
பிறை -44
விமானத்தின் வழியே பறந்தவளுக்கு.. விமானம் தரை இறங்கவும் தான் உணர்வே வந்தது. எத்தனை தூரம் தனது குடும்பத்தை விட்டு வந்துள்ளோம். ஏனோ இப்போது தான் அதை உணர்ந்தாளோ என்னவோ.. லேசாக மனதில் கிலி பிடித்துக் கொண்டது. ஏனென்றால் இப்போது வரை அர்ஜுனை அவள் நேரில் பார்க்கவில்லையே. போன் மூலமாக தானே அவளை வழிநடத்திக் கொண்டிருக்கிறான்.
அவள் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியதும், அவளது போனை உயிர்ப்பிக்க.. சரியாக அவனது போனும் வந்தது.
” கவி.. இறங்கிட்டியா ”
” ஹான் இப்போதான் லேண்ட் ஆனேன்.. நீ எங்க இருக்க அஜூ.. நீ இல்லாம ரொம்ப பயமா வேற இருக்கு டா ”
” என்ன பயம் உனக்கு.. நீ என்ன சின்ன குழந்தையா.. நம்ம பாதுகாப்புக்காக தான் சில வேலைகளை பார்த்திட்டு இருக்கேன். அதான் நான் வர முடியல.. உங்க அண்ணன் என்ன சாதாரண ஆளா.. இப்போதைக்கு நம்மளை தூக்கிட்டா.. என்ன ஏதுன்னு கூட கேட்காம என்னைய என்கவுண்டர்ல போட்டு தள்ளிடுவாரு.. அப்பறம் நம்ம இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்தும் வீணா போகிடும் கவி மா.. ” என்றதும் சற்றே அமைதியாகிப் போனாள் பார்கவி.
” உண்மை தான்.. என் அண்ணன் ரொம்ப புத்திசாலி.. கண்டிப்பா கண்டு பிடிச்சிடுவான். நீங்க கவனமா வாங்க ”
” கண்டிப்பா வரேன்.. வந்து தானே ஆகனும்.. நீ பர்ஸ்ட் ஏர்போர்ட் விட்டு வெளிய வா.. ”
” இங்கையும் கார் அரேஞ்ச் பண்ணியாச்சா அஜூ.. ”
” தெரியாத ஊர்ல உன்ன அலைய விடுவேனா கவி.. வெளிய கார் நம்பர் 7012 இருக்கும்.. அதுல ஏறிக்கோ.. அவங்க உன்ன பாதுகாப்பா இறக்கி விட்டிடுவாங்க.. அங்க நான் வந்துடுறேன் ”
” கொஞ்சம் சீக்கிரம் வா அஜூ.. ரொம்ப நேரம் என்னால தனியா இருக்க முடியாது..”
” கண்டிப்பா வரேன் கவி.. டோண்ட் ஓரி ” என போனை வைத்திருந்தான் அர்ஜுன். அதே போல அவன் கூறிய காரும் முன்னால் நின்றதால் சுலபமாக ஏறிக் கொண்டாள் பார்கவி.
தலையில் குள்ளா அணிந்த ஒருவன் அந்த காரை இயக்கிக் கொண்டிருந்தான். ” ஹாய் பார்கவி ” என அவள் அறிமுகம் செய்து கொள்ள.. எதிரில் இருப்பவனோ தலையை மட்டும் ஆட்டி விட்டு காரை எடுத்திருந்தான்.
முன்பை மாநகரம். முதல் முறையாக மும்பைக்கு வந்திருக்கிறாள். பார்க்கவே அத்தனை பிரமிப்பாக இருந்தது. வெளிநாட்டை போல ஆடைகளை உடுத்திக் கொண்டு செல்லும் மக்களை பார்க்க சற்று வியப்பாக தான் இருந்தது. வீட்டிற்குள் வளர்ந்த பார்கவிக்கு இதெல்லாம் சற்றே வியப்பாக தான் இருந்தது.
இந்த ஊரில் அர்ஜுனோடு தங்க போகிறோம் என்ற நினைப்பே அவளை சிறகில்லாமல் பறக்க வைத்தது.
இரண்டு மணி நேரப் பயணத்திற்கு பின் மும்பை மாநகரத்தை விட்டு சற்றே வெளி வரத் தொடங்கியது. அங்கிருந்து முக்கால் மணி நேரப் பயணத்திற்கு பின் ஒற்றை வழி சாலையில் கார் உள்ளே செல்ல.. அந்த பிரமாண்டமான கதவிற்குள் கார் நுழைந்தது.
சுற்றிலும் மரம். சோலையாக காட்சி அளித்த இடத்திற்கு நடுவில் இப்படி ஒரு பங்களாவா.. பங்களா என்று சொல்வதை விட.. கோட்டை என்று கூட சொல்லலாம்.
யாரும் இல்லை என்று சொன்னாரே.. இப்படி ஒரு கோட்டையில் இருப்பவரை எப்படி இவனுக்கு தெரியும். இப்போது தான் மூளை சற்று வேலை செய்ய தொடங்கியது.
” இது யார் வீடு ” டிரைவரிடம் கேள்வியை தொடுக்க.. அவனோ பாஷை தெரியவில்லை என அமைதியாக இருந்து கொண்டான்.
உள்ளே செல்ல செல்ல வியப்பூட்டும் விஷயங்கள் எல்லாம் இருந்தது. கோட்டை போல காட்சி அளித்த கட்டிடம் , உள்ளே செல்ல செல்ல ஏதோ தொழிற்சாலை போல காட்சி அளித்தது.
பெரிய பெரிய மெஷின்கள் வெளியே தெரியும் படி இருந்தது. அதிலிருந்து சில கழிவுகளும் வெளியேறிக் கொண்டிருந்தது. மேலே புகையும் சென்று கொண்டிருந்தது.
பார்க்கவே சற்று பயமாக தான் இருந்தது. இது என்ன இடம் , எதற்காக தன்னை இங்கு கொண்டு வந்தான் என நினைக்க நினைக்க மனம் பதறியது. வேகமாக அலைபேசியை எடுத்து அர்ஜுனுக்கு அழைத்து இருந்தாள். அதுவோ சுவிட்ச் ஆப் என வந்து விட.. தற்போது தான் அவளுக்கு ஏதோ உறுத்தியது.
மீண்டும் மீண்டும் அழைத்து கொண்டே இருந்தாள் பார்கவி. அணைத்து வைத்திருந்த அலைபேசிக்கு எத்தனை முறை அழைத்தாலும் எடுத்து விடுமா என்ன..
பயத்தோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள் பார்கவி. கார் ஓர் இடத்தில் நிறுத்தப்பட.. அவளது உடமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள் பார்கவி.
டிரைவர் அவளை பார்த்து சைகை செய்து விட்டு உள்ளே செல்ல.. அவன் பின்னே வேடிக்கை பார்த்துக் கொண்டு அவளும் சென்றாள்.
அந்த பிராமண்ட கட்டிடத்திற்குள் சென்றவளுக்கு , உள்ளே இருந்த காட்சிகளை பார்த்து, இதயம் நின்று துடித்தது.
பலதரப்பட்ட பெண்கள் எல்லாம் கண்ணாடிக்குள் அடைத்து வைத்து .. ஏதோ இயந்திரத்திற்குள் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.
‘ இது என்ன.. என்ன நடக்குது இங்க.. அந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் என்ன ஆச்சு.. கடவுளே.. என்ன மாதிரி இடம் இது.. தப்பான இடத்துல வந்து மாட்டிக்கிட்டேனா.. அண்ணா… எப்படியாவது இங்க வந்திடு.. எனக்கென்னமோ இது சரியா படலை’ என தமையனை மனதிற்குள் அழைத்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
அதே இடத்தில் இருந்து மீண்டும் அர்ஜுனுக்கு அழைத்து பார்க்க.. அதே பதிலை தான் கூறியது.
” ஹாய் மிஸ் பார்கவி… ” கம்பீர குரலில் ஆடிப் போனாள் பார்கவி.
கோட் ஷூட் அணிந்து வெளிநாட்டவன் போல இருந்தான். எப்படியும் ஐம்பது வயதை தொட்டிருக்கும். அவளை நோக்கி வந்தவன்.. ” ஹாய்.. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.. என்னாச்சு.. ” என அழகாக தமிழ் பேச.. சற்று மூச்சு வந்தது அவளுக்கு.
” உங்களுக்கு தமிழ் தெரியுமா..”
” நான் தமிழ்நாடு தான் ”
” ஓ.. உங்க பேர் ”
” வில்சன் ”
” அர்ஜுன் எங்க இருக்காங்க.. நான் கொஞ்சம் பார்க்க முடியுமா ”
” எஸ் எனக்கு தெரியும்.. அர்ஜுன் முக்கியமான வேலையா தமிழ்நாட்டுல தான் இருக்கான். உங்களை ரிசீவ் பண்ண சொன்னான்.. டிராவல் எல்லாம் எப்படி இருந்துச்சு ”
” ஹான் குட்.. அர்ஜுன் எப்போ வருவாங்க ” அவளது கேள்வி முழுவதும் அர்ஜுனை சுற்றி தான் இருந்தது.
” வேலை முடியவும் வருவான் ”
” ம்ம் ”
” நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. உங்களுக்கு டின்னர் கொடுத்து விடறேன் ” என்றதும்.. அரை மனதாக தலையாட்டி விட்டு அங்கிருக்கும் மெஷின்களை எல்லாம் பார்த்துக் கொண்டே படியேறிச் சென்றாள் பார்கவி.
ஏனோ இந்த இடத்தை பார்க்கவே அவளுக்கு அத்தனை பயமாக இருந்தது. கண்ணாடிக்குள் இருக்கும் பெண்கள் எல்லாம் கண்களை மூடியவாறு படுத்திருந்தார்கள்.
அவர்கள் உறங்குகிறார்களா, இல்லை மயக்கத்தில் இருக்கிறார்களா, அல்லது இறந்து விட்டார்களா , இல்லை கண்ணை மூடிக் கொண்டு படுத்திருக்கிறார்களா என ஒன்றும் தெரியவில்லை.
இருந்தாலும் அங்கு நடப்பது எதுவும் சரியாக தெரியவில்லை. அர்ஜுன் இப்படி ஒரு இடத்தில் எல்லாம் பழக்கம் வைத்து கொள்ள மாட்டான். இருந்தாலும் எப்படி ? என மனம் சிந்தித்தது.
அப்போது கூட அவளது காதல் மீதும் காதலன் மீதும் துளி அளவும் சந்தேகம் வரவில்லை.
அவர்கள் கொடுத்த அறைக்குள் சென்றவள் .. களைப்பாக இருப்பதால் குளியலை போட்டு விட்டு உடைகளை மாற்றிக் கொண்டு வந்து மெத்தையில் சரிந்தாள்.
அண்ணனுக்கு அழைத்து பேசி விடலாமா என்று மனம் சிந்தித்தது. ஆனால் அர்ஜுன் மீதுள்ள நம்பிக்கையில் மனம் அதை செய்ய மறுத்தது. அர்ஜுன் வந்ததும் பேசி ஒரு முடிவிற்கு வந்ததும் இங்கிருந்து கிளம்பி விடலாம். முதலில் இதெல்லாம் என்னவென்று கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம்.. என யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளது யோசனையை கலைத்தது அந்த அலறல் சத்தம்!
****
இரவுணவை முடித்துக் கொண்டு அனைவரும் படுக்கைக்கு சென்றிருந்தார்கள்.
பயத்தோடும் படபடப்போடும் படுக்கைக்கு சென்றாள் பிறை. கையில் சிவகாமி காய்ச்சி கொடுத்த பாலும் இருந்தது. ஏதோ முதலிரவுக்கு போகும் படபடப்பு தான் அவளுக்கு இருந்தது. அவனை கட்டியணைத்து இருக்கிறாள், முத்தமிட்டு இருக்கிறார்கள், கட்டிக் கொண்டு ஒரே மெத்தையில் படுத்திருக்கிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் மீறியது தானே தாம்பத்யம். அந்த தம்பத்யத்தையை எதிர்கொள்ள தான் இத்தனை பயமும்.
