Loading

காதல் -37

 

“ஆரத்தி கரைக்க ஆள் இல்லை யாழி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… ” என நக்கலாக அவளை உள்ளே அழைத்து சென்றான்.

 

கணவன் மனைவி இருவரும் குடும்பம் நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களும் கட்சிதமாக இருந்தது… உள்ளே நுழைந்தவுடன் பெரிய கூடம்.. அதில் டீவி, மற்றும் பெரிய சோபாக்கள் , டீபாய்கள், சுவற்றில் ஹோம் தியேட்டர் என இருக்க… வலது பக்கம் ஒரு பூஜை அறையும் , இடப்பக்கம் சமையல் அறையும் .. கூடத்தை தாண்டி உள்ளே சென்றவுடன் இரு அறைகள் இருந்தது…

 

இரண்டிலும் மெத்தைகள் போடப்பட்டு அது பெட் ரூம் போல இருக்க… இரண்டு அறைகளை பார்த்ததும் தான் மூச்சே வந்தது சாயாவிற்கு..

 

“என்ன வீடு பிடிச்சிருக்கா ”

 

” பிடிச்சது மட்டுமா நம்ம வாழ்க்கையில கிடைக்குது … ”

 

” அப்போ வீடு மாத்தலாமா ” என்றதும் அவசரமாக மறுத்து விட்டாள்.. இங்கிருந்தால் தானே தேனுவையும் பார்த்துக் கொள்ள முடியும்.. ‘ அப்போ நீ இங்க தங்க ரெடி ஆகிட்ட போல ‘ என மனசாட்சி கேட்க கேள்விக்கு.. ‘ கூட இருந்தா தானே விவாகரத்து கிடைக்கும் ‘ என நொண்டி சாக்கை கூறி வாயை அடைத்தாள் சாயா.

 

” ஓகே  இப்போ இருந்து நீயும் நானும் கணவன் மனைவி ” என்றதும் அவனை தீயாக முறைத்தவள்…

 

” டாக்குமெண்ட் வாங்க வந்த ஆளு நீங்கதானா ” என சந்தேகமாக கேட்க..

 

” ஆமா நான்தான்.. மழையில நனைஞ்சு டிரஸ் எல்லாம் ஈரமா இருக்கு, முதல்ல போய் மாத்திட்டு வா ” என ஒரு அறையை காட்ட…

 

” என் டிரஸ் எல்லாம் அம்மா வீட்ல இருக்கு ”

 

” நீ விட்டுட்டு போன டிரஸ் எல்லாம் இங்கேயும் இருக்கு, உள்ள போய் மாத்திகோ ”

 

” அப்போ எல்லாம் பிளான் படி நடக்குது ”

 

” அதுவே உனக்கு இப்போதான் தெரியுதா.. ”

 

” போதும் ” என கோவமாக கத்தி விட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறி, எதிரில் இருக்கும் அம்மா வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்..

 

அவள் எதிர் வீட்டில் இருந்து வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் எல்லாம் ஒரு மாதிரியாக பேசி கொண்டு தேனு வீட்டு வாசலில் நின்று அழைத்தனர்.

 

சாயாலி உள்ளே நுழைந்ததும் பின்னாலேயே வந்து விட்டனர் அவர்களும்… அதனால் தேனுவிற்கு நடந்த விஷயத்தை கூட அவள் சொல்லவில்லை…  சத்தம் கேட்டு தேனு சாயாலி இருவரும் வாசலுக்கு வந்தனர்.

 

” என்ன தேனு காலையில நடந்த பிரச்சனை தெரியும்ல … ”

 

” என்ன பிரச்சனை ” என புரியாமல் பார்த்தார் தேனு.

