
அத்தியாயம் 4
அன்றைய பொழுதை ஒருவித இறுக்கத்துடனே கழித்தனர் குணசீலன் குடும்பத்தினர். அதற்காக அடுத்து வந்த நாட்களில் தன்னை மாற்றிக்கொண்டு குடும்பத்துடன் குணசீலன் இணைந்து கொண்டாரா? என்றால் அதுதான் இல்லை, அவரிடம் எந்த மாற்றமும் வந்திருக்கவில்லை. மீண்டும் ஆறெழிலுடனும் கூட அவர் பேசுவதில்லை.
ஆனால் அவள் பேசினால், தானாகவே சென்று அவரிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பிவிடுவாள். அடுக்களையிலிருந்து இதைக் கவனிக்கும் ஜெயந்திக்கு ஆற்றாமையாக இருக்கும், ஆனால் எதைக் கேட்டாலும் மண்ணாக பேசாமல் இருப்பவரிடம் என்னத்தை கேட்டு விட முடியும் என பல்லை கடித்து அமைதியாக இருந்துவிடுவார்.
ஆறெழில் பள்ளியில் தினமும் காலை ப்ரேயரில் ப்ரகலத்தனை பார்ப்பதோடு சரி. பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவனோ அவளை ப்ரேயர் நேரத்திலும் கண்டுகொள்ளமல் இருந்து கொள்வான். மற்ற சமயங்களில் கிரவுண்டில், பிரேக் அல்லது லஞ்ச் டைம்களில் அவளை அவள் அறியாமல் பார்த்துச் செல்வான்.
அப்படியே நாட்கள் செல்ல அவள் பத்திலும் அவன் பன்னிரண்டிலும் அடி எடுத்து வைத்தனர். சில மெட்ரிகுலேஷன்ஸ் பொருத்தவரையில் போர்டு எக்ஸாம் எழுதுபவர்களுக்கு எல்லா நாளும் பள்ளி உண்டு. ஸ்பெஷல் க்ளாஸ், ஸ்டடி என்று காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வந்துவிட்டால் இரவு 8 மணி வரை இருக்க வேண்டும். படிப்பை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. அது நம் ஆறுவிற்கு ஏக வசதியாகி போனது.
பொதுவாக பத்து, பன்னிரண்டு வகுப்பு மாணவர்களை மொத்தமாக, கிரவுண்டில் இல்லையென்றால் அவர்களது 8 செக்க்ஷனையும், கிளாஸை பிரிக்கும் கபோர்டை மட்டும் நீக்கிவிட்டு, ஒரே ஹாலாக்கி, நீலவாக்கில் பெஞ்ச் போட்டு, ஸ்டூடண்ட்ஸை அமர வைத்து பார்த்துக்கொள்வர். ரிலாக்சாக படிக்க, எக்ஸாம் எழுத என எப்பொழுதும் ஸ்டாஃப்ஸ் மாற்றி மாற்றி இருந்து கவனித்துக்கொள்வர். 10, 12 இரண்டயும் சேர்த்து கண்காணிப்பில் வைத்து கொள்வர்.
அதில் அவன் எங்கே இருப்பான் என பார்த்து, அவன் கண் தெரியுமாறு வந்து அமர்ந்துகொண்டு சைட் அடிப்பது தான் முழு நேர வேலையாக பார்த்துக்கொண்டிருந்தாள் ஆறு. ஒரு வாரம் பொறுத்து பொறுத்துப் பார்த்த ப்ரகலத்தன், அன்று நேராக அவள் முன் வந்து நின்று விட்டான். கையை தாங்கி அவன் இடத்திலிருந்து எழுந்து தன் முன் வந்து நிற்பது வரை ரசித்து சிரித்து பார்த்திருந்தாள். அவள் அவ்வளவு ரசிக்கும் கண் கோபத்தை தாங்கி முறைத்தவாறு வந்து அவள் முன் நின்றது.
“உனக்கு படிக்குற ஆச இல்லனா வீட்ல இரு. என் படிப்பயும் சேர்த்துக் கெடுக்காத, நீ இப்டி பண்றது என்னையும் சேத்து டிஸ்டர்ப் பண்ணுது. ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட்” என்றான் மிரட்டலும் இல்லாத கெஞ்சலும் இல்லாத தொனியில்.
