
ஹாய் டியர்ஸ்.,
இனி கதை நிகழ் காலமும் கடந்த காலமும் இணைந்து வரும்… உங்கள் சந்தேகங்களுக்கான விடை ஒவ்வொன்றாய் தெரியவரும். கதையின் இறுதி கட்டத்தை நோக்கி பயணிப்போம்
இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மது உண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாகக் கோவாவாகத்தான் இருக்க முடியும்.
கோவா நகரம் போர்த்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்புப் பளிச்செனத் தெரிவதை இங்கு உணர முடியும்.
கோவாவின் மாலை நேரம் முழுவதுமாகக் கேளிக்கை விரும்பிகளின் சொர்க்கமாக மாறிப்போயிருக்கும். இந்த நகரத்தின் இரவு விடுதிகளிலும், பப்களிலும் அதிகாலை மூன்று மணி வரை பாடல்களின் ஒலி காதை துளைக்கும். அதிலும் குறிப்பாக வடக்குக் கோவாவில், கலங்கூட் பீச்சுக்கு அருகே உள்ள கஃபே டிட்டோஸ் மற்றும் மாம்போஸ் இரவு விடுதிகளில் கேளிக்கை பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழியும். அதுமட்டுமல்லாமல் இந்த வீதிகளில் நீங்கள் காலாற நடந்து சென்றால் ஏராளமான தெருவோர பப்களும், மதுக் கடைகளும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இதை தவிரச் சில கடற்கரை குடில்களிலும் இரவு விருந்துகள் கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருக்கும்.
இளைஞர்கள் கோவாவின் கடற்கரை அழகை ரசிப்பது இரண்டாம் கட்ட ஆசை என்றால் முதல் ஆசை இரவு நடக்கும் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகள்தான். அதற்குப் பெயர்போன கோவாவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் வந்து செல்கிறார்கள். அதோடு கடல்சார் உணவுகளுக்கு அங்கு பஞ்சமேயில்லை.
இரவின் மடியில் அழகாய்த் தவழ்ந்துக்கொண்டிருந்த கோவா நகரத்தின் வீதிகளிள் பப்களில், ஒளி மிளர்ந்து அழகாய் காட்சியளித்த அந்த பப்பினுள் அறைகுறை ஆடையுடன் போதையில் ஒரு பெண் தள்ளாடிய படி ஆடிக்கொண்டிருந்தாள்.
அவள் அணிந்திருந்த உடையோ தேகத்தில் அங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டிய படி இருந்தது. அவள் ஆட்டத்தோடு அவளைப் பருகியபடி பார்த்துக்கொண்டிருந்த ஆண்களோ போதையின் உச்சத்தில் இருந்தனர்.
அவளின் பொன் நிற அங்கத்தைக் கண்டு சொக்கி போனவர்களின் கரங்கள் அவளை மெல்ல சீண்ட ஆரம்பித்தது, கிட்ட தட்ட அந்தப் பப்பில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆண்கள் இருந்தார்கள், அதில் சிலர் அவளைப் பார்வையிலேயே அளவெடுத்துக் கொண்டிருந்தார்கள், மேலும் சிலர் தங்கள் மதுக்கோப்பையில் நிறைந்திருந்த போதையை ஓரேடியாய் தொண்டைக்குள் இறக்கி கொண்டிருந்தனர். ஆனால் சிலர் ஆடிக்கொண்டிருந்த பெண்ணவளை சீண்ட ஆரம்பித்தார்கள். அவளுக்குக் கொடுக்கபட்ட போதை மருந்தையும் மீறி எங்கிருந்தோ எட்டி பார்த்தது அவளின் மானத்தைக் காக்க எண்ணி எதிரே இருந்தவர்களின் கரங்களை உதறிவிட்டவள் இரண்டடி பின்னே சென்றாள்.
ஆனால் அந்தப் போதை ஆசாமிகள் விடவில்லை அவளை மேலும் நெருங்கி கொண்டிருந்த வேலையில் அங்கு அவளருகே வந்து நின்றான் அந்தப் பப்பில் பணிபுரியும் பாக்சர். அவளை நோக்கி வந்தவர்கள் தடுக்கப் பட்டார்கள் அங்கு ஆடிக்கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு அறையில் அடைக்கப்பட்டாள்.
பொருளை தான் ஏலம் விடுவார்கள், ஆனால் அந்தப் பெண்ணிற்கான ஏலம் அங்குத் தொடங்கியது பலரும் போட்டி போட்டனர், ஐந்தாயிரத்தில் தொடங்கிய ஏலம் ஆறு லட்சத்தில் முடிந்தது, அந்த ஏலத்தை வெற்றிகரமாக வெற்றி பெற்ற போதை ஆசாமிக்கு வயது அறுபது, ஏலம் முடிந்த மறுநொடியில் பணம் செலுத்தபட்டது. பணம் செலுத்திய சில கணங்களில் அந்த அறுபது வயது இளைஞன் அந்த பெண் கட்டுண்டு கிடந்த அறைக்குள் நுழைந்தான். கோவாவில் பணக்கார வரிசையில் இருப்பவனுக்கு இது ஒரு பொழுதுபோக்கு, இதோடு இதே பெண்ணை மூன்றாவது முறை ஏலத்தில் எடுத்திருக்கிறான் என்பதில் பெருமை வேறு. பல மிருகங்கள் தன்னை வேட்டையாடுவது அறிந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாத அளவுக்குப் போதை வஸ்துகளை அவள் உடல் முழுவதும் நிரப்பி லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் பெரும் பணம் தின்னி எவனோ.?
அவள் புன்னகைகள் எல்லாம் உதிர்ந்து கிடக்கின்றன அவளது நடுக்கம் நிறைந்த அச்சத்தின் உச்சங்களைச் சுமக்க முடியாமல் உடைந்து நிற்கின்றாள்.,உயிர் உடையும் பெருநொடிபோல் அவளுள் உணர்கிறாள்,நெஞ்சம் குமுறுகின்றாள் கூக்குரல் இடுகின்றாள் அழுகின்றாள் கண்ணீரிலும் கொஞ்சம் உதிரம் வடிய கதறுகின்றாள்,காட்டேரியாக இருந்திருந்தால் கூட போராடாமல் உடல் கொடுத்திருப்பாள் உதிரம் தானே எடுத்துக்கொள்ளட்டும் என்று, காம மதம் பிடித்த மனிதப் பேய்களிடம் மாட்டிக் கொண்டவள்
கடைசி வரை போராடுகின்றாள், துளித் துளியாக விழுகின்றது அமிலம் அவள் விழிகள் துவங்கி உயிரின் ஆழம் வரை, கோடிக் குத்தூசிகளின் மேல் விழுந்து கிடக்கின்றாள் உயிர் அணு அணுவாகக் கிழிக்கப் படுகின்றது,மனம்
சிதல் சிதலக வெட்டி உடைக்கப் படுகின்றது,பெரும் கனவுகளுடன் தொட்டிலில் உறங்கிக் கிடக்கும் பச்சிளங் குழந்தையை யாரும் அறியா நேரம் பார்த்து சுற்றித் திரியும் வெறி நாய்கள் கவ்வி எடுத்துக் குப்பைத் தொட்டியில் இட்டு அவசர அவசரமாகக் குதறித் உண்பதை போலிருந்தது அந்த காட்சி,அத்தனை கொடூர இச்சைகள் கொண்டது என்ன மிருகமோ,அதன் கொடூரங்களுக்கு ஆளானவள் நிலைதான் துன்பங்களின் உச்சமோ, என் தங்கை ஒருத்தி எங்கோ உயிர் உள்ள பிணமாகக் கிடக்கின்றாள்,அவளது மரண ஓலம் என் மூளையை இன்றும் குடைகின்றது,இந்த நொடி நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும் நொடி நீங்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் நொடி இந்த உலகினில் ஏதோ ஒரு மூலையினில் அவளைப்போல்ஒரு சகோதரி மரண ஓலம் இட்டுக் கொண்டிருக்கின்றாள்,அடையாளம் தெரியாத
மிருகங்களும் வசிக்கும் உலகம் இது,எது அந்த மிருகமென
எப்படிக் கண்டுகொள்வாளோ நம்மில் ஒருத்தியாய் பல கனவுகளுன் வேலை தேடிச் சென்றவளை போகப் பொருளாக்கி, வியாபாரம் பொருளாக்கி அவளை நிலைகுலைய செய்து அனுதினமும் மரணத்திற்கு நிகரான வலியை சுமந்திருக்கும் பெண்ணவளை மீட்க தான் எவரும் வரவில்லை, போராடி தோற்று போனவள், போராடுவதையே மறந்து விட்டாள்.
ஆம் அந்தப் பப்பில் ஆடிக்கொண்டிருந்த பெண் மலர்விழி தான். அவள் வேலை கிடைக்கும் வரை இப்படிப்பட்ட வேலை என்று அறியாமல் தான் இந்தச் சிலந்தி வலையில் சிக்குண்ட எறும்பாய் போனாள்.
அவள் கொஞ்சமும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத துன்பங்களை அனுபவித்து இந்த மேடையில் ஆடியிருக்கிறாள். நாம் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத அளவிற்குத் துன்பம்.
அவள் தப்பிச் செல்ல முடியாத அளவிற்குப் போதை மருந்துகளை அவள் உடம்பில் செலுத்தி, அவளை எப்போதும் போதை நிலையில் வைத்திருந்ததால் அங்கிருந்து, அவள் தப்பிக்கும் முகாந்திரம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை, உணவை காட்டிலும் அவள் உடம்பில் போதை மருந்துகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. நாம் இங்குப் பேசிக்கொண்டிருப்பது ஒரேயொரு மலர்விழியைப் பற்றித் தான், ஆனால் பல்லாயிரக் கணக்கான மலர்விழிகள், இத்தகைய துன்பத்தை அனுதினமும் அனுபவித்தக்கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடியுமா.?
பாலியல் தொழில் செய்யும் பெண்ணை நாம் பார்த்தால், இவள் தவறான தொழில் செய்கிறாள், இதற்கு ஊர் உலகத்தில வேறு வேலை இல்லையா.? படித்த பெண்களே இப்படிச் செய்கிறார்களே.? என்று நம்மில் பலரும் யோசித்திருப்போம். ஆனால் அவர்கள் அந்தத் தொழிலில் எப்படிச் சிக்கினார்கள் என்று விசாரித்தால் தான் அதன் உண்மை, நம் நினைத்தை காட்டிலும் நம்மை மிரட்டும். யாரையோ நம்பி தான் விழக் கூடாத பாதாளக் குழியில் விழுந்துவிட்டு மீள இயலாமல் சிக்கி தவிக்கிறார்கள்.
பெண்கள் வாழ தகுதி இல்லாத நாடு என்றும், பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவான நாடு இந்தியா என்றும், அதிலும் முதலிடத்தில் வெற்றி வாகை சூடி தலை நிமிர்த்தி நிற்கும் நம் தாய்திரு நாட்டை இந்த இடத்தில் புகழ்ந்தே ஆக வேண்டும். பெண்ணுக்குக் கல்வி, பெண்ணுக்கு சம உரிமை, பெண்கள் நாட்டின் கண்கள், போன்ற வசனங்களைக் கேட்டு ஒவ்வொரு நாளும் நாம் பாதுகாப்பாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால், மகாத்மா காந்தி சொன்னது போல் ஒரு பெண் நகைகள் பூட்டி நடு இரவில் தனியாக ஒரு பெண்ணால் சுதந்திரமாக, எந்த ஒரு ஆணின் வக்கிர பார்வையிலும் சிக்காமல், அவளி்ன் உயிருக்கும் மானத்திற்கும் எந்தப் பங்கமும் ஏற்படாமல் அவள் நிம்மதியாய் வீடு சேர்கிறாளோ அன்றே முழுப் பெண் சுதந்திரம் கிடைத்ததாய் அர்த்தம், அதுவரை பெண்களை அடிமைகளாகவும், போகப் பொருளாகவும் பார்க்கும் மனநிலை இந்தத் தாய் திருநாட்டில் மாறப் போவதில்லை, சில ஆண்கள் மாற்ற விடுவதுமில்லை.
தன்னுடைய தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலை தேடி அலைந்து கொண்டிருந்த பெண் தான் மலர்விழி அவளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைவரிடமும் சொல்லி வைத்திருந்தாள், அதிகப் பணம் தேவைபடுவதால் வெளிநாட்டு வேலைகளைத் தேடி அலைந்தாள்.
அப்போது தான் அந்தச் சம்பவம் அரங்கேறியது, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த அவளின் தந்தை சந்திரன், சிகிச்சை பலனின்றி மாரடைப்பில் மரணமடைந்து போகவே நிர்கதியாய் நின்றாள் மலர்வழி, அவளுக்கு அடுத்து ஒரேயொரு தம்பி ஏழாம் வகுப்புப் படிக்கிறான். தாய்க்கு வீட்டு வேலை தவிர வேறெதுவம் தெரியாது, குடும்பச் சூழ்நிலையைச் சமாளித்தாக வேண்டும், வீட்டின் மூத்த பெண்ணாய் அவள் எதாவது முடிவெடுத்தே ஆக வேண்டும்,
அப்படித் தான் அன்று ஒரு நாள் காபி ஷாப்பில் சோகமாய் அமரந்திருந்தாள் மலர், தன் நண்பர்களுக்குத் தன் வீட்டு சூழ்நிலை தெரியபடுத்த அவள் விரும்பவில்லை, அகரநதி அப்போது தான் ஷார்ட் பிலிம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். அடுத்த வேலைக்கு உணவுக்கே வழி இல்லாத போது அவளின் சிந்தனை எவ்வாறு குறும்படத்தில் செல்லும், சோகம் தாங்காமல் அழுதே விட்டாள் மலர்.
ஆனால் அதியோ கார்த்திக்கும், மலருக்கும் தான் எதோ பிரச்சனை போல என்று நினைத்திருந்தாள். தன் தந்தை இறந்ததில் இருந்து கார்த்திக்கிடம் பேசுவதையே தவிர்த்திருந்தாள். அதியும் நிஹாவும் அன்று கிளம்பிவிட, நண்பர்களிடம் சொல்ல தயங்கிய விசயத்தைத் தன் காதலனான கார்த்தியிடம் சொல்லி அழுது கரைந்தாள் மலர்விழி.
யாரிடமும் அவள் படும் துன்பம் தெரியபடுத்த வேண்டாம் என்று கேட்டும் கொண்டாள். கார்த்திக் சாதாரண ஆட்டோகாரனின் மகன், சொல்ல போனால் அன்னாடங்காட்சி தான், அவனால் இவளுக்கு எப்படி உதவ முடியும், அவனின் குடும்ப பொருளாதார நிலையே சொல்ல முடியாமல் இருக்கும் போது, அவனால் எவ்வாறு அவளுக்கு உதவ முடியும் என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான். அவனால் பணத்தேவையை பூர்த்தி செய்ய முடியாது, ஆனால் அவளுக்கு நல்ல வேலை அமைத்து தர முடியும் என்று நம்பினான்.
“கார்த்தி நான் அப்ராட் ஜாப் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்டா” அவன் தோள்சாய்ந்து இதழ்கள் துடிக்கக் கரகரத்த குரலில் சொன்னாள் மலர் விழி.
“என்ன விட்டு பிரிஞ்சு போகப் போறியாடி மலர்.?” வருத்ததுடன் கேட்டான்.
“எனக்கும் வருத்தமா தான்டா இருக்கு, ஆனால் என் குடும்பத்தைக் காப்பாத்த இதைவிட்டால் வேற வழி இல்லைடா, பத்தாயிரம் இருபதாயிரம் சம்பளத்துல சமாளிக்க முடியாதுடா, அப்பா சும்மா ஒன்னும் போகலைடா ஏகபட்ட கடனை என் தலையில கட்டிட்டு போயிட்டாரு” என்றவளுக்குத் தந்தையை இழந்த சோகம் குடிக்கொள்ள,
“சரிடி நீயா எதையும் ட்ரை பண்ணாதே, ஏமாத்துறவங்க நிறையப் பேர் இருப்பாங்க, இனிஷியல் அமௌண்ட் பே பண்ண சொல்லுவாங்க, பட் ஏமாத்திட்டு போயிருவாங்க, நான் நாலு பேர்கிட்ட விசாரிச்சிட்டு சொல்லுறேன்” என அவள் சொல்லி சமாதனம் செய்ய ஆதரவாய் அவன் தோள் சாய்ந்து புன்னகைத்தால் மலர்விழி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

போராடி தோற்றவள் போராடுவதையே மறந்துவிட்டால்.
தேவைகளுக்காக வேலை தேடி செல்பவர்களை தனது சுய லாபத்திற்காக உபயோகித்து கொள்ளும் ஆட்கள் இருக்க தான் செய்கின்றனர்.
ஆசைகளை தூண்டி அவர்கள் பொருளாதார நிலையை பயன்படுத்தி இதனில் இழுத்து விட்டு விடுகின்றனர்.
சிக்கிக்கொண்டவர்களுக்கு தப்பிக்கும் வழியும் தெரிவதில்லை தப்பித்த பின் வாழும் வழியும் தெரிவதில்லை.