31. கண்களும் காதல் பேசியதே

Loading

காதல் -32

 

காரில் உள்ள கண்ணாடி முழுவதையும் இறக்கிவிட்டு , திண்டுக்கல் அருகில் உள்ள கிராமத்தின் மண் வாசனையை நுகர்ந்த வண்ணம் வந்து கொண்டிருந்தான் மறவன்..

 

“இப்ப எந்த சைட் பார்க்க போறோம் பிரீத்தி ”

 

” சார் இது திண்டுக்கல் நியர் சிறுமலை… லொகேஷன் பார்க்க நல்லா இருக்கு, நீங்க பார்த்து ஓகே பண்ணிட்டா போதும் ”

 

” ஓகே அங்க போய் பார்க்கலாம் ” என அமைதியாக மலையை வெறிக்க ஆரம்பித்தான்.

 

சாதாரண மலை பாதையாக இல்லாமல்.. கொண்டை ஊசி வளையங்கள் அதிக வண்ணம் இருக்க, ஒவ்வொரு வளைவும் அத்தனை ஆபத்தாக இருந்தது.. இருந்தும் நன்றாக மலை பாதையில் ஓட்டி பழகியவர்கள் மட்டுமே இப்படி பயணிக்க முடியும்…

 

பிரீத்தி அங்குள்ள வளைவுகளை எல்லாம் பயத்தின் உச்சத்தில் பார்த்து கொண்டே வர, அதை அறிந்த மறவன்.. ” என்ன பிரீத்தி லொகேஷன் எல்லாம் நல்லா இருக்கும்னு சொன்னீங்க .. இந்த பாதை இப்படி இருக்குறது உங்களுக்கு தெரியாதா ?” என நக்கலாக கேட்டான்.

 

” இல்ல சார் சைட் சீன் தான் பார்த்தேன் .. பட் ஹேர்பின் பெண்ட் இருக்கும்னு நினைக்கல.. ”

 

” பட் நைஸ்.. எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு .. ”

 

” அப்போ டீல் ஓகே ஆகிடுமா சார் ”

 

” அது சைட் பார்த்திட்டு முடிவு பண்ணலாம், அப்பறம் சைட் ஓனர் கிட்ட பேசியாச்சா ”

 

” அதெல்லாம் நான் பேசிட்டேன் சார், அவரு நமக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்காரு ”

 

” ஓ குட் ”

 

கார் மேலே உள்ள சிறுமலைக்கு சென்றடைந்தது. மேல இருந்து அந்த ஊரை பார்க்க அத்தனை அழகாக இருந்தது… எழிலாக இருந்த அந்த பசுமையை பார்க்க பார்க்க திகட்டவில்லை மறவனுக்கு..

 

” சார் அங்க உள்ள காபி ஷாப்ல தான் அவங்க வெய்ட் பண்ணுறாங்க… நம்ம போவோமா ” என்றதும்.. மறவன் பிரீத்தி இருவரும் அந்த காபி ஷாபிற்குள் நுழைந்தனர்.

 

உள்ளே வந்ததும் பிரீத்தி அந்த ஓனருக்கு கால் செய்ய… அவரும் இவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை நோக்கி வந்தார்.

 

” ஹாய் வெல்கம் மிஸ்டர் மறவன்… ” என்று அவர் கை குலுக்க…

 

” சார் மீட் மிஸ்டர் தினேஷ் சைட் ஓனர்… ” என பிரீத்தி அறிமுக படுத்தினாள்.

 

” ஹலோ தினேஷ்… சைட் பார்க்க போகலாமா ” என எடுத்ததும் மறவன் வேலையை பற்றி பேச.. ” போகலாம் ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு காபி ” என்றதும் இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.

 

” இங்க காபி ரொம்ப நல்லா இருக்கும், அதான் உங்களை இங்க வர சொன்னேன் .. ”

 

” ஓஹ் அதை டேஸ்ட் பண்ணிட்டு சொல்லுறேன் ” என மறவன் காபி கப்பை சுவைக்க… தினேஷ் அவனது பதிலுக்காக காத்திருந்தான்.

 

” ம்ம் ஆவ்சம்… ரியல்லி சூப்பர் தினேஷ் ” என்றதும் ” ஆமா காபி சூப்பர் ” என பிரீத்தி விரும்பி குடித்தாள்.

 

மூவரும் சிறிது நேரத்தில் சைட் பார்க்க சென்றனர். ” இது என்னோட லேன்ட் தான்… என்னோட பெயர்ல தான் இருக்கு, உங்களுக்கு ஓகே வான்னு பார்த்து சொல்லுங்க ” என அவனது இடத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள விளை நிலங்களை எல்லாம் மறவனுக்கு காட்ட.. கண்களில் இருக்கும் கூலரை கழட்டி சட்டையில் மாட்டி விட்டு அங்குள்ள நிலங்களை பார்க்க தொடங்கினான்.

 

“நாட் பேட்… நான் நினைச்சதை விட ரொம்பவே நல்லா இருக்கு மிஸ்டர் தினேஷ்”

 

” அப்போ முடிவையும் நீங்கதான் சொல்லனும் மிஸ்டர் மறவன் ”

 

” நான் முடிவே பண்ணிட்டேன்… ரிஜிஸ்ட்டிரேஷன் எப்போ வச்சுக்கலாம் ” என நேரடியாக கேட்டான் மறவன்.. ” இந்த மன்த் எனக்கு ஓகே தான்… ஒரு நல்ல நாள் பார்த்து வச்சுக்கலாம் ” என மகிழ்ச்சியாக கூறினான் தினேஷ்.

 

“பிரீத்தி” என மறவன் அழைக்க.. ” சார் இந்த மாசம் நெக்ஸ்ட் வீக் ஃப்ரீ தான் ” என அவன் கேட்க வந்ததை அதற்கு முன்பே பதில் கூறினாள்.

 

” உங்களுக்கு ” என்றதும்… ” நானும் ஃப்ரீ தான் அப்போவே வச்சுக்கலாம்”

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தினேஷின் கண்கள் அவர்களுக்கு பின்னே பாய.. அதை நொடி பொழுதில் கவனித்தவன் .. ” என்ன தினேஷ் லவ்வா ” என முகத்திற்கு நேராக கேட்டு விட்டான் மறவன்

 

அதில் அதிர்ந்த தினேஷ்.. ஒரு நமட்டு சிரிப்புடன் ” ம்ம் ஒரு வருஷமா டிரை பண்ணுறேன்… பட் இன்னும் ஓகே ஆகல… அவங்க ஓகே சொன்ன உடனே கல்யாணம் தான் ” என கண்களில் காதல் வழிய பேசும் தினேஷை பார்த்தவனுக்கு அவனது யாழியின் நினைவு தான்…

 

“ஆல் தி பெஸ்ட் தினேஷ்… சீக்கிரம் சக்சஸ் பண்ணி கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுங்க ”

 

” கண்டிப்பா மறவன் உங்களுக்கு சொல்லாமலா… இப்ப நம்ம பார்ட்னர் வேற ஆகிட்டோம்… கண்டிப்பா சொல்லுறேன்.. ”

 

” அப்பறம் எந்த ஹெல்ப் வேணாலும் தயங்காம கேளுங்க .. நான் கிளம்புறேன் ” என மறவன் கை குலுக்க..

 

தினேஷும் கை குலுக்கி.. ” கண்டிப்பா மறவன்.. உங்களை மீட் பண்ணதுல ரொம்ப சந்தோஷம்.. ” என இருவருக்கும் விடை கொடுத்தான் தினேஷ்.

 

அவர்கள் கிளம்பியதும் அங்கு ஒரு நிமிடம் கூட அவன் நிற்கவில்லை .. அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் பையுடன் சாயாலி போவதை போல அவனுக்கு தெரிய, அவளாக இருக்குமோ என அவ்விடத்தை நோக்கி விரைந்தான்.

 

” சார் … ” என தயக்கமாக அழைத்தாள் பிரீத்தி.

 

” சொல்லுங்க பிரீத்தி.. என்ன விஷயம் ”

 

” அது இங்க ஒரு டெம்பிள் இருக்கு ” என இழுத்தவள்.. அவன் முகத்தை பார்க்க..

 

” ஓகே… அதுக்கு… ”

 

அதற்க்கு மேல் கேட்க முடியாமல் ” நத்திங் சார் ” என அமைதியாக அமர்ந்து கொண்டாள் பிரீத்தி.

 

” என்ன டெம்பிள்… டிரைவர் கிட்ட ரூட் சொல்லுங்க … போகலாம் ” என்றதும் கண்களை விரித்தவள்… ” ம்ம் போகலாம் சார் ” என கூகிள் மேப்பின் வசதியில் அந்த கோவிலுக்கு சென்றனர்.

 

கோவில் வாசலில் வண்டியை நிறுத்தியதும்… “சார் இந்த கோவில் தான் சார்… ரொம்ப விசேஷம் , வேண்டிகிட்டா நடக்கும்னு ஒரு ஐதீகம்.. ஜஸ்ட் டிரை பண்ணுங்க சார்” என பிரீத்தி கேட்க..

 

” நீங்க இவ்வளவு தூரம் வந்து இந்த கோவிலுக்கு போக லைக் பண்ணதுனால தான் வந்தேன்.. நீங்க போய் வேண்டிட்டு வாங்க ” என்றதோடு கூலர்சை மாட்டிக் கொண்டு சீட்டில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான் மறவன்..

 

இதற்கு மேல் அவனை வற்புறுத்த விரும்பாமல் அமைதியாக கோவிலுக்குள் சென்றாள் பிரீத்தி. பிரஸத்தி பெற்ற அம்மன் கோவில் என்றதால் பெண்கள் அனைவரும் கூட்டமாக வந்து வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

 

பிரீத்தி உள்ளே சென்ற இரண்டு நிமிடத்தில் கோவிலுக்குள் இருந்து வெளியே வந்தாள் மறவனின் மனையாளி சாயாலி.

 

கையில் பூக்கூடயுடன்… இன்று பிஸ்தா பச்சை வண்ண சல்வாரில் மிதமான ஒப்பனையுடன் நெற்றியில் குங்குமம் மின்ன வெளியே வந்தாள்.

 

கோவில் வாசலுக்கு வந்ததும் சாயாலிக்கு மனம் ஏதோ போல இருக்க, நெஞ்சை நீவிக் கொண்டவள் சுற்றி முற்றி பார்த்து வைத்தாள்.

 

” ஏன் மனசு ஒரு மாதிரி தவிக்குது.. இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தேன்… ஏதோ எனக்கு நெருக்கமான யாரோ இங்க இருக்குற மாதிரி இருக்கு .. யாரா இருக்கும்” என நினைத்து முடிக்க.. அவளது கணவனின் முகம் பளிச்சென்று வந்து நின்றது.

 

” இல்ல அவரு எனக்கு நெருக்கமானவரு கிடையாது ” வீம்பாக மறுத்த மனதை ஏற்றுக் கொண்டு .. வெளியே கழட்டி விட்டு வந்த செருப்பை காலில் மாட்டினாள் சாயாலி..

 

” தரிசனம் நல்லா போச்சா ?” என்ற ஆடவனின் குரலில் நிமிர்ந்து பார்க்காமலே யார் என அறிந்தவள்… பேசமால் நடையை கட்ட.. அவளை வழி மறைத்து நின்றான் தினேஷ்

 

” வழிய விடுங்க தினேஷ் ” முயன்றும் தன் கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு கூறினாள் சாயாலி.. பின்னே இப்படி பொது இடத்தில் வைத்து வழி மறைத்து பேசினால் .. பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் .. அவளுக்கென்று இருக்கும் அந்த சொற்ப மரியாதையும் மானமும் அல்லவா போய் விடும்..

 

” இப்ப கோவ படுற அளவுக்கு நான் எதுவும் பண்ணலையே”

 

” இப்ப உங்களுக்கு என்ன வேணும் ”

 

” என்ன கேட்டாலும் கொடுப்பியா ” என நக்கலாக கேட்க.. வெறியாக முறைத்தாள் சாயாலி.

 

” ஓகே கூல்.. உன் சம்மதம் வேணும்.. அதுக்காக தான் உன் பின்னாடி வரேன்… உன்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் பத்தி சொல்லு, மேற்கொண்டு விவாகரத்து பண்ணுறதை பத்தி நம்ம முடிவு பண்ணலாம்… நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் யாழி.. பிடிக்காத வாழ்க்கையை எதுக்கு வாழனும்.. நீயும் சந்தோஷமா இல்ல, உன்ன நேசிக்கிற நானும் சந்தோஷமா இல்ல.. ”

 

” அதுனால ” என மார்க்கமாக கேட்கும் அவன் காதலியை நெருங்கி.. ” கண்டிப்பா நான் உனக்கு ஒரு நல்ல துணையா இருப்பேன் … என்னைக்குமே உன் கடந்த காலத்தை பத்தி பேச மாட்டேன்.. அது எனக்கு தேவையும் கிடையாது, இப்ப விவாகரத்து பண்ண போறேன்னு சொல்லிட்டு புதுசா குங்குமம் வச்சுட்டு வரது எல்லாம் எனக்காக தான்னு தெரியும்… இதெல்லாம் வச்சு என்ன அவாய்ட் பண்ண பார்க்குற, ஆனால் அதை எல்லாம் நம்பிட்டு உன்ன விட்டுட்டு போக நான் ஒன்னும் பைத்தியக்காரன் கிடையாது யாழி… உனக்காக என் குடும்பத்தை எதிர்த்து இருக்கேன் ” என்றதும்..

 

” எதுக்காக எதிர்க்கனும் ” என நேர்ப்பார்வை பார்க்க..

 

” அது… சொன்னா கோவ படாத.. வீட்ல அந்த காலத்து ஆளுங்க… அதான் ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணை ஏன் கல்யாணம் பண்ணிக்க போறன்னு சண்டை”

 

” ஓ ”

 

” ஆனால் நான் வீட்ல சொல்லிட்டேன்… கண்டிப்பா உன்ன தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ”

 

” அப்ப உங்க வீட்டை மீறி என்ன கல்யாணம் பண்ண முடிவு பண்ணியாச்சா”

 

” ஆமா”

 

” இந்த கல்யாணத்துக்கு என் சம்மதம் வேணும்ல ”

 

” நீ ஓகே சொன்னா தான் உன் கழுத்துல தாலி கட்டுவேன்.. உன்ன கம்பல் பண்ண மாட்டேன்.. அந்த அளவுக்கு நான் கொடுமைக்காரனும் இல்ல ”

 

” அப்போ இந்த ஜென்மத்தில உங்களுக்கு நான் கிடைக்க மாட்டேன்.. ஏன்னா நான் பழைய வாழ்க்கையை தேடி போக போறேன் ” என்றதும் அதிர்ந்து போனான் தினேஷ்.

 

இவ்வளவு நடந்ததற்கு பின்பு கண்டிப்பாக அவளது பழைய வாழ்க்கையை தேடி சாயாலி போக மாட்டாள் என நன்றாக தெரிந்தால் தான் அவன் உறுதியாக அவளிடம் காதலை கூறியது.

 

” மிஸ்டர் தினேஷ் ” என சாயாலிக்கு முதுகு பக்கம் கேட்ட குரலில் சாயாலிக்கு அண்டமே இருண்டது….

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்