
“சோனு”
அந்த ஒற்றை வார்த்தை உணர்த்தியது அவளின் ஏக்கத்தை. கண்ணீர் நிறைந்துவிட்ட கண்களுடன் அவள் அமர்ந்திருந்த தோற்றம் அவனை முற்றாக உலுக்கிப் போட்டிருந்தது.
“ஆரு’ம்மா” என்றான் குரலே எழும்பாத வண்ணம்.
நான்கு மாதமாய் தினமும் நான்கரை மணிக்குத் துவங்கும் அவன் பயிற்சி முடிய மாலை ஆறாகி விடும். ட்ரில், அவுட் டோர் ஸ்போர்ட்ஸ், ஷூட்டிங், ஹார்ஸ் ரைடிங், கிளாஸ் ஆக்டிவிட்டி என்று பலதும் அவனுக்குப் பயிற்சி கொடுக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் அவன் வென்றால் மட்டுமே அடுத்த கட்ட பயிற்சியான மாவட்ட அளவிலான பயிற்சிக்குத் தேர்வாவான்.
பயிற்சி, படிப்பு என்று ஒருபுறம் அவனை அழுத்த இன்னொரு புறம் ஷக்தியும் அவன் பூவம்மாவும் நீங்க மற அவனை நிறைத்துக்
கொண்டிருந்தனர்.
மூன்று மாத பிள்ளை வயிற்றோடு அவனின் குலாப்பைப் பார்த்தது. தினமும் வீடியோ காலில் வருவாள் தான். ஆனாலும் மறந்தும் தன் பிள்ளை வயிற்றை அவனுக்குக் காட்டமாட்டாள்.
சில உணர்வுகளும் ஆசைகளும் அந்தரங்கமானவை அல்லவா!
அவன் கொஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும், முகத்தைத் திருப்புவாள். இன்றோ இருவருக்கும் அடுத்த நாளை பற்றி எண்ணத்தின் அழுத்தத்தில் ஆழ உட்கார்ந்திருந்தனர்.
நாளை, ஷக்தி ஆராதனாவின் வளைப்பூட்டு நாள். அவள் ஆசை சோனு இல்லாம் அவளையும் அவனின் பூவம்மாவையும் உற்றோர் உறவினர்கள் சிறப்பிக்க உள்ள நாள்.
“அழாம நாளைக்கு மனையில உட்காரனும். யார் என்ன என்னைக் கேட்டாலும், சொன்னாலும் ஒன்னும் பேசக் கூடாது. முக்கியமா கோபம் படக்கூடாது. உன் ஷிவ், உன்னோட தான எப்பவும் இருப்பேன். அத மட்டும் நினைச்சுக்கோ. பூவம்மாவும் நீயும் பத்தரம். எதையும் யோசிக்காம, ஹேப்பியா இருக்கனும். நைட் நான் ஃபோட்டோஸ் பார்த்துட்டு கால் பண்ணுறேன்” என்றவனாலும் அதற்கு மேல் தாளமாட்டாது,
“லவ் யூடி குலாப்” என்று அழுந்த ஒரு முத்தத்தை வைத்து அழுதுவிட்டான்.
உணர்வுகளின் உச்சம் சில நேரம் முத்தமும் அழுகையும் தானே!
அடுத்த நாள் வழக்கமாய் நகர்ந்தது ஆனால் நரகமாய் மாறியது அவனுக்கு. எங்கும் அவன் ஷக்தியே வியாபித்திருந்தாள்.
அவன் கவனம் எல்லாம் சிதறவில்லை என்றாலும் நினைவுகள் மொத்தமும் அவனின் அவளிடம் மட்டுமே. ஷக்தி மட்டுமே.
அவனில்லாது அவளுக்கு ஒன்றும் ஓடாது என்று அவனுக்கு நன்கு தெரியும். அவளைக் குற்றிப் பேச அத்தனை சந்தர்ப்பங்களும் அவன் வீட்டாருக்கு ஏற்படும் இவையெல்லாம் விட அவன் குலாப் தானில்லாத அந்த நிலைகளை எப்படி கடப்பால் என்பதே அவனின் கவலையாகிப்போனது.
மாலை சரியாக அனைவரும் பயிற்சி முடித்து அவர்களுக்கான தங்கும் இடம் நோக்கிச் சென்றனர்.
குளித்து முடித்து நேரத்திற்கு வந்தால் மட்டும் மெஸ்ஸில் உணவு. இல்லை என்றால் இல்லை தான்.
அவனுடன் தமிழகம், கேரளா, ஆந்திரா, பஞ்சாப், அஸ்சாம் என்று பல்வேறு மாநில பயிற்சி காவலர்களும் இருந்தனர். அவனுடன் சேர்ந்து ஏழு பேர் கொண்ட கேங்கே அங்கு உருவாகிவிட்டது.
அதில் சிவா தான் மூத்தவன். அனைவரும் அவனை விட வயதில் சிறியவர்களே. ஆனாலும் பேர் சொல்லி அழைத்துச் சொல்லும் அளவிற்கு இலகுவாய் தான் பழகினர்.
முசோரியில் ஆரம்பித்த நட்பு இப்போது ஏழு மாதங்களாக நல்ல முறையில் இருக்கின்றது. அதில் அங்கிருந்த அனைவருக்கும் ஷக்தி அத்தனை பரிச்சயம்.
ஷக்தி இல்லையேல் ஏது இந்த சிவா. அதை அனைவரும் கண்ணுற்று இருந்தனர் கடந்த மாதங்களில்.
“த்துவரகா ரா சிவா” என்று அவசரப்படுத்தினான், கௌதம் ராவ்.
“வெயிட் மேன்” என்றபடி பொறுமையாகவே கிளம்பி வந்தவன் முகத்தில் அத்தனை சோர்வு.
இன்னும் விழாவின் புகைப்படங்கள் அவனுக்கு வந்து சேரவில்லை. ஷக்திக்கும் ஆராவமுதனுக்கும் அழைத்தாலும் யாரும் எடுக்கவும் இல்லை என்றவுடன் மனது தன்னையறியாது சோர்வுற்றது அவனுக்கு.
“ச்சியரப் சிவா, ஷக்தி வில் பி ஓகே” என்றாள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிம்ரன் மிஷ்ரா.
அவர்கள் அனைவருக்கும் இன்று ஷக்தியின் ‘பேபி ஷவர்’ என்ற செய்தி தெரியும். அதனால் தான் சிவா இத்தனை சோர்வோடு இருக்கிறான் என்பதும் புரிந்தது.
அன்று சனிக்கிழமை, வெளியே செல்ல அவர்களுக்கு அனுமதி இருந்தது. அடுத்த நாளும் விடுமுறை என்பதால் நண்பர்கள் குழு ஒரு வாரம் சென்று வெளியே வரக் காத்திருக்க, சிவாவிற்கான பரிசும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இரவு ஒன்பதிற்குள் உள்ளே அவர்கள் வந்தாக வேண்டும். ஆகையால் பக்கத்தில் எங்காவது செல்வதே அவர்களின் எண்ணம்.
கையெழுத்திட்டு அவர்கள் வெளியே வர, தூரத்தில் இருந்தே அவனின் குலாப்பைப் பார்த்துவிட்டான் சிவா.
நெஞ்சம் விம்மித் துடித்தது. அவனைச் சுற்றியுள்ள ஆக்சிஜன் சட்டென்று நின்றுவிட்டது போல் அவனால் மூச்செடுக்க முடியாது தவித்து நின்றவன் பார்வை கலங்கியது. ஆனால் அதில் முழுவதிலும் அவன் ஷக்தி, ஷக்தி, ஷக்தி மட்டுமே.
ஒரு இலகுவான மஞ்சள் வண்ண மேட்டனிட்டி மேக்ஸியில் கை முழுக்க வளையல் அடுக்கி, உச்சியில் குங்குமம் மட்டும் வைத்து, கண்களும் உதடுகளும் சிரித்தபடி தன் மேடிட்ட வயிற்றை ஒற்றைக் கையில் தாங்கி நின்றவள் பின்பம் அவன் உயிருள்ள வரை மறக்காது!
அவன் செய்கையை அவனுடன் இருந்தவர்கள் பார்த்துப் பயந்து போக, “அண்ணா என்ன செய்யுது?” என்றபடி அவனைத் தாங்கினான் சரவணன்.
ஒரே உதறல். யார் என்ன என்று உணரும் முன்னர் பாய்ந்தோடி ஷக்தியை அணைத்திருந்தான் சிவா.
“பார்த்துடா” என்று ஆராவமுதன் அவனைத் தடுத்ததெல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை.
அத்தனை ஆவேச அவசரம். முட்டிய வயிற்றைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. அவன் ஷக்தி, அவள் மட்டும் அவனின் கருத்தில்.
“ஆரும்மா” என்று அப்படி ஒரு அழுகை அவனிற்கு. அவள் உச்சியில் கண்களில் அத்தனை முத்தங்கள் வைத்தான்.
உதடுகள் துடிக்க அவன் உணர்வைச் சொல்ல வார்த்தகளுக்குப் பஞ்சமோ. அழுகையில் தன் தவிப்பை எழுதினான்.
“சொல்லிருக்கலாமேடா” என்றவன் பேச்சு அவளை எந்தளவிற்குத் தேடினான் என்று சொல்லியது.
நீர் படர்ந்த கண்களுடன், “சப்ரைஸ் ஆபிசர் சாப்” என்றவள் முகமும் அத்தனை விகசித்துச் சிவந்திருந்தது.
சற்று கன்னம் வைத்து குண்டாகி இருந்தால். அந்த குண்டு கன்னங்களைத் தாங்கியவன் அவள் கலங்கிச் சிரித்த விழிகளோடு கலந்தபடி பேச வார்த்தைகள் இல்லாது தன் உணர்வின் பிடியிலிருந்தவனை அப்போது தான் உணர வைத்தாள் அவன் பூவம்மா.
அவளை அணைத்து நின்றபடி குனிந்து பார்த்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. தன்னை விட்டு அம்மாவைக் கொஞ்சம் அப்பனை உதைக்க எண்ணி தாயின் வயிற்றில் உதைகளை மானாவாரியாகத் தந்துகொண்டிருந்தாள் அவன் மகள்.
அதை ஷக்தியை அணைத்தவனால் உணர முடிந்ததில் அத்தனை ஆச்சர்ய மகிழ்வு.
அவன் கண்களைப் பார்த்தவள், “ஒதைக்கறா” என்றாள் கண்ணீர் சிந்திச் சிரித்தபடி.
நன்று பெரிதாகவே இருந்தது அவள் பிள்ளை வயிறு. சட்டென்று தொட்டுப் பார்க்க முடியாது சுற்றம் அவனிற்குத் தடை போட(!), அழுந்த தலை கோதி திரும்பினான் சிவனேஷ்.
“தள்ளி விட்டுட்டு வந்துடீக அண்ணே” என்று குற்றம் சாற்றி நின்றிருந்தான் சரவணன்.
அத்தனை பேரும் அவனைப் பார்த்து சிரித்தபடி நின்றனர்.
“ஏமி செஸ்துன்னாரு சிவா ஸார்?” என்று கௌதம் பரிகாசித்துச் சிரிக்க,
“சும்மா இருடா மொளகா” என்று அவனை அதட்டினான்.
“ஹாய் ஆல்” என்று சிரித்துக்கொண்டு அனைவருக்கும் கை கொடுத்தாள் ஷக்தி.
“கலெக்டர் சாப், வாட் எ சப்ரைஸ் ஃபார் யூவர் மேன். ஹீ வாஸ் ஆல்மோட் ட்ரைன்ட்” என்றாள் சிம்ரன்.
(கலெக்டர் மேடம், என்ன சப்ரைஸ் கொடுத்துட்டீங்க உங்க ஆளுக்கா. அவர் மொத்தமா சோர்ந்து போயிட்டார்)
அவனை பக்கவாடாக அணைத்தவள், “எங்க மிஸ்டர் சரவணன், ஆள் மிஸ்ஸாகரார்” என்க,
“அக்காச்சி, இதோ இங்கன பாருங்க. உங்கள பாக்க வர முசுவுல என்னைய ஒரே தள்ளு, அதோ அங்கன போயி விழுந்தேன பாருங்க” என்றவன் பேச்சை அத்தனை ரசித்தாள்.
“அவ்வளவு தான் உங்க உடம்பில வழு!” என்றவள் ஆராவமுதனிடமிருந்து ஒரு பெரிய பார்சலை வாங்கி சிவாவிடம் கொடுத்தால்.
“என்ன ஷக்தி?”
“கிஃப்ட் கொடுக்கனும்னு சொன்னீங்க? அதான் வாங்கிட்டு வந்தேன்” என்றாள்.
சிம்ரன் மிஷ்ரா, கோபிகா மேனன், சைதன்யாவிடம், “இது உங்க பாய் கொடுக்கற கிஃப்ட். மறுக்காம வாங்கிக்கோங்க” என்று புடவையைக் கொடுத்தவள்,
கௌதம் ராவ், சரவணன் குமரன், சாஹர், பல்வந்த் சிங்கிடம், “ம்ம், எனக்கு இது உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை பட் என்னோட ப்ரதஸ்காக வாங்கினேன். ஃப்ளீஸ் அக்சப்ட் மை கிஃப்ட்” என்று நால்வரிடமும் கொடுக்க, அவர்கள் முகத்தைப் புன்னகை நிறைத்திருந்தது.
அதில் அனைவருக்கும் மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிறு யானை பொம்மையும் இருந்தது.
“யானை பொம்மைன்னு நினைக்காதீங்க. யானை தனித்து இருந்தாலும், கூட்டமா இருந்தாலும் அதோட பலத்தை அடிச்சிக்க ஆளே இல்லை. சுய விழிப்புணர்வு, கற்றல், நினைவாக்கம், வகைப்படுத்தும் திறன், வலிமை (self awareness, learning, memory, categorisation ability, physical strength) இப்படி பலது சொல்லிட்டே போகலாம். புலி சிங்கத்தைவிட, யானையா இருங்க” என்றவளைப் பெருமையாகப் பார்த்து நின்றிருந்தனர் ஆராவமுதனும் சிவாவும்.
அனைவரும் வெளியே சென்றனர். ஷாப்பிங், டின்னரை முடித்தவர்கள் அகாடமி செல்ல முனைய, சிவா தவித்துப் போனான்.
“ஆரூம்மா” என்று மனைவியின் கையை விடாது பிடித்துக்கொண்டவனுக்குப் போக மனதில்லை.
அவன் கலங்கிய விழிகளைப் பார்த்தவள், “ஷிவ், அழறியா என்ன?” என்க,
“அண்ணா நீங்க நாளைக்கு நைட் இல்லாடி திங்கட்கிழமை வெள்ளன வந்துடுங்க பிராக்டிஸ்கு சரியா இருக்கும்” என்று சொன்ன சரவணனைப் புரியாது பார்த்தவன்,
“உங்களுக்கு ஒரு நாள் வெளிய தங்க லீவு வாங்கிட்டோம்” என்றான் சிரிப்புடன்.
“ப்ரமோத் அண்ணாகிட்ட கேட்டேன் ஷிவ், ஒரு நாள் வெளிய ஸ்டே பண்ணிக்கலாம். அதுவும் நாளைக்கு சண்டே தானே? இவங்களே உனக்கு பர்மிஷன் வாங்கிட்டாங்க” என்றாள் ஷக்தி.
“டேய்” என்று சரவணனை அணைத்தவன் அவர்களுக்கு விடைகொடுத்து ஆராவமுதன் முன்பதிவு செய்து வைத்திருந்த ஹோட்டலுங்கு சென்றனர் மூவரும்.
“ஷக்திய சொல்லாம இத்தன தூரம் கூட்டிட்டு வந்துருக்க எரும. டாக்டர் கிட்ட கேட்டியா” என்று ஒருபாடு ஆராவமுதனை வாங்கிவிட்டான் சிவா.
“டேய், என் மச்சானும் அவங்க வூட்டம்மாவும் (ப்ரமோத், ஜான்வி) டாக்டர் தானடா. அவங்க தான் கூட்டிட்டு போகலாம்னு சொன்னாங்க” என்றான் அவனும் பாவமாய்.
“சரி நீ போய் தூங்கு. நாளைக்குப் பார்க்கலாம்” என்றவன் ஷக்தியுடன் அவனுக்கான அறைக்குள் சென்றுவிட்டான்.
இனி அது அவர்களுக்கான நேரம். அவர்கள் மூவருக்கு மட்டுமே சொந்தமான பொக்கிஷ கணங்கள்.
“அவசியம் இல்லாம லீவ் இல்லன்னு தான சொன்னிங்க. அதான் நானே வந்துட்டேன்” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
“இந்த டெஃப்டி கலெக்டர் அம்மா என்னை இப்படி சப்ரைஸ் பண்ணுவாங்கன்னு நானே நினைக்கலையே” என்றபடி கீழே அமர்ந்து அவள் கால்களைப் பிடித்துவிட்டான்.
“நீ இப்போ ஈகோ எல்லாம் பார்க்கனும் ஷிவ்” என்றதில் அவன் முறைக்க,
“நான் சாதாரண ஸ்டேட் கலெக்டர் நீங்க சென்ட்ரல் போலீஸ் ஆபிசர் அதுவும்..” என்றவள் பேச்சுக்கள் அனைத்தும் அவன் இதழுக்குள் தஞ்சமானது.
வழக்கம் போல் அவன் வேஷ்ட்டைப் பிடித்து இழுத்தபடி அவனோடு அவள் ஆழ்ந்துவிட, “மூச்சு முட்டுது சோனு” என்றாள் மெல்ல நெஞ்சம் தவித்து.
“ம்ம்ப்ச், சொல்லலாம்ல ஷக்தி” என்றபடி அறையைச் சுத்தி பார்வையிட்டான்.
வழக்கமாய் அவன் பயிற்சி மேற்கொள்ளும் அகாடமியில் உறவினர் வந்தால் தற்காலிகமாய் தங்குவதற்கு இடமிருந்தது. அதற்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கான உணவு, இருப்பிடம் எல்லாம் அவர்களே தான் பார்க்கவும் வேண்டும்.
ஷக்தி வருவது திடீர் ஏற்பாடு, அவனால் வெளியேவும் வரமுடியாத சூழல். கடைசியில் அனைவரும் கெஞ்சிக் கூத்தாடி ஷக்தியின் நிலையைச் சொல்லியே ஒரு நாள் மட்டும் சிவா அகாடமி விட்டு வெளியே தங்க ஏற்பாடு ஆனது.
நாளை இரவிற்குள் அவன் அகாடமி செல்ல வேண்டும். அதுவரை அவன் ஷக்தியுடனான பொன்னான நிமிடங்கள் தான்.
அவன் அறையில் சோதனையில் இருக்க, “சோனு, உன் பொண்ணு ஒதைக்கிறா” என்றாள்.
மேற்புறமாய் குழந்தை உதைப்பது தெரிய அவள் போட்டிருந்த மேக்ஸியை விலக்கினான். இனி தடையேது?
“டேய்” என்று அதிர்ந்து அலறிவிட்டாள் அவனின் செயலில்.
அழுத்தமாய் நிமிர்ந்து பார்த்தவன் பார்வையில் அடங்கியவள், “சொல்லிட்டு செய்யலாமே” என்றாள் உள்ளே போன குரலில்.
வயிற்றைப் பார்த்தவன் அவளை முறைக்கவும், “அது நீ தான அன்னிக்குச் சொன்ன.. அதான்” என்றாள் இழுவையாய்.
“நான் என்ன சொன்னாலும் செய்வியா நீ, ஹான்” என்று அத்தனை கத்து.
காதில் கை வைத்து அவன் பேசுவதைக் கேட்காதது போல் அவள் அமர்ந்து கொள்ள, அவன் மகளின் கால் தடங்கள் அவள் வயிற்றில் தெரிந்தது.
உருகிவிட்டான் தகப்பனவன். “பூவம்மா” என்று அவன் ஷக்தியின் வயிற்றில் மென்மையாய் புதைய, அவன் தலையை மெல்ல அழுத்திக்கொண்டாள், ஷக்தி.
அவள் எதிர்பார்த்த தருணமது. ஆசையாய் அவனைப் பார்க்கப் போகும் நாளை அவள் எண்ணியிருந்தாலும் இது போன்ற தருணங்கள் எல்லாம் வாணாளில் இப்படி கிடைக்குமா என்ன.
அவன் மீசை குத்தலும் மென் முத்தமும் அவளை இம்சிக்க, “சோனு” என்றால் காற்றாகிய குரலில்.
அவள் வயிற்றில் ஆழ்ந்து நுகர்ந்தபடி, “ஸ்டார்ஸ் கவுண்ட் பண்ணலாமா குலாப்” என்றவன் கண்ணிலும் அவள் மீதான போதை. குலாப் போதை!
எப்போது அவனை மறுத்திருக்கிறாள், இப்போது மறுக்க?
பதமாய் கையாண்டான் அவனின் குலாப்பை. தயங்கித் தயங்கி, சற்று மிஞ்சியும் கெஞ்சியும் இருவரும் அவர்கள் பூக்குட்டிக்கு இடையூறு இல்லாது கலந்தனர் நீண்ட நாட்களுக்குப் பின்.
மழை பெய்து நட்சத்திரம் இல்லாத வானில் இருந்த நிலவு கூட அவன் அவளிடம் எண்ணும் நட்சத்திரங்களைப் பார்த்து வெட்கிப்போனது!
கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளை நெஞ்சில் சாய்த்தவண்ணம், “எப்போ வெச்ச?” என்றான் அவள் மேடிட்ட வயிற்றை வருடியபடி.
“நேத்து ஈவினிங். அண்ணி வெச்சுவிட்டாங்க” என்று சொல்லும் போது வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை.
அவளை விட அவனுக்குத் தான் அதீத வெட்கம் வந்து தொலைத்தது. இனி மேகாவை வேறு அவன் சமாளிக்க வேண்டுமே.
உதட்டைக் கடித்து அவன் வெட்கத்தைக் குறைக்கப் பார்க்க, முடியாது தலையை அழுத்தக் கோதிக்கொண்டான்.
அவள் பிள்ளை வயிற்றில் அழகாய் மன்டலா டிசைனில் மெஹந்தி போட்டிருந்தாள் ஷக்தி!
வயிறு முழுவதும் இல்லாது ஒரு குறிப்பிட்ட அளவில் வட்டமாய் திருத்தமாய் இருந்தது அந்த மெஹந்தி. அதில், கண்ணுக்கே தெரியாத வகையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல இடங்களில் டிசைனோடு சேர்ந்து ‘சோனு’ என்ற எழுத்தும், அதில் பிணைந்தபடி பூவம்மாவும் குலாப்பும் சங்கிலிகள் போல் வரைந்திருந்தாள், மேக வர்ஷினி.
இனி மேகா அடிக்கும் கூத்தை நினைத்தபடி, “என்ன சொன்னா” என்றவன் குரல் பிசிர் தட்டியது.
“ஓட்டி தள்ளிட்டாங்க. நான் தான் நீங்க பார்த்த பின்ன ஏதுனாலும் கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டேன்” என்றபடி அவன் வெற்று மார்பில் சாய்ந்தவண்ணம் கூறிக்கொண்டே சற்று பொருத்து துயில் கொண்டாள்.
நான்கு மாதம் விட்டுப் போன தூக்கம் ஒற்றை நாளில் அவள் இடம் வந்ததும் சேர்த்து வைத்துத் தூங்கிவிட்டாள்.
“ஆரு’ம்மா” என்று அவளை அணைத்துப் பிடித்து நெற்றில் முத்தம் வைத்து, அவன் பூக்குட்டியிடம் சிறிது பேசிய பின்னரே துயில் கொண்டான் சிவனேஷ்.
காலையில் அவர்கள் எழும்பும் போது மணி எட்டைக் கடந்திருக்க, “ஷிவ்வ்வ்” என்று அழுகைக்குத் தயாரான ஷக்தியின் குரலில் தான் விழித்தான்.
“என்ன ஷக்தி. வலிக்கிதா? மெதுவா தானடி ஹண்டில் பண்ணே” என்று அத்தனை பதற்றம் அவனிற்கு.
“அது இல்லடா. இங்க பாரு” என்று முகத்தைச் சுழித்து அவள் பெட்டை காட்ட, புரியாது அவளையே பார்த்தான்.
“என்னடி”
“வளையல ஒடச்சிட்ட நீ. நேத்து தான போட்டுவிட்டாங்க” என்று சிணுங்கிக்கொண்ட அவள் சொல்ல, “ஸ்சூ.. இதுக்கு தானா” என்றவன் நெஞ்சில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
“திருஷ்டி வளையல்டி. ஒன்னுமில்ல அதனால”
“பிரச்சனை இல்லையா” கூம்பிய முகத்துடன் அவள் கேட்க, “இல்லடி குலாப்” என்றான் அவள் முகம் போன போக்கைப் பார்த்தபடி.
அதன் பிறகு ஹைதராபாத்தை சுற்றியவர்கள் மாலை போல் அவனைக் கிளம்பச் சொல்லிவிட்டாள் ஷக்தி.
“ஏன்டா, இருக்கனே கூட” பரிதவிப்புடன் கேட்டவனை,
“இதுக்குதான் உன்ன கெளம்ப சொல்லுறேன் ஷிவ். என்னைப் பார்த்தா உன்னால நார்மலா இருக்க முடியாது. இதுல உன் பூவம்மா வேற உள்ள இருக்கா, நீ நாளைக்கு அகாடமி போவியானே எனக்குச் சந்தேகம் வந்துடும். கெளம்புடா” என்றவள் குரலும் அடைத்திருக்க,
“டேய் போடா நீ. என் தங்கச்சியும் மருமகளையும் நா பார்க்க மாட்டேனா? ஒழுங்கா ட்ரைனிங் முடிச்சிட்டு அப்பாயின்ட்
மெண்ட் ஆடரோட வா, அப்போ தான் திரும்ப ரெண்டு பேரையும் அனுப்புவேன்” என்று சொல்லி ஷக்தியைக் கூட்டிக்கொண்டு கிளம்பினான், ஆராவமுதன்.
சரியாக இரண்டரை மாதங்களில் ஷக்தியை போட்டு வாட்டி எடுத்த பின்னர் பூவாய் ஜனித்திருந்தாள் குலாபின் மகள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Very nice eagerly waiting for next episode 😊