Loading

பிறை -46

நல்ல மயக்கத்தில் இருந்தவளை கலைத்தது அவள் மீதான தொடுகை. லேசாக கண் விழித்துப் பார்த்தாள் பார்கவி.

” அஜு … ” என வேகமாக எழுந்திருந்தாள் பார்கவி.

” ஹே ரிலாக்ஸ் கவி.. நான் தான் வந்துட்டேன்ல.. எதுக்கு பயந்துட்டு இருக்க.. “

” அஜூ இங்க நடக்கிறது எதுவும் சரியில்லை அஜூ.. என்னமோ நடக்குது.. இந்த எந்த இடம்.. எதுக்காக நீ இங்க வந்து என்னைய தங்க வச்ச.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நம் ரெண்டு பேரும் முதல்ல இங்க இருந்து போயிடலாம் டா” என அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பார்கவி.

அவளையே ஆழ்ந்து பார்த்தவன்.. ” என்னாச்சு, நீ என்ன பார்த்த.. முதல்ல தெளிவா சொல்லு ” என்றவன் சற்றே அவளை அமைதிப் படுத்தினான்.

” கீழ அந்த ஆளு என்னைய ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க.. அதுனால மேலே வந்து குளிச்சிட்டு படுத்திருந்தேன்.. அப்போதான் அந்த சத்தம் கேட்டுச்சு “

” என்ன சத்தம் ” என்றதும் நடந்ததை கூற ஆரம்பித்தாள் பார்கவி.

அசதியாக படுத்தவள் காதில் அலறல் சத்தம் கேட்டது. சட்டென மெத்தையில் இருந்து எழுந்தவள்.. அறை வாசலை நோக்கி ஓடினாள்.

கதவை திறந்து பார்க்க பயமாக இருந்தாலும்.. தற்போது இருக்கும் நிலைமையில் பார்த்து தானே ஆக வேண்டும். வெளியே என்ன நடக்கிறது என்பது தெரிந்தால் தானே அவளும் எப்படி வந்து மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிய வரும்.

மெல்ல கதவை திறந்து பாலக்னி வந்தவள்.. கீழே நடப்பதை எட்டிப் பார்த்தாள். ஒரு நீளப் பெட்டியில் பல ரசாயனங்களுக்கு மத்தியில் ஒரு பெண் அலறிக் கொண்டிருந்தாள்.

” சோடு முஜே….  சோடு முஜே….சோடு முஜே…. ” என கத்திக் கொண்டிருந்தாள் அந்த பெண்மணி.

கத்திக் கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு சின்ன ஊசியை போட்டு விட்டு, அங்கிருந்த கண்ணாடி பலகையில் அவளை படுக்க வைத்திருந்தார்கள்.

மற்ற பெண்களை போல அவளும் கண் மூடி,  ஜென் நிலையில் படுத்திருந்தாள்.

தற்போது அவளுக்கும் என்னனாது என்பது தெரியவில்லை. ஆனால் ஏதோ தவறாக நடக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது.

கண்ணாடி பெட்டிக்குள் இருந்த ஒரு பெண்ணை அரை மணி நேரமாக பரிசோதைகள் செய்து.. ஏதோ திரவத்தை வைத்து ஆராய்ச்சு செய்து கலைத்து போனார் வில்சன்.

பின் நேராக வேறொரு அறைக்குள் நுழைந்து கொண்டார். அவர் சென்றாலும், பார்கவி அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கு நடப்பவற்றை எல்லாம் அவளது போனில் படம் பிடிக்கத் தொடங்கினாள்.

படங்களை எல்லாம் அவளது மெயிலில் உள்ள டிரைவில் பதிவு செய்து கொண்டாள். பெண்களை வைத்து அப்படி என்ன செய்கிறார்கள். பாலியல் கொடுமைகளும் செய்யவில்லை. அவர்களது உடலில் இருந்து ஏதோ மருந்துகள் தயாரிக்கிறார்களோ என்ற எண்ணம் கூட வந்தது.

” எப்படியாவது அண்ணனுக்கு இந்த விஷயத்தை சொல்லியே ஆகனும். அதுக்கு அப்பறம் நம்ம அர்ஜுன் வந்ததும் பேசிக்கலாம்.. ” என புலம்பிக் கொண்டே திரும்பியவள் முன்னே நின்று கொண்டிருந்தார் வில்சன்.