மெல்ல நடையிட்டு அறைக்குள் வந்தவள், கதவை தாளிட்டு உள்ளே வந்தாள். கொள்ளை வாசல் வழியாக இயற்கை காற்றை வாங்கிக் கொண்டிருந்தான் ஆதிதேவ்.
பாலோடு பின் கட்டிற்கு சென்று அவனருகில் அமர்ந்து விட்டாள் பிறை.
” அம்மா பால் குடிக்க கொடுத்தாங்க ”
மெல்லிய புன்னகையோடு அவளை பார்த்தவன்.. மீண்டும் வயல் மீது பார்வையை பதித்து.. ” எதுக்கு இவ்வளவு பதட்டமா இருக்க மூன்”
கண்டு பிடித்து விட்டானே என்ற ரீதியில்.. ” ஹான் அதெல்லாம் இல்லையே.. எப்பவும் போல தான் இருக்கேன்.. ”
” ஓ.. அப்போ எனக்கு வசதி தான்.. நான் கூட நீ பயத்தோடு இருக்கியே.. எப்படின்னு நினைச்சேன். சரி பாலை கொடு.. குடிச்சுட்டு ஆரம்பிப்போம் ” நக்கலாக பேசியவனை கண்டு அதிர்ந்தவள்.
” கமிஷனர் மாதிரியா பேசுறீங்க.. ”
” அதுசரி கமிஷனர்னா விறப்பா தான் இருக்கனுமா .. எங்களுக்கெல்லாம் பீலிங்ஸ் இருக்காதா என்ன ”
” அதுக்குன்னு இப்படியா ”
” இதெல்லாம் உன் கிட்ட மட்டும் தானே பேச முடியும்.. இல்லையா மூன் ” என்றவன் மெல்ல நெருங்கி அவளது கன்னத்தில் இதழ் பதிக்க.. கண்களை மூடிக் கொண்டு அவன் கொடுத்த முத்தத்தை உள்வாங்கி இருந்தாள்.
” பா…பாலை குடிங்க”
” ம்ம் ” என ஒரே மூச்சில் பாலை குடித்திருந்தான்.
” உங்க பிரெண்ட் கீழே உள்ள ரூம்ல இருக்காங்க.. அப்பா அவங்களை அங்க தங்க சொல்லிட்டாங்க.. வெளியில தங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க ” என சரண் பற்றி கூற.. தலையசைத்து கேட்டுக் கொண்டான் ஆதிதேவ்.
” பனி அதிகமா இருக்கு உள்ளே போகலாமா ” பிறை கேட்டதும்.. அதற்கு மேல் மறுக்க தோன்றுமா.. உடனே எழுந்து உள்ளே வந்திருந்தான்.
” நீ இன்னும் என்ன சின்ன பொண்ணா.. தாவணி கட்டிட்டு இருக்க.. ”
” எனக்கு இது ரொம்ப பிடிக்கும்..”
” நான் என்னமோ சின்ன பிள்ளைய பிடிச்சு கல்யாணம் பண்ண மாதிரி எல்லாரும் பேசுறாங்க .. ஆனால் அன்னைக்கு கோவில்ல பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது நீ ரொம்ப பெரிய பொண்ணுன்னு ” என்றதும் யோசனையாக அவனை பார்த்தாள் பிறை.
அன்று அவளது புடவை தீப்பிடிக்கும் பொழுது நடந்த சம்பவத்தை கூறுகிறான் என்பது புரிய.. அவனை முறைக்க கூட முடியாமல் வெட்கம் கன்னங்களை நிறைத்து விட்டது.
அவனது முகத்தை பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டவள்.. ” தூங்குவோமா ” என கேட்டு வைக்க..
” ம்ம் … தூங்குறதுக்கு முன்னாடி இந்த மூனை ஆராய்ச்சி பண்ண வேண்டியது இருக்கு.. அதை பண்ணிட்டு தூங்குவோமா” என அவளை கைகளில் அள்ளி
க் கொண்டு மெத்தையில் சரித்தான் ஆதிதேவ்.
அதேநேரம் அவள் வீட்டு தோட்டத்திற்குள் நுழைந்தான் ஆதி.
சனா💖
நடக்க விட்டுடுவேனா😂மவனே யாருகிட்ட😎
