக யாஷிடம் வந்தான்.

“பாஸ் லேப்ல ஃபயர் ஆக்சிடென்ட்!” என்றதும் அவனும் ரித்திகாவும் அதிர்ந்தனர்.

ரித்திகா, “வாட்? அவ்ளோ சேஃப்டி இருந்தும் எப்படி? அங்க தான ஸ்பேஸ்க்கு அனுப்ப வேண்டிய ரோபோவும் இருக்கு” எனத் திகைக்க, “அய்யயோ” என நிதர்ஷனா பதறினாள்.

ஆதிசக்தியோ, “போனா போயிட்டு போகுது ரித்தி. அவனோட உழைப்பு தான் இல்லைன்னு சொல்லல. ஆனா அந்த ஸ்பேஸ் ரோபோட்டை கண்டிப்பா அலெஸ்ஸும் வரதாவும் நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த போறது இல்ல!” என எச்சரிக்க,

ரித்திகா பதில் பேசும் முன் நிதர்ஷனா பொங்கினாள்.

“அதுக்காக, இவளோ வருஷம் அதுக்காக பாடுபட்டு தீக்கு இரையாக்கவா அத்த. அதை எப்படியும் யாஷ் தான வச்சுருக்க போறாரு. இவர் எதுக்காக அதை தயாரிச்சாரோ அதுக்காக உபயோகிட்டுமே!” என மாமியாரிடம் சண்டைக்கு வந்தாள்.

“இதுல நிறைய உலக அரசியல் இருக்கு நிதா. அந்தக் கண்டுபிடிப்ப தன்னோடதா ஆக்க நினைக்கிற நாடுகள் இவனை கொன்னுட்டா என்ன செய்வ?” என முறைப்புடன் கேட்டதும் நிதர்ஷனாவின் இதயத்தில் சுளீரென ஒரு வலி.

நிவேதன் தான் நடப்பது எதுவும் புரியாமல் ஆதிசக்தியின் கூற்றில் அதிர்ந்து, “அய்யயோ மச்சான்… நமக்கு இன்னாத்துக்கு ஒலக நாடோட பஞ்சாயத்து. நாம உண்டு நாம வீடு உண்டுன்னு இருந்துடலாம்” எனப் பதறினான்.

நிதர்ஷனாவிற்கும் இதே எண்ணம் தான். ஆனால் யாஷுடைய உலகம் வேறு அல்லவா?

தனக்கான சிலிர்த்து எழுந்தவள் சட்டென அமைதியானதில் அவளை பார்வையால் ஊடுருவிய யாஷ், இருவரின் கேள்விக்கும் பதில் அளிக்காமல், “இங்க யார் வந்தாலும் உள்ள அலோ பண்ணாதீங்க. நான் வந்திடுறேன்” என்று ஆஹில்யனுக்கு கண்ணைக் காட்டிட, அவனும் யாஷின் பின்னே சென்றான்.

வாசலுக்கு செல்லும்போதே யாஷைத் தடுத்த நிதர்ஷனா, “ஃபயர் ஆக்சிடென்ட். உங்க அப்பா பண்ணிருப்பாரா?” என நடுக்கத்துடன் கேட்க, “இருக்கலாம்…” என்றவன் நடையை நிறுத்தவில்லை.

“யாஷ்! இப்ப நீ கண்டிப்பா போவணுமா?” தவிப்பாய் கேட்டதில் ஒரு கணம் நின்று நிதானித்தான்.

அவனது பார்வையில், “அதில்ல… ஏற்கனவே அத்த விசயத்துல அந்த ஆளோட கேவலமான எண்ணம் தெரிஞ்சுது தான். ஆனா சேர்மன் போஸ்ட்க்காக நிவேவை கடத்தி கொலை செய்ய பாத்தவரு. அந்த போஸ்டை உதறிட்டு வந்த உன்னை ஏதும் செஞ்சுட்டா?” எனக் கேட்டாள் படபடப்புடன்.

“எதுவும் செஞ்சுட்டா உனக்கு என்ன? ஆஃப்டரால் நான் உனக்கு வெறும் மெமரி தான? ஸ்டே சேஃப்” என வெடுக்கென கூறி விட்டு ஆட்டோமேட்டிக் வாயிற்கதவை அடைத்து லாக் செய்தான்.

அதன் பின்னே நின்றிருந்த பாவையின் உடைந்த மனத்துகள்கள் அவனிடம் அடக்கம்!

விறுவிறுவென காரில் ஏறிய யாஷ், ஆஹில்யனிடம் சில உத்தரவுகளை பிறப்பித்து விட்டு தனியே சென்றவன் தான்.

அடுத்த இரு நாள்களுக்கு அவனிடம் இருந்து எந்த வித தகவலும் வராது போக, குடும்பத்தினருக்கு அச்சம் பிறந்தது.

ரித்திகா ஒரு புறமும் ஆஹில்யன் ஒரு புறமும் அவனுக்கு மாறி மாறி அழைத்துக்கொண்டே இருந்தனர்.

தெரிந்த நண்பர்கள், வேலையாள்கள் என அனைவரிடமும் விசாரித்தாகிற்று.