“ஃப்ரண்டும் ஆகமாட்றீங்க, பாக்கவும் விட மாட்டேங்கறீங்க. என்ன, என்ன தான் செய்ய சொல்றீங்க. என்ன பாத்தா பாவமா இல்லையா?” என்றாள்.
“டோன்ட் யூ ஹேவ் ௭ சென்ஸ். யூ க்ராஸிங் யுவர் லிமிட். இப்ப ரொம்ப ஓவரா போயிட்டுருக்கு. நீ படிக்கிற மாதிரி தெரியல. 10th போர்டு ஸ்கோர் வாங்க ஆச இல்லயா? உங்க வீட்டில உன்னைய சும்மா ஸ்கூலுக்கு போயிட்டு வான்னு அனுப்பிட்டாங்களா?” என்றான் கோபமாக.
“ஐயோ ப்ரெசிடெண்ட் கூல், எதுக்கு இவ்வளவு டென்ஷன். நா எப்டியும் படிச்சுருவேன். இல்லனா ஜெயந்தி டீச்சர் என்னய நிம்மதியா தூங்க விடமாட்டாங்க. படிச்சத தான திரும்பத் திரும்ப படிக்கிறோம். சோ ஒன்ஸ் ரீட் பண்ணாலே எக்ஸாம் அட்டெண்ட் பண்ணிடலாம்”.
அவன் அதற்கும் ஒரு மாதிரியாக பார்க்க.
“என்ன? இவ இவ்வளவு புத்திசாலியான்னு பாக்கீங்களா, 6த் ரேங்க் வாங்குறேன். நம்புங்க ப்ரெசிடெண்ட், நா அவ்வளவு மக்கு இல்ல” என்க.
“சரி அது உன் பிரச்சன. என் படிப்ப கெடுக்காத”.
“நானா?? நா ௭ன்ன டிஸ்டர்ப் பண்ணே? நா பாட்டுக்கு இவ்வளவு தூரத்துல இருக்கேன்”.
“ஆனாலும் எனக்கு டிஸ்டர்ப்பாகுது. யுவர் லுக், இட்ஸ் டிஸ்டர்பிங் மீ. ஐ லாஸ் மை கான்சன்ட்ரேஷன்”.
“அப்ப என் பார்வ உங்கள டிஸ்டர்ப் பண்ணுதா ப்ரெசிடெண்ட்?”.
அவன் மேலும் முறைக்க.
“ஓ.கே சில். ஒரு டீல். உங்களுக்குப் பிடிக்காதத செய்யல போதுமா. இனி நீங்க டிஸ்டர்ப் ஆகுற அளவு உங்கள பாக்க மாட்டேன். ஆனா எனக்குத் தோணினப்ப நா பாக்கும் போது, நீங்க இப்டி வந்து அப்ஜெக்ட் பண்ணக் கூடாது. எப்பயும் போல முறைச்சு பாருங்க. அது இன்னும் கூட நல்லா தான் இருக்கு. இப்பல்லாம் நீங்க என் பக்கம் திரும்புறது கூட இல்லயா, எனக்கு ரொம்ப பீலிங்கா போச்சு” என்றாள் குனிந்து அவனிடம் செல்லமாக.
‘இவள ௭ன்ன தான் செய்ய’௭ன அந்நேரம் திட்ட தோன்றினாலும், அவனது இன்னொரு மனம் ‘பிகாஸ் ஆஃப் ஹெர் ஏஜ், ஷீ இஸ் ரியக்டிங் லைக் திஸ். இப்போ பாக்ற எல்லாமே அழகா தான் தெரியும், அவளுக்கும் நீ அப்படித் தான்’ என எடுத்து சொல்ல, தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.
அவளோ பேசியதற்கான பதிலை அவனிடம் எதிர்பார்த்து நிற்க, “இப்ப எல்லா நல்லாருக்க மாதிரி தான் தெரியும்” ௭ன்றுவிட்டு, “ரிசல்ட் வந்தப்புறம் ஃபீல் பண்ணி யூஸ் இல்ல. ஒழுங்கா படி, என்னையும் கான்சன்ட்ரேட் பண்ணி படிக்க விடு. திரும்பி இப்டி வந்து பேசிட்டு இருக்க மாட்டேன். கீப் இட் இன் மைண்ட்” என சேர்த்து சொல்லிவிட்டு மறுபடியும் தனது இடம் சென்று அமர்ந்தான்.
அவளை விட 2 வயதே மூற்றவன் அவன். ஆனாலும் அவளிடம் இல்லாத பக்குவம் இவனிடம் இருந்தது. ௭னவே அவளை பிடித்திருந்தாலும், அதை அவன் வெளிபடுத்த விரும்பவில்லை. அவள் பார்ப்பதற்கு முன் 1 வருடமாக அவளை கவனித்து வருபவன், அவள் விளையாட்டு தனத்தை ரசித்து வருபவன், அதை அடுத்த கட்டமாக யோசிக்க, ௭டுத்து செல்ல விரும்பாமல் விட்டு விட்டான்.
“நா இப்போ என்ன பண்ணிட்டேன்னு இவங்களுக்கு இவ்வளவு கோவம் வருது. இந்த சுதந்திர நாட்டுல பாக்குறது ஒரு குத்தமா” என்றாள் அருகில் இருந்த லட்சுவிடம்.
அவளோ இவளை ஏற்கனவே தீயாய் முறைத்துக் கொண்டிருந்தவள் இப்போது மேலும் முறைத்து, “ஒரு பையன் வந்து என்ன பாக்காதன்னு சொல்லிட்டு போற அளவுக்கு நடந்துருக்க அசிங்கமாவே இல்லையாடி உனக்கு?”.
“இதுல என்ன அசிங்கம் இருக்கு, எனக்கு புடிச்சிருக்குன்னு பாக்குறேன். ஆனா அது அவங்கள டிஸ்டர்ப் பண்ணுதுன்னா கொஞ்சம் குறைச்சுக்கலாம். இனி முன்ன மாதிரி பிரேயர்ல மட்டும் பாத்துக்குறேன் அவ்வளவுதான, சரியா. நீ வேற பாடம் ௭டுக்காத” என்றாள்.
லட்சு தன் தலையிலடித்துக்கொண்டு, “உனக்கு முத்திட்டுடி கீழ்ப்பாக்கத்துல தான் கொண்டு சேக்கணும்”.
“நீ ஏன் இத தப்பா பாக்குற???”.
“ஊரே இத தப்புனு தான்டி சொல்லும் லூசு கழுத. உன் இஷ்டத்துக்கு விடாம சைட் அடிக்க, அவர் என்ன பப்ளிக் பெர்சனாலிட்டியா. நீ பண்றது பேரு ஹராஸ்மெண்ட்” என்றாள் லட்சு.
அது அவளை காய படுத்த, மறுபடியும் யோசிக்க ஆரம்பித்தாள் ஆறெழில். இரண்டு நாள் நன்றாக யோசித்துப் பார்த்தாள், படிப்பில் சற்று கவனம் குறைந்து விட்டிருந்தது புரிந்தது. ஆனாலும் முழுதாக இனி ப்ரெசிடெண்ட் பக்கம் திரும்புவதில்லை என முடிவெடுக்க முடியவில்லை. ஏதோ வகையில் அவன் மீது நாட்டம் அதிகம் ஆகிவிட்டது. அவள் தான் அதற்கு இன்னும் பெயரிடவில்லை.
அவனைப் பற்றியும் விசாரித்து வைத்திருந்தாள்.
அவனும் அவன் வீட்டுக்கு ஒரே பையன். அம்மா, அப்பா இருவரும் கவர்மெண்ட் ஸ்டாஃப்ஸ், மிடில் கிளாஸ், அடையாரில் வசிக்கிறான். கிளாஸ் ஃபர்ஸ்ட், 2 பேர் க்ளோஸ் ப்ரண்ட்ஸ். ஹைட் 5.1, வெய்ட் 65கேஜி., வெஜிடேரியன், பட் முட்ட மட்டும் சாப்டுவாங்க, ஸ்போர்ட்ஸில் வாலி பால் இன்ட்ரெஸ்ட் அதிகம்., இப்படி நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தாள்.
அடுத்து வந்த நாட்கள், அவள் யோசனையிலேயே சுற்றி வருவதைக் கண்டு ஜெயந்தி கூட பிடித்து வைத்து விசாரித்தார்.
“இத சொன்னா உனக்கு புரியாது, நானே கண்டுபிடிக்கிறேன்” என்று விட்டாள் பெரிய மனுஸியாக.
அவள் தலையில் கொட்டி “வெட்டியா என்னத்தையாவது யோசிக்காம புக்க எடுத்து படி” என்று விட்டு தான் போக வேண்டியிருந்தது ஜெயந்திக்கு.
முதன் முதலில் ஒரு விஷயத்தை அம்மாவிடமிருந்து மறைக்கிறாள். ‘சொல்லு’ன்னு ஒரு மனசு சொல்லுது, ‘சொல்லாத, சொன்னா அடி வாங்குவ’ன்னு இன்னொரு மனசு சொல்லுது. ‘ஏன் சொன்னா என்ன? தப்பு பண்ணா தான மறைக்கணும். எனக்கு இப்படிலா தோணுதும்மான்னு சொல்றதுல என்ன பயம்’ என முதல் மனசு கேட்க. ‘உனக்கே இது தப்பு அடிவாங்குவோம்ன்ற பயம் லேசா இருக்க போய் தான, ஜெயந்தி டீச்சர் கேட்டதும் சொல்லாம என்கிட்ட வந்து வாக்குவாதம் பண்ணிட்டுருக்க’, இரண்டாவது மனசு பாயிண்டாக பேச. அதில் ரோசம் வந்த முதல் மனசு கோவித்துக் கொண்டு சென்றுவிட்டது.
இப்படிப்பட்ட குழப்பத்தினால் அடுத்து வந்த ரிவிஷன் எக்ஸாமில் தெரிந்த கேள்விக்கும் பதில் எழுத முடியாமல் யோசனையில் இருக்க ஆரம்பித்தாள். மார்க் கம்மியாகியது. ஸ்டாஃப்ஸ் ஒருபக்கம் திட்ட, வீட்டில் ஜெயந்தியும் திட்ட ஆரம்பித்தார். ஆக ௭ல்லாமுமாக ஸ்டரஸ் அதிகமாகியது. ஒருநாள் லஞ்ச் பிரேக்கில் லட்சுவுடன் சாப்பிட வந்தவள், பாக்ஸில் இருந்த சாதத்தைப் பிசைந்த வண்ணமே இருக்க.
லட்சு “கெமிஸ்ட்ரி மிஸ் திட்டுனதயே நினச்சிட்டுருக்கியா? சாப்டுடி. நீ ஒழுங்கா எழுதுனாலே பாஸ் பண்ணிருப்ப. நீ தான் பேப்பர் வாங்கி வச்சிட்டு கனவு கண்டுட்டு இருக்கியே. ரிவிஷன் தானே நெக்ஸ்ட் எக்ஸாம்ல இப்டி இல்லாம நல்லா எழுதிடு மிஸ் காம்ப்ரமைஸ் ஆகிடுவாங்க” எனச் சொல்லி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.
கடந்த ஒரு மாதத்தில் அவளது ஆட்டிட்யூட் அவளை விட்டு காணாமல் போயிருந்தது. மற்றவர்கள் உணராவிட்டாலும் ஜெயந்தியும், லட்சுவும் அதை நன்றாக உணர்ந்தனர். இவர்கள் இருவரையும் தாண்டி அவளை கண்டறிந்த இருவர் ஆறெழிலின் அப்பாவும், ப்ரகலத்தனும்.
லட்சு, “ஏ!! நீ இப்டி இருக்க ஆளே இல்ல. என்ன தான்டி யோசிக்கிற, சொல்லி தொலையேன். அப்புறமாவது ப்ரீயா இருப்பல்ல” என்க.
கடகடவென ஆறெழில் கண்ணிலிருந்து கண்ணீர் வடிய ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.
“எல்லாரு பாக்க போறாங்க, எதுனாலும் பாத்துக்கலாம். அடுத்த எக்ஸாம்ல நல்லா எழுது மிஸ் திட்ட மாட்டாங்க. ஜெயந்தியம்மாட்ட வேணும்னா நா வந்து சொல்லவா” என அவள் போக்கில் எதுக்கு அழுகிறாளோ என தெரியாமல் எல்லா காரணத்தையும் சொல்லி சமாதானப் படுத்தினாள் லட்சு.

