Loading

“அலெஸ் என்ன செஞ்சான்?” இளவேந்தன் புரியாது வினவ, ஆதிசக்திக்கு அன்றைய நிகழ்வு நினைவிலாடியது.

உறங்கிக்கொண்டிருந்த யாஷ் பிரஜிதனை தோளில் போட்டுக்கொண்ட ஆதிசக்தி அலெஸ்ஸாண்ட்ரோவின் ரௌத்திர முகத்தினைக் கண்டு பயந்தே போனார். வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து உள்ளே நுழைந்திருக்கிறான் எனப் புரிய உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.

“இங்க இருந்து போய்டு அலெஸ். வரதாட்ட உனக்குத் தேவையானதையும் நான் கொடுத்துட்டேன். லீகலி நமக்கு டிவோர்ஸ் ஆகிடுச்சு. யாஷ் என்கூட இருக்கணும்னு தீர்ப்பும் வந்துடுச்சு. அப்பறம் ஏன் என்னை இங்க வந்து டார்ச்சர் பண்ற?” கண்ணில் நீர் தளும்ப ஆதிசக்தி வினவ,

“என்னைப் பாதில விட்டுட்டுப் போறதுக்கா உன்னை லவ் பண்ணுனேன் ஆதி டார்லிங். யூ ஆர் மை எவ்ரிதிங் ரைட்! எத்தனை பொண்ணுங்க என் லைஃப்ல வந்தாலும் யூ ஆர் சம்திங் ஸ்பெஷல் டூ மீ!” அவரை நோக்கி காலடி எடுத்து வைக்க ஆதிசக்தியின் கால்கள் தானாய் பின்னோக்கி நகர்ந்தது.

“ப்ளீஸ் அலெஸ்… உன்னைக் காதலிச்சு நான் பட்டது வரை போதுமே!”

“ச்சு ச்சு… உன்னை குயீன் மாதிரி பார்த்துக்கணும்னு நினைச்சேன். நீ உன் கடமையை எல்லாம் விட்டுட்டு, உன் ரிசர்ச்சர் பதவியை எல்லாம் துறந்துட்டு… இந்த பட்டிக்காட்டுல என்ன செய்வ ஆதி?” என்றார் பரிதாபக்குரலில்.

“நீ எனக்கு குடுத்த அடையாளம் போதும் அலெஸ். சாகுற வரை மறக்க முடியாத வலிகளை குடுத்துட்ட. எங்களை விட்டுடு!” ஆதி கெஞ்சும் தொனியில் கூறியபடி சுவரில் முட்டி நின்றார்.

தோள்களில் சாய்ந்து காய்ச்சலின் விளைவால் ஆழ்ந்த உறக்கத்தில் யாஷ் இருக்க, அவன் எழுந்து விட்டால் பயந்துவிடுவானே என்ற தவிப்பு வேறு!

அலெஸ்ஸாண்ட்ரோ ஆதிசக்தியை நெருங்கி அணைகட்டி நின்றிருக்க, “லீவ் அஸ் அலெஸ். ப்ளீஸ்… இங்கிருந்து போய்டு” கிட்டத்தட்ட கெஞ்சினார்.

“நோ வே! உனக்கும் எனக்கும் லீகலா டைவர்ஸ் ஆகிருக்கட்டும். பட் யாஷ்?” என இழிவாய் அவர் புன்னகைக்க,

“நோ அலெஸ். யாஷ இதுக்குள்ள கொண்டு வராத. என்னைக் கொன்னு கூட போட்டுடு” எனத் தேம்பினார்.

“என்னை விட்டுட்டுப் போறப்பவே உன்னைக் கொன்னுருப்பேன் டார்லிங். பட், நான் நினைக்கிறது நடக்குற வரை நீ எனக்கு உயிரோட வேணும். அதுனால தான் உனக்கு உயிர் பிச்சைக் குடுத்து இருக்கேன். ஆனா நம்ம பையனுக்கு உயிர் வேணுமா வேணாமான்னு முடிவெடுக்க வேண்டியது நீ தான் ஆதி!” என்றார் வில்லங்கமாக.

ஆதிசக்தி விழி தெறிக்க பார்க்க, அலெஸ்ஸாண்ட்ரோ பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஊசி போன்றதொரு கருவியை எடுத்தார். பார்க்க இரத்த நிறத்தில் அச்சத்தைக் கொடுத்தது அது.

“என்… என்ன இது?” என ஆதிசக்தி கேட்கும் முன்னே, அதனை யாஷின் முதுகில் குத்தப் போக ஆதிசக்தி தடுத்தார்.

“டேய் என்னடா செய்ற?” என யாஷை மறைக்க முற்பட, தனது முட்டியால் ஆதிசக்தியின் அடிவயிற்றில் எத்தினார்.

அதில் சுருண்டு அமர்ந்து விட்ட ஆதிசக்தியின் பலவீனத்தைப் பயன்படுத்தி யாஷின் மீது ஏதோ ஒரு மருந்தை செலுத்த, நொடியில் அவன் மூக்கில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்து, வலிப்பு வர தொடங்கியது.

“ஐயோ யாஷ்.. யாஷ் என்ன ஆச்சு உனக்கு. டேய் என்னடா பண்ணுன…” எனக் கத்தி கதறியவரை ரசித்த அலெஸ்ஸாண்ட்ரோ,

“இவன் எனக்கு வேணும் ஆதி. என் பியூச்சர் சைன்டிஸ்ட் இவன் தான். உனக்கு இருக்குற பிரில்லியன்ஸ் இவனுக்கு அதிகமாவே இருக்கு. ஐ நீட் மை பாய். நீயா பிரச்சினை பண்ணாம கொடுத்துட்டா, என்கிட்ட என் பையன் சேஃபா இருப்பான். உங்கிட்ட இருந்தாலும் இருப்பான்… ஆனா பேச்சு மூச்சு இல்லாம… பரவாயில்லையா?” என விஷமமாய் கேட்டார்.

“உன்னை நம்பி என் பையனை நான் தர மாட்டேன்டா… என்னடா செஞ்ச இவனை… யாஷ் யாஷ்…” என மகனை உலுக்க, அவன் கண் திறக்காது உடலை உலுக்கிக் கொண்டே இருந்தான்.

அவனை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும்பொருட்டு நகர எத்தனிக்க அலெஸ் விடவில்லை. “என்னைத் தாண்டி ஒரு இன்ச் கூட நீ நகர முடியாது டார்லிங்!” என்றதில் திடுக்கிட்டுப் போனார்.

யாஷ் பிரஜிதனுக்கு மூக்கு நரம்பு சென்சிட்டிவாக இருப்பது தெரிந்ததால், அவன் உபயோகிக்கும் மூக்கு ஸ்ப்ரேவை அவசரமாய் ஓடிப்போய் எடுத்து வந்து அவனைக் காப்பாற்ற எண்ண, அதுவும் தோல்வியில் முடிந்தது.

“நீ இவ்ளோ பதற வேண்டியது இல்ல ஆதி. இது ஜஸ்ட் சாம்பிள் தான். வேற மருந்து குடுத்தா இது சரியாகும். குடுக்கலைன்னா, தினம் தினம் இவனுக்கு இந்த அவஸ்தை தான். உன் கேரியரை தான் இழந்த, உன் பையனோட லைஃப்லையும் ஏன் முட்டாள்தனமா முடிவெடுக்குற ஆதி?” எனப் பாவம் போல கேட்டு வைக்க, சிவந்த விழிகளால் அவரை எரித்தார் ஆதிசக்தி.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப அலெஸ்!”

“அத அனுபவிக்கும்போது பாத்துக்கலாம்…” அவரிடம் ஏளனம்.

“அலெஸ் ப்ளீஸ்… யாஷை விட்டுடு. உன்னைக் கெஞ்சி கேட்குறேன்” எனப் பல விதமாய் கேட்டும் அலெஸ் மனம் இறங்காததில் ஆதிசக்தி தான் இறங்கி வர வேண்டியதாகப் போயிற்று.

“நீ என்ன சொல்றியோ அதை செய்றேன். தயவு செஞ்சு இவனை விட்டுடு அலெஸ்” எனத் தளர்ந்த பிறகே, யாஷிற்கு மாற்று மருந்து கொடுத்து அவனை நிதானப்படுத்தினார்.

அதன்பிறகே ஆதிசக்திக்கும் நிம்மதி பெருமூச்சு எழுந்தது. யாஷை மடியில் கிடத்தி வெறித்திருந்தார். காய்ச்சல் வேறு அதிகரித்து இருக்க, “ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும் அலெஸ் வழி விடு!” என உணர்வற்று கூற, அவரோ நகரவே இல்லை.

“இவனை உன் கூட அனுப்புறேன்!” இறுகிய முகத்துடன் கூறியதில், அவரிடம் வெற்றிப்புன்னகை.

பின் இருவருமே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் நடு இரவிலேயே கண் விழித்து விட்டான்.

தந்தையைப் பார்த்ததும் அவனிடம் சின்ன குதூகலிப்பு. இருவருக்குள்ளும் நிகழ்ந்த பிரிவில் குடும்ப சூழ்நிலையை இழந்தது அவன் தானே!

“பப்பா ஐ மிஸ் யூ!” எனத் தந்தையைக் கட்டிக்கொண்ட யாஷ் பிரஜிதனை சலனமின்றிப் பார்த்தார் ஆதிசக்தி.

மீண்டும் அவனை உறங்க வைத்தவர், “அவன் மேல சின்ன கீறல் பட்டாலும் உன்னை இத்தாலி போலீஸ் ரவுண்டப் பண்ணிடும் அலெஸ். யூ நோ தட்! என்னை ப்ரெஷர் பண்ணுன மாதிரி அவனை ஸ்ட்ரெஸ் பண்ணிடாத” என்றதில், “டோன்ட் வொரி டார்லிங். அவனை நான் கண்ணும் கருத்துமா பார்த்துப்பேன். ஹீ இஸ் மை சன் நோ!” என்றார் சின்ன சிரிப்புடன்.

அவரை வெறுப்பாய் ஏறிட்ட ஆதிசக்திக்கு, இத்தாலியில் குழந்தைக்கு எதிராக காயப்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அலெஸ்ஸாண்ட்ரோவின் தங்கை ஏஞ்சலினாவும் அங்கிருப்பதால் நிச்சயம் அவனைப் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையும் இருந்தது.

ஆனால், தான் இழக்கப்போவது தனது மகனை அல்லவா? கடுந்துயரம் மனதை உலுக்கி எடுக்க, அடிவயிற்றில் வேறு பெரும் பிரளயம் நிகழ்ந்தது. அவர் வயிற்றில் கண்மணி உதித்திருக்க, அலெஸ் அடித்த அடியில் என்னவானதோ என்ற அச்சம் வேறு!

அழுது தீர்த்து இறக்கி வைக்க இயலாத பாரம், பெற்ற மகவைப் பிரிவது!

தனக்கிருக்கும் மன அழுத்தத்தின் காரணமாய் யாஷை அலெஸ்ஸுடன் அனுப்புவதாகக் கூறி, தனது மனதை தானே புண்ணாக்கிக் கொண்டார்.

இளவேந்தன் சண்டைக்குச் சென்று, அந்த அலெஸ் சைக்கோத்தனமாக எந்த முடிவும் எடுத்து விடக் கூடாது என்றே இந்த பதைபதைப்பும். பொய்யும்.

“அடப்படுபாவி!” நிதர்ஷனா வாயில் கை வைக்க, யாஷ் பிரஜிதனுக்கும் இது சற்றே அதிர்ச்சி தான்.

“பட், எனக்குத் தெரியாம ஆபிஸ்ல இந்த மாதிரி திருட்டுத்தனமா எதையும் செய்ய முடியாது மம்மா. மே பி உங்களை பயமுறுத்த செஞ்சுருக்கலாம். பிகாஸ், எனக்கு ஆல்ரெடி பீவர் இருந்துச்சு தான?” என யோசனையாய் கேட்டு விட்டு வரதராஜனைப் பார்க்க அவர் திருட்டு முழி முழித்தார்.

“என்ன மிஸ்டர் வரதராஜன்… உங்க கண்ல கலவரம் தெரியுதே?” தாடையைத் தடவியபடி யாஷ் கேட்டதில், “இதோ பாரு இதெல்லாம் எனக்கே தெரியாது. நான் என் பையனை கூட்டிட்டுப் போக வந்தேன் அவ்ளோ தான்…” என நைசாக அங்கிருந்து நழுவப்பார்க்க, “ஆஹில்” எனச் சத்தமிட்டான் யாஷ்.

அடுத்த நொடி ஆஹில்யன் முன்னே நிற்க, “உன் மாமனாருக்கு தனி கவனிப்பும், ஸ்பெஷல் பாதுகாப்பும் குடுத்து பத்திரமா வச்சுரு!” என வார்த்தைகளில் மட்டுமே தேனை தடவி பார்வை விழியே பயத்தை முளைக்க வைத்தான்.

‘மாமனாரா?’ ஆஹில்யன் லேசாய் பீதியாகி வரதராஜனைப் பார்க்க, அவரோ தீயாய் முறைத்தார்.

அத்தனை நேரம் அமைதியாக இருந்த ரித்திகா, “இட்ஸ் நாட் பேர் யாஷ். என் அப்பா மேல யாரும் கை வைக்க முடியாது…” என்று பொங்கியதில், “உனக்கு ஆஹில் வேணுமா உன் டேடி வேணுமா?” எனக் கேட்டான் தீர்மானமாக.

அவளோ யோசியாமல், “ஆஹில் தான்” எனத் தோளைக் குலுக்கிட, வரதராஜனுக்கு இதயவலியே வந்து விட்டது.

ஆஹில்யனோ ‘ரெண்டு பேரும் சேர்ந்து என்னை இந்த ஆளுக்கு பலியாக்கிடுவாங்க போல’ என நொந்திட, ரித்திகா யாஷிடம் “நீ தானடா நடிக்க சொன்ன?” என்றாள் கிசுகிசுப்பாக.

“இத்தாலில தான ஆக்ட் பண்ண சொன்னேன். இந்தியா வந்தும் உன் ஆக்டிங்க கன்டினியூ பண்ணி ஆஸ்காரா வாங்கப் போற?” எனக் கடிந்திட, அசடு வழிந்தவள், “அப்ப சரி… ஹே ஆஹில் உன் பாஸ் சொன்ன மாதிரி என் அப்பாவை நல்லபடியா பார்த்துக்க” என்றதும், “உத்தரவுங்க மேடம்!” எனப் பணிவாய் புன்னகைத்து விட்டு வரதராஜனை அங்கிருந்து இழுத்துச் செல்ல, அவரோ வஞ்சத்தை கக்கினார்.

அவரது அலைபேசியும் பறிமுதல் செய்யப்பட, யாஷ் பிரஜிதனின் பவுன்சர்கள் அவரை சுற்றி வளைத்து விட்டனர். தற்போது தப்பிக்க எண்ணுவது புத்திசாலித்தனமல்ல என்ற எண்ணத்தில் அமைதியாய் அங்கிருந்து சென்றார்.

கண்மணிக்கும் இளவேந்தனுக்கும் ஆதிசக்தியை எண்ணி பரிதாபமாக இருந்தது. கயிற்றின் மேல் நடக்க பிள்ளையை அனுப்பி விட்டு தினம் தினம் வாழ்வா சாவா போராட்டத்தில் இருந்திருக்கிறார் என்றெண்ணும்போது வருத்தம் மிகுந்தது.

நிதர்ஷனாவோ யோசனையுடன், “அப்போ நிவேவ யார் கடத்தி இருப்பா? இந்த ஆளு சொல்றதை பார்த்தா நிவே இவருக்கு தேவை போல தான இருக்கு?” எனக் கேட்க, யாஷ் பிரஜிதனுக்கும் அதே சந்தேகம் இருந்தது.

“எஸ். எனக்கு சில பல சிக்கல் டவுட்ஸ் இருக்கு. ஐ வில் க்ளியர் இட் சூன்” என்றவன் ஆதிசக்தியை பாராது தவிர்த்திட, அவர் தவித்தார்.

ரித்திகாவோ “இந்தப் பெண்ணுக்காக தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்காம வாந்தியாக்கும்…” என சிலுப்பிக்கொள்ள, நிதர்ஷனா விழித்தாள்.

“யுவர் சிஸ்டர் டூ” என யாஷ் அழுத்திக் கூறியதும், இரு பெண்களிடமும் கனத்த மௌனம்.

யாஷோ நிலையை சீர் செய்ய ரித்திகாவின் முதுகில் அடித்து, “உனக்கு ஒரு பிரதர் இருக்கான்னு ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல?” என வினவ,

“ஆ… அடப்பாவி. நான் சொல்லவே இல்லையா. சொன்னேன்” என்றாள் முறைப்பாக.

“எப்போ சொன்ன?”

“டேய் நம்ம ஒரு தடவை லேப்ல இருக்கும்போது சொன்னேனே!”

“பைத்தியமா நீ. இவ்ளோ சென்சிட்டிவான விஷயத்தை யாராவது லேப்ல இருக்கும் போது சொல்லுவாங்களா?”

“ம்ம்க்கும்… நீ 24 மணி நேரத்துல 20 மணி நேரம் லேப்ல தான் இருப்ப” என முணுமுணுத்தவளை முறைத்தான்.

அந்நேரம் நிவேதன் கண் விழிக்க, ரித்திகாவைக் கண்டு கண் கலங்கினான்.

“உனக்கு ஒன்றும் ஆகவில்லை தானே ரித்தி…” என்றவனிடம் பேச இயலாது அவளும் திணறினாள்.

அவளுக்கு நினைவு தெரியும் முன் தொலைந்து போனவன். அண்ணன் ஒருவன் இருந்தானென்று தாயும் தந்தையும் வாய் வார்த்தையாக மட்டுமே கூறி இருந்தார்கள்.

நிதர்ஷனாவிற்கு இந்த நிராகரிப்பு தற்காலிகம் என்றாலும் வலித்தது. அதில் அவ்வறையில் இருக்க இயலாமல் வெளியில் சென்று விட, கதிரவனுக்கும் நண்பனின் ஒதுக்கம் அதீத வலி கொடுத்தது.

அதில் அவனும் நிதர்ஷனாவின் பின் சென்றான்.

வாயிலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் நிதர்ஷனா சோர்ந்து அமர, அவளருகில் அமர்ந்த கதிரவன், “நிதா… அவனுக்கு சரி ஆகிடும் தான?” எனக் கேட்க, “ம்ம்… ஆனா ஓவரா தாண்டா பண்றான்” என்றாள் உர்ரென.

“ம்ம்க்கும். அவன் நார்மல் ஆகட்டும். கிரைண்டருக்குள்ள போட்டு உளுந்தோட உளுந்தா ஆட்டி பாக்கெட் போட்டுடலாம்” எனக் கசப்பாய் புன்னகைத்தவன், “அது சரி… இவன் என்ன எல்லாமே தலைகீழா சொல்லிட்டு இருக்கான். ஹாலுசினேஷனாலும் ஒரு நியாயம் வேணாமா? ஒருவேளை அவன் உளறுற மாதிரி இது நம்மளோட மறுஜென்மமா இருக்குமோ?” என்றான் தீவிரமாக.

“நீ ஒரு ஜென்மம் பிறந்ததே சாபக்கேடு!” என்று அருகில் இருந்து யாஷ் பிரஜிதனின் குரல் கேட்க, நிதர்ஷனா குனிந்தபடி சிரிப்பை அடக்கினாள்.

“அவன் என்னை அசிங்கப்படுத்துறதுல உனக்கு ஒரு என்ஜாய்மென்ட்ல?” கதிரவன் கேட்டதில்,

“அதில்லடா. உனக்கே தெரியும். யாராவது உண்மையை பேசுனா எனக்கு சட்டுன்னு சிரிப்பு வந்துடும்னு” என உதட்டைக் கடித்திட, அவளது கையை நறுக்கென கிள்ளி வைத்தவனை யாஷ், “கெட் அப்” என்றான் அதிகாரமாக.

“இப்ப இங்க நீ மட்டும் தான் ஸ்கோர் பண்ணனும். நான் உள்ள போய் அவனாண்ட செருப்படி வாங்கணும் அதான உனக்கு வேணும்?”

“எஸ்!” இயல்பாய் ஒப்புக்கொண்டவனை நொந்து பார்த்தான் கதிரவன்.

“போய் தொலைங்க. நான் என் நண்பனாண்ட முன்ஜென்மத்து கதையை கேக்குறேன்…” என உள்ளே செல்ல போக,

“டேய் டேய் இந்த ஜென்மத்துல நடக்குறதுல பாதி கதையே எனக்கு தெரியலடா. இதுல முன்ஜென்மத்து கதை கேக்குற அளவு சத்தியமா எனக்குப் பொறுமை இல்லை.” என்றாள் நிதர்ஷனா.

“எனக்கும் இல்லை தான். நான் வேணும்னா, ஒரிஜினல் பிளேஷ்பேக் போகாம இந்தப் படத்துல எல்லாம் கார்ட்டூன் கேரக்டர் வச்சு பிளேஷ்பேக் போவாங்கள்ல அந்த மாதிரி ஷார்ட் அண்ட் சுவீட்டா கேக்குறேன்” என்றவனுக்கோ தனக்கும் சிந்தாமணிக்கும் முன்ஜென்மத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரம் இருந்ததென்று தெரிந்து கொள்ள ஆவல்.

“ஹையோ!” எனத் தலையில் அடித்துக்கொண்ட நிதர்ஷனாவின் அருகில் அமர்ந்தான் யாஷ் பிரஜிதன்.

இருவரிடமும் சிறு அமைதி.

அவளே அவ்வமைதியைக் கலைத்தாள்.

“எனக்காக ஏன் வந்த? அப்பவும் இப்பவும்…?”

