Loading

அத்தியாயம் 43

 

இதற்குள் கோவிட் உடை அணிந்த இருவர் இவர்கள் ரூம் வரை வந்திருந்தனர்.

“என்ன என்ன யார் வேண்டும்?” என ராஜம், ஜெயந்தி ஓடிவர.

 

வந்த இருவரும் ப்ரகலத்தனுக்கு கோவிட் உடைமாற்ற உதவினர். நடப்பது புரியாமல் சிலையென நின்ற ஆறெழில், “ட்ரெஸ் பேக் பண்ணு ஆறு” என வைரத்தின் உலுக்கலில் தான்.

 

“ஹேய் என்ன பண்றீங்க அவங்கள. விடுங்க, இந்த டிரஸ்லா வேணாம். அவர எங்கயும் நா விடமாட்டேன். போங்க தூர, ப்ரெசிடெண்ட் ப்ளீஸ். நா உங்கள போக விடமாட்டேன். நீங்க இங்க தான் இருக்கணும். ப்ளீஸ் ப்ளீஸ்” என அவனை கட்டிக்கொண்டாள்.

 

வந்திருந்த இருவரும் அவளை பலமாக இழுத்து தூர நிறுத்தினர். “யூ காண்ட் பிஹேவ் லைக் திஸ் மேம். பி அவேர். ப்ளீஸ் ஸ்டே அவே, அல்லோவ் அஸ் டு டூ அவர் ஒர்க்” என்றனர்.

 

அதெல்லாம் அவள் காதில் வாங்க தயாராக இல்லை. மீண்டும் அவனிடம் பாய தயாரானாள், வைரமும், லட்சுவும் தான் பிடித்து நிறுத்தினர்.

 

ப்ரகலத்தனிற்கு இப்போது சுத்தமாக முடியாமல் இருக்க, அவனாலும் அவளுக்கு எதுவும் சொல்ல, செய்ய முடியவில்லை. அதை உணர்ந்த வைரம் தான், “நீங்க முன்ன போங்க சீனியர், நா தேவையானத எடுத்துட்டு பைக்ல வர்றேன்” என்றான்.

 

இதற்குள் ராஜம், ஜெயந்தி இருவரும் நிலைமையை புரிந்திருக்க, வேகமாக பூஜையறை சென்று திருநீருடன் வந்து அவனுக்கு பூசி விட்டு விலகி நின்றனர். அவர்களின் இப்போதைய துணை கடவுள் மட்டுமே.

 

“அவள பாத்துக்கோங்க” என்றான் அவர்களிடமும். 2 பிள்ளைகளை அவன் குறிப்பிடவில்லை இவளையே குறிப்பாக சொல்லி கிளம்பினான்.

 

வைரத்திடம், “எல்லோருக்கும் கோவிட் டெஸ்ட் எடுத்துடு” என்றான்.

 

“ப்ரெசிடெண்ட் ப்ளீஸ் போகாதீங்க. உங்கள கண்ணுல கூட காட்டமாட்டாங்க. ப்ளீஸ் என்னயும் கூட்டிட்டு போங்க, உங்களோடவே நானும் வரேன். ப்ளீஸ் ப்ரெசிடெண்ட், உங்களுக்கு தெரியும் தான உங்கள விட்டுட்டு நா இருந்துக்க மாட்டேன்னு தெரியும்தான, கூட்டிட்டு போங்க என்னையும்” என அழுதவளை, கண்ணீர் தழும்ப பார்த்துவிட்டு.

 

“க்யூர் ஆகிட்டு வந்து உனக்கு சமாதானம் சொல்றேன் எழில்” என முணங்கியவாறு வெறியேறினான்.

 

கோவிட்டின் தினசரி பரப்பு விகிதத்தயும், இறப்பு விகித்ததயும் நியாபகம் வைக்கும் நமது மூளை, குணமானோர் ௭ண்ணிக்கையை மட்டும் விட்டு விடுகிறது. கோவிட் ௭ன்று அட்மிட் ஆகுபவர்கள், இறந்தால் வீட்டிற்கும் காட்டாமல் அப்படியே கொண்டு செல்ல படுகிறார்கள். மருந்தும் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. இப்படி கோவிட் ௭ன்றாலே பயம் ௭ன்றாகிவிட்ட நிலையில் ப்ரகலத்தன் குடும்ப பெண்கள் மட்டும் ௭ப்படி திடமாக இருந்திட முடியும்.

