Loading

காதல் -39

 

” அந்த புக் எழுதினது நான் தான்னு நினைக்கிறியோ ” என மறவன் கேட்க.. ஒரு நிமிடத்தில் நெஞ்சை பிடித்து விட்டாள் சாயா.

 

ஓரிரு நிமிடங்கள் அவனையே உற்று பார்த்தவள்… ” நான் அவரையே தமிழ் காதலன் இல்லைன்னு சொல்லுறேன்… போயும் போயும் உங்களை அந்த எழுத்தாளர் கூட சேர்ப்பேனா ” என நமட்டு சிரிப்புடன் வெளியே வேடிக்கை பார்க்க… மறவனுக்கு தான் பல்பாகி போனது.

 

” இப்போ என்ன சொல்ல வர, அந்த புக்கை எழுதுற தகுதி எனக்கு இல்லனு சொல்லுறீயா” என சற்று கோவமாகவே கேட்க…

 

” ஐயோ அப்படி சொல்ல வரலை… எழுதுறது மட்டும் இல்ல… அதை தொடுற தகுதி கூட உங்களுக்கு இல்லனு சொல்லுறேன் ” என மேலும் அவனை கோபம் கொள்ள செய்தாள்..

 

” எதுனால எனக்கு அந்த தகுதி இல்லனு முடிவு பண்ண யாழி ” இம்முறை குரல் உள்ளே போய் அப்பட்டமாய் அவனது முகத்தில் ஏமாற்றத்தை காட்டியது.

 

” கண்டிப்பா சொல்லனுமா ”

 

” எனக்கு தெரிஞ்சே ஆகனும் ”

 

பெரும் மூச்சை விட்டுக் கொண்டவள்… ” தமிழ் காதலன் புத்தகம் முழுக்க முழுக்க பெண்களை மதிச்சு, ஒரு பிரச்சனைக்கு தீர்வு, இல்லைனா நம்ம மனநிலைக்கு ஏத்த மாதிரி கவிதை , அதுவும் நம்மளை உற்சாக படுத்துற வரிகள் தான் இருக்கும் ” என கூறி முடித்து அவனையே பார்த்தாள்.

 

அவள் பார்வையை உணர்ந்தவன் ” சோ வாட் ” என கேட்டு வைக்க….

 

” அதுனால தான் நீங்க எழுதலன்னு அடிச்சு  சொல்லுறேன்… நான் இப்போ சொன்ன விஷயம் ஒன்னு கூட உங்க கிட்ட இல்ல, இல்லைன்னு சொல்லுறது விட நான் பார்த்ததில்லை… ஆனால் ஓர் விஷயம் ஒத்துக்கனு‌ம் மலை உச்சியில என்கிட்ட தப்பா நடந்தவன் கிட்ட நீங்க எனக்கு நியாயம் வாங்கி கொடுத்தீங்க… அதெல்லாம் நான் இல்லைன்னு சொல்லல… ஆனால் அந்த ஒரு விஷயத்தை வச்சு உங்களை தமிழ் காதலன் கூட சேர்க்க மாட்டேன்.. நான் கொலை பண்ணிட்டேன்னு தெரிஞ்சு அதை வச்சு என்ன மிரட்டி கல்யாணம் பண்ணீங்க, அதுவும் விவாகரத்து கொடுப்பேன்னு சொல்லி கல்யாணம் பண்ணீங்க.. ” என்றதும் அவளை அடிப்பட்ட பார்வை பார்த்தான் மறவன்..

 

” சரி கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் , என்கிட்ட வரம்பு மீறி நடந்தது நீங்கதான்… ஆனால் பழி … பொம்பளைனா அவ்வளவு இளக்காரமா போச்சா என்ன ?”  என வெறியாக அவனை வார்த்தைகளால். சாடினாள் ..

 

இந்த சந்தர்பத்தை விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.. இத்தனை நாட்களும் ஊமையாக இருந்த அவளது உதடுகள் , இன்று அம்பை வீசுவதை போல வார்த்தைகளை வீசிக் கொண்டிருந்தது.

 

இதெல்லாம் அவனது சுயநலத்திற்க்காக செய்தாலும் , புதிதாக அவன் மனதில் துளிர் விட்ட காதலை என்ன செய்வான்.

 

அவன் காதலை உணர போகும் நாள் என்னவோ ??

 

” நான் பண்ணது தப்பு தான் யாழி… அந்த தப்புக்கு எனக்கு என்ன தண்டனை வேணாலும் கொடு… ஆனால் அதையே சொல்லி காட்டாத… என்னால் ஒரு அளவுக்கு மேல தாங்கிக்க முடியல ” வெளிப்படையாகவே அவனது இயலாமையை காட்டினான் மறவன்.

 

அவன் இவ்வளவு பேசியும் சற்றும் மனம் இறங்கவில்லை சாயா.. அவள் மனம் இறுகி போய் பல வருடங்கள் இருக்கும்…

 

” சரி கொலை பண்ணேன்னு சொன்னீங்க… யாரை பண்ணேன் எதுக்காக பண்ணேன்… ” என்றதும் மறவன் வேகமாக அவளை அதிர்ந்து பார்த்தான்

 

” தப்பு என் அப்பா மேல இருந்தாலும், அவர் ஒரு பெண் கிட்ட தப்பா நடக்கிறதை தாங்க முடியாம தான் அவரை அடிச்சேன். இன்னைக்கு அந்த மனுஷன் என் கூட இல்ல.. ஆனால் உங்க அம்மாவை நான் காப்பாத்தி கொடுத்திருக்கேன் ” என்றதும் குற்ற உணர்வாக இருந்தது அவனுக்கு.

 

அவளது தந்தை தண்ணி அடித்ததை தவிர்த்து வேறு எந்த தவறும் செய்யவில்லை என தெரிந்தால்… அவள் மனம் எப்படி இருக்கும் என நினைக்கும் போதே அவனுக்கு சற்று பயமாக தான் இருந்தது.

 

” இப்போ வரைக்கும் என் மேல எந்த தப்பும் இல்ல .. இனிமேலும் அது நடக்காது.. இனிமே உங்க வழியை நீங்க பாருங்க , என் வழியை நான் பார்க்குறேன் ” என அவள் பேசி முடிப்பதற்கும் வீடு வருவதற்கும் சரியாக இருந்தது.

 

தேனு வாசலியே பதட்டமாக காத்திருக்க.. ” அடியே சாயா எங்க போய் தொலைஞ்ச.. நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா.. தெருவுல வேற ஆளுக்கு ஒன்னு சொல்லுறாங்க.. என்ன ஆச்சு ” என கத்தியே விட்டார்.

 

” அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல அத்தை… உங்ககிட்ட அப்பறம் பேசுறேன் இப்ப ஒரு முக்கியமான வேலை இருக்கு ” என சாயா பக்கம் திரும்ப… அவளோ முகத்தை தூக்கி வைத்து கொண்டு தாய் வீட்டிற்குள் செல்ல போக… அடுத்த நொடி அவளை தூக்கி தோளில் போட்டு கொண்டவன் அவள் துள்ள துள்ள அவனது வீட்டிற்குள் தூக்கி சென்று கதவை அடைத்தான்.

 

மருமகனின் அதிரடியான செயலில் அரண்டு போனார் தேனு.. இருந்தாலும் மருமகன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் வீட்டிற்குள் சென்று விட்டார்.. இனிமேலாவது மகள் வாழ்க்கையில் ஏதேனும் நல்லது நடக்கட்டும் என்று பூஜை அறையில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தார்.

 

” இப்போ என்ன கீழே இறக்கி விட போறீங்களா இல்லையா ” என துள்ளி கொண்டு பல்லை கடித்தாள் சாயாலி..

 

கதவையெல்லம் பூட்டிய பின்பு தான் அவளை இறங்க அனுமதி அளித்தான்.

 

இறக்கியவுடன் அவனை தீயாக முறைத்தவள்… ” உங்க இஷ்டத்துக்கு என்ன தொடுர வேலை வேணாம் ” என விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய

 

அவளை நக்கலாக பார்த்த மறவன்… ” என்ன செய்ய யாழி மா.. நான் நல்லவனா தான் உன்கிட்ட நடக்க பார்க்குறேன்… ஆனால் அதுக்கு நீ விட மாட்டிறியே.. இல்ல உங்களை கெட்டவனா தான் பார்ப்பேனு அடம் பிடிச்சா என்ன செய்ய, பொண்டாட்டி ஆசையை நிறைவேத்தி வைக்கிறது தானே ஒரு நல்ல புருஷனோட கடமை ” என என்றும் இல்லாத குரலில் பேசும் மறவனை திடுக்கிட்டு பார்த்தாள் சாயா..

 

” என்ன சத்தத்தையே காணோம் ” என அவன் முன்னோக்கி வர, அதில் அவளது கால்கள் அனிச்சையாக பின்னோக்கி நகன்றது.

 

” இப்போ எதுக்கு முன்னாடி வந்து பேசுறீங்க… எது பேசுறதா இருந்தாலும் அங்கேயே நில்லுங்க ” என அவன் வருவதற்கு தடை கூறினாள்.

 

அவள் கூறுவதை எல்லாம் கேட்டு விட்டால் அவன் மறவன் இல்லையே… ” ஏன் கிட்ட வந்து பேசுனா என்ன ஆக போகுது ” என மேலும் முன்னேற… இம்முறை உண்மையாகவே அதிர்ந்து போனாள் சாயா…

 

” நமக்குள்ள இன்னும் பேச வேண்டியது நிறையா இருக்கு , அதுகுள்ள நீங்க இப்படி பண்ணுறது சரி இல்ல ” என தப்பிக்க பார்க்க..

 

” இப்போ நான் என்ன பண்ணிட்டேன்.. கிட்ட தானே வரேன் ”

 

” இல்.. இல்ல… வேணாம்… எனக்கு.. அது சரியா படல ” என வார்த்தைகள் தந்தி அடிக்க..  அவளையே குறுஞ்சிரிப்போடு பார்த்து கொண்டு அவனது மூச்சு காற்று அவள் மேனியில் படும் அளவிற்கு நெருங்கி விட்டான்.

 

பயத்தில் வேர்த்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது சாயாவிற்கு… அடுத்த வார்த்தை பேச கூட உதடுகள் சதி செய்ய, நடுங்கும் உதடுகளை அவனிடம் இருந்து மறைக்க படாத பாடு பட்டுப் போனாள்.

 

அவனது பார்வை அவளது உதட்டில் படிய.. சட்டென்று இதழ்களை உள்ளே இழுத்து கொண்டவள் … பற்களால் கடித்து நடுக்கத்தை குறைத்தாள்….

 

அதை உணர்ந்து கொண்டவன்.. சட்டென்று அவளது உதட்டில் இருவிரல்களை கொண்டு விடுதலை அளித்தவன்… கீழ் உதட்டை பிடித்து கொண்டே பேசினான்.

 

” இப்படி நடுங்குற உதட்டை ஏன் கடிச்சு நடுக்கத்தை குறைக்கனும்… அதுக்கு தான் நான் இருக்கேன்ல மொத்த நடுக்கத்தையும் நான் குறைக்கிறேன் ” அவனது பேச்சில் முற்றிலும் மிரண்டு போனவளின் மேனி முழுவதும் இம்முறை நடுங்க… அதையும் கண்டு கொண்டவன்…

 

” அச்சோ யாழி பாரேன்… உதட்டை மட்டும் சொன்னதும் மத்ததுக்கு எல்லாம் கோவம் போல… இப்போ நீ மொத்தமா நடுங்குறியே ” என உதட்டில் ஒரு கையையும்… மற்றொரு கையை அவளது இடுப்பிலும் படற விட்டவன் இறுக்கி பிடிக்க… கூச்சம் தாளாமல் கட்டை விரலை ஊன்றி கால்களை மேலே தூக்கினாள் சாயா.

 

கரு விழிகள் இரண்டும் தெறித்து விழும் அளவிற்கு வெளியே வந்து நின்றது.

 

” பயமா இருக்கா யாழி ” என முகத்தருகே நெருங்கி கேட்டவன்… ” நீ பயப்புடவே வேணாம் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்ன ” என கண்ணடிக்க

.. ” இவன் எதை பற்றி பேசுகிறான் ” என மனம் சிந்தித்தாலும் , இந்த நேரத்தில் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு கணவன் எதை பற்றி பேசுகிறான் என்று கூட தெரியாமல் இருப்பதற்கு சிறு பிள்ளையா அவள்…

 

சிறை பிடிக்கப் பட்ட உதட்டை மெதுவாக ஆசைத்து எதையோ கூறினாள்.. மறவன் புருவம் சுருக்கி பார்க்க.. அவனுக்கு விளங்கவில்லை..

 

சற்று அவளது இதழுக்கு விடுதலை அளிக்க.. ” இப்போ நம்ம மாமாக்கு சாப்பாடு எடுக்க வந்தோம் … பாவம் வாங்க பசியோட இருப்பாங்க… வந்து நம்ம பேசிக்கலாம் ” என இத்தனை நேரம் துடுக்காக பேசிக் கொண்டிருந்தவள், கணவனின் நெருக்கத்தில் பொட்டி பாம்பாய் மடங்கி போனாள் என்பது உண்மையே…

 

” ஓ…  என்று மணியை பார்த்தவன்… இன்னும் நேரம் இருக்கு, ஒரு ஒன் ஹவர் மட்டும் ஸ்பென்ட் பண்ணிட்டு போகலாம் ” என அவளை இடுப்போடு அணைத்து கொண்டு மெத்தைக்கு செல்ல… இம்முறை அப்பட்டமாகவே அதிர்ந்து போனாள் சாயா..

 

” நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன் ” என சற்று தைரியத்தை வரவழைத்து கொண்டு பேசினாள் சாயா.

 

” எதுக்கு”

 

” இதுக்கு ” என மெத்தையை காட்டினாள்.

 

மெத்தையையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன்… அவளை இழுத்து மெத்தையில் சரித்தவன்… அடுத்த நொடி அவளை எழ விடாமல் கீழே ஒரு காலும், அவளுக்கு மறு புறம் ஒரு காலும் ஊன்றி அணை காட்டினான்.

 

அடக்க நினைக்காமல்…

மனதாலும் உடலாலும்

ஆள நினைக்கிறேன்

கண்மணி..

என்றும் உன் சம்மதத்துடன்…

 

என்ற வரிகளை மறவன் கூற… சாயாலிக்கு அண்டமே இருண்டது….

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்