அவரை பார்த்ததும் அதிர்ந்து போனவள்.. சட்டென முகத்தை மாற்றிக் கொண்டு.. ” ஹாய் .. ” என சிரித்தாள்..

” இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க “

” இல்ல சும்மா தான் ரூம்ல இருக்க போர் அடிச்சது. அதான் வேடிக்கை பார்க்கலாம்னு வந்தேன்..”

” ஓ.. என்ன பார்த்தீங்க”

” அது.. வந்து.. ஏதோ இங்க ஆராய்ச்சி நடக்குது போல.. அதான் பார்த்திட்டு இருந்தேன்.. ” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.. ” ஏன் பார்க்கக் கூடாதா.. தப்பா ” என கேட்டு வைத்தாள்.

” பார்க்கலாம்.. ஆனால் இந்த மாதிரி வீடியோ எடுக்கக் கூடாது” என்றவர் சட்டென அவளது கையில் இருந்த அலைபேசியை பறித்துக் கொண்டார்.

” ஐயோ நான் .. வீடியோலாம் எடுக்கல.. ” என போனை வாங்க பார்க்க..

” என்கிட்டையே இருக்கட்டும்..”

” நான் அர்ஜுன் கிட்ட பேசனும்”

” வருவான்.. ” என அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு வில்சன் சென்று விட.. பயத்தில் நடுங்கிப் போனாள் பார்கவி.

இந்த இடத்தில் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என அங்கிருந்த இடத்தை எல்லாம் சுற்றிலும் பார்த்து வைத்தாள்.

கதவுகள் அனைத்தும் மிகவும் அரிய தொழிநுட்பம் கொண்டு மூடப்பட்டிருந்தது. இதையெல்லாம் மீறி எப்படி வெளியே செல்வது என அவளுக்கு தெரியவில்லை.

இருந்தாலும் இந்த இடத்தில் இருந்து தப்பித்தாக வேண்டுமே.. கண்களை சுழல விட்டவளுக்கு.. அவளது அறைகளுக்கு அருகில் அதே போல நிறைய அறைகள் இருந்தது.

அந்த கதவிற்குள் யாரேனும் இருப்பார்களா என்ற எண்ணத்தில் தட்டிப் பார்த்தாள். ஆனால் பதிலேதும் இல்லை. ஆட்கள் இல்லையா.. அல்லது ஆள் இல்லாத அறையா என்பது தெரியவில்லை.

இன்னும் இன்னும் அந்த பால்கனியை சுற்றி வந்தாள். இறுதியாக இருந்த அறை சற்று திறந்து இருந்ததை போல இருந்தது.

வேகமாக அந்த அறையை நோக்கி சென்றவள், உள்ளே நான்கைந்து பெண்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து.. சற்றே நிம்மதி ஆனவள்.. உடனே அந்த அறைக்குள் நுழையப் போக.. அங்கிருப்பவர்களின் பேச்சை கேட்டு சட்டென நின்று விட்டாள்.

அனைத்தும் ஹிந்தியில் பேசினார்கள். சிறு வயதில் அண்ணன் ஆதிதேவ் இந்தி கற்றுக் கொண்டதால், ஆர்வத்தில் இவளும் கற்றுக் கொண்டாள். பேசுவது புரியும்.. ஆனால் இவளுக்கு சரளமாக பேச வராது.

” இப்போ ஒரு புது கிராக்கி வந்து சிக்கிருக்கு போலயே.. ஆனால் என்னனு தெரியல.. அவளுக்கு மட்டும் இங்க தனி கவனிப்பா இருக்கு “

” அதான் டி எனக்கும் புரியல.. ராஜ மரியாதையா இருக்கு “

” அட என்ன மரியாதையா இருந்தாலும்.. இங்க வந்தா எல்லாருக்கும் என்ன நிலைமையோ அதான் அவளோட நிலைமையும்.. திரும்ப அவ வீட்டுக்கு போவாளா இல்லையான்னு கூட தெரியல “

” அதை சொல்லு.. ஆனால் இங்க இருக்குற எல்லாப் பொண்ணுங்களையும் இவங்க தான் தூக்கிட்டு வருவாங்க.. ஆனால் இந்த கிராக்கி அதுவா கார்ல வந்து இறங்கி மாட்டிருக்கு” என கலகலவென சிரிக்க.. பார்கவிக்கு தலையே சுற்றியது.