 

” அதான் அந்த எதிர் வீட்டு பையன்.. ”

 

” அவருக்கு என்ன ” என தன் மகளை பார்க்க.. அவள் முகம் மாற தொடங்கியது

 

” அவருக்கு என்னவா… காலையில நான் என்ன சொல்லிட்டு போனேன்.. நீயும் உன் பொண்ணும் தனியா இருக்கீங்க, அதுனால கவனமா இருக்க சொன்னேன்ல ”

” ஆமா ”

 

” இப்ப உன் பொண்ணு எங்க இருந்து வந்தான்னு கேளு ” என அந்த பெண் கூறவும் தன் மகளை கேள்வியாக பார்த்தார் தேனு.

 

” சொல்லு மா , அந்த எதிர் வீட்டு பையன் கூட கார்ல இறங்கி அவன் வீட்டுக்குள்ள போய் இவ்வளவு நேரம் இருந்துட்டு இப்போதான் உன் வீட்டுக்கு வந்தேன்னு சொல்லு ” என அவரே எடுத்து கொடுக்க.. சாயாலி அமைதியாக நின்றாள்.

 

” கல்யாணம் ஆன பொண்ணை புருஷன் கூட அனுப்பி வைக்காம இப்படி தனியா வச்சிருந்தா இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் வரத்தான் செய்யும் தேனு.. அதுவும் உன் மகளுக்கு தைரியம் ஜாஸ்தி எதிர் வீட்டுக்கே போயிட்டு வரா… ”

 

” எதிர் வீட்டுக்கு போனியா சாயா ” என மகளை நம்பாமல் கேட்டு வைத்தார் தேனு. ஒரு வருடம் விம்பாக இருந்தவள் இன்று மறவன் அழைத்ததும் சென்று இருப்பாள் என்பதை அவரால் நம்ப முடியவில்லை… அந்த வீட்டில் இருந்து தான் வந்தேன் என மகள் கூறுவாள் என எதிர்பார்க்க… அதே போல சாயாவும் கூறினாள்.

 

” ஆமா மா அங்க இருந்து தான் வரேன்… ”

 

” பாத்தியா தேனு, தைரியமா உன் கிட்டையும் சொல்லுறா , இந்த காலத்து பிள்ளைங்களை எல்லாம் என்ன சொல்லுறது… கவுரவமா வாழுர இடம்.. என்னனு உன் பொண்ணு கிட்ட கேளு ” என அந்த பெண்மணி தலையில் அடித்து கொள்ள.. அங்கு எதிர்வீட்டில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மறவன் கோபத்தின் உச்சத்தில் இருந்தான்..

 

” இப்போ கூட நான்தான் உன் புருஷன்னு வாய திறந்து சொல்ல மாட்டில ” என கை முஷ்டியை முறுக்கி கொண்டு நேராக தேனுவின் வீட்டை நோக்கி வந்தான்.

 

” இங்க என்ன பண்ணிட்டு இருக்க, ஈரமா இருக்க பாரு , அங்க வந்து குளிச்சிட்டு டிரஸ் மாத்து ” என உரிமையுடன் அவள் கைகளை பிடித்து அழைத்து கொண்டு அவனது வீட்டை நோக்கி சென்றான் மறவன்.

 

தேனு தடுக்கவில்லை… மாறாக மனதில் நிறைந்த மகிழ்ச்சியுடன் மகளை பார்த்து வைத்தார். அங்கே கூடி நின்ற பெண்மணிகள் வாயில் கை வைத்து கொண்டு.. ” என்ன தேனு உன் மகளை உன் முன்னாடியே கூட்டிட்டு போறான் நீ பார்த்துகிட்டு சும்மா நிக்கிற ” என அதிர்ச்சியாக கேட்க..

 

” நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி அவரு யாரோ இல்ல.. அவரு தான் என் மருமகன்… சாயாலி புருஷன் ” என வேலையை கவனிக்க வீட்டிற்குள் சென்று விட்டார். மருமகனும் மகளும் நனைந்து வந்தது நினைவில் வர சூடாக இருவருக்கும் தேநீரை தயாரிக்க சென்றார்.

