30. கண்களும் காதல் பேசியதே

Loading

காதல் -30

 

ஏமாற்றம்..

 

வாழ்க்கையில் நமக்கு நேரும் கொடியதிலும் மிக கொடியது ஏமாற்றம்… அத்தகைய ஏமாற்றத்தை தான் மறவன் அனுபவித்து கொண்டிருக்கிறான்..

 

ஒரு வருடமாக தேடிக் கொண்டிருக்கிறான் அவனது யாழியை.. கண்களில் படும் பெண்களை எல்லாம் அவனது மனைவியாக இருக்குமோ என ஏங்கும் விழிகளுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது..

 

காலையில் எழுவான் சீரான ஓட்டத்தை மேற்கொண்டு விட்டு , சிந்தாமணி கையில் ஒரு அருமையான பானத்தை குடித்தாலும் அதில் மனம் லயிக்காது.. டீயை குடித்து கொண்டே தமிழ் காதலன் புத்தகத்தை வருடிக் கொடுப்பான். தினம் ஒரு கவிதை என அன்றாடம் அந்த கவிதையை படித்தே அவனது பொழுது கழிகிறது.. கையில் அந்த புத்தகம் இருக்கும் போதெல்லாம் சாயாலி அவன் அருகில் இருப்பது போல தோன்றும்..

 

காலை வேலைக்கு செல்பவன் .. சிந்தாமணியின் வற்புறுத்தல் காரணமாக காலை உணவை உண்டு விட்டு செல்வான்.. பிறகு வீடு வர இரவு ஏழு மணி ஆகி விடும்.. மதியம் வேளையும் அதற்கு இடையிலும் ஏதேனும் உண்டானா என்பது இன்று வரையிலும் தெரியவில்லை. கேட்டால் தலையை மட்டும் ஆட்டி விட்டு செல்பவனை வேதனையாக பார்த்தார் சிந்தாமணி.

 

தான் கோமாவிலேயே இருந்து இருக்கலாமோ என்று கூட சிந்தித்து விட்டார். எழுந்து வந்து என்ன பயன்.. பெற்ற மனம் உயிற்ற கூடாக அலைவதை பார்க்கவா இத்தனை வருடம் கழித்து கண் விழித்தோம்.. மூர்த்தியிடம் புலம்பாத நாள் இல்லை. எப்படியாவது மருமகளை கண்ணில் காட்டுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் சாயாலியை பற்றி சிறு தகவல் கூட கிடைக்கவில்லை…

 

சொத்து சுகம் ஆஸ்தி இருந்து என்ன பயன்.. பெற்ற மகன் துணை இல்லாமல் அல்லாடுவதை எப்படி ஒரு பெற்றவர்களாக பார்த்து கொண்டு இருக்க முடியும்..

 

” ஏங்க சாயாலியை பத்தி ஏதாவது தெரிஞ்சதா ?” இரவு உணவில் மூவரும் அமரும் பொழுது இந்த கேள்வியை கேட்காமல் சிந்தாமணி சாப்பாட்டை பரிமாறுவது இல்லை.. என்றைக்காவது ஒரு நாள் சாயாலி கிடைத்து விட்டாள் என கூற மாட்டார்களா என எதிர்பார்த்து இன்றும் அதே கேள்வியை கேட்டார்.

 

” இல்ல மா ” வழக்கமாக மூர்த்தி கொடுக்கும் பதில் தான்.

 

அமைதியாக மூவரும் உணவை கொரித்து விட்டு அவரவர் அறைக்குள் சென்று அடைந்து கொள்வார்கள்.. அதன் பின்பு பிரஸர் மாத்திரையின் உதவியால் மூர்த்தி உறக்கத்தை தழுவி விடுவார். அதே போல சிந்தாமணி ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துக்கு அவரும் தூக்கத்தை தழுவி கொள்வார். இதில் ஒருவனுக்கு மட்டும் ஒவ்வொரு இரவும் தூங்கா இரவாக மாறி போகும்.. ஒவ்வொரு இரவையும் கழிப்பதற்குள் அவனுக்கு போதும் போதும் என ஆகி விடும்…

 

கண்ணை மூடி படுத்தாலும் கண்ணுக்குள் வந்து இம்சை செய்யும் மனைவியை விரட்ட மனம் வராமல் ரசித்துக் கொண்டிருப்பான். இப்படியே இந்த ஒரு வருடமும் ஓடி விட்டது.. விடிந்தால் புத்தாண்டு… வருகிற புத்தாண்டு இவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் என பெரியவர்கள் அனைவரும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் .. பார்ப்போம்..