“ஐ ஆம் ஃபாலிங் பார் யூ. அப்பவும் இப்பவும் எப்பவுமே!” என்றவனின் பதிலில் சின்னதொரு நீர்த்துளி அவள் விழிகளில்.

“யாஷ்… எனக்கே என்ன நடக்குதுன்னு புரியல. மறுபடியும் எனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா, இது மொத்தத்தையும் நான் மறுபடியும் மறந்துட்டேன்னா? என்ன ஆகுறது யாஷ்?” தவிப்பாய் அவள் கேட்கும்போதே அவளது கன்னத்தின் வழியே கோடாய் வழிந்தது கண்ணீர்.

அவளது கன்னம் பிடித்தவன் கட்டை விரலால் மெல்ல அழுத்தி கண்ணீரைத் துடைத்து, “மறுபடியும் உன்னைக் கடத்துவேன். மறுபடியும் கல்யாணம் பண்ணுவேன். மறுபடியும் லவ் வர வைப்பேன். நெக்ஸ்ட் டைம் மறக்க கூடாதுன்னு பர்ஸ்ட் நைட்டும் நடத்திடுவேன்… ஒருவேளை அப்பவும் மறந்துட்டா, அடுத்த தடவையும் கடத்துவேன், கல்யாணம் பண்ணுவேன், லவ் பண்ண வைப்பேன், செகண்ட் பேபிக்கு ட்ரை பண்ணுவேன். அண்ட், மறுபடியும் மறந்தா…” எனச் சொல்லிக்கொண்டே போக, வேகமாய் அவனது வாயை மூடினாள்.

“யோவ்… நான் எவ்ளோ சீரியஸா கேக்குறேன்!” போலியாய் அவள் முறைத்தாலும் அவனது கூற்றில் கன்னக்கதுப்புகள் சிவந்தது.

“ஹே நானும் சீரியஸா தான்டி பதில் சொல்றேன். எத்தனை தடவை நீ மறந்தாலும் இதெல்லாம் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப நடந்தே தீரும்” என்றவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த தீவிரத்தில் திகைப்பே எழுந்தது.

நெஞ்சம் படபடவென துடித்தது. “ஆனா அப்போ நிவே இருப்பான்ல.”

“இருந்தா நானே கடத்தி மறைச்சு வச்சுடுவேன். இயற்கையையே மாத்த தெரிஞ்ச எனக்கு ஆஃப்டரால் உன் ப்ரதரை மறைக்கிறதா கஷ்டம்.”

அதில் திணறியவள், “இப்படியே பண்ணிட்டு இருந்தா, நீ சம்பாரிச்சதை எல்லாம் ரீ – கிரியேட் பண்ணியே அழிக்கணும்” எனப் படபடக்க,

“சோ வாட் ஆலம்பனா. என் ஆலம்பனாவால வந்த பேர் புகழ் பணமெல்லாம் இந்த ஆலம்பனாவுக்கு மட்டுமே சொந்தம்!” என்றான் அழுத்தமாய்.

“நீ வேற மாதிரி இருக்க அரக்கா. என் ஞாபகத்துல இருக்குறவனுக்கும் இப்ப இருக்குறவனுக்கும் சம்பந்தமே இல்ல.”

“உன் ஞாபகத்துல இருக்கறவன், உன்னை கடத்தி நடிக்க சொல்லி உன்னை விட்டுட்டுப் போனவன் மட்டும் தான். உன் அரக்கன் உனக்குள்ளவே தொலைஞ்சு போய்ட்டான்டி கடன்காரி. உங்கிட்ட இருந்து வாங்குன காதலை திருப்பி தர விடாம என்னைக் கடனாளி ஆக்கிட்டடி!” என்றவனின் வலி மிகுந்த வார்த்தைகள் அவளது உயிரை ஊடுருவி உருக்குலைத்தது.

“இல்ல… நீ தான் என்னை மேலும் மேலும் கடன்காரி ஆக்குற. சொன்ன மாதிரி உன் வேலை முடிஞ்சதும் என்னை விட்டுருக்கலாம் யாஷ். இந்தக் கல்யாணத்தை நான் எப்படி எடுத்துக்கட்டும்?” தவிப்பும் அழுகையும் பொங்க கேட்டவளின் கருவிழிகளை மேய்ந்தவன், “இதோ இப்படியே எடுத்துக்கோ…” என்று விட்டு அவளது தேனிதழ்களில் தனது உரிமையை நிலைநாட்டினான்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
82
+1
3
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்