 

” அடேங்கப்பா என்ன சமாச்சாரமோ தெரியலை… இவ வீட்டுக்கு முன்னாடியே வீடு பிடிச்சு வந்துருக்கு அந்த தம்பி… என்கிட்டோ அந்த பிள்ள நல்லா இருந்தா சரி ” என நடையை கட்டினர் அக்கம் பக்கத்தினர்.

 

வீட்டிற்குள் அழைத்து வந்தவன் கதவை அடைத்து விட்டு கூடத்தில் நின்றவளை அழுத்தமாக பார்த்தவன்… ” ஏன் வாயை திறந்து நான்தான் உன் புருஷன்னு சொல்லுறதுக்கு என்ன டி… ” என உச்ச கட்ட கோவத்தில் கத்தினான்.

 

” அப்போ என்ன சொன்ன… மானத்தோட வாழ்ந்துட்டு இருக்கேன்னு சொன்ன..? இப்ப எங்க போச்சு உன் மானம்… அதே மானத்தை இழிவு படுத்துற மாதிரி தானே அவங்க எல்லாரும் பேசிட்டு இருக்காங்க.. அப்போ கூட அதுக்காக கூட என்னைய உன் புருஷன்னு சொல்ல தோணலைல ” என கடுப்பாக கத்தி விட்டு அவளை பார்க்க.. கண்களில் நீர் நிறைய நின்று கொண்டிருந்தாள்….

 

அதில் சற்று இறங்கி.. ” யாழி… ” என அழைத்ததும், அடுத்த நொடி அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

 

” ச்ச ” என சோபாவில் எட்டி உதைத்தவன் … தலையை பிடித்து கொண்டு அமர.. காலிங் பெல் ஓசையில் எழுந்து சென்று கதவை திறந்தான்

 

தேனு இருவருக்குமான தேநீரை கொண்டு வந்திருந்தார். ” அது ரெண்டு பேரும் ஈரமா இருந்தீங்க… அதான் சூடா டீ போட்டு கொண்டு வந்தேன் தம்பி… ” என்று தன் மகளை கண்களால் அலசிய படி கூறினார்.

 

” உள்ள வாங்க அத்தை ” என்றதும் தேனு உள்ளே வர, தாயின் பேச்சு சத்தத்தை கேட்டு வெளியே வந்தாள் சாயா.. கையில் இருக்கும் டீயை பார்த்து கொதித்து போனவள்.. ” அப்போ நீயும் இதுக்கு கூட்டு தான் … அப்படி தானே மா ” என அவரை நம்பாத பார்வை பார்க்க..

 

” என்ன டி நினைச்சுட்டு இருக்க நீ… நீதான் அந்த தம்பி கூட வெளிய போயிட்டு அவர் வீட்டுக்கு வந்துட்டு நம்ம வீட்டுக்கு வந்த… எனக்கு ஏதாவது தெரியுமா.. இல்ல நீ ஏதாவது சொன்னியா.. நீயே அவர் வீட்டுக்கு போகவும் மனசு மாறிட்டன்னு நினைச்சு தான் நானும் டீ போட்டு கொண்டு வந்தேன் ” என நைசாக நழுவிக் கொண்டார் தேனு.

 

” ஓ அப்போ காலையில சொன்ன தனியா ஒரு ஆம்பளை இருக்காருன்னு ”

 

” ஆமா சொன்னேன்.. ஆனால் அது இவரு தான்னு சொல்லலையே… எனக்கே இப்போதான் தெரியும் ” என கச்சிதமாக பொய் பேசும் தன் மாமியாரை மெச்சும் பார்வை பார்த்தான் மறவன்.

 

” நீங்க ரெண்டு பேரும் எந்த முடிவும் எடுங்க.. எனக்கு என்ன கவலை .. நீயே இனிமே சமைச்சுக்கோ ” என தேநீரை வைத்து விட்டு இதுதான் சாக்கு என்பதை போல தேனு இடத்தை காலி செய்தார்.

 

**

 

அங்கு பிரீத்தி கைகளை கட்டி கொண்டு சிந்தாமணியின் முன்பு முழித்து கொண்டிருந்தாள்…

 

” சொல்லு… உனக்கு தெரியாம மறவன் வேற எங்கேயும் போக வாய்ப்பே இல்ல… உனக்கு தெரிஞ்சு இருக்கும் .. ”

 

” இல்ல மேடம்… எனக்கு தெரியாது ”

 

” உன் முதலாளிக்கு விஸ்வாசமா இருந்தது எல்லாம் போதும்… எனக்கு என் மகனை பத்தி தெரிஞ்சே ஆகனும்… ” என ஒரே பிடியாக நின்றார் சிந்தாமணி..

 

” அது சார் ஒரு அக்ரீமென்ட் சைன் பண்ண போய் இருக்காரு ”

 

” எங்க ”

 

” அது திண்டுக்கல் பக்கத்துல எதோ ஒரு ஊர் ”

 

” ஓ அப்போ எந்த ஊர்ன்னு உனக்கு தெரியாதுல ”

 

” சரியா தெரியலை மேடம் ”

 

” அக்ரீமென்ட் பெயர் சாயாலியா  ” என அலட்டிக் கொள்ளாமல் சிந்தாமணி கேட்க… அதிர்ந்து விழித்தாள் பிரீத்தி.

 

அதிலேயே மறவன் சாயாலியை கண்டு பிடித்து விட்டது தெளிவாக தெரிந்தது..

 

” மேடம் அது… வந்து… உங்களுக்கு எப்படி.. ”

 

” ஏன் என் மகனை பத்தி எனக்கு தெரியாத… ஒரு வருஷமா அவன் முகத்துல இல்லாத பொழிவு.. இந்த இரண்டு நாளா நான் பார்த்தேன்.. அப்போவே கெஸ் பண்ணேன்… ”

 

” அட சிந்தாமணி எனக்கு கூட கண்டு பிடிக்க முடியலையே ” என மூர்த்தி ஆதங்க பட…

 

” அதுதாங்க உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்.. ”

 

” மேடம் நான் சொன்னேன்னு… ” என பிரீத்தி இழுக்க…

 

” கண்டிப்பா உன் பெயர் வெளிய வராது… எந்த ஊரு”

 

” திண்டுக்கல் பக்கத்துல சிறுமலை ”

 

” உடனே பேக் பண்ணுங்க மருமகளை பார்க்க போகலாம் ” என சிந்தாமணி அதிரடியாக முடிவு எடுக்க.. மனைவியின் சொல்லே மந்திரம் என்று அவரும் பின்னே சென்றார்.

 

இவர்கள் சென்றது பயத்தில் பிரீத்தி மறவனுக்கு மெசேஜ் மூலம் அனைத்தையும் தெரிவித்து இருந்தாள்.. என்ன இருந்தாலும் அவனுக்கு அவள் விஸ்வாசி, கூடவே அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் ஒருவள்..

 

**

 

இங்கே இரவு ஆனது இன்னும் அறைக்குள் இருந்து வெளியே வரவில்லை சாயா…

 

” யாழி… நீ உள்ள இருந்தது எல்லாம் போதும், வெளிய வா ” என கதவை தட்டினான்.

 

கதவை திறந்து கொண்டு சாயா வெளியே வர, அதே நேரம் மறவன் அலைபேசிக்கு முக்கியமான அழைப்பு வரவும் , அவள் வெளியே வந்ததை பார்த்து விட்டு போனை எடுத்து பேசினான்.

 

அப்போது காலிங் பெல் மீண்டும் ஒலிக்க… தேனு இரவு உணவு கொண்டு வந்திருக்கிறார் என்று சாயாலி பொறுமையாக சென்று கதவை திறந்தாள்…

 

அவ்வளவு தான்… எதிரில் இருந்தவரை பார்த்து அவள் ஸ்தம்பித்து போனாள் என்றால்.. அங்குள்ளவரை பார்த்த மறவன் ஆணி அடித்தார் போல நின்று விட்டான்.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்