 

அவன் சென்றதும் வைரத்தை போட்டு வெளுத்து விட்டாள். “நீதான, நீதான அவர என்னட்டருந்து பிரிச்சுட்ட. எனக்கு தெரியாம ஹாஸ்பிடல் கொண்டு சேத்துட்ட. அவருக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, நீதான் என்ன அவர்கிட்ட கொண்டு சேக்கணும் சொல்லிட்டேன்” என வாய்க்கு வந்த்ததை புலம்பி கொண்டு அவள் அடித்த அடியை எல்லாம் வாங்கிக் கொண்டான்.

 

பின் லட்சுவிடம் ஒப்படைத்து விட்டு தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். லட்சுவை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். பிள்ளைகளும் அம்மாவை கண்டு, கலவரமாகி பயந்து பதறி அழுது கொண்டிருக்க, பெண்கள் மூவரும் ஆளுக்கு ஒருவரை சமாதானம் செய்து தூங்க வைத்தனர்.

 

ஒருவாறு மூன்றும் உறங்கிய பின்பே, ஆளுக்கொரு வேலையாக, மொத்த வீட்டையும் டெட்டால் ஊற்றி அலசி, சுத்தப்படுத்தி தாங்களும் தூங்கச் சென்றனர். இரவு உணவை அனைவருமே மறந்திருந்தனர்.

 

அங்கு ஹாஸ்பிடல் சென்ற ப்ரகலத்தனை, முதலில் ஸ்கேன் செய்தனர். ஸ்கேன் ரிபோர்ட்டை பார்த்த டாக்டர் “10% ஸ்ப்ரெட் இருக்கு, ஒன்னும் பிரச்சனயில்ல, 5 டு 7 டேஸ்ல க்யூர் பண்ணிடலாம். வயசும் கம்மிதான, ஃபிட்டா தான் இருக்கீங்க. நோ ஒரிஸ் அமௌன்ட் பே பண்ணி அட்மிட் ஆகிடுங்க” என்றவர் அவர்களுடன் நர்சிடம் சிலவற்றை பேசிவிட்டு அனுப்பி வைத்தார்.

 

அதற்குள் வைரம் வந்துவிட, அவனிடமும் அதுவே சொல்லப்பட, மூன்று லட்சம் நெட் அமௌன்ட்டாக ஹாஸ்பிடல் அக்கவுண்ட்டிற்கு டிரன்ஸ்ஃபர் செய்தான் ப்ரகலத்தன்.

 

“கொஞ்சம் வீட்டுக்கு போய் பாத்துக்கடா. தேவையானத வாங்கி கொடு. கண்டிப்பா அந்த மெடிக்கல் ரெப் வர வச்சு எல்லாருக்கும் டெஸ்ட் எடுத்துரு. நெகடிவ்னு வரவும் வேக்சின் போட்ருங்க எல்லோரும்” என்றான்.

 

“நீங்க க்யூர் ஆகுறத மட்டும் பாருங்க. அங்க எல்லாம் நா பாத்துக்குறேன். சாப்பாடு கொண்டுவந்து கொடுக்கலாம்னு சொல்லிருக்காங்க, இங்க பிடிக்குதா பாருங்க, இல்லைன்னா சொல்லுங்க கொண்டுவரேன். கெட் வேல் சூன் சீனியர், உங்க எழிலுக்காகனாலும் சீக்கிரமா வாங்க. என்னா அடி அடிக்கிறா தெரியுமா. வந்து நீங்களும் வாங்கணும் தெம்பா வாங்க” என்றுவிட்டு, அவனை அட்மிட் செய்து, இரவு உணவும் முடித்துவிட்டானா என கேட்டு விட்டே கிளம்பினான்.

 

அவனுக்கென ஒதுக்கப்பட்ட நர்ஸிடம் 500 ரூபாய் கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்ளும்படி சொல்ல.

 

“சார் இனி டிஸ்சார்ஜ் ஆகுற வர பார்க்க முடியாது. சாப்பாடு மத்த டீடெயில்ஸ் கேட்கணும், கொடுக்கணும்னா ரூம் நம்பர் சொல்லி ரிசப்ஷன்ல கொடுத்துட்டு, பேஷண்ட்ட போன் பண்ணி சொல்லிடுங்க, அவங்க கூப்பிட்டு சொன்னா நான் வந்து வாங்கிட்டு போயிடுவேன். போன்ல பேசிக்கலாம் நீங்க” என்றார் அந்த நர்ஸ் ஹிந்தியில், “தேங்க்ஸ் சிஸ்டர்” என விடை பெற்றான் வைரம்.

 

இங்கு வீட்டில்…….

 

ஹாலில்தான் லட்சுவும், ஆறுவும் படுத்திருந்தனர். அழுத அழுகையிலும், முதல் நாள் உறக்கமின்மையும் சேர்த்து அவளை சற்று நேரம் தூங்க வைத்திருந்தது. அதன் பின் மன அமைதியின்மை பயத்தை கிளப்பி உறக்கத்தை கெடுக்க, படபடத்து எழுந்து விட்டாள்.