அனைத்தும் பூஜ்யமே.

ஆதிசக்தி கண்ணீரில் கரைந்தார். இளவேந்தன் தான், “அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது ஆதி. நம்மளா எதுவும் கற்பனை பண்ணிக்க வேணாம்…” என்று பயத்தை மறைத்துக்கொண்டு கூற, “இல்ல இளா… என்னவோ மனசே சரி இல்ல! இதுக்கெல்லாம் என்ன தான் தீர்வோ தெரியல. ஒருவேளை அலெஸ் அவனை எதுவும்…” எனக் கூறும்போதே குரல் தேய்ந்தது.

மகேந்திரனுக்கு நாடு விட்டு நாடு வந்ததால் ஏற்பட்ட உடல் அசௌகரியம் ஒரு புறமும் பேரனைக் காணாத வேதனை ஒரு புறமும் வாட்ட, தனதறையில் வேண்டுதலில் இறங்கி விட்டார்.

“வந்துடுவான் ஆண்ட்டி. அப்படி எல்லாம் அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது” ரித்திகா ஆதிசக்தியிடம் வாயில் கூறினாலும் கரங்கள் நடுங்கியது.

“ஆஹி… அப்பா உங்க கஸ்டடில தான இருக்காரு. அவர் மூலமா எதுவும் ட்ரை பண்ணலாமா?”

“எல்லாமே பண்ணிட்டேன் ரித்தி” என்றவனுக்கும் என்ன செய்வதென்றே தெரியாத நிலை.

“என்னடா இது… எப்பவும் போல நீ போயிருக்கலாம்ல அவன் கூட!” ஆதங்கமாய் அவள் கூற, “பாஸ் வேற வேலை கொடுத்ததும்…” எனப் பேச இயலாமல் திணறியவனுக்கு, யாரையும் நிமிர்ந்து பார்க்கவே இயலவில்லை.

கதிரவனும் நிவேதனும் அதிர்ச்சியில் நிதர்ஷனாவின் அருகிலேயே இருந்தனர்.

கண்மணியும் சிந்தாமணியும் பயத்திலும் கண்ணீரிலும் பொழுதைக் கழிக்க, நிதர்ஷனா மட்டும் தான் “எதுக்கு இப்படி எல்லாரும் ஒப்பாரி வச்சுட்டு இருக்கீங்க” என்றாள் சலிப்பாக.

கண்மணியோ, “அண்ணாவை காணோம் அண்ணி. பயமா இல்லையா உங்களுக்கு? இல்ல… இன்னும் அவங்க மேல உங்களுக்கு பீலிங்ஸ் வரலையா?” எனக் கேட்டு விட்டாள்.

நிதர்ஷனா முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாது இயல்பாய் இருந்ததில் அவளுக்கு மனது தாளவில்லை.

நிவேதன் பொங்கி விட்டான். “என்ன பேசுற? அவளுக்குப் பயம் இல்லாம இருக்குமா. அவள் இடியே விழுந்தாலும் வெளில காட்டிக்காம தான் இருப்பா. புழிஞ்சு புழிஞ்சு அழுதா தான் அன்பை காட்டுறோம்னு அர்த்தமா?” என்று சீறினான்.

தங்கையைக் குறை கூறுவது அவனுக்குப் பிடிக்கவில்லை.

அவனை முறைத்த கண்மணி, “நீங்க கூட இருந்து பார்த்தீங்களா? அண்ணாவுக்கு ஒண்ணுன்னா அண்ணி எப்படி துடிப்பாங்கன்னு நான் நேர்ல பாத்துருக்கேன். அதே மாதிரி அண்ணிக்கு ஒண்ணுன்னா அண்ணாவும் உடைஞ்சுடுவாங்க. இப்ப அவங்க ஒன்னும் உங்க தங்கச்சி இல்ல. என் அண்ணனுக்கு வைஃப்” என்றாள் அழுத்தமாக.

“அதுக்காக?: நிவேதன் விடாமல் பேசியதில் நிதர்ஷனா தான் நிறுத்த வேண்டியதாகப் போயிற்று.

“அடச்சை நிறுத்துங்க! அந்த அரக்கனுக்கு ஆயுசு கெட்டி. என் உசுர வாங்காம அப்படி ஒன்னும் போய்ட மாட்டான். எனக்கு யாஷ்கிட்ட இருந்து ஒரு தகவல் வந்துருக்கு” எனத் திருத்தமாய் கூறியதில் அனைவருமே அவளை வெறியாய் முறைத்தனர்.

அன்பு இனிக்கும்
மேகா

🛑 ஹாய் டியர் பிரெண்ட்ஸ்…  ஸ்டோரி படிக்கிறவங்க கொஞ்சம் சிரமம் பாக்காம இங்க லாகின் பண்ணி உங்க ரேட்டிங், ரியாக்ஷன், கமெண்ட் பதிவு பண்ணுங்க😊 இங்க எழுதுற எழுத்தாளர்கள் எல்லாருக்கும் boost up aa இருக்கும். Thank you sooo much for ur love and support…🤩🤩❣️

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 295

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
33
+1
225
+1
7
+1
13

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments