

KKEN-34
“யாருடா இந்த டால்?”
கண்ணில் வித்யாவை ஜாடை காட்டினாள். கைகளாலோ உதியை காட்டியது.
‘என்ன சொல்ல வேண்டும்?’ அவன் தயங்கிய நொடியில் அவன் மனைவி சொன்னாள் .
“பிரண்ட் ”
“ஓ ! பிரண்டா. நல்ல வேளை எங்க நீ என்ன ஏமாத்திட்டியோன்னு பயந்துட்டேன்.”
இப்போது வித்யாதான் அவர்களை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வேறு ஒருப் பெண்ணை ., பெண்ணுடன் வாழ்வது தனக்கு ஒத்துக் கொள்ள முடியாதா ?
அவளின் அதிர்ச்சி கலந்த முகத்தைப் பார்ததவன் உதட்டின் ஓரத்தில் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு பூரியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
‘நீங்க அப்டினா நாங்க இப்படி! எப்புடி ?’
என்ற தோரணையில் பூரணியும் அவனிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தாள் .
பூரணிக்கு எல்லாமே தெரியும். தெரியாதது போல காட்டிக் கொண்டாள் .
பிறகு தொழில் பற்றியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“பூரி ! வர்றவங்களுக்கு லன்ச் க்ராண்டா இருக்கனும். அவங்க உள்ள வரதுலேர்ந்து வெளில கிளம்பற வரைக்கும் எல்லாமே உன்னோட பொறுப்பு.”
“என் மேல நம்பிக்கை இல்லையாடா? கிளம்பு. எல்லாம் நான் பார்த்துக்கறேன்.”
இப்போது காரில் வரும்போது அவன் அருகில் அமர வேண்டும் போல இருந்தது. குழந்தையை மடியில் வைத்துக் கொண்டாள் .
பசிக்குது. அவள் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை. அவனே அவள் முகத்தை பார்த்து புரிந்துக் கொண்டான்.
அருகில் இருந்த ஒரு நல்ல உணவகத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றான்.
குழந்தைக்கு ஊட்டி விட்டு அவள் மிச்சம் வைத்த தோசையை ரசித்து ருசித்து சாப்பிட்டான். எப்படி இவனால் இந்த குழந்தையிடம் இத்தனை அன்பு காண்பிக்க முடிகிறது.
“பா! பா! ” பேசிக் கொண்டே இருந்தவள் வயிற்றுக்கு போட்டதும் காரில் ஏறியவுடனேயே தூங்கி விட்டாள் . இவளுக்கும் தூக்கம் இழுத்தது.
“நீயும் என் மேல சாஞ்சு தூங்கு தியா. எப்படியும் ட்ராபிக்ல நாம் போய் சேர நேரமாகும்.”
வீடு வந்து சேர்ந்ததும் இருவரையும் எழுப்பி அழைத்துக் கொண்டு வந்தான்.
அவன் தேவை-இவளுக்கும் தேவை . புரிந்தது.
இன்று பூரணியிடம் உரிமையாக அவன் பேசியதில் தனக்கு என்ன வருத்தம்? தன்னால் ஏன் உரிமையாக மனைவி என்றுக் கூற முடியவில்லை? ஏங்கி ஏங்கி அழுதாள் . வழக்கம்போல இரவில் வந்தான். இரவில் தூங்கி கொண்டிருந்த உதி “பா! பா!” உளறிக் கொண்டே திரும்பி இவள் மீது காலை போட்டுக் கொண்டாள். ஏதோ டிபன் செய்து கொடுத்தான். சென்று விட்டான்.
அவள் அழுதிருப்பது அவனுக்குத் தெரியாதது. எதுவாக இருந்தாலும் அவளேதான் பேச வேண்டும். காத்துக் கொண்டிருக்கிறான்.
அவள் பேசுவாளா ?
இதற்கு மேலும் காத்திருப்பதில் அர்த்தம் இருக்கிறதா ?
அவளைப் பேச வைக்க வேண்டும்.
அடுத்த சில நாட்கள் கழித்து.,
“சாயந்தரம் ஐந்து மணிக்கு ரெடியா இரு. கடைக்கு பர்னிச்சர் வாங்கணும்.”
காரின் பின் சீட்டில் மகளுடன் அமர்ந்தவளைப் பார்த்து முறைத்தான்.
இவள் கண்டுக் கொள்ளவில்லை.
விடுவானா அவன்?
“மூணு மணிக்கு கடைக்கு போர்டு செக் பண்ண போகணும்.”
பைக்கில் அழைத்துச் சென்றான்.
குழந்தையை முன்னாடி அமர்த்திக் கொண்டான் .
பட்டும் படாமலும் அமர்ந்திருந்தவளின் கையைப் பிடித்து இழுத்து இடுப்போடு சேர்த்துக் கொண்டான்
அவனின் முதுகை ஒட்டி அமர்ந்திருந்தாள். முன்பு இருந்தது போல அவன் எலும்பாக இருக்கவில்லை. அழகாய் , கம்பீரமாய் ஆண் மகனாய் இருந்தவனை சாலையில் பல பெண்களின் கண்களும் சுற்றி வந்தது. வழக்கம்போலேவே அவனின் கவனம் மகளின் மீதும் சாலையிலும்தான் இருந்தது.
ஜெமினி சிக்னலில் நிற்கும் போது மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன், சட்டென மனைவியின் கையிலும் ஒரு முறை இதழ் பதித்தான். அவனுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவன் அவளுக்கு, அவள் இழந்த உணர்வை மீட்டுக் கொண்டிருக்கிறான் .
அவளுக்கு மேனி சிலிர்த்தது. இது இவனுக்கான உணர்வுப் புரிந்தது. மூளையின் மூலையில் ஒரு குரல். எனக்கு இந்த உணர்வு வேண்டாம்.
“காலைல மலரக்காவை போய் பார்த்துக் கூப்பிடனும். டிபன் சாப்பிட்டு ரெடியா இரு.”
“என்னால வர முடியாது ” முகத்தை திருப்பிக் கொண்டு பதில் சொன்னாள்.
“வர முடியுமான்னு கேக்கல. நீ வந்துதான் ஆகணும். உனக்கு வேற ஆப்ஷனும் இல்ல.”
இவன் தன்னுடைய வெற்றி இல்லை. வேறு யாரோ போல தெரிந்தான்.
“என்னால முடியாது. எதுக்கு என்னை இப்படி படுத்தற? இந்த தாலி கட்டிட்ட . அதுனால் நான் உன் பொண்டாட்டியா? நீ என்ன சொன்னாலும் கேட்கணுமா? நீ யாரு? நீ என்னோட வெற்றியே இல்ல. அவன் நான் என்ன சொன்னாலும் கேப்பான். நீ என்னை டார்ச்சர் பண்ணற. போ என் மூஞ்சிலேய முழிக்காத.’
அன்று கண்ணீர் மல்க, “என்னை விட்டுப் போ” அவள் சொன்ன ஒற்றை வார்தைக்காக அவளை விட்டுப் பிரிந்தவன் இன்று அவள் இத்தனை கோபமாகிப் பேசினாலும் அவளையே உன்னிப்பாக பார்த்தான்.
“நீ சொல்லறது எல்லாமே சரிதான் தியா. அன்னிக்கு இருந்த வெற்றிக்கு எதுவுமே தெரியாது. உன்னை மட்டும் தான் தெரியும். ஆனா இப்ப இருக்கற வெற்றிக்கு இந்த உலகம் அதுல இருக்க மனுஷங்க எல்லாமே தெரியுது., என்ன பண்ணறது? சரி! நீ வர வேண்டாம். நான் பார்த்துக்கறேன்.”
வேதனை நிறைந்த முகத்துடன் சென்றவனைப் பார்க்க இவளுக்கு கஷ்டமாகி இருந்தது.
“ஏண்டா எதுக்குடா இப்படி என்னையே சுத்தி வர? நான் வேண்டாம் டா . இந்த எச்சல் உனக்கு வேண்டாண்டா .”
இதே வசனம்தான் அங்கே இன்னொருப் பெண்ணும் சொன்னாள்.
இதோ நாளை கடை திறக்கப் போகிறார்கள். இரவில் உணவு கொடுக்க வந்தவனிடம் ஒரு நகை பெட்டியைக் கொடுத்தாள் .
அதில் ஒரு ஷார்ட் செயின் இருந்தது. வீ என்ற டாலர்.
“எதுக்கு தியா இதெல்லாம்?”
அமைதி. முகம் பார்க்கும் கண்ணாடி நீட்டினாள். புரிந்துக் கொண்டான்.
அவள் கட்டளைப்படி அப்போதே போட்டுக் கொண்டான். அழகனுக்கு அழகாய் இருந்தது. இது அவள் ஆயிரம் கற்பனைகளுடன் வாங்கியது. முதலிரவில் அவனுக்கு அவள் போட்டு விட வேண்டும். அவர்களின் அந்த நேரத்தில் அந்த செயின் அவன் கழுத்தில் பட்டு இவளை வருட வேண்டும்.
இன்று அவன் சந்தோசமாக இருக்க வேண்டிய நாள். தன்னுடைய உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்.
“நீ எத்தன மணிக்கு வரப்போற தியா ?”
மௌனம்.
“நீ தானே என்னோட வெற்றி? நீ இல்லாம எப்படி?”
மௌனம்.
“ஒருத்தன் ஒரு பங்க்சன் பண்ணறான்னா அம்மா அப்பா, பொண்டாட்டி புள்ளைங்க எல்லாரும் இருப்பாங்க. எனக்குத்தான் அந்த குடுப்பினை இல்லையே? விடு!”
‘தனக்காக இப்படி நடு இரவில் வந்தவனை நோகடித்து விட்டோமே?’
ஓடிச் சென்று அவனை பின்னோடு கட்டிக் கொண்டாள் . அவளின் மனப் போராட்டம் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. இருவரும் ஏதும் பேசவில்லை. அமைதியாக அப்படியே நின்றிருந்தார்கள்.
சில நிமிடம் கழித்து அவள் புறம் திரும்பி கொண்டான்.
“நீ வாடி! என்னோட பொண்டாட்டி புள்ளைன்னு பெரியவர் கிட்ட அறிமுகப்படுத்தனும் போல இருக்கு.”
“நா வேண்டாண்டா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா .”
அவள் கைகளை பிரித்து விட்டு சென்று விட்டான்.
மறுநாள் காலையிலேயே கொடி மலர் வந்து விட்டாள் . கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்தாள் . வீட்டில் பாயசம் செய்தாள் .
அப்பா வராதது மனதிற்கு சங்கடமாகத்தான் இருந்தது. இவன் போனில் சொன்னான்.
இருந்தும் அவருக்கு வர இஷ்டமில்லை.
அவர் வருகிறேன் என்று சொல்லி இருந்தால் காரில் அழைத்து வந்திருப்பான். இந்த சமயத்தில் அவன் ஏனோ யாரும் இல்லாத அனாதை போல உணர்ந்தான்.
‘விடு வெற்றி நம்ம அப்பா தானே. வருவாரு. தானே வருவாரு”
நெற்றியில் விபூதி இட்டு விட்டாள் . உன்னோட மாமியார் மாமனார் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வா.”
அதற்குள் அவர்களே வந்து விட்டார்கள்.
“வாழ்த்துக்கள் வெற்றி ! நீங்க இன்னும் பெரிய நிலைமைக்கு வரணும் காயத்ரியும் நெற்றியில் அர்ச்சனை செய்து விட்டு வந்த விபூதியை இட்டு விட்டார். எல்லாத்துக்கும் கடவுள் துணை இருப்பாரு வெற்றி.”
கீழே கடைக்குச் சென்றான். ஏற்கனவே அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது. மலரும் பிடிவாதமாக வர முடியாது என்று விட்டாள் .
“இன்னும் ஒனக்கு வாழ்க்கைல நிறைய நல்லது நடக்கணும். அங்க நான் வந்து நின்னா சரியா இருக்குமா?”
யாருமே இல்லாமல் அங்கு வெற்றி தனியாக நிற்கக் கூடாதே என்று விஜயனும் காயத்ரியும் வந்தார்கள்.
வித்யாவுக்கும் ஆசையாக இருந்தது. ஆனால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் .
“என்ன மேடம் ! எப்படி இருக்கீங்க?” கம்பீரமாக வந்தது குரல்.
“மேடம்! நீங்க எப்படி வெற்றி போன்ல?” தடுமாறினாள் கொடி .
“வாடி கீழ!”
மதுவின் குரலை மீற முடியாமல் கீழே வந்தாள் .
அடர் சிகப்பு நிறத்தில் மைசூர் சில்க் கட்டி இருந்தாள் .
“வணக்கம் மேடம் ”
“வணக்கம் வைக்கறது எல்லாம் இருக்கட்டும். தம்பி வாழ்க்கைல முதல் அடி எடுத்து வைக்கும் போது எல்லாரும் இப்படி அவனை தனியா விடறது சரியா ?
“அது வந்து மேடம்..”
“தப்பு மலர். என்ன காரணம் சொன்னாலும். முதன் முதல்ல உங்க ரெண்டு பேரையும் நான் ஸ்டேஷன்ல பார்த்த நினைவு இன்னும் எனக்கு இருக்கு. உன்னோட புருஷர் நல்லவரை காணுன்னு எப்படி வந்து நின்னீங்க? அப்பா! அவன் முகத்துல எத்தனை தவிப்பு. உனக்காக உன்னோட குடும்பத்துக்கு எல்லாருக்காகவும் யோசிக்கற அவனை நீங்க எல்லாருமே தனியா நிக்க விடறது சரியா?”
“அதுக்குத் தான் மேடம் நான் வாரலன்னு சொல்லறது. அவனே பாவம் எத்தனையோ கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துருக்கான். என்னை மாதிரி ஒரு ஆளு மூஞ்சி அவன் கூட நின்னா .. வேணாம் மேடம் பாவம் அவன் அவனுக்கு இனிமே எல்லாமே விளங்கி வரணும். நான் வேணாம். ப்ளீஸ் மேடம்.”
“அது சரி ! உங்க அம்மா இருந்திருந்தா அவன் இப்படி தனியா அனைதையா நின்னுருக்க வேண்டாம். அவ தான் போய் சேர்ந்துட்டாளே. சுத்தி இத்தனை பேரு இருந்து என்ன? அவனுக்குன்னு யாரு இருக்கா?”
“என் தம்பிக்கு நான் இருக்கேன். மேடம். நீங்க சொல்லறது தான் சரி. நான் வரேன். மனசு நிறைய அவன் நல்லா இருக்கனுன்னு வாழ்த்துவேன். ”
கண்களில் லேசாக குளம் கட்டியது மலருக்கு.
“குட் கேர்ள்!” லேசாக கன்னம் தட்டினாள் மது .
“மேடம் ரொம்ப அழகா இருக்கீங்க. அர்ஜுன் சார் எப்படி மயங்கினாருங்கறது இப்பதானே புரியுது?”
வலிய பேச்சை மாற்றுகிறாள். புரிந்துக் கொண்டாள் மது. அவளுக்கு இவளும் ஒத்து பாடினாள்.
“ஓ! மேடத்துக்கு இவ்ளோ பேச தெரியுமா?” புருவம் உயர்த்தினாள் காவல் அதிகாரி.
“ஆ! இன்னும் நல்லாவே பேசும். கையில தூக்கி வளர்த்த தம்பி கடை தொறந்தா வர மாட்டேன். நல்லது கெட்டது எல்லாம் பேசும்” இப்போது வெற்றியும் அவர்களுடன் இணைந்துக் கொண்டான்.
“நீ வேற வாராதடா” சிணுங்கினாள் மலர்.
“ஏண்டி! அவனுக்கு உன்ன விட்ட யாரு இருக்கா? நீயும் வரலைன்னா அவன் என்னடி பண்ணுவான்?”
“நல்லா கேளுங்க மேடம். எங்க அம்மா இருந்திருந்தா என்னைய இப்படி விட்ருக்குமா ? என்ன தான் இருந்தாலும் எல்லாருக்கும் நான் யாரோ தானே ?”
மலர் வர ஒத்துக் கொண்டது இன்னும் வெற்றிக்குத் தெரியாதே. அவன் கண்களில் அத்தனை வலி.
காதல் தொடரும் ..