 

” இப்ப நான் என்ன சொல்லி புட்டேனு மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு இருக்குற” என தேனு கத்த.. அவருக்கு பதில் கூறாமல்  அவரது கையில் இருக்கும் குங்கும நிற புடவையை வெறித்து பார்த்தாள் சாயாலி..

 

அவள் புடவையை பார்ப்பதை கண்டு.. “. ஓ இதான் உன் பிரச்சனையா, ஏன் டி ஊர் உலகத்துல இல்லாததையா சொன்னேன், கல்யாணம் ஆன பொண்ணு கொஞ்சமாவது மங்களகரமாக இருக்க வேணாமா .. புருஷன் பக்கத்துல இல்லைன்னு வசனம் பேசாத .. இதையே தான் இந்த ஒரு வருஷம் முழுக்க கேட்டு கேட்டு அழுத்து போயிட்டேன்… சரியான அழுத்தக்காரி நீ.. இந்த வருஷம் நல்ல படியா அமையட்டும்… இந்த புடவையை கட்டிட்டு கோவிலுக்கு போயிட்டு வா ” என விடிந்ததும் விடியாததுமாக தேனு சுப்பரவாதம் வாசிக்க .. இதை கேட்பதற்கும் அவர் கூறியதை செய்து விடலாம் என வெடுக்கென்று அவர் கையில் இருக்கும் புடவையை உருவிக் கொண்டு குளிக்க சென்றாள் சாயாலி..

 

இந்த ஒரு வருடமும் அங்கு சிறுமலையில் உள்ள ஒரு எஸ்டேட்டில் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.. எல்லாம் பழனியின் ஏற்பாடு தான்.. அவர்கள் வந்ததில் இருந்து பாதுகாப்பான வீட்டை பார்த்ததோடு மட்டும் அல்லாமல், அவர்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்து சிரமம் வராமல் பார்த்துக் கொண்டான்..

 

முதல் ஒரு மாதம் சாயாலி அவனிடம் சைகையில் கூட பேசவில்லை .. ஆனால் ஊருக்கு வந்த இரண்டே நாளில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள். முதல் மாதம் வந்த வருவாயில் பழனிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்த பின்பு தான் அவளுக்கு மூச்சே வந்தது..

 

என்னதான் தெரிந்தவனாக இருந்தாலும், அவனிடம் அனைத்து பணத்தையும் பெற்று வீட்டு வாடகை மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க கூடாது என வாங்கியதை எல்லாம் கணக்கிட்டு வைத்திருந்தாள் சாயா…

 

பழனி எவ்வளவு மறுத்தும் அவன் பணத்தை திரும்ப கொடுத்து விட்டாள்.. அடுத்த அடுத்த மாதம் கூடுதல் நேரம் வேலை செய்து ஓவர் டைம் பார்க்கும் வருமானத்தையும் பெற்று ஓரளவிற்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி விட்டாள்.

 

ஏற்கனவே மறவன் எஸ்டேட்டில் வேலை பார்த்த சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால் அவர்களது வாழ்க்கை சீராக சென்று கொண்டிருந்தது. இதில் புத்தகம் வாங்கவும் மறக்கவில்லை அவள். மாதம் இரு முறை திண்டுக்கல் சென்று புத்தகம் வாங்கிக் கொண்டு வருவாள்.

 

அவளுக்கென்று எந்த நகையும் பொருளும் வாங்கி கொள்வதில்லை.. அவளுக்காக சேர்த்து வைத்தது எல்லாம் புத்தகம் மட்டும் தான்.. சாயாலியை பற்றி அறிந்த தேனு.. மகள் கொடுக்கும் மாத வருவாயில் சேமித்து குலுக்கல் சீட்டின் மூலன் நகை சேர்க்க ஆரம்பித்தார்.. அப்படி சேர்த்து தான் இந்த ஒரு வருடத்தில் செலவையும் மீறி நான்கு பவுன் நகையை மகளுக்காக வாங்கி இருந்தார்.