பெரிய ஆபத்தில் மாட்டி இருப்பதை உணர்ந்து கொண்டாள்.

அவர்களுக்கு தெரியாமல் அங்கிருந்து அறைக்கு சென்று விடலாம் என நினைத்து திரும்ப, மீண்டும் அவள் முன்பு வில்சன் வில்லச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார்.

அவ்வளவுதான் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. ” என்ன பார்கவி எல்லாமே தெரிஞ்சிடுச்சு போல.. ” என அரக்கன் போல சிரித்தவனை வியர்க்க விறுவிறுக்க பார்த்து வைத்தாள்.

” நான் … நான் போகனும்… பிளீஸ்… “

” இங்க ஒன்லி இன் கம்மிங் மட்டும் தான் மேடம்.. நோ அவுட் கோயிங் ” என்றவன்.. அவள் முகத்தில் மயக்க மருந்தை வைத்து அழுத்த.. இதை எதிர்பாராதவள் நொடியில் அவர் மீதே மயங்கிச் சரிந்தாள்.

அடுத்த நொடி அங்கிருக்கும் ஆட்களின் உதவியோடு அவளுக்கென ஒதுக்கப் பட்டிருந்த அறையில் படுக்க வைத்தனர்.

தற்போது தான் கண் விழிக்கிறாள். முன்னாள் இருக்கும் காதலனிடம் அனைத்தையும் கூறி அழுகிறாள்.

” கொஞ்சம் அமைதியா பொறுமையா நான் சொல்லுறத கேளு கவி… ” என்றதும் .. அழுகையை நிறுத்தி விட்டு அவனை பார்த்தாள்.

” ஒரு பத்து நாள் இங்க ஸ்டே பண்ணலாம் கவி.. இதை விட பாதுகாப்பான இடம் நமக்கு வேற எங்கேயுமே இல்ல.. இங்க என்ன நடந்தா நமக்கென்ன.. நமக்கு தேவை ஒரு இடம்.. அது இந்த இடத்துல தான் நமக்கு கிடைக்கும்.. “

” நீ என்ன பேசுற அஜூ..  அங்க பொண்ணுங்களை வச்சு ஏதேதோ அந்த ஆளு பண்ணிட்டு இருக்கான்.. நீயும் அதுக்கு சப்போர்ட் பண்ணுறியா”

” சப்போர்ட் எல்லாம் பண்ணல கவி.. அது அவங்களோட பிஸ்னஸ்.. அதுல ஏன் நம்ம தலையிடனும் “

” கண்ணு முன்னாடி ஒரு அநியாயம் நடக்குது அஜூ.. நீயா இப்படியெல்லாம் பேசுறது “

சற்றே பொறுமை இழந்தவன்.. ” நமக்கு இதெல்லாம் தேவையில்லாதது கவி.. நம்ம வேலையை நம்ம பார்ப்போம்.. அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும்.. இதோட இந்த பேச்சை விடு ” சற்றே குரலையும் உயர்த்தி இருந்தான்.

” என்ன அஜூ இதை உன்கிட்ட இருந்து எதிர்ப்பார்கல.. சரி நீ ஒன்னும் பண்ண வேண்டாம்.. நான் இந்த இடத்தில ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன். நான் என் வீட்ல கைல கால்ல விழுந்தாவது சம்மதம் வாங்கிக்கிறேன்.. என்னைய என் வீட்ல விடு.. இல்லைன்னா என் போனை வாங்கிக் கொடு.. என் அண்ணனுக்கு கால் பண்ணி நான் வர சொல்லுறேன்.. என்னைய வந்து கூட்டிட்டு போகட்டும்.. ” என பிடிவாதமாக பேசியவளை மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அழுத்தமாக பார்த்தான் அர்ஜுன்.

” நீ நினைக்கிற மாதிரி இங்க இருந்து போக முடியாது கவி ” குரலே சுற்று விசித்திரமாக இருந்தது.

புருவங்களை சுருக்கி அவனை பார்த்தவள்.. ” ஏன்… ” என கேட்டு வைத்தாள்.

” வந்த வேலை முடியாம யாரையும் அனுப்புற மாதிரி இல்ல ” என்றதுமே அவனை கூர் பார்வை பார்த்தவள்..