 

வேகமாக சென்று அவனறையில் பார்க்க, அவன் இல்லை என்பதை உணர்ந்து தனது போனை எடுத்து அவனுக்கு கால் செய்தாள்.

 

“என்னடாம்மா இன்னும் தூங்கலையா? குளுக்கோஸ் போட்டுருக்காங்க, கொஞ்சம் ஃபீவர் குறைஞ்சிருக்கு, சீக்கிரம் ரெக்கவர் ஆகிடலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாரு. நீ பயப்படாம தூங்கு. நா காலைல பேசுறேன்” என்றான்.

 

பதிலே சொல்லாமல் அவன் சொன்னதை மட்டும் கேட்டுக்கொண்டு படுத்துவிட்டாள். வீட்டுக்கு வந்த வைரம் மற்றவர்களை தொந்தரவு படுத்த வேண்டாம் என்றெண்ணி லட்சுவிற்கு கால் செய்ய, வேகமாக எழுந்தவள் போனை தேடி எடுத்து,”என்னடா எங்க இருக்க?” என்க.

 

“கதவை திறடி” என்றான்.

 

அவர்கள் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு வந்திருந்தான். “ஆறு?” என்க.

 

“இங்க தான்” என திரும்பியவள், அவள் படுத்திருந்த இடத்தில் காணும் என்றதும் ப்ரகலத்தன் அறைக்கு ஓட, இருவரும் கண்டது கையையும், காலையும் சுருக்கிக் கொண்டு அவன் படுத்திருந்த இடத்தில் படுத்திருந்த ஆறெழிலை தான்.

 

“பெட்சீட்லா மாத்திட்டீங்க தான?” வைரம் கேக்க.

 

“ம்ம் ஃபுல்லா க்ளீன் பண்ணியாச்சு. அவதான் இன்னும் குளிக்கல, குளிடி ன்னு சொன்னா, இப்ப தான் ப்ரெசிடெண்ட் வெளில கிளம்பி போயிருக்காங்க உடனே குளிக்க சொல்ற லூசுன்னு ௭ன்ன திட்றாடா. சென்னைல வளந்தவ மாறியா பேசுறா”.

 

“ரொம்ப பயந்து போய் இருக்கால்ல அதான் அப்படி பேசுறா. இவளுக்கு கண்டிப்பா நாளைக்கு கோவிட் டெஸ்ட் பண்ணிடனும்”.

 

“ஆமா… ௭ல்லாருக்குமே பண்ணிடுவோம் பெட்டர்”.

 

“ம்ம். நீ உள்ள படுத்துக்கோ, நா ஹால்ல படுத்துக்றேன்” ௭ன வைரம் திரும்ப.

 

“ஹாஸ்பிடல்ல ௭ன்ன சொன்னாங்க”. அவன் பதில் சொல்லவும், அவரவர் இடத்தில் சென்று படுத்து கொண்டனர்.

 

 

ப்ரகலத்தன் ஹாஸ்பிட்டல் சென்று இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இப்போது ஃபீவர் முழுமையாக குறைந்திருக்க, ஃபீவரை குறைத்த பின்பே கொரோனாவிற்கான ட்ரீட்மென்ட் ௭ன்று விட்டார் டாக்டர். அதனால் இன்றுதான் கொரோனாவிற்கு மருந்து கொடுக்கப் போவதாக கூறி சென்றிருந்தார் மார்னிங் ரவுண்ட்ஸ் வந்த டாக்டர். காய்ச்சலைக் குறைக்கவே இரண்டு நாள் எடுத்துக்கொண்டு, இருமலை அதிகம் செய்து கொடுத்திருந்தது.

 

ப்ரகலத்தனோ காய்ச்சல் விடவுமே கொஞ்சம் தெம்பாக மீண்டிருந்தான், என்ன செய்கிறான், இப்பொழுது என்ன மருந்து கொடுக்கிறார்கள், ஃபீவர், சுகர், ஆக்ஸிஜன் லெவல் இது 3யும் 3 வேலையும் செக் செய்வர். அது எவ்வளவு என்பது வரை மனைவியிடம் ஒப்பித்து விடுவான். அவன் மட்டுமே பேச, ம் கூட கொட்டாமல், அனைத்தயும் கேட்டுவிட்டு போனை வைத்து விடுவாள். ஆனால் கால் செய்ய மட்டும் நேரம் தவறியதில்லை. கோபம் வந்தால் பேசா மந்தையாகிவிடுவாள் என்பதை அவனை விட வேறு யாரும் நன்கு அறிந்திருக்க முடியும். ஃபீவர் குறைந்து விட்டது, ஆனால் ஆக்ஸிஜன் லெவல் ஃப்ளக்சுவேஷன்லேயே இருந்தது. அவனுக்கு அது சற்று பயத்தைக் கொடுத்தாலும் தைரியமாக இருந்தான்.

 

சாப்பாடு மூணு வேளையும் வைரம் சென்று கொடுத்து வந்தான். எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என டாக்டர் சொல்லிவிட்டார், ஆனாலும் அவனுக்கு தான் எதுவுமே சாப்பிட முடியவில்லை. அதனால் லிக்யூட் ஃபுட்டில் இறங்கியிருந்தார் ஜெயந்தி. ஆட்டுக்கால் சூப், நாட்டுக் கோழி சூப், முருங்கைக்கீரை சூப், அவிச்ச முட்டை, கொஞ்சம் உப்பு, உறைப்பாக குழம்பு வகைகள் என அவன் உடம்பை தேற்றும் பணியில் இறங்கியிருந்தார்.

 

மூன்றாவது நாள் ஆக்சிஜன் லேவெல் 93 (நார்மல் 98,99) என காட்டவும் மொத்த குடும்பமும் பதறியிருந்தது. ஆளாளுக்கு ஆக்ஸிஜன் நார்மலுக்கு என்னென்ன செய்யலாம் என கூகுளிலும், ஊரின் உள்ளவர்களிடமும் விசாரித்ததில் கிராம்பு, கடுக்காய்த்தோல் இது ரெண்டும் தான் அதிகம் சொல்லப்பட்டது. கிராம்பை எடுத்து தேங்காய் பால் சேர்த்து கொடுத்து அனுப்பினர் வைரத்திடம். கடுக்காய்த் தோல் டெல்லியில் கிடைக்காததால் தமிழ்நாட்டில் ப்ரகலத்தனின் அப்பா வாங்கி சென்னை டு டெல்லி பிலைட்டில் தெரிந்தவர் மூலமாக அனுப்ப, வைரம் சென்று வாங்கி வந்தான். பின் அதையும் தேங்காய் பாலில் கலக்கி கொடுத்தனர்.

 

நான்காம் நாள் செக் செய்ததில் வலது கையில் ஒரு வேல்யூவும் இடது கையில் ஒரு வேல்யூமாக காட்ட, குழம்பித்தான் முழித்தனர்.

 

வைரம் சென்று டாக்டரிடம் கேட்டதற்கு, “3டு டே டு 5த் டே, ட்ரிப்ஸ் மூலமா கொரோனாக்கான மருந்து ஏத்துவோம், அது அடுத்து ஃபோர் டேஸ்ல ரியாக்ட் ஆகும். அதுவர உடம்புல எல்லா லெவல்ஸ்ஸும் ஃப்ளக்சுவேஷசன்ல தான் இருக்கும், டோன்ட் ஒரி. இருமல் மட்டும் குறைய லேட்டாகும், அதுக்கும் ட்ரீட்மென்ட் எழுதியிருக்கிறேன்” என முடித்துவிட்டார்.

 

௭ழில் அன்று இரவு, படுக்கையில் படுத்து ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தவளை, லட்சு “ஏய் ஆறு இப்ப என்னடி? எப்ப நல்லாயிருக்க ௭ப்ப அழுரன்னே தெரியமாட்டேங்குது. எந்திரி பேஸ் வாஷ் பண்ணு போ” எனப் பிடித்து எழுப்பினாள்.

 

அம்மாக்கள் இருவரும் படுக்க சென்றிருக்க சாப்பாடு கொண்டு போன வைரத்திற்க்காக காத்திருந்தவள், இவள் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்க்க, அழுது கொண்டிருக்கவும் வந்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவள்அசைவேனா என படுத்திருக்க, பக்கத்தில் இருந்த பாட்டில் தண்ணீரை கையில் கொஞ்சமாக ஊற்றி ஆறுவைப் பிடித்து நிமிர்த்தி அவள் முகத்தில் தெளித்து தன் துப்பட்டாவால் முகத்தை துடைத்து விட்டாள். அதில் எட்டி லட்சுவை கட்டிக் கொண்டு அவர் வயிற்றில் முகம் புதைத்து, ஏங்க. தானும் அவளை முதுகோடு கட்டிக்கொண்டு தடவிக்கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள்.

 

பின் “இப்ப என்ன சொன்னாங்க சீனியர்?” எனக் கேட்க,

 

“பயமா இருக்குடி, ஆக்ஸிஜன் லெவல் குறைஞ்சுட்டே இருக்குறது, என்னென்னவோ நினைக்கத் தோணுது” என மேலும் அவளை இறுக்கி அணைக்க.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
28
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்