 

தலைக்கு குளித்து குங்கும நிற புடவையை உடுத்திக் கொண்டு கண்ணாடியின் முன்பு நின்று தன் பின்பத்தை பார்த்தாள்.. சரியாக ஒரு வருடத்திற்கு பின்பு அவள் புடவை உடுத்தி இருக்கிறாள்.. தலை முடியை தளர்வாக பின்னி, நெற்றியில் சின்ன பொட்டிட்டு பூக் கூடையை எடுத்துக் கொண்டு வாசல் வரை சென்ற சாயாலி, பிறகு என்ன நினைத்தாளோ மீண்டும் உள்ளே வந்து கண்ணாடியின் முன்பு நின்று தன் முகத்தையே இரண்டு நிமிடங்கள் வெறிக்க பார்த்தாள்.

 

கைகள் தானாக குங்கும சமிலை எடுக்க.. தன் மகள் செய்யும் காரியத்தை கண்களை விரித்து பார்த்தார் தேனு..

 

சிறிதாக குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்து விட்டு கண் திறந்து நெற்றியை பார்த்தவள் .. பெரும் மூச்சை விட்டு கொண்டு மீண்டும் வெளியே செல்ல தேனு தடுத்தார்.

 

” இவ்வளவு பூ யாருக்கு டி வாங்கி கட்டி வச்சுருக்கேன்… வச்சுட்டு போனா தான் என்ன ?” எனவும் அமைதியாக வீட்டிற்குள் வந்து பூவை எடுத்து தலை நிறைய சூடிக் கொண்டவள்… அமைதியாக பிள்ளையார் கோவிலை நோக்கி நடையிட்டாள்…

 

தேனுவிற்கே ஆச்சரியம் தான்… எப்போது இந்த ஊருக்கு அடி எடுத்து வைத்தார்களோ அப்போது இருந்தே புடவை பூ குங்குமம் என அனைத்தையும் நிறுத்தி இருந்தாள் சாயாலி.. மீண்டும் அதே சட்டை பாவாடை அணியாமல், திருமணம் ஆனதால் கொஞ்சம் நாகரீகமாக சல்வார் அணிய தொடங்கினாள்..

 

ஒரு வருடத்திற்கு பின்பு தன் மகளை இப்படி காணும் போது சற்றும் மகிழ்ச்சியாக தான் இருந்தது.. ஆனால் வாழ்க்கை… அவளது வாழ்க்கை அந்தரத்தில் அல்லவா நிற்கிறது ??? அவர் கண்ணை மூடுவதற்கு முன்பே சாயாலியின் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும் என்று அணு தினமும் தவித்து கொண்டிருக்கிறார்..

 

இதோ பிள்ளையார் சன்னதியின் முன்பு மனம் உருக வேண்டிக் கொண்டிருக்கிறாள் சாயாலி.. அவள் என்ன வேண்டும் என வேண்டுகிறாள் என்பது அவளுக்கும் விநாயகருக்கும் இருக்கும் ரகசியம்… பூக்களை கொடுத்து விட்டு அவள் பிள்ளையாரை பார்த்துக் கொண்டிருக்க…

 

” நிஜமா சொல்லுறேன்… இன்னைக்கு உன்னைய இந்த மாதிரி பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல.. யூ ஆர் லுக்கிங் சோ கார்ஜியஸ் ” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் சாயாலி….

 

அவள் முன்பு பளிச்சென்ற புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் அவன்.. இப்போது முழுமையாக அவளை ரசித்து விட்டு, ” இந்த ஒரு வருஷத்துல ஒரு நாள் கூட உன்ன இப்படி பார்த்தது இல்ல… ஆனால் இன்னைக்கு … சான்சே இல்ல யாழி… ”

 

“தீபத்தை ஒத்திக்கோங்கோ ” என ஐயர் அழைப்பில் இருவரும் தீபத்தை ஒத்திக் கொண்டு , திருநீர் குங்குமம் வாங்கி கொண்டனர்.

 

சாயாலி பூக்கூடையை தூக்கி கொண்டு குலக்கரைக்கு சென்று அமர்ந்து அங்குள்ள மீன்களை வெறிக்க….

 

” ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு யாழி… என்ன முடிவு பண்ணிருக்க.. ” சுற்றி வளைக்காமல் கேட்டே விட்டான்..

 

” டிவோர்ஸ் ” என்றாள் தீர்க்கமான குரலில்..

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்