” வந்த வேலைன்னா.. என்ன வேலை.. “

” ப்ச் தேவையில்லாத பேச்சு எதுக்கு “

” எனக்கு தெரிஞ்சே ஆகனும்.. இப்போ நீ சொல்லியே ஆகனும் ” காட்டு கத்தாக கத்தினாள்.

” என்ன டி… பெரிய மயிறு மாதிரி கத்திட்டு இருக்க.. நானும் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. ஆனால் அளவுக்கு மீறி போயிட்டு இருக்க.. இங்க இருக்கனும்னு சொன்னா இருக்கனும் அவ்வளவு தான்.. அதையும் மீறி பேசிட்டு இருந்தா அவ்வளவு தான் சொல்லிட்டேன்  ” ருத்ரனாக மாறிய காதலனை கண் இமைக்காமல் பார்த்தவளுக்கு.. கண்களில் இருந்து துளி துளியாக கண்ணீர் வந்தது.

” அஜூ.. நீ ஏதோ தப்பு பண்ணுற ” முதல் முதலாக அவன் மீது சந்தேகம் வந்தது.

” ஆமா தப்பு தான் பண்ணுறேன்.. அதுக்கு என்ன டி பண்ண சொல்லுற.. உலகத்துல யாருமே தப்பு பண்ணுறது இல்லையா.. நான்தான் பண்ணிட்டு இருக்கேனா.. தப்புன்னு தெரிஞ்சு தான் பண்ணுறேன்.. அதுனால எனக்கு எவ்வளவு கோடி கிடைக்கும் தெரியுமா.. பணம் .. பணம் சம்பாரிக்கலாம் டி.. நினைச்ச வாழ்க்கையை வாழலாம்.. இதெல்லாம் உனக்கு புரியாது “

” அடுத்தவங்க வாழ்க்கையை அழிச்சி.. அதுல இருந்து சுகம் காண கூடாது அஜூ அது தப்பு “

” அதெல்லாம் எனக்கு தேவையில்லை.. நான் அப்படித்தான்..”

” ஓ.. அப்போ என்னையும் இந்த பொண்ணுங்க மாதிரி பண்ண தான் கூட்டிட்டு வந்தியா..  இந்த காதல்… இந்த வார்த்தை எல்லாம் சொன்ன.. அதெல்லாம் பொய்யா.. ” உயிரை கையில் பிடித்து கொண்டு கேட்டாள் பார்கவி.

அவளது கேள்வியில் சற்றே தடுமாறியவன்.. ” இதுக்கு நான் என்ன சொல்லனும்னு நினைக்கிற” என கத்தினான்.

கண்களில் உயிரே இல்லாமல் அவனை பார்த்தவள்.. ” உண்மையை சொல்லு ” என்றதும்..

” எனக்காக ஒரே ஒரு டெஸ்ட் மட்டும் பண்ணிக்கோ கவி.. அதுக்கு அப்பறம் அது சக்சஸ் ஆச்சுன்னா .. நம்ம எங்கையோ போயிடலாம்.. அப்படி ஆகலையா உன்ன உன் வீட்ல பத்திரமா விட்டுடுறேன்.. ” ஆடவன் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவளது மனதை அறுக்கும் வார்த்தைகள். அதை கேட்டும் இன்னும் தான் உயிரோடு தான் இருக்க வேண்டுமா.. இந்த நொடியே உயிர் பிரிந்தால் என்னவென்று இருந்தது.

இவனை நம்பியா குடும்பத்தை விட்டு இத்தனை தூரம் வந்து விட்டேன். மீனாட்சி திவாகரின் காதலை பார்த்து வளர்ந்தவளுக்கு.. அப்படியே தாமும் வாழ வேண்டும் என்ற ஆசையில் செய்த தவறு தான் இந்த அர்ஜுனின் காதல்.

அதை விட அந்த அறையில் பெரியதாக மாட்டப்பட்டிருக்கும் படத்தில் வில்சனுடன் சிரித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

கீழே இருவரது பெயர்களும் இருந்தது. வில்சனுக்கு அருகில் இவனது பெயர் ஆதி அர்ஜுனன் என பொறிக்கப்பட்டிருந்தது.

அவளது அடுத்த நிலை ?

பார்கவியை மீட்க ஆதிதேவ் வருவானா ?

சனா💖

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment